/indian-express-tamil/media/media_files/2024/11/30/B43oGI6tF0TgeWhiWxwh.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.
மொழிப்போர் தியாகிகள் தினம்: 1965 இல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்ட தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
-
Jan 26, 2025 00:35 IST
பா.ஜ.க அரசின் ரப்பர் ஸ்டாம்பாக ஆளுனர் ரவி: அமைச்சர் மதிவேந்தன் அறிக்கை!
பட்டியலின ஏழை, எளிய மாணவர்கள், படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வந்துவிட கூடாது என்ற சனாதன வர்ணாசிரம கோட்பாட்டை, தூக்கிப்பிடித்து குலக்கல்வியை ஊக்குவிக்கும், விஸ்வகர்மா திட்டத்தை ஊக்குவிக்கும், திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் ரப்பர் ஸ்டாம்பாக ஆளுனர் ரவி திகழ்கிறார் என்று அமைச்சர் மதிவேந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Jan 26, 2025 00:29 IST
கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம்: அஜித்துக்கு பார்த்திபன் பாராட்டு
இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது.
இன்று மதியம் ஒரு இசை பிரபலம்,
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 25, 2025
நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை… pic.twitter.com/zhUeHSMLeJ -
Jan 26, 2025 00:26 IST
பத்ம ஸ்ரீ விருது அறிவிப்புக்கு இதயப்பூர்வ நன்றி: அஜித்குமார்
பத்மபூஷன் விருது வழங்கிய குடியரசுத் தலைவர், பிரதமர் மோடிக்கு இதயப்பூர்வ நன்றி பத்மபூஷன் விருதானது, தனக்கு மட்டும் கிடைத்த அங்கீகாரம் கிடையாது, கூட்டு முயற்சிக்கு கிடைத்தது என்று நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார்
-
Jan 25, 2025 20:51 IST
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்: ஆளுனர் ஆர்.என்.ரவி
சில ஆண்டுகளுக்கு முன்புவரை முதலீட்டாளர்கள் மிகவும் விருப்பப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. ஆனால் இப்போது முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை விடுவித்து வேறு மாநிலங்களுக்கு செல்கின்றனர். தமிழ்நாட்டில் தற்கொலைகள் பெருகிவிட்டன. பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று ஆளுனர் ஆர்.எஸ்.ரவி கூறியுள்ளார்.
-
Jan 25, 2025 19:56 IST
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு "அரசியலமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது: திரௌபதி முர்மு
நமது 75 ஆண்டுகளாக முன்னேற்றத்திற்கு அரசியலமைப்பு சட்டம் வழி வகுத்துள்ளது. இந்தியாவின் குடியரசு மதிப்புகள் நமது அரசியல் நிர்ணய சபையின் அமைப்பில் பிரதிபலிக்கின்றன என்று, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
-
Jan 25, 2025 19:39 IST
இளம் வயதில் உலக சாம்பியன்: குக்கேஷ்க்கு குடியரசுத் தலைவர் பாராட்டு
2024ம் ஆண்டில் குகேஷ், இளம் வயதில் உலக சாம்பியனாகி வரலாறு படைத்தார் என்று தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் குக்கேஷ்க்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
Jan 25, 2025 19:38 IST
தமிழக மக்களின் உழைப்பால் உருவான பல்கலை.யில் ஆளுநர் துணை வேந்தர்களை நியமிப்பாரா?
சென்னை பல்லாவரத்தில் திமுக சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "மாநில அரசின் நிதியால், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பால் உருவான பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ஆளுநர் துணை வேந்தர்களை நியமிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jan 25, 2025 18:59 IST
இந்தி திணிப்பு - ஸ்டாலின் குற்றச்சாட்டு
இன்றும் கூட வாய்ப்பு கிடைக்கும் போது இந்தி அல்லது சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக அன்னை தமிழை அழிக்க, அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
Jan 25, 2025 18:23 IST
சீமான் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு
சீமானின் அரசியல் போக்கு மிகவும் ஆபத்தானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சீமானை பின்பற்றுபவர்கள் மிகவும் கவனமாக அணுக வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
-
Jan 25, 2025 18:09 IST
மகாராஷ்டிராவில் பேருந்து கட்டணம் 15% உயர்வு
மகாராஷ்டிராவில் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தி மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
-
Jan 25, 2025 17:54 IST
தி.மு.க எம்.பி-க்களுக்கு ஜெயக்குமார் அறிவுறுத்தல்
தமிழகத்திற்கு உரிய நிதியை பெற்றுத் தர தி.மு.க எம்.பி-க்கள் செயலாற்ற வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல், அமைச்சர்கள் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 25, 2025 17:33 IST
கலைமாமணி விருதை காணவில்லை என கஞ்சா கருப்பு புகார்
சென்னை, மதுரவாயலில் வாடகை வீட்டில் வைத்திருந்த கலைமாமணி விருதைக் காணவில்லை என நடிகர் கஞ்சா கருப்பு புகாரளித்துள்ளார். ரேஷன் கார்ட், ஆதார் கார்ட், வங்கி பாஸ்புக் போன்ற அனைத்தையும் காணவில்லை எனக் கூறும் அவர், வாடகை பணம் கொடுத்த பின்னரும், வீட்டின் உரிமையாளர் வீட்டை உடைத்து அடாவடியாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
-
Jan 25, 2025 17:23 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக மனு
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக் கோரி, அவரது மனைவி தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார்.
-
Jan 25, 2025 16:37 IST
கூடுதல் புறநகர் ரயில் சேவை
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி அந்த வழித்தடத்தில் இன்று கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 25, 2025 16:18 IST
4 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி நான்கு பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட 4 பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
-
Jan 25, 2025 15:59 IST
மெட்ரோ அட்டை – பிப்ரவரி 1 முதல் நிறுத்தம்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
-
Jan 25, 2025 15:58 IST
பெரியார் இல்லாவிட்டால் நான் அமைச்சர் இல்லை - துரைமுருகன்
பெரியார் இல்லாவிட்டால் என்னை போன்றோர் அமைச்சராகியிருக்க முடியாது. பெரியார் என்று ஒருத்தர் பிறந்திருக்காவிட்டால் நான் அமைச்சராக அமர்ந்து பேட்டி கொடுத்திருக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
-
Jan 25, 2025 15:57 IST
ஆளுநர் தேனீர் விருந்து – தமிழக அரசு புறக்கணிப்பு
குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது
-
Jan 25, 2025 15:36 IST
இரும்பை கையாளுவதில் முன்னோடி தமிழ்ச் சமூகம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
மனித நாகரீகம் வளர்ச்சியடைய மிக முக்கியமாக அமைந்தது இரும்புத் தொழில்நுட்பம். இரும்பை கையாளுவதில் உலகிற்கே முன்னோடியாகத் தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது என்பதை நிரூபித்ததில் பெருமை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
-
Jan 25, 2025 15:12 IST
மொழிப்போராட்ட தியாகிகளுக்கு திருவுருவச் சிலை - ஸ்டாலின் அறிவிப்பு
மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னையில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
-
Jan 25, 2025 14:43 IST
அரிட்டாபட்டிக்கு வருகிறேன் – ஸ்டாலின்
உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
Jan 25, 2025 14:36 IST
விஜய் அறிமுகம் செய்த நடிகை சந்நியாசம்
பிரபல நடிகை மம்தா குல்கர்னி மகா கும்பமேளாவில் சந்நியாசம் வாங்கி தன் பெயரை `மாய் மம்தா நந்த்கிரி’ என மாற்றி கொண்டுள்ளார். விஜய் தயாரிப்பில் அவரின் அம்மா ஷோபா இயக்கத்தில் `நண்பர்கள்' என்ற படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது
-
Jan 25, 2025 14:13 IST
சென்னை கோடம்பாக்கத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவர் மரணம்
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விழுந்த இயர் பட்ஸை தேடிக் கொண்டிருந்த மோதி கல்லூரி மாணவர் ரயில் மோதி உயிரிழந்தார்
-
Jan 25, 2025 13:59 IST
"தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு" - சீமான் பேசியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து அரசியல் ஆதாயத்திற்க்காக சீமானின் பேச்சு வேதனையாக உள்ளது. இது போன்று பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இது தமிநாட்டிற்க்கே தலைகுனிவு என்று சமூக நீதிப் போராளி பெரியார் குறித்து சீமான் இழிவாக பேசியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jan 25, 2025 13:03 IST
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (25-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 30ஆம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
-
Jan 25, 2025 12:54 IST
சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்ற வானத்தின் இளவரசி
வானத்தின் இளவரசி என்று அழைக்கப்படும் பெரிய ரக சரக்கு விமானம் ஜோர்டான் நாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்து, சரக்குகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் பறந்தது. அமெரிக்காவின் நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானத்தில் சுமார் 125 டன் சரக்குகளை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.
-
Jan 25, 2025 12:35 IST
சீமானின் அவதூறு பேச்சுக்கு செல்லூர் ராஜா கண்டனம்.
பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். "சீமானை இந்நேரம் சிறையில் பிடித்துப் போட்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
Jan 25, 2025 12:16 IST
புளூடூத் ஹெட்செட்டுக்காக உயிரை இழந்த இளைஞர்
சென்னை கோடம்பாக்கத்தில் தண்டவாளத்தில் விழுந்த புளூடூத் ஹெட்செட்டை எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jan 25, 2025 11:48 IST
தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு
"உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம். தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம், நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம்" என்று தவெக தலைவர் விஜய் எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Jan 25, 2025 11:34 IST
தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் உயிர் நீத்த தாளமுத்து, நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மளிகை வளாகத்தில் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jan 25, 2025 11:14 IST
ஆளுநரின் தேநீர் விருந்து - நாதகவிற்கு அழைப்பு
குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிக்க நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 25, 2025 10:45 IST
"குடியரசு தின விழா இறுதி ஒத்திகை"
பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் குடியரசு தின விழா இறுதி ஒத்திகை முடிவடைந்தது.கண்கவர் அணிவகுப்பு மரியாதை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
-
Jan 25, 2025 10:42 IST
தோனி தந்த ஊக்கம் - Fire விட்ட CISF
ராஞ்சியில் CISF வீரர்களுடன் கலந்துரையாடிய தோனி, தனது வாழ்க்கை பயணம் குறித்து பகிர்ந்ததோடு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை பற்றி விசாரித்து ஊக்கமளித்ததாக CISF தரப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
-
Jan 25, 2025 10:36 IST
ராஜபக்சேவின் மகன் கைது!
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகண் யோஷித ராஜபக்சேவை இலங்கை குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்தது.
-
Jan 25, 2025 10:33 IST
நாளை அரிட்டாபட்டி செல்கிறார் முதலமைச்சர்
மதுரை அரிட்டாபட்டியில் அரசு சார்பில் நாளை நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அமைச்சர் மூர்த்தி தலைமையில் 18 பேர் கொண்ட டங்ஸ்டன் எதிர்ப்பு குழுவினர் இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்.
-
Jan 25, 2025 09:55 IST
சென்னை மாநகராட்சியில் 18 நாட்களில் 13,647 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம்!
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணியில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 13,647 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கழிவுகளை அகற்ற 1913 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
-
Jan 25, 2025 09:53 IST
மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம், வீர வணக்கம்" - தொண்டர்கள் மத்தியில் முழக்கமிட்ட முதலமைச்சர் சென்னை மூலக்கொத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Jan 25, 2025 09:52 IST
காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருது
குடியரசு தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த ஐஜி துரைக்குமார், ஐஜி ராதிகா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 25, 2025 09:23 IST
தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு
டோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகத்தில் 4 நாட்களாக நடைபெற்ற ஐ.டி. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jan 25, 2025 09:22 IST
சென்னை திரும்ப உள்ள கபடி வீராங்கனைகள்
தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் இன்று (ஜன.25) மாலை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளனர்
-
Jan 25, 2025 09:18 IST
NMMS தேர்வு விண்ணப்பம் - ஜன.29 வரை அவகாசம் நீட்டிப்பு!
2024 -25 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதிப் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களி ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் ஜன.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Jan 25, 2025 09:13 IST
மொழிப்போர் தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் - இன்று திறப்பு
சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
Jan 25, 2025 08:33 IST
வேங்கைவயல் விவகாரம் - பா.ரஞ்சித் கேள்வி
வேங்கைவயல் விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற யாரை பலிகொடுப்பது? தமிழக அரசு வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
-
Jan 25, 2025 08:10 IST
ஈபிஎஸ் மேல்முறையீடு - ஜன. 27ம்தேதி விசாரணை
வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் வருகிற 27ம்தேதி விசாரணை நடைபெற உள்ளது.
-
Jan 25, 2025 08:09 IST
குடியரசு தினத்தை முன்னிட்டு, முர்மு உரை
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். கடந்த ஆண்டு தனது உரையில், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முன்னுரிமையாக சமூக நீதி குறித்து முர்மு பேசினார். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காக மோடி அரசு பல்வேறு திட்டங்களை எடுத்து வருகிறது. சமூக நீதி என்பது மோடி அரசின் முதன்மையான முன்னுரிமை" என்று முர்மு கூறியிருந்தார்.
-
Jan 25, 2025 07:52 IST
டி20 கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டியை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12 மணிக்கு புறப்பட உள்ளது.
-
Jan 25, 2025 07:49 IST
கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடியை வளர்க்க இமாச்சலப் பிரதேச அரசு அனுமதி
தொழில், அறிவியல் மற்றும் கஞ்சா ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை வளர்க்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
-
Jan 25, 2025 07:46 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
200 அல்ல 234 தொகுதிகளையும் வெல்ல முடியும் என நாதக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3000 பேர் இணைந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
Jan 25, 2025 07:44 IST
குடியரசு தினம்: பாதுகாப்பு பணிகள் அதிகரிப்பு
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு.கூடுதலாக 70 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jan 25, 2025 07:38 IST
வேங்கைவயல் விவகாரம் - பரவும் புது வீடியோ
வேங்கை வயல் விவகாரம் டொடர்பாக சமூக வலைத்தளங்களில் புது வீடியோ பரவி வருகிறது. நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருக்கும் பையுடன் 2 பேர் அமர்ந்து பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.