/indian-express-tamil/media/media_files/2025/02/10/DVzhoZ3I14tfqpvueq33.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக அமைச்சரவை ஆலோசிக்கவுள்ளது.
-
Feb 11, 2025 03:56 IST
மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல - பெற்றோர்களுக்கு அறிவுறுத்திய மோடி
தேர்வு மட்டும்தான் எல்லாம் என்ற மனநிலையில் வாழ மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். டெல்லியில் உள்ள சுந்தர் நர்சரி பள்ளிக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மாணவர்கள் அச்சமும் மன அழுத்தமுமின்றி பொது தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், தேர்வு மட்டும் தான் எல்லாமே என்ற மனநிலையில் இருக்க மாணவர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல, மாணவர்கள் புத்தகத்திலேயே சிக்கிக் கொண்டிருந்தால் அவர்களால் வளர்ச்சி அடைய முடியாது என தெரிவித்தார். மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். -
Feb 10, 2025 21:52 IST
குவாதமாலாவில் பாலத்தின் மீது சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து; 51 பேர் பலி
குவாதமாலா என்ற நாட்டில் பாலத்தின் மீது சென்ற பேருந்து தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 51 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Feb 10, 2025 21:18 IST
உதயநிதிக்கு பெரியார் சிலை வழங்கிய ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சந்திரகுமார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு
பெரியாரின் திருவுருவச்சிலையை வழங்கினார். -
Feb 10, 2025 20:48 IST
அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சந்தித்தார். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என உமர் அப்துல்லா வலியுறுத்தினார்.
-
Feb 10, 2025 20:44 IST
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: “பெஞ்சல் புயல், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 10, 2025 19:42 IST
தைப்பூசத்தை முன்னிட்டு ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி - தமிழக அரசு
நாளை தைப்பூசத்தை முன்னிட்டு ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Feb 10, 2025 18:30 IST
தி.மு.க-வில் இணைந்த நா.த.க நிர்வாகிகள்
அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர், அக்கட்சியில் இருந்து விலகி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.
-
Feb 10, 2025 18:16 IST
12 லட்சம் பட்டாக்கள் வழங்கல் - ஸ்டாலின்
தி.மு.க பொறுப்பேற்ற பின்னர் இதுவரை, 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Feb 10, 2025 17:39 IST
86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் - ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள `பெல்ட் ஏரியாக்களில்' ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. 6 மாதங்களில் பணிகளை செய்து முடிக்க இரண்டு குழுக்களை அமைக்கவுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Feb 10, 2025 17:26 IST
விஜய் உடன் 1 மணி நேரமாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனை
சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க தலைவர் விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்
-
Feb 10, 2025 17:02 IST
தமிழ்நாட்டை மாநிலமாக அங்கீகரிக்க மறுக்கும் மத்திய அரசு - மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு
தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசு மறுக்கிறது என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார். ”தமிழ்நாடு உயர்கல்வியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது; ஆனால் யு.ஜி.சி மூலம் மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கிறது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Feb 10, 2025 16:46 IST
ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு
சென்னை கோடம்பாக்கத்தில் 10ம் வகுப்பு மாணவனை சாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Feb 10, 2025 16:23 IST
தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு: ஐகோர்ட் உத்தரவு
மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது விடுப்பு வழங்கக் கோரி தண்டனைக் கைதிகள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருந்தது.
மதுரை அமர்வின் மாறுபட்ட தீர்ப்பால் சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் இருந்தாலும், தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்பு, அவசரகால விடுப்பு வழங்க தடை இல்லை என உத்தரவிட்டது.
-
Feb 10, 2025 15:57 IST
ஆளுநருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
Feb 10, 2025 15:52 IST
எஸ்.ஐ. ராஜாசிங் ஜாமின் மனு ஒத்திவைப்பு
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் எஸ்.ஐ. ராஜாசிங், வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர் ஜாமின் கோரி செய்தனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தமீம் அன்சாரி என்பவரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி. 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Feb 10, 2025 15:36 IST
இந்தியர்களுக்கு கைவிலங்கு - அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் எதிர்க்கவில்லை? ப.சிதம்பரம் கேள்வி
இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டதை அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் எதிர்க்கவில்லை என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். 'அமெரிக்கா சென்றபோது கைவிலங்கு விவகாரத்தில் ஏன் மௌனம் சாதித்தார்?. அடுத்தமுறை இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும்போது விமானம் அனுப்புமா அரசு?' என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
Feb 10, 2025 15:26 IST
காசிமேட்டில் விசைப்படகு உரிமையாளர்கள் ஸ்டிரைக்
சென்னை காசிமேட்டில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலையில் சிக்கிய ஆமைகளை கடலில்விட கொண்டு சென்றபோது வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததாக புகார் எழுந்தது. வனத்துறையினரை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Feb 10, 2025 14:41 IST
சென்னை மெட்ரோ அறிவிப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Feb 10, 2025 14:39 IST
போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை
பிப்ரவரி 13-ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.
-
Feb 10, 2025 14:16 IST
கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை
வேலூரில், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு முதுகு தண்டுவடம் சற்று விலகி இருந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டுள்ளது.
-
Feb 10, 2025 13:57 IST
ஈ.சி.ஆர் சம்பவம் - போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல்
சென்னை, ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் என்பவரை போலீஸ் காவலில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி கேட்டு சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 10, 2025 13:31 IST
4 நாட்கள் அரசு பயணம் - புறப்பட்டார் மோடி
பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் அரசுமுறை பயணத்திற்காக பிரதமர் மோடி புறப்பட்டார். இரவு பிரான்ஸ் சென்றடையும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விருந்தில் கலந்து கொள்கிறார். மேலும், இருதரப்பு உறவுகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
-
Feb 10, 2025 13:27 IST
சீமான் ஒரு மனிதரே கிடையாது - வி.சி. சந்திரகுமார் எம்.எல்.ஏ
அரசியல் ஆதாயத்திற்காக பெரியாரை மிகவும் கேவலமாக பேசும் சீமான், ஒரு மனிதராகவே இருக்க முடியாது என ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் விமர்சித்துள்ளார்.
-
Feb 10, 2025 13:14 IST
சென்னையில் மாபெரும் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல தலைவர்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கான பணிகளை நடத்த கோரி இந்த மாதத்திற்குள் சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Feb 10, 2025 13:11 IST
அ.தி.மு.க குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்
தற்போது அ.தி.மு.க யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என தெரியவில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். மேலும், "கட்சி தம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதே எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது பெரிய பயம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க ஆதரவு ஓட்டுகளும், தி.மு.க.-வுக்கு விழுந்துள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 10, 2025 12:46 IST
10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பாஜக பிரமுகர் கைது
10-க்கும் மேற்பட்ட பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி ரூ.50 லட்சம் வரை பணம் பறித்த பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன் கைது. அந்த பணத்தை வைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திவிட்டு தனக்கு ஒரு கார் வாங்கியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
Feb 10, 2025 12:38 IST
நேரத்தை வீணடிக்க வேண்டாம் - டிடிவி தினகரன்
“பெரியார் விவகாரத்தில் கடந்த ஆண்டு வரை சீமான் ஒரு நிலைப்பாட்டில் இருந்தார்; இப்போது வேறொரு நிலைப்பாட்டில் இருக்கிறார் சீமானுக்கு எப்போது புரிதல் வரும் என்று யாருக்கும் தெரியாது; அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
Feb 10, 2025 12:15 IST
அதிமுக உட்கட்சி பூசல்: திருமாவளவன் கருத்து
“அதிமுக-வை பாஜக விழுங்க பார்க்கிறது; அதிமுக பலவீனம் அடையக்கூடாது” என்று அதிமுக-வில் உட்கட்சிக்குள் செங்கோட்டையன், கோகுல இந்திரா விமர்சனங்கள் முன்வைத்தது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Feb 10, 2025 12:13 IST
பைக் விபத்து - ஒருவர் பலி, 3 மாணவிகள் படுகாயம்
கடலூர் : கேசவன்நாயகபுரத்தில் ஒரே பைக்கில் 5 பேர் பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. ஒருவர் பலி மற்றும் 3 மாணவிகள் படுகாயம் என்று தகவல். டிராக்டரை முந்த முயன்று எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதிய இந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது.
-
Feb 10, 2025 11:43 IST
ஆளுநர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
“பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். அதை தவிர்ப்பதற்காக மசோதாக்களை ஆளுநர் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடுகிறாரா? என்ன காரணத்திற்காக ஆளுநர் முடிவை எடுக்கிறார் என்பதையும் அவர் சொல்ல வேண்டும்" என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
-
Feb 10, 2025 11:38 IST
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாகவும் கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது.
-
Feb 10, 2025 11:37 IST
உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளேன் - செங்கோட்டையன்
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்கவில்லை என உணர்வுகளை வெளிப்படுத்தினேன். எங்களை கலந்து பேசாமல் நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன் அழைப்பிதழை வழங்கினார்கள். ஜெயலலிதா, தனபால் உள்ளிட்டோரும் அத்திக்கடவு
திட்டம் நிறைவேற காரணமாக இருந்தனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். -
Feb 10, 2025 11:23 IST
இலங்கை மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்
வங்கக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 10, 2025 11:15 IST
திருப்பதி லட்டு விவகாரம் - 4 பேர் கைது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு நெய் கலப்பட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜு ராஜேந்திரன், திருப்பதி வைஷ்ணவி பால் நிறுவன தலைமை நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தது சிபிஐ.
-
Feb 10, 2025 10:54 IST
சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அத்திகடவு - அவிநாசி பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது உள்பட கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் பங்கேற்றனர்.
-
Feb 10, 2025 10:18 IST
டெல்லியில் அலுவலகம் திறப்பு
டெல்லியில் அதிமுக அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
-
Feb 10, 2025 09:38 IST
கெஜ்ரிவால் செய்தது மிகப்பெரிய அரசியல் பிழை -பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான உடனேயே முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஜாமினில் வெளியே வந்து, தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வேறு ஒருவரை முதலமைச்சராக நியமித்தது அவர் செய்த மிகப்பெரிய அரசியல் பிழை ஆகும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
-
Feb 10, 2025 08:58 IST
இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - செங்கோட்டையன் விளக்கம்
அத்திக்கடவு - அவினாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011யில் ஜெயலலிதா ரூ.3.72 கோடி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
Feb 10, 2025 08:18 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 2 படகுகளை பறிமுதல் செய்தது. இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கைதானவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
-
Feb 10, 2025 08:15 IST
திருப்பதி லட்டு விவகாரம்
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்பட விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் உள்பட 4 பேர் நாளை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
-
Feb 10, 2025 07:46 IST
பாஜக நிர்வாகி கைது
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் பல இளம்பெண்களை ஏமாற்றிய பாஜக இளைஞர் அணி செயலாளர் தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்களிடம் நகை, பணம் பறித்துள்ளார்.
-
Feb 10, 2025 07:35 IST
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 8 ஆம் தேதி நடந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கிய 28 பேரை மீட்கும் பணி 3 வது நாளாக தொடர்கிறது. இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 10, 2025 07:31 IST
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று காலை 10.30க்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது தொடர்பாக நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நிலையில் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி இன்று பதிலளிக்கிறார்.
-
Feb 10, 2025 07:28 IST
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு
தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளதை ஒட்டி, மின்னொலியில் கோயில் கோபுரங்கள் ஜொலித்தன.
-
Feb 10, 2025 07:27 IST
சிலம்பம் சுற்றி சிறுவர்கள் சாதனை
சீர்காழியில் 2 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சிறுவர்கள் சாதனை செய்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மீட்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Feb 10, 2025 07:24 IST
பழனியில் இன்று முதல் தரிசன கட்டணம் ரத்து
பழனி மலைக்கோயிலில் நாளை முதல் பிப்ரவரி 12 வரை சாமி தரிசனத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி பிப்ரவரி 11யில் தேரோட்டம் நடைபெறுகிறது.
-
Feb 10, 2025 07:22 IST
கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் இன்று நீராடுகிறார்
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நீராடுகிறார். அஷய்வத், ஹனுமான் மந்திரில் நடைபெறும் பூஜையிலும் கலந்து கொள்கிறார் திரௌபதி முர்மு ஏற்கனவே பிரதமர் மோடி குமபமேளாவில் நீராடிய நிலையில் குடியரசுத் தலைவர் இன்று நீராடுகிறார்.
-
Feb 10, 2025 07:19 IST
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக அமைச்சரவை ஆலோசிக்கவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.