Chennai News Highlights: பழனியில் இன்று முதல் தரிசன கட்டணம் ரத்து

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பழனி கோயில்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.90-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

டெல்லி முதல்வர் யார்? : டெல்லி தேர்தலில் பாஜக வென்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று ஆலோசனை செய்யப்பட உள்ளது. பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

  • Feb 09, 2025 20:24 IST

    நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் - எடப்பாடி பழனிசாமி உறுதி

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “போராடிய விவசாயிகள் கனவை நனவாக்கிய அரசு அ.தி.மு.க அரசு. பணத்தாலோ பொருளாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது. விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறார் இன்றைய முதல்வர். நடந்தாய் வாழி காவிரி திட்டம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கிடப்பில் போடப்பட்டது; இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் சுத்தமான குடிநீர் கிடைத்திருக்கும். நீர் மேலாண்மைக்கு திமுக அரசு முன்னுரிமை தருவதில்லை. நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும், உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.



  • Feb 09, 2025 19:19 IST

    நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்; பணத்தாலும் பொருளாலும் அடிமைப்படுத்த முடியாது - இ.பி.எஸ் 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்கள் நலனை பற்றி தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை; திறமையற்ற அரசு ஆட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் 85 சதவீதம் பணிகள் அ.தி.மு.க ஆட்சியில் நிறைவடைந்துவிட்டன. அரசியல் காப்புணர்ச்சி காரணமாக நான்கு ஆண்டு காலம் திட்டத்தை கிடப்பில் போட்டனர். இந்த திட்டத்தை கொண்டு வர எந்த முயற்சியும் செய்யாமல் திறந்து மட்டும் வைத்தனர். விவசாயிகளின் கனவை அ.தி.மு.க நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு எதிர்பார்க்காமல் மாநில அரசு விதியை ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன். பணத்தாலும் பொருளாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது 



  • Advertisment
    Advertisements
  • Feb 09, 2025 18:59 IST

    மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா

    மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பிரேன் சிங் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மணிப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக வன்முறை நீடித்துவரும் நிலையில் பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.



  • Feb 09, 2025 18:20 IST

    2026-ல் விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி - தமிழக வெற்றிக் கழகம்

    2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.



  • Feb 09, 2025 17:18 IST

    மக்களின் முடிவை மதிக்கிறோம் - உதயநிதி ஸ்டாலின்

    டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியது தொடர்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அம்மக்களின் முடிவை மதிக்கிறோம் எனக் கூறினார்.



  • Feb 09, 2025 16:25 IST

    ஈரோடு கிழக்கு வெற்றி குறித்து சேகர்பாபு கருத்து

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க பெற்ற வெற்றி டிரைலர் தான் எனவும், அதற்கான முழுப்படத்தையும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் காணலாம் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



  • Feb 09, 2025 16:18 IST

    விஜய் மக்களை சந்திக்க வேண்டும் -  பிரேமலதா விஜயகாந்த்

    அரசியலில் நிலைத்திருக்க விஜய் முதலில் மக்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திக்க வேண்டும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார். மேலும், விஜய் தங்கள் வீட்டுப் பிள்ளை எனவும், அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது விஜயகாந்த் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 09, 2025 15:50 IST

    இலக்கை தொடங்கி வைத்த ஈரோடு கிழக்கு - ஸ்டாலின்

    2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 என்ற இலக்கை ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி தொடங்கி வைத்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிப் பயணம் தொடரும் வகையில் தி.மு.க-வின் செயல்பாடுகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Feb 09, 2025 15:13 IST

    அ.தி.மு.க-விற்கு பாடம் புகட்டிய மக்கள் - திருமாவளவன் 

    நா.த.க-வுக்கு துணைபோன அ.தி.மு.க-விற்கு மக்கள் பாடம் புகட்டியதாக திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, பா.ஜ.க சங் பரிவார்களை பின்பற்றி பெரியாரை கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிய நா.த.க, பா.ஜ.க வாக்குகளையும், தி.மு.க வாக்குகளையும் பெறலாம் என கணக்கு போட்டது எனவும், ஆனால் வழக்கம் போல் அக்கட்சி டெபாசி வாங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நா.த.க-வுக்கு மறைமுகமாக துணைபோன அ.தி.மு.க-விற்கு மக்கள் பாடம் புகட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 09, 2025 14:41 IST

    38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது



  • Feb 09, 2025 14:39 IST

    ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மின்வாரிய தலைவர் - மேலாண்மை இயக்குநராக இடமாற்றம்

    கூட்டுறவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறையில் இருந்து மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்



  • Feb 09, 2025 13:57 IST

    தண்டவாளத்தில் கிடந்த கற்கள் - சதியா? என விசாரணை

    சென்னை, திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தில்  கற்கள், இரும்பு ஸ்பேனர் கிடந்தன. இதனை அறிந்த ஊழியர்கள் விரைந்து வந்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Feb 09, 2025 13:56 IST

    ஆன்லைன் கேம் – பணம் கட்டி விளையாட சிறுவர்களுக்கு தடை

    தமிழகத்தில், ஆன்லைன் கேமில் பணம் கட்டி விளையாட சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது



  • Feb 09, 2025 13:09 IST

    கிரிக்கெட் பார்த்து மூச்சுத்திணறி இளைஞர் மரணம்

    சென்னை, நந்தனம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கார்த்திக் (25) என்ற இளைஞர் ஆரவாரம் செய்த போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்



  • Feb 09, 2025 13:06 IST

    தமிழக மாணவர்களின் உரிமைகளுக்காக நின்றதற்காக தமிழகம் தண்டிக்கப்படுகிறது - ஸ்டாலின்

    தமிழக மாணவர்களுக்கான ரூ.2,512 கோடியைப் பறித்து, பிற மாநிலங்களுக்கு வழங்கியுள்ளனர். இந்த செயல் வற்புறுத்தலுக்கு சற்றும் குறைவானதல்ல, தமிழக மாணவர்களின் உரிமைகளுக்காக நின்றதற்காக தமிழகம் தண்டிக்கப்படுகிறது. அரசியல் பழிவாங்கலுக்காக கல்வியின் கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்ற எந்த அரசாங்கமும் இந்திய வரலாற்றில் இருந்ததில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Feb 09, 2025 12:34 IST

    டெல்லி சட்டப்பேரவை கலைப்பு

    டெல்லியில் புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக 7வது சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார் 



  • Feb 09, 2025 12:33 IST

    இந்தியா கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இருக்க வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

    இந்தியா கூட்டணி கட்சிகளிடம் ஒற்றுமை இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளார்



  • Feb 09, 2025 12:07 IST

    டெல்லி முதல்வர் யார்? பா.ஜ.க தீவிர ஆலோசனை

    டெல்லி முதல்வரை தேர்வு செய்வது குறித்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா,மாநில பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது 



  • Feb 09, 2025 11:35 IST

    பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் தமிழகம் - எடப்பாடி பழனிசாமி

    குழந்தைகள், பெண்கள், காவல் அதிகாரிகள் என யாருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் உள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். 



  • Feb 09, 2025 10:55 IST

    விபத்து ஏற்பட்டது; பாதிப்பு எதுவும் இல்லை - அஜித்

    போர்ச்சுக்கலில் பயிற்சியின்போது சிறு விபத்து ஏற்பட்டது, எங்களது குழு விரைந்து செயல்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி பயிற்சியை தொடர்கிறேன் என்று தனியார் சேனலுக்கு அஜீத் பேட்டி அளித்துள்ளார்.



  • Feb 09, 2025 10:51 IST

    டெல்லி முதல்வர் இன்று ராஜினாமா

    டெல்லி தேர்தலில், தோல்வி அடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை  டெல்லி முதல்வர் அதிஷி வழங்குகிறார்.



  • Feb 09, 2025 10:39 IST

    செலுத்தும் வரிக்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது, அற்ப சிந்தனை - பியூஸ் கோயல்

    சில மாநிலங்கள் தங்கள் வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்பது என்பது, அற்ப சிந்தனை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்



  • Feb 09, 2025 10:38 IST

    தைப்பூச திருவிழா; தமிழிசை கோரிக்கை

    தைப்பூச திருவிழாவை ஒட்டி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்-க்கு பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்



  • Feb 09, 2025 10:35 IST

    மெக்சிகோவில் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 41 பேர் மரணம்

    மெக்சிகோவில் பேருந்து, லாரி மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோவில் கான்கனில் இருந்து (Cancun) டபஸ்கோ (Tabasco) என்ற இடத்திற்கு 48 பேருடன் பேருந்து சென்றபோது விபத்துக்குள்ளானது. பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர்கள் இருவர் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Feb 09, 2025 09:51 IST

    மஹா கும்பமேளாவால் போக்குவரத்து நெரிசல் - வாரணாசி, பிரயாக்ராஜில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    மஹா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பிரயாக்ராஜ் வாரணாசி மாவட்டங்களில் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 12  ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.



  • Feb 09, 2025 09:46 IST

    திமுக வெற்றி போலியானது - இபிஎஸ்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி போலியானது என எதிர்க்கட்சி   தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவினரின் வாக்குகளை கள்ள ஓட்டாக பதிவு செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். 



  • Feb 09, 2025 09:41 IST

    சென்னை: காசிமேடு சந்தையில் மீன் வாங்க குவிந்த மக்கள்

    விடுமுறையையொட்டி சென்னை காசிமேடு சந்தையில் மீன் வாங்க அதிகமான மக்கள் குவிந்தனர்.



  • Feb 09, 2025 08:30 IST

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே ஐஜி ஏ.ஜி. பாபு ஆய்வு

    வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பான ரயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.



  • Feb 09, 2025 08:29 IST

    பேப்பர் ஸ்ட்ரா வாயில் கரைகிறது - ட்ரம்ப்

    பேப்பர் ஸ்ட்ராவில் குடித்தால் அது அருவருப்பாக வாயில் கரைவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார். மீண்டும் ப்ளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு மாற உத்தரவிட்டுள்ளார். 



  • Feb 09, 2025 08:27 IST

    அதிமுக கூட்டத்தில் மோதல்

    சென்னை கொடுங்கையூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்ட அ.தி.மு.க கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. கட்சி பதவியில் இருந்து நீக்கியது குறித்து புகார் அளிக்க சென்றவர் மீது தாக்குதல் நடத்தியதாக வடசென்னை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Feb 09, 2025 07:53 IST

    மீனவர்கள் 14 பேர் கைது

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.



  • Feb 09, 2025 07:51 IST

    "பாஜகவுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை"

    தமிழ்நாட்டிற்கு நிதியை கொடுக்காமல் மாநிலத்தின் அமைதியை மட்டும் கெடுக்க நினைப்பீர்களா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். திருந்துங்கள் இல்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Feb 09, 2025 07:49 IST

    அமைச்சர் முத்துசாமி கேள்வி

    டெல்லி தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி என்றால் ஈரோடு இடைத்தேர்தல் அதிமுகவுக்கான சம்மட்டி அடியா? இண்டியா கூட்டணியை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 



  • Feb 09, 2025 07:47 IST

    அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் கூறியுள்ளார்.



  • Feb 09, 2025 07:44 IST

    கைது நடவடிக்கைகளில் டிரம்ப் தீவிரம்

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் 8,000 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.தினசரி 1200 முதல் 1400 பேர் வரை கைது செய்ய அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளதாக அந்த அமைப்பின் இயக்குநர் விட்டெல்லோ கூறியுள்ளார்.



  • Feb 09, 2025 07:30 IST

    கரிபியன் கடற்பகுதியில் நிலநடுக்கம்

    கரீபியன் கடற்பரப்பில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவானது.ஹோண்டுராஸுக்கு வடக்கே 32 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, ஜமைக்கா, நிகரகுவா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 



  • Feb 09, 2025 07:27 IST

    டெல்லி முதல்வர் யார்? பாஜக இன்று ஆலோசனை

    டெல்லி தேர்தலில் பாஜக வென்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்று ஆலோசனை செய்யப்பட உள்ளது. பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.



Live News news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: