/indian-express-tamil/media/media_files/2025/01/26/EepDj5UMb9IvryVZBVi8.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49 காசுக்கும் விற்பனையாகிறது.
குடியரசு தின வாழ்த்துக்கள்: 76 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் இன்று காலை 9 மணியளவில் குடியரசுத் தலைவர் பிரதமர் முன்னிலையில் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்க உள்ளது. இந்த ஆண்டு இந்தோனேசிய அதிபர் ப்ரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.
-
Jan 27, 2025 05:10 IST
இலங்கை கடற்படை கைது செய்த 34 தமிழக மீனவர்கள்: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Jan 26, 2025 21:00 IST
டாவோஸ் மாநாடு: இ.பி.எஸ் கேள்விக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதில்
வோஸ் மாநாடு தொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார். டி.ஆர்.பி. ராஜா கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்றுள்ளதை அறியாமல் அறிக்கை விடுவதா? டாவோஸ் பெண்களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்றது. தமிழ்நாடு அடைந்துள்ள தொழில்வளர்ச்சியை
வியந்து பாராட்டிய உலக நாடுகள்.” என்று கூறியுள்ளார். -
Jan 26, 2025 20:29 IST
'பதவியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை' - மு.க.ஸ்டாலின்
மதுரை வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “பதவியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; மக்களைப் பற்றியும் அவர்களின் பிரச்னையைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை” என்று கூறினார்.
-
Jan 26, 2025 19:59 IST
வேங்கைவயல்: பாதித்த மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? - சீமான்
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “வேங்கைவயலில் பாதித்த மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதுதான் சமூக நீதியா? வேங்கைவயல் வழக்கில் மறுவிசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்; சாதியத்தோடு நடந்தேறிய குற்றத்தை தனிநபர் விரோதமாக திசைத் திருப்ப முயற்சி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 19:27 IST
தமிழ்நாட்டில் பா.ஜ.க வேரூன்ற சிலர் அடித்தளம் அமைக்கின்றனர் - திருமாவளவன்
தமிழ்நாட்டில் பா.ஜ.க வேரூன்ற சிலர் அடித்தளம் அமைக்கின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
-
Jan 26, 2025 18:30 IST
மோப்பநாய் டைகருக்கு இன்று 4வது பிறந்தநாள்
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மோப்பநாய் டைகருக்கு இன்று 4வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கேக் வெட்டி டைகருக்கு ஊட்டி மகிழ்ந்தனர்
-
Jan 26, 2025 18:20 IST
அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் இபிஎஸ்: டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
இந்திய அளவில் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளதை அறியாமல், அற்பத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார் இ.பி.எஸ். மாநிலத்தின் மீது அக்கறை இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயே கிண்டித்தருவதை ஆளுனரும் இ.பி.எஸ்-ம் மென்றுகொண்டிருக்கிறார்கள் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
-
Jan 26, 2025 18:18 IST
சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ‘மை லார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்
-
Jan 26, 2025 18:16 IST
இது நமக்கு கிடைத்த வெற்றி: டங்ஸ்டன் திட்டம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து
முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் வராது என உறுதி அளித்து இருந்தேன் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம், எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் கிடைத்த வெற்றி என்று மக்கள் கூறினார்கள், ஆனால் இது நமக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jan 26, 2025 17:00 IST
தமிழகம் அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பான இடம்: அண்ணாமலை
அமைதியை விரும்பும் மாநிலமாக அறியப்பட்ட தமிழ்நாடு அடிப்படைவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக மாறி உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Jan 26, 2025 16:15 IST
மருத்துவர் செரியனின் மறைவால் துயரமடைந்தேன் - மோடி
நமது நாட்டின் புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியனின் மறைவால் துயரமடைந்தேன். இதய மருத்துவத்தில் மருத்துவர் கே.எம்.செரியனின் பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
-
Jan 26, 2025 15:49 IST
பேசுவது, பின் மன்னிப்பு கேட்பதே மிஷ்கினின் வேலையாக போய்விட்டது - நடிகர் விஷால்
பேசுவது, பின் மன்னிப்பு கேட்பதே மிஷ்கினின் வேலையாக போய்விட்டது. இளையராஜாவை மிஷ்கின் ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது; மிஷ்கினின் பேச்சை கேட்டு கைதட்டுவது வருத்தமாக உள்ளது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்
-
Jan 26, 2025 15:27 IST
நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான் - ஆர்.எஸ்.பாரதி
நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான். பெரியார் கவுன்சிலராக கூட ஆசைப்படவில்லை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
-
Jan 26, 2025 14:48 IST
பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான கே.எம்.செரியன் மரணம்
இந்தியாவின் முதல் பை-பாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த சாதனையாளரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான கே.எம்.செரியன் மரணமடைந்தார். செயலிழந்த இதயங்களை மீண்டும் துடிக்க வைத்து, பலருக்கு மறுபிறவி அளித்தவருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
-
Jan 26, 2025 14:45 IST
பா.ரஞ்சித், வெற்றிமாறன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - இயக்குனர் மிஷ்கின்
பாடலாசிரியர் தாமரை என்னை விமர்சித்ததற்கு நன்றி. நான் வெற்றி மிதப்பில் பேசவில்லை, 18 ஆண்டுகளாக போராடி கொண்டு தான் இருக்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணன். பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கும் எண்ணத்தில் பேசவில்லை என பாட்டில் ராதா பட விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்டார்
-
Jan 26, 2025 14:42 IST
த.வெ.க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
சென்னை, பனையூர் தலைமை அலுவலகத்தில் த.வெ.க நிர்வாகிகளுடன் த.வெ.க தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார். அடுத்த நான்கு நாட்கள் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்துகிறார்
-
Jan 26, 2025 14:28 IST
பெரியார் மீது சீமான் கடும் விமர்சனம்
சமூகத்தை சீரழித்தவர் பெரியார் தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ் மொழியை சீர்திருத்துகிறேன் என மக்கள் மத்தியில் கூறி, சமூகத்தை சீரழிக்கும் வேலையை செய்தவர் பெரியார் என அவர் தெரிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 13:28 IST
குவைத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி
குவைத் நாட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த கடலூரைச் சேர்ந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 13:23 IST
சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு
எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணுதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தமிழ்நாடு என்பது பெரியார் மண் அல்ல என்றும், இது சேர, சோழ, பாண்டியர்கள் மண் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 13:07 IST
அவதூறு பரப்புகிறார்கள் என சீமான் குற்றச்சாட்டு
"எங்களோடு வாதிட முடியாதவர்கள் தான், எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள்" என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 12:21 IST
அரிட்டாப்பட்டி புறப்பட்டார் ஸ்டாலின்
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான பாராட்டு விழாவில் பங்கேற்க, முதலமைச்சர் ஸ்டாலின் அரிட்டாப்பட்டிக்கு புறப்பட்டார்.
-
Jan 26, 2025 11:58 IST
குடியரசு தினம் - விஜய் வாழ்த்து
அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட அனைவருக்கும் சமூக உரிமைகள் கிடைத்திட அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 11:25 IST
விஜயின் கடைசி படம் அறிவிப்பு
விஜய்யின் கடைசி படத்திற்கு ஜனநாயகம் என பெயரிடப்பட்டுள்ளது.
-
Jan 26, 2025 10:47 IST
தேசியக் கொடி ஏற்றிவைத்தார் குடியரசுத் தலைவர்
76 ஆவது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றி வைத்தார்.21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
-
Jan 26, 2025 10:21 IST
அஜீத்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் அஜித்குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Jan 26, 2025 09:48 IST
ஆளுநர் விருந்து - த.வெ.க புறக்கணிப்பு
ஆளுநர் மாளிகை தரப்பில் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆளுநர் தேநீர் விருந்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்காது என அறிவிப்பு திமுக, காங்., விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே புறக்கணிப்பு
-
Jan 26, 2025 09:47 IST
ஸ்டிக்கர் ஒட்டச் செல்கிறார் முதலமைச்சர் - அண்ணாமலை
வேங்கைவயல் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளின் போது அங்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறவில்லை. விவசாயிகள் நலனுக்காக பிரதமர் மோடி மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும்,.மு.க ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாக முதலமைச்சர் கிளம்பிச் செல்கிறார் என்றால் டிராவிட மாடல் அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது.
-
Jan 26, 2025 09:14 IST
குடியரசு தின அலங்கார ஊர்தி
சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம். வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகள் நிறைவு ஒட்டி கேரளாவில் திறக்கப்பட்ட பெரியார் நினைவகம், பெரியார் நூலகத்தை நினைவு கூறும் அலங்கார ஊர்தி ஊர்வலம்.
-
Jan 26, 2025 09:11 IST
குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்
சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
-
Jan 26, 2025 08:40 IST
குடியரசு தினம் - பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர்
சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் காந்தியடிகள் காவலர் பதக்கங்களை மொத்தம் 5 பேருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது.
-
Jan 26, 2025 08:38 IST
தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர்
சென்னை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
-
Jan 26, 2025 07:31 IST
பத்ம விருதுகள் - முதல்வர் வாழ்த்து
தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசின் விருதுக்கு தேர்வாகியுள்ள 13 பேருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடைய வேண்டும்; தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.
-
Jan 26, 2025 07:28 IST
மதுரை செல்கிறார் ஸ்டாலின்
டங்ஸ்டன் திட்டம் ரத்தாகக் காரணமாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா. இன்று அரிட்டாப்பட்டி செல்லும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Jan 26, 2025 07:26 IST
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பு இல்லை
ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்பு இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் புறக்கணித்தன.
-
Jan 26, 2025 07:24 IST
எந்த மிரட்டலுக்கும் தி.மு.க அஞ்சாது - ஸ்டாலின்
தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசு பொருளாதார, சமூக பண்பாட்டுப் படையெடுப்பு நடத்துவதாக குற்றச்சாட்டு. எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
-
Jan 26, 2025 07:21 IST
குடியரசு தின வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய 76 ஆவது குடியரசு தின வாழ்த்துக்கள். இன்று காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்க உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.