Advertisment

Chennai News Highlights: ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anna university

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

ட்ரெண்டிங் மிரட்டல்: இன்ஸ்டாகிராமில் பழகி, மார்ஃபிங் படங்களை வெளியிடுவேன் என புதுச்சேரி சிறுமியை மிரட்டிய மன்னார்குடி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.அதேபோல முன் பின் தெரியாத நபர்களுடன் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் போலீஸ் அறிவுறுத்தி வருகின்றனர்.

  • Jan 21, 2025 22:07 IST

    ‘நான் வழக்கு போட்டால் சீமான் கட்சி நடத்த முடியாது’ - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “நான் வழக்கு போட்டால் சீமான் கட்சி நடத்த முடியாது; சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை சீமான் பயன்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.



  • Jan 21, 2025 21:44 IST

    தமிழகத்தில் கேரள கழிவுகள் கொட்டிய 2 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - நெல்லை கலெக்டர் அதிரடி

    தமிழகத்தில் கேரள கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாயாண்டி மற்றும் செல்லத்துரை ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jan 21, 2025 21:33 IST

    அமலாக்கத்துறையின் சட்ட விதிமீறல்; மும்பை ஐகோர்ட் காட்டமான விமர்சனம்

    அமலாக்கத்துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகள் சட்டத்தின் வரையறைக்குள் நடந்துகொள்ள வேண்டும், குடிமக்களை துன்புறுத்த சட்ட விதிகளை கையில் எடுத்துக்கொண்டு செயல்படக் கூடாது என்ற வலுவான செய்தி அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் விசாரணையில் இ.டி-க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தனி நீதிபதி மிலிந்த் ஜாதவ் உத்தரவிட்டார்.



  • Jan 21, 2025 20:13 IST

    ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி

    ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. முதல் கட்டமாக ரூபாய் 914 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்கிறது. டாடா நிறுவனம் இதன்மூலம் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jan 21, 2025 19:12 IST

    பரந்தூர் - தமிழக அரசு விளக்கம்

    பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலாதுறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்று  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 



  • Jan 21, 2025 19:07 IST

    தமிழ்நாட்டுக்கு ஆளுநர் ரவி புகழாரம் 

    "தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்" என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைப் புகழ்ந்து பேசியுள்ளார் ஆளுநர் ரவி. 

     

     



  • Jan 21, 2025 18:39 IST

    பரந்தூரில் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை 

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 மாதங்களில் இழப்பீட்டு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நிலம், வீடு, விவசாய நிலங்களை வழங்கியவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. 



  • Jan 21, 2025 18:18 IST

    வலிநிவாரணி மாத்திரை விற்பனை - திருவான்மியூரில் மணிப்பூர் பெண் கைது

    சென்னை திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதை தரும் மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக திருவான்மியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது புகாரி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், திருவான்மியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகம் அளிக்கும் வகையில் பையுடன் சுற்றி திரிந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவர், வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட போதை தரக்கூடிய மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.

     



  • Jan 21, 2025 17:51 IST

    ஐ.ஐ.டி இயக்குநரின் கருத்தை ஏற்பது அவரவர் விருப்பம் - அண்ணாமலை

    கோமியம் குறித்து சென்னை ஐ.ஐ.டி இயக்குநரின் கருத்தை ஏற்பது அவரவர் விருப்பம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து வகுப்பறையில் அவர் கூறவில்லை என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் ஐ.ஐ.டி இயக்குநர் நல்ல மனிதர் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Jan 21, 2025 17:32 IST

    டாஸ்மாக் டிஜிட்டல் மயமாக்கப்படும் என தகவல்

    மார்ச் மாதம் முதல் டாஸ்மாக்கில் QR Code முறையில் மதுபான விற்பனை நடைபெறும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது தடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jan 21, 2025 17:02 IST

    தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை பதில்

    மாமிசத்திற்கு, கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமையாக உள்ளது என தமிழிசைக்கு, செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். இது போன்ற கருத்துகளை வெளிநாடுகள் செல்லும் போது இவர்களால் கூற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Jan 21, 2025 16:28 IST

    தங்கம் தென்னரசு மீது இ.பி.எஸ் குற்றச்சாட்டு

    கடன் வாங்குவதில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியது நிதியமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கடன் அளவு குறித்து தங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Jan 21, 2025 15:49 IST

    இந்தியாவில் அமைப்புசார் பணிகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் - டி.ஆர்.பி.ராஜா

    இந்தியாவில் அமைப்புசார் பணிகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என உலகப் பொருளாதார கூட்டமைப்பு 2025-ல் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்



  • Jan 21, 2025 15:31 IST

    புழல் சிறைக்குள் கஞ்சா – விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு

    புழல் சிறையில் தடை செய்யப்பட்ட செல்ஃபோன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்த உளவுப்பிரிவு, லஞ்சஒழிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை டி.ஜி.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Jan 21, 2025 15:10 IST

    கஸ்தூரி ராஜா மனு – ஐகோர்ட் உத்தரவு

    தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குனர் கஸ்தூரிராஜா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் மனு மீது, ஜனவரி 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க சினிமா பைனான்சியர் ககன் போத்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Jan 21, 2025 15:02 IST

    கோமியம் ஒரு மருந்துதான் - தமிழிசை செளந்தரராஜன்

    கோமியம் ஒரு மருந்து என்றும், அமிர்த நீர் என்றும் ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. 80 வகையான நோய்களுக்கு கோமியம் மருந்து என்று கூறப்படுகிறது. அதில் ஒன்றாக காய்ச்சல் இருக்கலாம் என முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்



  • Jan 21, 2025 15:01 IST

    வயநாடு நிலச்சரிவு - வெளியான அதிர்ச்சி தகவல்

    வயநாடு நிலச்சரிவில் மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது



  • Jan 21, 2025 15:00 IST

    அண்ணா பல்கலை. விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்து காவல்துறையினரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது



  • Jan 21, 2025 14:59 IST

    சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

    கத்திக்குத்து தாக்குதலுக்கு பின் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சைஃப் அலிகான், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்



  • Jan 21, 2025 14:30 IST

    ஆபாச போட்டோ அனுப்பியதால் அரண்டு போன 16 வயது சிறுமி

    சிறுமியின் போட்டோவை, ஆபாசமாக சித்தரித்து மிரட்டியவரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமியோடு, இன்ஸ்டாகிராமில் பழகிய மன்னார்குடியை சேர்ந்த முஜீப் அலி என்பவர், சிறுமியின் சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படத்தை அவருக்கே அனுப்பியதோடு, கடலூரில் வந்து தன்னை சந்திக்காவிடில், சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனவும் கூறி மிரட்டி உள்ளார்.

    இதனால், ஆடிப்போன அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். பிறகு, சிறுமியை வரச்சொன்ன அதே இடத்தில் வைத்து, முஜீப் அலியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.



  • Jan 21, 2025 14:07 IST

    புதுச்சேரி - மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

    புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்துகின்றனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸ் நிவாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தொழில்நுட்ப பல்கலை.க்குள் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்ததை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். 



  • Jan 21, 2025 13:49 IST

    பனங்கள் குடித்த சீமான்

    விழுப்புரத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு  இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் 'கள்' விடுதலை மாநாட்டில் சந்தோஷமாக பனங்கள் குடித்துள்ளார் சீமான்.



  • Jan 21, 2025 13:33 IST

    கோமியம் விஞ்ஞான பூர்வமாக அமிர்த நீர் - தமிழிசை சௌந்தரராஜன்

    மாட்டுக்கறியை சாப்பிடுகிறார்கள், மாட்டுச் சாணத்தை பயன்படுத்துகிறார்கள்; விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள். கோமியம் விஞ்ஞான பூர்வமாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 



  • Jan 21, 2025 12:41 IST

    விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் பாலியல் சீண்டல் - ஊழியர் கைது.

    சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் சிறுமி மற்றும் அவரது சகோதரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஊழியர் சுரேந்தர்(31) கைது  செய்யப்பட்டுள்ளார். இவர் நீர் விளையாட்டு விளையாடுவோருக்கு உதவும் பணியில் இருப்பவர் ஆவார். 



  • Jan 21, 2025 12:19 IST

    மேற்குவங்க அரசு முறையீடு

    கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லலட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்க வேண்டும் என மேற்குவங்க அரசு முறையீடு மேற்குவங்க உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 



  • Jan 21, 2025 10:47 IST

    மைத்ரி நவீன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

    Good Bad Ugly, புஷ்பா-2 படங்களின் தயாரிப்பாளர் மைத்ரி நவீன் வீட்டில்
     வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. 

    பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளில் அதிகாலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 



  • Jan 21, 2025 10:38 IST

    சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர் திமுகவில் இணைந்தார்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

    கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார். 



  • Jan 21, 2025 09:50 IST

    சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் கள ஆய்வு

    சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் கள ஆய்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈடுபடுகிறார்.  மாநில அரசின் திட்டங்கள் மக்களிடன் சென்று அடைகிறதா என்பதை அறிய ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.



  • Jan 21, 2025 09:48 IST

    திமுகவில் இணைந்த செந்தில் முருகன்

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்.



  • Jan 21, 2025 09:03 IST

    வேட்புமனு வாபஸ்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.



  • Jan 21, 2025 09:02 IST

    தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

    பிரபல திரைப்பட தயார்ப்பாளர் தில் ராஜூவின் ஹைதராபாத்தில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.



  • Jan 21, 2025 08:59 IST

    உண்ணாவிரதம் இருந்தாரா விஜய் - சேகர்பாபு கேள்வி

    "அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்? நேற்றோடு எல்லாம் முடிவடைந்து விட்டது" மக்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.



  • Jan 21, 2025 08:58 IST

    “இபிஎஸ் அமைதிப்படை அமாவாசை என்பதை நிரூபித்தபடி உள்ளார்”

    “அவர் ஏற்கெனவே அதிரடிப்படை அமாவாசையாக மாறியவர்தான். அதனால் அமாவாசையைதான் கணக்கு போட்டு கொண்டிருப்பார்” என்று எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.



  • Jan 21, 2025 08:53 IST

    ஆய்வு முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? - எம்எல்ஏ மனோ தங்கராஜ்

    இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆய்வில் மாட்டின் சிறுநீரில் தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவை ஐஐடி இயக்குனர் காமகோடி மறுக்கிறாரா? கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது. என சென்னை ஐஐடி குயக்குநர் காமகோடி பேசியதற்கு திமுக எம்.எல். மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.



  • Jan 21, 2025 08:19 IST

    சிம் கார்டு செயல் இழப்பை தடுக்க புதிய திட்டம்

    ஏர்டெல்,ஜியோ, விஐ சிம்கார்டுகளில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரைக்க வைக்கலாம் என டிராய் அறிவித்துள்ளது.



  • Jan 21, 2025 08:15 IST

    மெட்ரோ ரயில்களில் உணவு உட்கொள்ள அனுமதியில்லை - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

    சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி இல்லை.சுமூகமான, இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 



  • Jan 21, 2025 08:13 IST

    WHOல் இருந்து வெளியேறியது அமெரிக்கா

    கொரோனா பெருந்தொற்று உட்பட் அசர்வதேச அளவில் பல நோய் தொற்ற்களை தவறாக கையாண்டது உலக சுகாதார நிறுவனம். ஆகவே அதிலிருந்து அமெரிக்கா விலகுகிறது என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.



  • Jan 21, 2025 07:40 IST

    காவல் நிலையம் முன்பு தீக்குளிப்பு

    சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு இளைஞர் தீயிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். புகார் கொடுக்க வந்த நிலையில் தீக்குளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Jan 21, 2025 07:37 IST

    ஐஐடி இயக்குநர் காமகோடியை பொறுப்பில் இருந்து நீக்குக

    ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கும்; அவரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.



  • Jan 21, 2025 07:34 IST

    பெண் மருத்துவர் கொலை வழக்கு

    கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக்கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.



  • Jan 21, 2025 07:32 IST

    ஒன்றிய அரசுக்கு மாநில அரசு கடிதம்

    நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். தொடர் மழை பனியை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.



  • Jan 21, 2025 07:31 IST

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வெளி மாநிலத்தவரின் வேட்பு மனு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளி மாநிலத்தவரின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஆகிறது.



  • Jan 21, 2025 07:28 IST

    தைவானில் நிலநடுக்கம்

    தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 4 ஆக பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jan 21, 2025 07:27 IST

    ட்ரம்பிற்கு புதின் அழைப்பு

    உக்ரைன் விவகாரம் மற்றும் அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.



Live News Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment