Advertisment

Chennai News Live Highlights: திமுகவின் கொள்கைகள் மாறவில்லை - அமைச்சர் ராஜேந்திரன்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajendran

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48 காசுக்கும் விற்பனையாகிறது.

  • Jan 28, 2025 22:21 IST

    நீதிபதிகளை நோக்கி செருப்பை வீசிய கருக்கா வினோத் 

    கிண்டி, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, இறுதிக்கட்ட விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் செருப்பை வீசியதால், சென்னை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



  • Jan 28, 2025 21:51 IST

    சென்னைக்கு அமித்ஷா வருகை தர இருப்பதாக தகவல்

    முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 31-ஆம் தேதி சென்னைக்கு வருகை தர இருப்பதாக தகவல்.



  • Advertisment
  • Jan 28, 2025 21:20 IST

    த.வெ.க மாவட்ட நிர்வாகிகளின் 2-வது பட்டியல் நாளை வெளியீடு

    தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளின் 2-வது பட்டியலை, அக்கட்சி தலைவர் விஜய் நாளை வெளியிடுகிறார். முன்னதாக, 19 நிர்வாகிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • Jan 28, 2025 20:29 IST

    இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த முயற்சி - மோடி

    2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் போது, அது இந்திய விளையாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisement
  • Jan 28, 2025 20:18 IST

    "அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது": டி.கே.சிவக்குமார் 

    அனைத்து மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jan 28, 2025 18:35 IST

    பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. 



  • Jan 28, 2025 18:31 IST

    த.வெ.க தலைவர் விஜய் அரசியலில் கவுரவத் தோற்றம் போல வருகிறார் - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

    காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்: அரசியலில் அவ்வப்போது கவுரவத் தோற்றம் போல வருகிறார் த.வெ.க தலைவர் விஜய். பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் எனக் கூறியவர் எங்கு அமைக்க வேண்டும்  என சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.



  • Jan 28, 2025 18:26 IST

    இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தை கொண்டுவரவே முடியாது - கார்த்தி சிதம்பரம்

    காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்: “பொது சிவில் சட்டம் வரவே வர முடியாது. ஒரு ஊரில் இருக்கிற பழக்க வழக்கம், இன்னொரு ஊரில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முடியாது” என்று கூறினார்.



  • Jan 28, 2025 17:48 IST

    டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்கள் போராட்டமே காரணம் - இ.பி.எஸ்

    சென்னையில், தம்மை சந்தித்த அரிட்டாப்பட்டி விவசாயிகள் மத்தியில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம். மக்கள் கொதித்து எழுந்ததால்தான், சுரங்கத்துக்கு எதிராக தி.மு.க அரசு தீர்மானம் கொண்டு வந்தது. நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் சிரமம் புரிந்து சட்டமன்றத்தில் பேசினேன்” என்று கூறியுள்ளார்.



  • Jan 28, 2025 17:13 IST

    பச்சையப்பன் கல்லூரியை அரசே நடத்த மாணவர்கள் கோரிக்கை; நடவடிக்கை எடுப்போம் - கோவி. செழியன்

    அமைசர் கோவி. செழியன்: “பச்சையப்பன் கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டுள்ளோம். நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளார்.



  • Jan 28, 2025 16:56 IST

    டங்ஸ்டன் விவகாரம்; இ.பி.எஸ்-க்கு விவசாயிகள் நன்றி

    சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரிட்டாப்பட்டி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் நன்றி தெரிவித்தனர் 



  • Jan 28, 2025 16:42 IST

    அயோத்தி ராமர் கோவிலுக்கு வர வேண்டாம்

    உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு அயோத்தியா ராமர் கோவிலுக்கு வர வேண்டாம் என பக்தர்களுக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது



  • Jan 28, 2025 16:32 IST

    புலி தாக்கி பெண் பலி: பிரியாங்கா காந்தி ஆறுதல்

    கேரளா  மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் அளித்தார். மானந்தவாடியை சேர்ந்த ராதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்தார்.



  • Jan 28, 2025 16:29 IST

    உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் யு.ஜி.சி-யின் புதிய விதிமுறைகள் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வித்துறையில் முழு உரிமை உள்ளது. 

    யு.ஜி.சி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு கைப்பற்ற முயற்சிக்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடைஞ்சல்களை ஒன்றிய அரசு கொடுக்கிறது. யு.ஜி.சி புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும்” என்று அவர் கூறினார். 

     



  • Jan 28, 2025 16:27 IST

    "மகா கும்பமேளா - அயோத்தி வராதீர்'': பக்தர்களுக்கு வேண்டுகோள் 

    உத்தரபிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு அயோத்தியா ராமர் கோவிலுக்கு வர வேண்டாம் என பக்தர்களுக்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. 



  • Jan 28, 2025 16:15 IST

    தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்வு  - மே 1 முதல் அமல் 

    மினி பேருந்து கட்டணங்களை மாற்றியமைத்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மினி பேருந்துகளில் முதல் 4 கி.மீ வரை 4 ரூபாய் கட்டணமாகவும், 4 முதல் 6 கி.மீ வரை 5 ரூபாய் கட்டணமாகவும், 6 முதல் 8 கி.மீ வரை 6 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மே 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது.



  • Jan 28, 2025 15:46 IST

    மீனவர்கள் கைது - இலங்கைக்கு இந்தியா பதிலடி

    "எத்தகைய சூழலிலும் படையை பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தொடர்பாக இரண்டு நாடுகளிடையே உள்ள ஒப்பந்தத்தை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும். இலங்கையின் பொறுப்பு தூதுவரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் ஆட்சேபத்தை பதிவு செய்துள்ளது" என்று இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

     



  • Jan 28, 2025 15:43 IST

    சிறுவர்கள் சினிமா பார்க்க தடையா?

    சிறுவர்கள் காலை 11 மணிக்கு முன்னும், இரவு 11 மணிக்கு பின்னும் சினிமா பார்க்க தடை விதிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

     



  • Jan 28, 2025 14:57 IST

    மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்

    காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து, டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த சூழலிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.



  • Jan 28, 2025 14:06 IST

    காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கடிதம்!

    இலங்கை கடற்படையால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள், தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம்



  • Jan 28, 2025 14:05 IST

    4 மாவட்டங்களுக்கு 2 நாட்கள் கனமழை எச்சரிக்கை 

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 2 நாட்களும் வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jan 28, 2025 14:02 IST

    முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும்: உச்சநீதிமன்றம்

    பல பருவ மழைகளை தாண்டி நிலைத்து நிற்கும் அணையை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், அணை குறித்த அச்ச உணர்வு காமிக்ஸ் கதைகளில் வருவதை போல் உள்ளது என்றும், அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனு ஏற்கனவே விசாரித்து வரும் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.



  • Jan 28, 2025 13:36 IST

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனவரி 31-ல் ஜனாதிபதி உரையுடன் தொடக்கம்!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார் மறுதினம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.



  • Jan 28, 2025 13:02 IST

    இரு குழந்தைகளை கழுத்தறுத்து தாய் தற்கொலை

    சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் குடும்ப பிரச்சினையில் இரு குழந்தைகளின் கழுத்தை அறுத்து விட்டு, அந்த தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தாய் உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 



  • Jan 28, 2025 12:16 IST

    6 மணி நேரமாக நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு

    சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் 6 மணி நேரமாக நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவுபெற்றுள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற சோதனையில் அல்பசித் என்பவரை கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். மயிலாடுதுறையை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். 



  • Jan 28, 2025 11:43 IST

    சென்னை: புதுக்கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு போலீசார் வலை

    சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரி மாணவர் மீது பேருந்தில் வைத்து தாக்குதல் நடத்திய புதுக்கல்லூரி மாணவர்கள் 20 பேரை  போலீசார் தேடுகின்றனர். மாநகரப்பேருந்தில் ஏறிய புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளே இருந்த நந்தனம் கல்லூரி முதலாமாண்டு மாணவர் மீது தொடர்ந்து தாக்கியுள்ளனர்.காயமடைந்த மாணவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Jan 28, 2025 11:08 IST

    நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘நானும் ரவுடிதான்’ காட்சிகளை பயன்படுத்தியற்கு ₹10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த விவகாரத்தில் இப்போது நடிகர் தனுஷின் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 28, 2025 10:47 IST

    கடன் தொல்லையால் தற்கொலை

    சேலத்தில் அரிசிபாளையம் முத்தியால் தெருவில் மனைவி, மகளுடன் வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். 



  • Jan 28, 2025 10:46 IST

    மெரினாவில் மரக்கன்றுகள்

    சென்னை, மெரினா கடற்கரை லூப் சாலையில் 90 பனை மரக்கன்றுகள் மாநகராட்சி சார்பில் நடப்பட்டுள்ளன



  • Jan 28, 2025 10:45 IST

    வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லை - நபர் ஒருவர் கைது

    சென்னை கோடம்பாக்கத்தில் உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் சுந்தரம் என்ற மாயாஜி (47) கைது கடந்தாண்டு பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தகராறு செய்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே உள்ளார். தற்போது இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Jan 28, 2025 10:03 IST

    வக்ஃபு மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்ததில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு

    வக்ஃபு மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கடைசி கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஆளும் கட்சியின் திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jan 28, 2025 09:49 IST

    லண்டன் -சென்னை விமானத்தில் இயந்திரக் கோளாறு

    இன்று காலை லண்டனில் இருந்து 265 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு. நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இயந்திரக் கோளாறு சரிசெய்யப்பட்டு  விமானம் 12.30 மணிக்கு சென்னை வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Jan 28, 2025 09:18 IST

    மாற்றுக் கட்சிக்கு நூல் விடும் காங்கிரசார் தேவை இல்லை

    மாற்றுக் கட்சிக்கு நூல் விடும் காங்கிரசார் தேவை இல்லை என காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.



  • Jan 28, 2025 09:17 IST

    தேர்தல் ஆண்டில் 87% அதிகரித்த பாஜகவின் நன்கொடை..!

    மக்களவைத் தேர்தல் நடந்த 2023 - 24 ஆண்டில் ரூ. 3,967 கோடி நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டில் பெற்ற ரூ. 2,120 கோடியை விட தேர்தல் ஆண்டில் 87% நன்கொடை அதிகரித்துள்ளது. இதில் சுமார் ரூ. ஆயிரத்து 700 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளன. 2024 யில் தேர்தல் பிரசாரங்களுக்கு ரூ ஆயிரத்து 754 கோடி செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் ஆண்டு பாஜக அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



  • Jan 28, 2025 08:50 IST

    பணம் மாயமான விரக்தியில் தொழிலாளி தற்கொலை

    தென்காசி மாவட்டம் புளியங்குடியில், விவசாய கூலி தொழிலாளி மாரியப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  தனது வீட்டில் வைத்திருந்த, 22 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிவிட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பல்வேறு கோணங்களில் விசாரித்த போலீசார், மாரியப்பனிடம் 22 லட்சம் எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டனர். பணம் திரும்ப கிடைக்காத விரக்தியில் மாரியப்பன் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.



  • Jan 28, 2025 08:46 IST

    இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி

    சார்களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் சார்களை நினைவிருக்கிறதா? என்று அமைச்சர் சிவசங்கர் கேட்டுள்ளார். மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ’சார் யார்’ என்பது இபிஎஸ் - க்கு தெரியாதா? என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.



  • Jan 28, 2025 08:43 IST

    ஜாக்டோ ஜியோ போராட்டம்

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 14 ஆம் தேதி வட்ட தலைநகரங்களிலும் 25 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.



  • Jan 28, 2025 08:19 IST

    டிஜிட்டல் கைது செய்துள்ளதாக ரூ.5 லட்சம் மோசடி

    டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாக கூறி, இளம்பெண்ணிடம் 5 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்ம கும்பல். சென்னையில் இருந்து உதகை வந்து பணத்தை வங்கி கணக்கில் மாற்றும் வரை, 14 மணி நேரம் வாட்சப் காலில் இருந்ததாக குற்றச்சாட்டு. 



  • Jan 28, 2025 08:17 IST

    இந்தியா-சீனா இடையே மீண்டும் விமான சேவை..!

    இந்தியா சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க உடன்பாடு போடப்பட்டுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்கவும் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தியாவும் சீனாவும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன.



  • Jan 28, 2025 08:14 IST

    நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட் - அதிகாலை கவுண்டவுன் தொடங்கியது

    ஜி.எஸ்.எல்.வி எஃப் 15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டன் இன்று அதிகாலை தொடங்கியது. இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி எஃப் 15 நாளை காலை 6.23 மணிக்கு விண்ணில் பாய்கிறது. 



  • Jan 28, 2025 07:55 IST

    தனியார் மூலம் காலை உணவு

    மாநகராட்சியின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.



  • Jan 28, 2025 07:51 IST

    அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து - 5க்கும் மேற்பட்டோர் காயம்

    சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஅர், 2 தனியார் தொழிற்சாலை பேருந்துகள், காலி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. சாலையில் வாகனம் மோதி இறந்து கிடந்த மாடு மீது கார் மோதிய நிலையில் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்கள் விபத்தில் சிக்கின. 5க்கும் மேற்பட்டோர் காயம். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



  • Jan 28, 2025 07:48 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

    திருவாரூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சதாசிவம் என்ற முடியவருக்கு 103 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



  • Jan 28, 2025 07:31 IST

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். உலக அமைதி மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பாக இணைணந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.



  • Jan 28, 2025 07:28 IST

    பக்தர்களுக்கு அனுமதி

    தை அமாவாசையை ஒட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 30 ஆம் தேதி வரையிலான 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • Jan 28, 2025 07:27 IST

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகள் மோத உள்ள போட்டி குஜராத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20ொடரில் இண்நிய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.



  • Jan 28, 2025 07:24 IST

    மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ. சோதனை

    சீர்காழி அர்கே திருமுல்லைவாசலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் 



Live News news updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment