/indian-express-tamil/media/media_files/2025/02/02/Dkx5M35EZriFWrghhcjy.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் நேற்றைய பெட்ரோல், டீசல் விலையை விட இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.39 காசுக்கும் விற்பனையாகிறது.
நீர் நிலவரம்: மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 479 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 110.58 அடியாகவும், நீர் இருப்பு 79.23 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
Feb 01, 2025 21:15 IST
போலி பெண் மருத்துவர் கைது
மதுரையில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். சுகாதாரத்துறை இணை இயக்குநர் நடத்திய ஆய்வின் போது போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Feb 01, 2025 21:11 IST
பிப்ரவரி 3-ஆம் தேதி வக்பு வாரிய திருத்த மசோதா அறிக்கை தாக்கல்
பிப்ரவரி 3-ஆம் தேதி வக்பு வாரிய திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை, குழுவின் தலைவர் ஜகதம்பிகா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
-
Feb 01, 2025 20:46 IST
விமானத்தில் பழுது - பயணிகள் அவதி
திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தற்போது வரை புறப்படாததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
-
Feb 01, 2025 20:17 IST
நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு
நாளைய தினம் (பிப் 2) தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவணப்பதிவுக்கு விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Feb 01, 2025 19:53 IST
"மத்திய பட்ஜெட்டில் காஷ்மீர், மணிப்பூர் மாநிலங்கள் புறக்கணிப்பு": பெ. சண்முகம்
மத்திய பட்ஜெட்டில் காஷ்மீர், மணிப்பூர் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் வன்முறையை சந்தித்து வரும் நிலையில், அங்கு மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது பா.ஜ.க-வின் பழிவாங்கும் போக்கை வெளிப்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 01, 2025 19:14 IST
மத்திய அரசு மீது விஜய் குற்றச்சாட்டு
2025-26 பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொண்டதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை. தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதி வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மற்ற மாநிலங்களையும், மக்களையும் அவமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 01, 2025 19:09 IST
மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை
திறமையை வெளிப்படுத்த மாணவர்கள் தயங்கக் கூடாது என சிவகார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். திருச்சி கண்டோன்மெண்டில் தான் பயின்ற பள்ளியின் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.
-
Feb 01, 2025 18:20 IST
ஈ.சி.ஆர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளி சந்துரு கைது
ஈ.சி.ஆர் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சந்துரு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், சந்துருவின் தாய்மாமா அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
-
Feb 01, 2025 17:39 IST
ஈ.சி.ஆர் சம்பவத்தில் தொடர்புடைய 2 கார்களும் அ.தி.மு.க-வினருடையது - ஆர்.எஸ். பாரதி
ஈ.சி.ஆர் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு கார்களும் அ.தி.மு.க-வினருக்கு சொந்தமானது என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். முக்கிய குற்றவாளி என கருதப்படக் கூடிய சந்துரு அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என அவர் தெரிவித்துள்ளார். அவருடைய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு கார், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க செயலாளரின் உறவினரது கார் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Feb 01, 2025 17:18 IST
விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்து அறிக்கை
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு, ஆதவ் அர்ஜுனா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, மாபெரும் வரலாற்று கடமைக்கான பயணத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என தெரிவித்துள்ள அவர், சமத்துவ, சமூக நீதி கொள்கைகளின் அடிப்படையில் மக்களோடு பயணிப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 01, 2025 17:08 IST
கழிவு நீரை மக்கள் குடிக்கவில்லை - தமிழக அரசு
வேங்கைவயலில், மனித கழிவு கலந்த நீரை யாரும் குடிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு பிப்ரவரி 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அந்தக் குடிநீரை பருகவில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது.
-
Feb 01, 2025 16:24 IST
வேங்கை வயல் - பிப்.3ம் தேதி தீர்ப்பு
வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் பிப்.3ம் தேதி தீர்ப்பு என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவுவிட்டுள்ளது.
-
Feb 01, 2025 15:32 IST
அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறை அதிகாரிகளுடன் இனைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு பணி ஆணை வழங்கும் போது முதல் இதை கூறியுள்ளார்.
-
Feb 01, 2025 15:06 IST
ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம்!
கடந்த ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக ஜன 10 ஆம் தேதி 3.60 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 25.30 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Feb 01, 2025 14:56 IST
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவலர் கைது
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உதவி ஏற்பாடு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு உதவி செய்வதாக கூறி காவல் நிலையம் அழைத்து செல்லாமல் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார்.
-
Feb 01, 2025 14:42 IST
உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
வீட்டு செப்டிக் டேங்கில் சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு நேர்ந்தால், வீட்டின் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 01, 2025 14:25 IST
தவெக தொண்டர்கள் குமுறல்
"தவெகவில் சாதி பார்த்து பதவி போடுறாங்க" என்று தவெக கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
Feb 01, 2025 13:54 IST
UGC விதிமுறைகளை திரும்பபெற கருத்து தெரிவிக்கும் பரப்புரை
UGC யின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தலின்படி மாணவர் இந்தியா சார்பாக QR - CODE மூலம் ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் கருது தெரிவிக்கும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
-
Feb 01, 2025 13:29 IST
மாவட்டத்தில் முடி திருத்தும் கட்டணம் உயர்வு
சேலம் மண்டலம் முடி திருத்தும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டத்தில் முடித்திருந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உடனடியாக இந்த முடிவு எடுக்க படுவதாகவும் கட்டிங் மற்றும் சேவிங் செய்ய ரூ. 200 வசூலிக்க முடிவு எடுத்துள்ளனர்.
-
Feb 01, 2025 13:26 IST
கடலூர் மாவட்டம் - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
-
Feb 01, 2025 13:16 IST
பட்ஜெட் 2025: மீண்டும் தமிழ்நாடு புறக்கணிப்பு!
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்தாண்டும் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், பேரிடர் கால நிதி உள்ளிட்ட எதற்கும் இந்தாண்டும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
-
Feb 01, 2025 13:15 IST
ஆறு மாத பச்சிளம் குழந்தை சாக்கடையில் வீச்சு
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் காமராஜ் புறத்தில் சாக்கடை கால்வாயை தூய்மை செய்த போது ஆறு மாத பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் சாக்கடையில் கிடந்தது. தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
Feb 01, 2025 12:17 IST
ஆவடி அருகே கோல் போஸ்ட் விழுந்து சிறுவன் பலி!
ஆவடி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது எதிர்பாராத விதமாக இரும்பு கோல் போஸ்ட் தலை மீது விழுந்ததில் சிறுவன் பலி. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Feb 01, 2025 11:43 IST
த.வெ.க.-வின் 4ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல்
த.வெ.க.-வின் 4ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பனையூரில் தொண்டர்கள் திரண்டனர்.
-
Feb 01, 2025 11:17 IST
ராணுவம் வசம் இருக்கும் தமிழர்களின் நிலம் விரைவில் மீட்க்கப்படும் - அநுரகுமார திசநாயக
"இலங்கையின் வடக்கு பகுதியில் ராணுவம் வசம் இருக்கும் தமிழர்களின் நிலம் முழுவதும் விரைவில் திரும்ப அளிக்கப்படும். இதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" யாழ்ப்பாணம் சென்ற அதிபர் அநுரகுமார திசநாயக, தமிழ் மக்களிடையே பேசியுள்ளார்.
-
Feb 01, 2025 11:15 IST
பேராசிரியர்கள் ஓய்வு வயது 65
தெலங்கானாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வு வயதை 60-லிருந்து 65 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
Feb 01, 2025 10:54 IST
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,701 புள்ளிகளில் வர்த்தகம். தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 57 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,565 புள்ளிகளில் வர்த்தகம் நடந்தது.
-
Feb 01, 2025 10:24 IST
பிடிப்பட்ட திருட்டு கும்பல்- தப்பி ஓடும்போது எலும்பு முறிவு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கும்பல் ராசிபுரத்தில் பிடிபட்டது. வாகன சோதனையின் போது அதிவேகத்தில் வந்த பைக்கை பிடித்து விசாரிக்கையில், பல திருட்டு வழக்குகளில் தேடப்பட்ட சென்னையைச் சேர்ந்த டேவிட் (24), மணி, திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) மூவரும் பிடிபட்டனர். கைது செய்யும் போது டேவிட், மணிகண்டன் இருவரும் தப்பி ஓடுகையில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Feb 01, 2025 10:22 IST
தனியார் பால் விலை - லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு
திருமலா, ஜெர்சி நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.5 அதிகரித்துள்ளது.
-
Feb 01, 2025 10:16 IST
வேங்கைவயல் சம்பவம்; முரசொலியில் கட்டுரை
வேங்கைவயல் விவகாரத்தை வைத்து தவறான பரப்புரை செய்ய வேண்டாம். அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
-
Feb 01, 2025 09:34 IST
நகரும் படிக்கட்டுகள் கோளாறு; பயணிகள் குற்றச்சாட்டு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 10 - 11 நடைமேடையில் உள்ள நகரும் படிக்கட்டுகள், கடந்த 10 நாட்களாக வேலை செய்யாததால் பயணிகள் அவதி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோது, முறையான பதில் இல்லை எனவும் குற்றச்சாட்டு.
-
Feb 01, 2025 09:04 IST
மகா கும்பமேளாவில் குவியும் பக்தர்கள்
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளாவில் 27 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடினர். திரிவேணி சங்கமத்தில் நடந்த ஆரத்தி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
Feb 01, 2025 09:02 IST
தலைநகர் டெல்லியை வாட்டியெடுக்கும் குளிர்
தலைநகர் டெல்லியில் அதிக குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிர் அடர் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின.
-
Feb 01, 2025 09:01 IST
ஈசிஆர் சம்பவம் - முக்கிய குற்றவாளி கைது
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை துரத்திய சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி சந்துருவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஈசிஆர் சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Feb 01, 2025 08:56 IST
விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஒரே நேரத்தில் 13 வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஒரே நேரத்தில் 13 வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் 3 ஆம் கட்டமாக அகழாய்வு நடைபெற்று வருகிறது.
-
Feb 01, 2025 08:53 IST
பேருந்து டயர் வெடித்து மின் கம்பியில் உரசி விபத்து
சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து துவரங்குறிச்சி கல்லுப்பட்டி அருகே சென்றபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பி உரசி தீப்பிடித்தது. தீப்பிடித்ததில் ஆம்னி பேருந்து முழுவதும் எரிந்த நிலையில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
-
Feb 01, 2025 08:51 IST
விண்வெளியில் அதிக நேரம் நடந்து சுனிதா சாதனை
விண்வெளியில் அதிக நேரம் நடந்து நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளார். விண்வெளியில் அதிகபட்சமாக 62 மணி நேரம் 6 நிமிடம் நடந்த பெண் சுனிதா சாதனை படைத்துள்ளார். சர்வதேச வெண்வெளி நிலையத்தில் பழுது மேற்கொள்ள சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் நடந்தனர்.
-
Feb 01, 2025 08:22 IST
அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியுள்ளார். கள ஆய்வு கூட்டத்தின் போது மற்ற மாவட்டங்களில் நடந்ததுபோல சென்னையில் சலசலப்பு நடக்கக்கூடாது என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
Feb 01, 2025 08:20 IST
மகனுக்காக நீதி கேட்கும் தாய் - பிரபலங்கள் ஆதரவு
கேரளாவில் பள்ளி மாணவனின் தற்கொலைக்கான ரேகிங் பிண்ணனி குறித்து நீண்ட அறிக்கை வெளியிட்டு தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். நீதி கேட்டு போராடும் தாய்க்கு ஆதரவாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டுள்ளனர்.
-
Feb 01, 2025 08:18 IST
ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற வழக்கு
ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை விரட்டிச் சென்ற வழக்கில் கைதான 4 பேருக்கு பிப்ரவரி 14 வரை நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 01, 2025 07:46 IST
சோனியா காந்தி கருத்து - பிரியங்கா விளக்கம்
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் விதமாக சோனியா காந்தி கருத்து தெரிவிக்கவில்லை. நீண்ட உரையை வாசித்ததால் திரவுபதி முர்மு சோர்வடைந்தார் என்று சாதாரணமாகத்தான் கூறியதாக காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி விளக்கம் தெரிவித்துள்ளார்.
-
Feb 01, 2025 07:43 IST
ஜனாதிபதியை அவமதித்த சோனியா?
ஜனாதிபதி பதவிக்கான கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் திரவுபதி முர்மு பாவம் என சோனியா காந்தி கருத்து கூறியதாக குடியரசு தலைவர் மாளிகை எதிர்வினை தெரிவித்துள்ளது. ஏழைகளையும் பழனஙகுடி இனத்தவரையும் சோனியா காந்தி அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.
-
Feb 01, 2025 07:41 IST
"அமித்ஷா வருகையால் கடும் டிராபிக்"
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடைபட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
-
Feb 01, 2025 07:39 IST
உத்தர பிரதேசத்தில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து
உத்தரபிரதேசம் காசியாபாத் அருகே கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வாகனம் போபுரா சௌக் அர்கே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாக வில்லை.
-
Feb 01, 2025 07:36 IST
மத்திய பட்ஜெட் 2025
2027 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதற்கான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஏழை, நடுத்தர மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அம்சங்கள் இருக்கும் என்றும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
-
Feb 01, 2025 07:33 IST
மத்திப பட்ஜெட் 2025
மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.னிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என எதிர்பார்ப்பு.
-
Feb 01, 2025 07:32 IST
வணிக சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்தது
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 க்கு விற்பனையாகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.