/tamil-ie/media/media_files/uploads/2022/10/Sivashankar.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49 காசுக்கும் விற்பனையாகிறது.
விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ராக்கெட்: இஸ்ரோவின் 100 வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி எஃப்15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்வான் ஏவுதளத்திலிருந்து ந்ஸ் - 02 என்ற 2250 கிலோ எடை கொண்ட வழிகாட்டும் ரக செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.
-
Jan 29, 2025 22:03 IST
மு.க. தமிழரசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்
சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.க தமிழரசனை, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
-
Jan 29, 2025 21:04 IST
இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி
இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, "வரலாற்று சிறப்புமிக்க 100-வது ராக்கெட்டை ஏவியதற்கு இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். தனியார் துறையும் கைகோர்ப்பதன் மூலம், இந்தியாவின் விண்வெளிப் பயணம் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டும்; இந்த நம்பமுடியாத மைல்கல், நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்கு, அர்ப்பணிப்பை விளக்குகிறது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jan 29, 2025 20:22 IST
குதிரையேற்றத்தில் வெற்றி பெற்றோருக்கு உதயநிதி வாழ்த்து
பெங்களூருவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். வீராங்கனை மிராயா தாதாபோய் தங்கப்பதக்கம் வென்று, உலக குதிரையேற்ற தரவரிசையில் 5-வது இடம்பெற்றுள்ளார்.
-
Jan 29, 2025 20:01 IST
த.வெ.க-வில் இணையும் ஆதவ் அர்ஜுனா?
வி.சி.க முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா த.வெ.க-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சி தலைவர் விஜய்யை, அவரது இல்லத்தில் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். மேலும், விஜய்யின் தற்போதைய அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்.
-
Jan 29, 2025 19:52 IST
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்கு இதுவரை ரூ. 2, 125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
Jan 29, 2025 19:15 IST
சீமானுக்கு பார்த்திபன் பதிலடி
சீமானின் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, "பெரியார் இல்லாமல் அரசியல் இல்லை. அதனால் தான் பெரியாரை வைத்து சீமான் அரசியல் செய்கிறார். இப்போதும் நாம் அரசியல் செய்ய பெரியார் தேவைப்படுகிறார்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Jan 29, 2025 18:39 IST
பக்ருதீன் வழக்கு: நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க - ஐகோர்ட் உத்தரவு
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதியான போலீஸ் பக்ருதீன் தொடர்ந்த வழக்கில், பக்ருதீன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 29, 2025 18:37 IST
சென்னையில் காரில் சென்ற பெண்களை துரத்திச் சென்ற கார்; காவல்துறை விளக்கம்
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை துரத்தி சென்று தாக்க முற்பட்டதாக எழுந்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் கானத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வீடியோக்கள் கார் எண்கள் கண்டறியப்பட்டு இளைஞர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை 4 மணியளவில் ஈசிஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக அந்த 4 இளைஞர்களும் தாங்கள் சென்ற காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது புகார் அளித்த பெண்கள் தங்களின் காரை நிறுத்திவிட்டு கழிமுகப் பகுதியில் வேடிக்கை பார்த்து உள்ளனர்.தொடர்ந்து வீட்டிற்கு திரும்பிய பெண்கள் தங்களின் காரை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது பின்னால் நின்றிருந்த இளைஞர்களின் கார் மீது பெண்களின் கார் உரசி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 2 கார்களில், பெண்கள் வந்த காரை விரட்டி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் பெண்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். வழியில் மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
Jan 29, 2025 17:59 IST
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புக்காக வந்த முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு; முர்மு, மோடி பங்கேற்பு
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புக்காக வந்த முப்படைகள், பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி பங்கேற்றனர்.
-
Jan 29, 2025 17:14 IST
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை புகார்; யூடியூபர் திவ்யா உள்பட 4 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் திவ்யா உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
-
Jan 29, 2025 16:57 IST
"உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்'' - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
"அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவ வழக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் முதல் தகவல் அறிக்கை பொது தளத்திற்கு வந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்; காவல்துறை எல்லை மீறினால், உச்சநீதிமன்றத்தை அணுகலாம்" என்று விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
Jan 29, 2025 16:45 IST
மா.செ.களுக்கு விஜய் எச்சரிக்கை
"நிர்வாகிகளை நியமிக்கும் போது கட்சியின் கட்டமைப்புக்கு வலுசேர்க்கும் தொண்டர்களுக்கு, நிர்வாக பொறுப்புகளை வழங்க வேண்டும். நிர்வாக பொறுப்புகளை வழங்குவதில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது" என்று த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
Jan 29, 2025 16:43 IST
தமிழக அரசு வலியுறுத்தல்
"உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை திறந்து விடுவதை கர்நாடகா உறுதிசெய்யும்படி உத்தரவிட வேண்டும்" என்று காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
-
Jan 29, 2025 16:11 IST
முத்தரசன் கண்டனம்
இலங்கையில் ஆட்சி மாறிய பிறகும் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jan 29, 2025 16:09 IST
அடுத்த 5 ஆண்டுகளில் 200-வது ராக்கெட் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் நிருபர்களிடம் பேசுகையில்," இஸ்ரோவின் 100வது ராக்கெட் ஏவ 48 ண்டுகள் ஆனது. அடுத்த 5 ஆண்டுகளில் 200வது ராக்கெட் ஏவுதல் என்பது சாத்தியமான ஒன்று தான். நாவிக் தொழில்நுட்பத்திற்காக ஏற்கெனவே 4 செயற்கைகோள்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது 5வது செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.
இன்னும் 3 செயற்கைகோள்கள் அனுப்பப்படும். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதல் மையம் திறக்கப்பட்ட போது ஒரு சோதனை ராக்கெட் ஏவப்பட்டது. 2 ஆண்டுகளில் குலசேகரபட்டினத்தில் இருந்து தொழில்முறை ராக்கெட் ஏவுதல்கள் செய்யப்படும். 4ம் தலைமுறை ஏவுதல் வாகனத்தில் புதிய உந்துதல் அமைப்பு உள்ளது. இதன்மூலம் 30 டன் எடைகொண்ட ஆய்வுக்கருவிகளை கீழ் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த முடியும்." என்று அவர் கூறினார்.
-
Jan 29, 2025 16:00 IST
வாடகை வீட்டை கோயில் போல் மாற்றிய நபர்
சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டை கோயில் போல் மாற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோத பூஜை நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் புகார் அளித்ததால், போலீசார் பூஜையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
-
Jan 29, 2025 15:54 IST
கேரளாவில் பட்டாசு வெடித்து ஒருவர் பலி
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே தேவாலய திருவிழாவில் வாணவேடிக்கையின் போது, பட்டாசு வெடித்து ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
-
Jan 29, 2025 15:50 IST
த.வெ.க மா.செ.க்கள் லிஸ்ட் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது. சென்னை புறநகர் - சரவணன், தென் சென்னை தெற்கு - தாமு, புதுக்கோட்டை - பர்வேஸ் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Jan 29, 2025 15:48 IST
மெட்ரோ மாதாந்திர பாஸ் நிறுத்தம்
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்.1ம் தேதி முதல் நிறுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jan 29, 2025 15:19 IST
சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு அழைத்து வர வேண்டும் - எலான் மாஸ்கிடம் கூறிய டிரம்ப்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோரை பத்திரமாக அழைத்து வரும் பொறுப்பை எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்துள்ளார். இரு விண்வெளி வீரர், வீராங்கனையை விண்வெளியில் முன்னாள் அதிபர் பைடன் தவிக்க விட்டுவிட்டதாக டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மஸ்க் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர டொனால்டு டிரம்ப் ஸ்பேஸ் எக்ஸ்-ஐ கேட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு செய்வோம். பைடன் இவர்களை நீண்ட காலம் தவிக்க செய்தது கொடூரமானது என்று அவர் கூறினார்
-
Jan 29, 2025 15:00 IST
ஈ.சி.ஆர் சம்பவம் - இளைஞர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை இளைஞர்கள் துரத்திய சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
Jan 29, 2025 14:29 IST
தவெக மாவட்ட செயலாளர்களை தனி தனியே சந்தித்து விஜய் நேர்காணல்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நிர்வாகிகளை சந்திக்க பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகை. 2வது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக மாவட்ட செயலாளர்களை தனி தனியே சந்தித்து நேர்காணல் நடத்துகிறார் கட்சி தலைவர் விஜய்
-
Jan 29, 2025 14:27 IST
தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை
சென்னை, ஈசிஆரில் பெண்களை துரத்திய சம்பவ வீடியோவை காணும்போது நெஞ்சமே பதறுகிறது. தமிழகத்தில் எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Jan 29, 2025 14:26 IST
ஜெயலலிதா பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க உத்தரவு
சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 29, 2025 13:45 IST
சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி
வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர்கள் கருதுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் கூறியுள்ளார். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் நினைப்பதாக, மாணவிகள் தம்மிடம் கூறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
-
Jan 29, 2025 13:44 IST
ஈ.சி.ஆர் சாலையில் பெண்களை அச்சுறுத்திய கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: இ.பி.எஸ்
சென்னை ஈசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை சிலர் அச்சுறுத்தியது பதைபதைக்க வைக்கிறது. வீடு வரை துரத்தி வந்த கும்பலிடம் இருந்து பெண்களை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர். ஈசிஆர் சாலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றது கண்டனத்திற்குரியது. நேர்மையான முறையில் வழக்கு பதிந்து அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார்.
-
Jan 29, 2025 13:24 IST
சிறுமியின் 28 வார சிசுவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி
16 வயது மகளின் கருவை கலைக்கக் கோரி, தாய் தொடர்ந்த வழக்கில் மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சிறுமியின் 28 வார சிசுவை கலைக்க அனுமதி அளித்துள்ளது,
-
Jan 29, 2025 13:21 IST
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்ய திமுக கொடி லைசன்சா? இ.பி.எஸ் கேள்வி
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா? குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 29, 2025
அவர்களிடம் இருந்து தப்பித்த… -
Jan 29, 2025 12:46 IST
ஆழ்ந்த வருத்தங்கள் நடந்த சம்பவம் குறித்து மம்தா பானர்ஜி கருத்து
பிரயாக்ராஜில் மகா மகா கும்பமேளாவில் நடந்ததை குறித்து சூழ்நிலையில் உயிர் இழப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சோகத்தை வெளிப்படுத்தினார். இதை குறித்து அவர் எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார்.
-
Jan 29, 2025 12:27 IST
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
"பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
Jan 29, 2025 12:11 IST
பிரதமர் மோடி மஹா கும்ப் சம்பவத்தை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடத்த பிறகு நான்கு முறை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து தனது வருத்தி சோகமாக தெரிவித்தார். இதை பற்றி தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
-
Jan 29, 2025 12:08 IST
காரில் வந்த பெண்ணை தாக்கிய இளைஞர்
முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை, இளைஞர்கள் துரத்தி சென்றுள்ளனர். வீடு வரை பின்தொடர்ந்து அந்த இளைஞர்கள் காரை நிறுத்த தாக்கியதாக புகார் அளித்துன்னனர். வீடியோ பதிவுகளை கைப்பற்றி கானாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jan 29, 2025 11:51 IST
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் - உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார். "தை அமாவாசை என்பதால் பிரயாக்ராஜில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் குவிந்தன. பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் உள்ளனர், 5 கோடி பேர் புனித நீராடினார்கள். திரிவேணி சங்கமம் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சில பக்தர்கள் தடுப்புகளை தாண்ட முயன்ற போது காயம் அடைந்தனர்" என்று அவர் விளக்கியுள்ளார்.
-
Jan 29, 2025 11:43 IST
திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக எம் பி கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாளை மறுநாள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் இழுப்ப வேண்டிய பிரெச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர். புயல் நிவாரண கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.
-
Jan 29, 2025 11:38 IST
யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும், ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்தவாஜ் கோரிக்கை
டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சவுரப் பரத்வாஜ் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இந்த நிலைமை குறித்து குற்றம் சாட்டினார், மேலும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார். இதை அவர் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
-
Jan 29, 2025 11:23 IST
ரூ.4 கோடி பறிமுதல்- பாஜக எம்.பி.யிடம் விசாரணை
மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி பாஜக எம். பி செல்வகணபதியிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jan 29, 2025 11:19 IST
ராகுல் காந்தி தவறான நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பாஜக தலைமையிலான அரசு மற்றும் மையத்தை சங்கத்தில் இந்த நிலைமை தொடர்பாக பேசினார். பாஜக வை "விஐபி கலாச்சாரம்" மற்றும் "தவறான நிர்வாகம்" என்று காந்தி குற்றம் சாட்டினார்.
-
Jan 29, 2025 11:14 IST
சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ₹23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ₹23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ கஞ்சா போதைப் பொருள் பொட்டலங்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
Jan 29, 2025 11:11 IST
மஹா கும்ப் நிர்வாகத்தை இராணுவம் கைப்பற்ற வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் விரும்புகிறார்
சங்கத்தில் நடந்த ஸ்டாம்பீட் போன்ற சம்பவம் தொடர்பாக பாஜக தலைமையிலான அரசு மற்றும் மையத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வெளியேறியதால், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் ஒரு கடுமையான கருத்தை வெளியிட்டார், ‘உலகத் தரம் வாய்ந்த அமைப்பு’ கூற்றுக்களுக்குப் பின்னால் உண்மை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மகா கும்ப் மேளாவின் நிர்வாகத்தையும் நிர்வாகத்தையும் கையகப்படுத்துமாறு எம்.பி. இராணுவத்தை கோரியது.
-
Jan 29, 2025 10:47 IST
2404 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் ஸ்டாலின்!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.327.69 கோடி செலவில் கட்டப்படவுள்ள 2404 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இன்று ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
Jan 29, 2025 10:21 IST
மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
Jan 29, 2025 10:18 IST
கும்பமேளாவில் மவுனி அமாவாசையை ஒட்டி இதுவரை 2.78 கோடி பேர் புனித நீராடல்
கும்பமேளாவில் மவுனி அமாவாசையை ஒட்டி இதுவரை 2.78 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். காலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோதும் தொடர்ந்து குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள். இன்று மட்டும் 10 கோடி பேர் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Jan 29, 2025 09:44 IST
இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
"செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி அனைத்து சிஸ்டம்களும் திட்டமிட்டபடி இயங்கி வருகின்றன என 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அளித்துள்ளார்.
-
Jan 29, 2025 09:43 IST
சென்னையில் கடும் பனிமூட்டம்
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில், அதிகாலை நேரங்களில் வழக்கத்தை விடவும் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. தமிழகப் பகுதிகளில் அதிகாலைகளில் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Jan 29, 2025 09:38 IST
இந்திய விவகாரங்களில் கனடா தலையிடக் கூடாது - வெளியுறவுத் துறை
இந்தியா உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிடக்கூடாது என வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு ஆதரவு அளிப்பதை கனடா நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை. கனடா நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக கூறிய அறிக்கைக்கு வெளியுறவுத் துறை மறுப்பு
-
Jan 29, 2025 08:56 IST
மஹா கும்பமேளா - ஆம்புலன்ஸில் திடீரென பற்றிய தீ.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் இருந்த ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
-
Jan 29, 2025 08:54 IST
பிப்ரவரி 1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு
பிப்ரவரி ஒன்று முதல் ஆட்டோ பயணக் கட்டணம் உயர்கிறது. முதல் 2 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், பின்னர் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாய் கட்டணம் நிர்ணயம் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
Jan 29, 2025 08:53 IST
மருங்கூர் அகழாய்வில் இரும்பு கத்தி கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
-
Jan 29, 2025 08:53 IST
மகா கும்பமேளாவில் புனித நீராடல் மீண்டும் தொடக்கம்!
உத்தரபிரதேசம் மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் மீண்டும் புனித நீராடல் தொடங்கியது. காயம் அடைந்தோருக்கான சிகிச்சை பாதுகாப்பு முறைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தகவல்.
-
Jan 29, 2025 08:16 IST
இன்று தவெக மா.செ. 2ஆவது பட்டியல் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது. செங்கல்பட்டு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.