/indian-express-tamil/media/media_files/VKRet7bs4LVyTPTAg0FW.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேர்தல் கருத்துக்கணிப்பு: இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல் தெவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 13, 2025 22:33 IST
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி; இயலாமையை ஒப்புக்கொண்டது பா.ஜ.க - ராகுல் விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: “மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அங்கு ஆட்சி செய்வதற்கு தனது முழு இயலாமையை பாஜக தாமதமாக ஒப்புக்கொண்டதைக் காட்டுகிறது. இப்போது, மணிப்பூருக்கான தனது நேரடிப் பொறுப்பை பிரதமர் மோடி இனி மறுக்க முடியாது. அங்கு சென்று, அமைதியையும் இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதற்கான தனது திட்டத்தை மணிப்பூர் மற்றும் இந்திய மக்களுக்கு விளக்க முடிவு செய்துவிட்டாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 13, 2025 21:22 IST
தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன்
ஈரோடு அத்தானியில் நடைபெற்ற எம்.ஜி.ர் பொடுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைச் சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம்; தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். 2026-ல் அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று பேசினார்.
-
Feb 13, 2025 20:50 IST
காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது - ஐகோர்ட் உத்தரவு
பொதுமக்கள் வரிப் பணத்த்ல் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொதுமக்களுக்குதான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக்கூடாது. காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு, டி.ஜி.பி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 13, 2025 20:28 IST
இலங்கை முன்னாள் எம்.பி திலீபன் கைது
போலியான முகவரி மூலமாக் பாஸ்போர்ட் எடுத்த இலங்கை முன்னாள் எம்.பிிலீபன் கியூ பிராஞ்ச் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 11-ம் தேதி கொச்சி விமான நிலையம் வந்த திலீபனை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை நீடிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
Feb 13, 2025 19:54 IST
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
சட்டப்பேரவையை கூட்டுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டுவர தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Feb 13, 2025 19:41 IST
தேவா இசை நிகழ்ச்சி: பிப். 15-ம் தேதி சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், பிப். 15ம் தேதி இசையமைப்பாளார் தேவாவின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
-
Feb 13, 2025 18:58 IST
குடும்பஸ்தன் படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி மரணம்
குடும்பஸ்தன் படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி (56), நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தமிழில் தெனாவட்டு, குட்டிப்புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம்டா மாப்ள, ஜெயில், ராஜ வம்சம், அநீதி, மத்தகம், பிளாக் ரோஸ், குடும்பஸ்தன் போன்ற படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
-
Feb 13, 2025 18:43 IST
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் குப்பை வாகனம் இயக்க கூடாது – தீர்ப்பாயம் உத்தரவு
ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் என சென்னை மாநகராட்சிக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் கண்டிப்பு தெரிவித்துள்ளது. குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி நிர்வாகமே இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது
-
Feb 13, 2025 18:28 IST
பாலியல் அத்துமீறல் அதிகரிப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழகத்தில் பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
-
Feb 13, 2025 18:12 IST
தி.மு.க புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
பல மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து தி.மு.க அறிவித்துள்ளது
ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி
ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்
திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்
திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்
திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்
விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி
விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்
மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி
மதுரை மாநகர் - கோ.தளபதி
தஞ்சாவூர் தெற்கு – பழனிவேல்
திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்
திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்
நீலகிரி - கே.எம்.ராஜு
-
Feb 13, 2025 18:05 IST
பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கு - வரும் 19ம் தேதி தீர்ப்பு
தன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வெளியாகிறது
-
Feb 13, 2025 17:34 IST
அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்; பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு
தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடிக்கு கூடுதலாக காதி மற்றும் கிராம தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறையை மட்டும் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
Feb 13, 2025 17:12 IST
பயணியை இழுத்து சென்று தாக்கிய ஓட்டுநர்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியை தரதரவென இழுத்து சென்று ஓட்டுநர் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. பூந்தமல்லிக்கு செல்லும் பேருந்து நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பயணியை பேருந்து ஓட்டுநர், நடத்துநர், டைம் கீப்பர் ஆகியோர் தாக்கியுள்ளனர். பயணியை தாக்கிய பேருந்து ஓட்டுநர், நடத்துநர், டைம் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-
Feb 13, 2025 17:08 IST
இலங்கை முன்னாள் எம்.பி. திலீபன் கைது!
போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் எம்.பி. திலீபனை கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
2019ம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போலி முகவரியைக் கொடுத்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில், இலங்கையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் எம்.பி. திலீபன் மீது இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 11ம் தேதி கொச்சி விமான நிலையம் வந்த திலீபனை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, மதுரை க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
-
Feb 13, 2025 17:07 IST
சிறுமிகள் இசைக்குழு - இளையராஜா அறிவிப்பு
பவதாரணி நினைவாக சிறுமிகள் மட்டுமே கொண்ட இசைக்குழுவை தொடங்கப் போவதாக இளையராஜா அறிவித்துள்ளார். 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் ஆர்கெஸ்ட்ரா குழுவில் இடம்பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Feb 13, 2025 17:04 IST
மனுதாரருக்கு ரூ. 25,000 அபாரதம் - ஐகோர்ட் அதிரடி
நாமக்கல் ராசிபுரத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ. 25,000 அபாரதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடாமல் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நோக்கம் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய பேருந்து முனையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என அரசுத்தரப்பு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
-
Feb 13, 2025 17:01 IST
மகேஷ்குமார் விவகாரம் - ஆய்வாளர் பணியிட மாற்றம்
பெண் காவலர் பாலியல் புகாரில் மகேஷ்குமாருக்கு உடந்தையாக இருந்த ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றபட்டுள்ளார் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.. .
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மகேஷ்குமாருக்கு பல உதவிகளை ஆய்வாளர் செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
-
Feb 13, 2025 16:59 IST
'உலகின் டாப் 5 பொருளாதார நாடாக இந்தியா' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
"2009ம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலையின் போது பொருளாதாரம் உடையும் நிலையில் இருந்த 5 நாடுகளில் இந்தியா இருந்தது. ஆனால், கொரோனா பேரிடரை சமாளித்து தற்போது இந்தியா உலகின் டாப் 5 பொருளாதார நாடாக உள்ளது" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
Feb 13, 2025 15:59 IST
கேப்டனுக்கு வாழ்த்து சொன்ன கோலி
"நான் உனக்காக சந்தோஷப்படுகிறேன். கேப்டன் பொறுப்பிற்கு உனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. நாங்கள் எப்போதும் உன் பின்னால் இருப்போம்" என்று ஆர்.சி.பி அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதாருக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Feb 13, 2025 15:45 IST
வக்பு மசோதா - எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வக்பு மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
-
Feb 13, 2025 15:33 IST
'அறிவாலயத்தில்ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது' - அண்ணாமலைக்கு ஆர்.எஸ் பாரதி பதிலடி
'அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக்கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது' என்று அறிவாலயம் பற்றி அண்ணாமலை கூறிய கருத்திற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
-
Feb 13, 2025 14:23 IST
கமல்ஹாசன் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்."அன்போடு வரவேற்று, அரசியல், கலை என பல்வேறு துறை சார்ந்த கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்" கமல் சாருக்கு என் அன்பும் நன்றியும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 13, 2025 14:20 IST
1 மணி நேரம் சாட்சியம் அளித்த இளையராஜா
பாடல் உரிமை தொடர்பான வழக்கில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்தார் இசையமைப்பாளர் இளையராஜா. பாடல்களின் பதிப்புரிமை, தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக குறுக்கு விசாரணை பெயர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது இளையராஜா
-
Feb 13, 2025 13:46 IST
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பணிகளை நேரில் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு நிலையத்திற்கு வந்தடைந்த 'அடையாறு’ சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அடையார் ஆற்றிற்கு கீழ் 300 மீ. தூரம் செல்லும் வழித்தடப் பகுதியை உள்ளடக்கி மொத்தம் 1.21 கி.மீ. தூரத்தில் ‘காவிரி’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பரில், பணியை நிறைவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து 2வது இயந்திரமான ‘அடையாறு’ தற்போது பணியை நிறைவு செய்துள்ளது.
-
Feb 13, 2025 13:44 IST
எந்த நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணைய தயார்: ஒபிஎஸ்
எந்த நிபந்தனையும் இல்லாமல், நான், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணயை தயாராக இருக்கிறோம். ஒன்றாக இணையுமாறு அமித்ஷா எவ்வளவோ சொன்னார். இபிஎஸ் ஏற்றுக்கொள்ளாததன் விளைவு தான் இவ்வளவும். 2026-ல் ஒன்றிணைந்தால் வாழ்வு, இல்லை என்றால் தாழ்வு என்று ஒபிஎஸ் கூறியுள்ளார்.
-
Feb 13, 2025 12:47 IST
பெண் நடத்துநர் தேர்வு - உயரம் குறைப்பு
அரசு பேருந்து பெண் நடத்துநராக தேர்வாவதற்கான குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ.ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெண் நடத்துநர் அதிக எண்ணிக்கையில் தேர்வாவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசாணை வெளியீடு. ஏற்கனவே 160 செ.மீ.ஆக இருந்த குறைந்தபட்ச உயரம் தற்போது 150 செ.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பால் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி அதிகம் கிடைக்கும் என்று தகவல்.
-
Feb 13, 2025 12:03 IST
'சந்திராயன் 3' திட்ட இயக்குநர் பழனிவேல் வீரமுத்துவேலுக்கு அரசுப் பொறுப்பு!
சந்திராயன் 3 திட்ட இயக்குநர் பழனிவேல் வீரமுத்துவேலை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமித்தது தமிழ்நாடு அரசாங்கம்.
-
Feb 13, 2025 11:50 IST
பாலியல் குற்றம் நிரூபணமானால் கல்விச் சான்றிதழ் ரத்து!
ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான போக்சோ வழக்கில் குற்றம் நிரூபணமானால், அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். பாலியல் புகார் வந்தால் உடனே நேரடியாக ஆய்வு செய்ய செல்ல வேண்டும், உடனுக்குடன் தலைமைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
-
Feb 13, 2025 11:45 IST
இளையராஜா ஆஜர் - பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு
மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார். தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப், சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கு. எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா, சாட்சியம் அளிப்பதற்காக ஆஜராகியுள்ளார்.
-
Feb 13, 2025 11:26 IST
அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைகூட பிடுங்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி
"அண்ணா அறிவாலயத்தில் ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது; தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது கற்பனை” என்று சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
-
Feb 13, 2025 11:05 IST
பாலியல் புகார் - ஐபிஎஸ் பணியிடை நீக்கம்
சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் பொறுப்பில் உள்ள டி.மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில், போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
-
Feb 13, 2025 11:03 IST
பள்ளிகளில் பாலியல் புகார் - தீவிரமாகும் விசாரணை
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
-
Feb 13, 2025 10:53 IST
காதலர் தினம் - விலை உயர்ந்த ரோஸ்
நாளை காதலர் தினத்தையொட்டி சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் ரோஜாக்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கட்டு தாஜ்மஹால் ரோஸ் ரூ.350 முதல் ரூ.400 க்கும் விற்பனையாகிறது.
-
Feb 13, 2025 10:20 IST
ஒரு கையில் லேப்டாப்.. மறுகையில் கார் ஸ்டேரிங்..!
பெங்களூருவில் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டே கார் ஓட்டிச் சென்ற பெண்ணுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
-
Feb 13, 2025 09:46 IST
போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம்
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலருக்கு தொந்தரவு கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை. டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
-
Feb 13, 2025 09:45 IST
வெளி மாநில மாணவர்களுடன் உதயநிதி கலந்துரையாடல்
பழங்குடி கலாச்சார பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்த மாணவர்களுடன் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் கலந்துரையாடியாடினார்.
-
Feb 13, 2025 09:44 IST
அசுரன் - மாமன்னன் கூட்டணி
மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. 1970ல் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பாத சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 13, 2025 09:18 IST
``No thanks..’’ - ஆல்ட்மேன் அசால்ட் பதிலடி
AI துறையில் கோலோச்சி வரும் Chat GPT புகழ் Open AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு விலை பேசிய எலான் மஸ்க் No Thanks என கூறி X தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு விலைக்கு கேட்டு அதன் CEO சாம் ஆல்ட்மேன் பதிலடி அளித்துள்ளார்.
-
Feb 13, 2025 08:58 IST
நடத்துநரை பழிவாங்க மதுபோதையில் பேருந்தை கடத்திச் சென்ற நபர் பிடிபட்டார்
மாநகர பேருந்தில் சில்லறை கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் நடத்துநரிடம் நடந்த வாக்குவாதத்தின் எதிரொலியாக திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து நள்ளிரவில் மதுபோதையில் பேருந்தை கடத்திச் சென்ற நபர். அக்கரை செக்போஸ்ட் அருகே லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்தியபோது பிடிபட்டார்.
-
Feb 13, 2025 08:23 IST
ரஜினி நடிப்பு - RGV சர்ச்சை கருத்து
ஸ்லோ மோஷன் காட்சி இல்லாமல், நடிகர் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என சர்ச்சை கருத்து தெரிவித்த இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
Feb 13, 2025 08:17 IST
சபரிமலையில் 5 நாட்கள் பக்தர்கள் தரிசிக்க அனுமதி!
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 5 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
Feb 13, 2025 07:47 IST
பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்திக்க உள்ளார்.
-
Feb 13, 2025 07:41 IST
ஓசூரில் ஸ்கிராப் கிடங்கில் தீ விபத்து
ஒசூர் அருகே ஜிபி குடியிருப்பு பகுதியில் உள்ள ஸ்கிராப் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
Feb 13, 2025 07:39 IST
சென்னையில் இன்று 23 புறநகர் ரயில் சேவை ரத்து!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று 23 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - கூடூர், மூர் மார்க்கெட் - சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி போன்ற ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Feb 13, 2025 07:36 IST
போராட்டம் தொடரும்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் 3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில்முடிவு எட்டப்படாத நிலையில் 8 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தொடரும் என சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.
-
Feb 13, 2025 07:32 IST
தேர்தல் கருத்துக்கணிப்பு
இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என இந்தியா டுடே சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல் தெவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 13, 2025 07:31 IST
விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.
எதிர்பார்த்ததை விட விரைவில் பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் திரும்புகிறார். crew dragon capsule மூலமாக அடுத்த மாதம் 19 ம் தேதி பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.