/indian-express-tamil/media/media_files/2025/01/11/E4lP786V2o6sqCkkIdPp.jpg)
இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் அவைய சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது.
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: குரூப் 2,2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in கிய இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2540 காலி இடங்களை நிரப்ப பிப்ரவரி 8 மற்றும் 23 ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
-
Jan 31, 2025 00:02 IST
துணைக் குடியரசுத் தலைவர் உள்துறை அமைச்சர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 2.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ஈ.சி.ஆர் வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -
Jan 30, 2025 20:46 IST
சத்துணவு திட்டத்தில் முட்டை நிறுத்தம்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
வலதுசாரி அமைப்புகளின் எதிர்ப்பால், மகாராஷ்டிரா மாநில அரசுப்பள்ளிகளில், சத்துணவு திட்டத்தில் முட்டைக்கான நிதியை நிறுத்த உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது, 24 லட்சம் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை வீதம், ஆண்டுக்கு ரூ50 கோடி மாநில அரசு செலவிட்டது. தற்போது நிதி நின்றுவிட்டதால், பள்ளிகளே இதற்கான நிதியை நன்கொடையாக திரட்ட வேண்டிய சூழல் உள்ளது.
-
Jan 30, 2025 19:01 IST
ஞானசேகரன் யாரிடம் பேசினார்? விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன் - அண்ணாமலை
ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை காவல்துறை வெளியிடாவிட்டால், நானே வெளியிடுவேன். அண்ணா பல்கலை மாணவி வழக்கில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. குற்றச்சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் யாரிடம் பேசினார் என்ற விவரங்கள் என்னிடம் உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
-
Jan 30, 2025 18:23 IST
ஈ.சி.ஆர் சாலையில் பெண்கள் காரை துரத்திய சம்பவம் - இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல்
சென்னை, ஈ.சி.ஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவத்தில் இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
-
Jan 30, 2025 18:09 IST
காமராஜர் பல்கலை. தேடல் குழுவை திரும்பப் பெறுக - ஆளுநர் ஆர்.என்.ரவி
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிக்கையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்
-
Jan 30, 2025 18:06 IST
பாராட்ட மனம் இல்லாமல் அரசை குறை சொல்கிறார் ஆளுனர்: எ.வ.வேலு பதிலடி
"ஆளுநர் ரவி அரசியல்வாதி போல செயல்படுவதால் பாராட்ட மனம் இல்லாமல் அரசை குறை சொல்கிறார் என்று காந்தி நினைவு நாள் அனுசரிப்பு குறித்து ஆளுநர் ரவியின் விமர்சனத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.
-
Jan 30, 2025 17:43 IST
செய்தியாளர்களை தாக்க முயன்ற கைதி
வேலூர் மகிளா விரைவு நீதிமன்ற வளாகத்தில் கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது வீடியோ எடுத்த செய்தியாளர்களை தாக்க முயன்ற கைதிகளால் பரபரப்பு ஏற்பட்டது
-
Jan 30, 2025 17:42 IST
உலகின் சிறந்த ஏ.ஐ மாடலை இந்தியா உருவாக்கும் – மத்திய அமைச்சர்
உலகின் மிகச்சிறந்த ஏ.ஐ மாடலை, இன்னும் 8 முதல் 10 மாதங்களில் இந்தியா உருவாக்கும். ரூ.10,370 கோடி மதிப்பிலான IndiaAI திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டின் சிறந்த மொழி ஏ.ஐ மாடலை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
-
Jan 30, 2025 17:24 IST
பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதம்தோறும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை 10 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
-
Jan 30, 2025 17:20 IST
முடிவுக்கு வந்த `பராசக்தி' பிரச்னை
சிவகார்த்திகேயனின் படத்திற்கு தமிழ், தெலுங்கில் `பராசக்தி’ என்றும், விஜய் ஆண்டனியின் படத்திற்கு தமிழில் `சக்தி திருமகன்', இந்தி, கன்னடம், மலையாளத்தில் `பராசக்தி' என்றும் பெயரிடப்பட உள்ளதாக இரு தரப்பிலும் பேசி சமரசம் செய்யப்பட்டுள்ளது
-
Jan 30, 2025 16:56 IST
காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது - தமிழக அரசு
சிறைக்காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆர்டர்லி முறை குறித்த் எதிர்காலத்தில் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
-
Jan 30, 2025 16:25 IST
‘பா.ஜ.க-வின் நடவடிக்கைகளை அ.தி.மு.க கண்டிப்பதே இல்லை’ - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “ஒன்றிய அரசின் வக்ஃபு வாரிய மசோதா குறித்து அ.தி.மு.க இதுவரை பேசவில்லை. தேசிய அளவில் பா.ஜ.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதே இல்லை. ஈரோடு இடைத்தேர்தல் மூலம் அதிமுக வலுவிழந்துள்ளதைக் காட்டுகிறது” என்று கூறினார்.
-
Jan 30, 2025 16:22 IST
சினிமாவில் அறிமுகமாகிறார் டி.ஜி.பி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால்
ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' படத்தின் மூலம் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், சினிமாவில் அறிமுகமாகிறார்.
-
Jan 30, 2025 15:39 IST
சென்னை அமித்ஷாவுக்கு நாளை கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு - செல்வப்பெருந்தகை எதிர்ப்பு
“அம்பேத்கரை அவமதித்தால் நாளை சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
Jan 30, 2025 15:30 IST
யு.ஜி.சி விதிகள் தொடர்பாக டெல்லியில் பிப். 6-ம் தேதி தி.மு.க போராட்டம் - டி.ஆர். பாலு அறிவிப்பு
டெல்லியில் தி.மு.க மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், “யு.ஜி.சி புதிய விதிகள் தொடர்பாக பிப்ரவரி 6-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும்; மாணவர்கள் போராட்டத்தி பங்கேற்பார்கள். யு.ஜி.சி விதிகளில் மாற்றம் செய்யப்படுவதை தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கும்” என்று கூறியுள்ளார்.
-
Jan 30, 2025 15:00 IST
போக்குவரத்து எஸ்.ஐ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
கடந்த 2018ம் ஆண்டு சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் வாகன சோதனையின் போது மது அருந்தி பைக் ஓட்டியதாக பைக் சாவியை போலீசார் பறித்ததால், அடையாற்று ஆற்றில் குதித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, போக்குவரத்து எஸ்.ஐ. விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.
ராதாகிருஷ்ணன் என்பவர் ஆற்றில் குதித்ததும், உடனிருந்த நண்பர் போலீசாரிடம் அவரை காப்பாற்றும்படி கெஞ்சியும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தன் மகனின் உயிரிழப்பு தொடர்பாக ராதாகிருஷ்ணனின் தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
ராதாகிருஷ்ணன் மது அருந்தி வாகனம் ஓட்டியதற்கான ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்கவில்லை என இவ்வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மகனை இழந்த ரேவதிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடாக வழங்கவும், எஸ்.ஐ. விஜயரங்கன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 30, 2025 14:45 IST
'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?' - தமிழக அரசுக்கு ஆளுநர் கேள்வி
"காந்தி நினைவு தின நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்த மறுப்பது ஏன்? காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்கவில்லை. காந்தி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். இன்றும் காந்தி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Jan 30, 2025 14:24 IST
சென்னையில் சிக்கிய ஹவாலா பணம்
சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் வைத்திருந்த பைகளில் சோதனை செய்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. சந்தேகப்படும்படி நின்றிருந்ததால் 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் துருவி துருவி போலீசார் விசாரித்துள்ளனர்.
-
Jan 30, 2025 14:01 IST
நான் அவன் இல்லை - பிரகாஷ்ராஜ் மறுப்பு
"மகா கும்பமேளாவில் புனித நீராடியதாக வெளியான புகைப்படம் தன்னுடையது அல்ல" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்த்துள்ளார்.
-
Jan 30, 2025 13:43 IST
இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - அ.தி.மு.க நிர்வாகி கைது
சென்னை அடுத்த படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் ஒன்றிய எம்..ஜி.ஆர் அணி இணை செயலாளர் பொன்னம்பலம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் குடியிருந்து வந்த இளம்பெண்ணிடம் பொன்னம்பலம் பாலியல் அத்துமீறல் நடத்தியுள்ளார்.
-
Jan 30, 2025 13:40 IST
அண்ணா பல்கலை வழக்கு- சைபர் கிரைம் டிஎஸ்பி விலகல்!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வழக்கு தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழுவில் இருந்து இடம்பெற்ற இந்த மாநில சைபர் கிரைம் டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தன்னை சரியாகப் பணி செய்ய விடாமல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விசாரணைக் குழுவின் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டி.எஸ்.பி. ரவியின் இந்த முடிவு காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Jan 30, 2025 13:08 IST
புதிய சிப்காட்: சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தம்
திருவள்ளூர் மாவட்டம் மணலூர் சிபிகாட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுசூழல் ஒப்புதல் நிறுத்த வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
-
Jan 30, 2025 12:58 IST
சென்னையில் வருகிறது அரசு மாட்டுக் கொட்டகை!
சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்படவுள்ளன. ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.10 வீதம் வசூலித்து பராமரிக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக பேசின் பாலம் சாலையில் ௧௦௦ மாடுகள் தங்கவைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
-
Jan 30, 2025 12:37 IST
சென்னையில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் - வெளியான புதிய தகவல்
சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் உருவாகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்தில், 320 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் நிலையம், 17 ஆயிரம் சதுர அடியில் சுரங்க வணிக வளாகத்துடன், ஒரே நேரத்தில் 5,000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது. அதிகளவில் மக்கள் கூடும் இடம் என்பதால் சென்னையில் பயன்பாட்டில் உள்ள மற்றும் எதிர்கால ரயில் நிலையங்களிலேயே அதிக நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள் இங்கு அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையம் கட்டி முடித்த பின்பு இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில், பனகல் பார்க் சீரமைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
-
Jan 30, 2025 12:34 IST
சசிகுமார் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை
நடிகர் சசிக்குமாரின் மை லார்ட் படத்திற்கு தடை கோரி சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ.செல்வம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். படத்தின் நாயகன் சசிகுமார் மற்றும் நாயகி சேர்ந்து புகைபிடிப்பது போன்று போஸ்டர் வெளியானது, அதனால் பெண்களை அவமதிக்கும் வகையில் போஸ்டர் உள்ளதாகவும், அதனால் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Jan 30, 2025 11:55 IST
சமூக நீதிக்கு இட ஒதுக்கீடு இன்றியமையாதது-சென்னையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
சமூக நீதியை கடைப்பிடிப்பதில் இட ஒதுக்கீடு என்பது இன்றியமையாதது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவ கட்டமைப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் 50% இட ஒதுக்கீட்டில் 1,207 மாணவர்கள் பயன்பெற்று வந்தனர் என்று சென்னையில் அமைச்சர் ம. சுப்பிரமணியன் பேட்டி.
-
Jan 30, 2025 11:34 IST
மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து!
மகா கும்பமேளாவில் இன்று (ஜன 30) இன்று முதல் விவிஐபி எனப்படும் அதி முக்கிய பிரபலன்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
-
Jan 30, 2025 11:18 IST
ஈ சி ஆர் விவகாரம் - கூடுதல் தனிப்படைகள் அமைப்பு
சென்னை ஈ சி ஆரில் பெண்களை காரில் துரத்திய விவகாரம் தொடர்பாக கூடுதல் தனிப்படை அமைக்கப்படவுள்ள. ஏற்கனவே நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்படவுள்ளது. காரின் பதிவெண்ணை வைத்து தேடியதில் கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
-
Jan 30, 2025 11:15 IST
பாலாற்று மாசால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
வேலூர் பாலாற்றில் தோல் ஆலை கழிவுகளால் ஏற்பட்ட மாசால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
-
Jan 30, 2025 11:12 IST
ரிப்பன் கட்டட வளாகத்தில் புதிய மாமன்ற கூடம்!
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் ₹75.70 கோடி மதிப்பீட்டில் புதிய மாமன்ற கூடம் கட்ட அரசின் நிர்வாக ஒப்புதல் கோரி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுளது. 3 மாடி கொண்ட கட்டடமாக 94,760 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதில் ஆலோசனை கூடம், மன்ற கூடம், மேயர் அலுவலகம், துணை மேயர் அலுவலகம், பொது மக்கள் காத்திருப்பு இடம், பத்திரிக்கையாளர் மாடம், பொது மக்கள் மாடம், உணவு அருந்தும் இடம் ஆகியவை இக்கட்டடத்தில் அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
Jan 30, 2025 11:10 IST
4 புதிய விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க மாநகராட்சியில் மன்றக்கூடத்தில் தீர்மானம்
சென்னை மாநகராட்சியில் உள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்தும் வகையில் : மைக்ரோசிப் பொருத்துதலை காட்டயாமக்கும் முறையை செயல்படுத்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக தனி மென்பொருள் மற்றும் செயலியை உருவாக்க டெண்டர் விடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகரிக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் வகையில், 4 புதிய விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க மாநகராட்சியில் மன்றக்கூடத்தில் தீர்மானம் செய்துள்ளனர். மாதவரம், கள்ளிக்குப்பம், பிரிக்லின் சாலை, நெளம்பூர் யூனியன் சாலை ஆகிய இடங்களில் ₹7.26 கோடி மதிப்பில் புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
-
Jan 30, 2025 11:08 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றார்
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும் என்று மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றார்.
-
Jan 30, 2025 11:00 IST
சென்னை அருகே திருமுல்லைவாயிலில் 5 மாதங்களாக பூட்டிக் கிடந்த வீட்டில் இருந்து 2 சடலங்கள் மீட்பு
சென்னை திருமுல்லைவாயிலில் 5 மாதங்களாக பூட்டிக் கிடந்த வீட்டில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டது. தனியாக வசித்து வந்த தந்தை 70 வயதான சாமுவேல் 35 வயதான அவரது மகள் ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர்.
-
Jan 30, 2025 10:54 IST
காந்தியடிகள் நினைவு நாள் - முதலமைச்சர் மரியாதை
காந்தியடிகளின் 78 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.க்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
Jan 30, 2025 10:07 IST
வக்பு மசோதா அறிக்கை சமர்பிப்பு
வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இன்று சமர்பிப்பு. எதிர்க்கட்சிகள் எதிர்த்தும் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் அறிக்கை சபாநாயகரிடம் அளிக்கப்படுகிறது.
-
Jan 30, 2025 10:00 IST
ஏறுமுகத்தில் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு. ஒரு கிராம் ரூ7,610க்கும், ஒரு சவரன் ரூ.60,880க்கும் விற்பனையாகிறது.
-
Jan 30, 2025 09:59 IST
ஈசிஆரில் பெண்களை காரில் துரத்திய கார் உரிமையாளரை கண்டறிவதில் சிக்கல்
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் கார் உரிமையாளரை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார் பலரிடம் கை மாறியதால் அதில் வந்த இளைஞர்கள் யார் என்பதை கண்டறிவது போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது.
-
Jan 30, 2025 09:34 IST
தமிழ்நாடு அரசு உத்தரவு!
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது. தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம். ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jan 30, 2025 09:32 IST
சென்னை: புதுப்பேட்டையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு - இருவர் கைது
சைதாப்பேட்டையில் இருந்து அயனாவரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது, பைக்கில் வந்த ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் மோதியுள்ளார். பிறகு பைக்கை பேருந்தின் முன் நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மது பாட்டிலால் பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு இருவரும் தப்பி ஓடி உள்ளனர். பேருந்து ஓட்டுனர் சிவானந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Jan 30, 2025 08:54 IST
கும்பமேளா சம்பவம் - நடவடிக்கை எடுக்க மனு
உத்தரபிரதேச மகா கும்பமேளாவில் 30 பேர் உயிரிழந்த சம்பவம், கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுநல மனு போடப்பட்டுள்ளது. கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் மனு.
-
Jan 30, 2025 08:52 IST
சவாலை ஏற்ற ஹரியானா முதல்வர்
யமுனை நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதால் யமுனை நதி நீரை அமித்ஷாவும், ராகுல் காந்தியும் பொதுவெளியில் குடிக்க தயாரா? என்ற அரவிந்த் கெஜ்ரிவால் சவாலை ஏற்று யமுனை நதி நீரை குடித்த ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி.
-
Jan 30, 2025 08:22 IST
ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவு
நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்தி நகைப்புக்குரியது; அதற்கான எந்த வழியும் இப்போது இல்லை; எனக்கு நேரமும் இல்லை; நான் அரசியலுக்கு வருவது குறித்து யாரிடமும் இதுவரை பேசியதும் இல்லை என ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Jan 30, 2025 08:21 IST
2026 த.வெ.கவுக்கு தான் - விஜய்
”2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம்“ என அக்கட்சியின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
Jan 30, 2025 08:01 IST
திருமாவளவன் பேட்டி
"விஜயுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்தால் மகிழ்ச்சிதான், வாழ்த்துகள்..! எங்களுடன் தொடர்ந்து இயங்கவில்லை என்பது வருத்தம்தான்" என திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
-
Jan 30, 2025 07:58 IST
சென்னையில் பயங்கரம் - குத்துச்சண்டை வீரர் படுகொலை
சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த குத்துச்சண்டை வீரர் தனுஷை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. தனுஷை வெட்டும்போது தடுக்க முயன்ற அவரது நண்பர் அருணுக்கும் அரிவாள் வெட்டு தலை, உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்த மகனைக் கண்டு தாய் கதறி அழுதார். கஞ்சா போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததால் கொலை நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு படுகொலை குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் தீவிர விசாரணை.
-
Jan 30, 2025 07:56 IST
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப் 2,2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in, www.tnpscexams.in கிய இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2540 காலி இடங்களை நிரப்ப பிப்ரவரி 8 மற்றும் 23 ஆம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
-
Jan 30, 2025 07:40 IST
ஆணுறைக்கான நிதியை நிறுத்திய அமெரிக்கா
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் ஆணுறை வாங்க ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தியது அமெரிக்கா ஆணுறைக்கான நிதியை வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
-
Jan 30, 2025 07:39 IST
வேட்பாளர் காலை தொட்டு வணங்கிய மோடி
டெல்லியில் தேர்தல் பேரணியின்போது காலில் விழுந்த பாஜக வேட்பாளர் தடுத்து நிறுத்தி இளம் வேட்பாளரின் காலை 3 முறை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.
-
Jan 30, 2025 07:35 IST
சென்னை சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
சென்னை எழிலகத்தில் இரவு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம். காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அடுத்தடுத்த போராட்டத்தை முன்னெடுப்போம் என சத்துணவு ஊழியர்கள் கூறுகின்றனர்.
-
Jan 30, 2025 07:33 IST
த.வெ.கவில் இணைய உள்ள ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் இணைகிறார் ஆதவ் அர்ஜுனா. கட்சியின் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.