/indian-express-tamil/media/media_files/2025/02/15/pDAtM4c0fC5pjaKKYbcj.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுத்தேர்வுகள்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இேர்வு எழுத உள்ளனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரையும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 4 வரை தேர்வு நடக்கிறது.
-
Feb 15, 2025 23:33 IST
உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த சிலர், இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Feb 15, 2025 21:03 IST
தர்மேந்திர பிரதானுக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி பதில்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். "தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு நிராகரிப்பதை அராஜகம் என முத்திரை குத்துவது, தேவையில்லாத மும்மொழிக் கொள்கையை திணிப்பது, மறுத்தால் நிதியை தராமல் இருப்பது அனைத்தும் பா.ஜ.க-வின் உத்தி" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 15, 2025 20:40 IST
மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். "மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா என்று நீங்கள் சொல்வதே, இன்னொரு மொழிப்போரை தூண்டுவதுபோல் தான் அமைந்திருக்கிறது. இன்னொரு மொழிப்போரைத் தூண்ட வேண்டாம் என பகிரங்கமாகக் கூறிக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Feb 15, 2025 19:54 IST
மத்திய அமைச்சருக்கு அன்பில் பதில்
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால் தான் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், "உரிமையை கேட்கிறோம்; உபகாரமல்ல" என்று அண்ணாவின் உரையை மேற்கோள் காட்டி மத்திய அமைச்சருக்கு, தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
-
Feb 15, 2025 19:44 IST
சாதி சங்கங்கள் குறித்து நீதிமன்றம் கேள்வி
சாதி சங்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ளது. குறிப்பாக, சாதி சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயரில் சாதியை சேர்த்துள்ளனர். அங்கு 'சாதிகள் இல்லையடி பாப்பா' என பாடம் நடத்தும் நிலையே உள்ளது. சாதி பெயரில் சங்கம் தொடங்க முடியுமா? சாதியை நிரந்தரமாக்குவதை அந்த சங்கம் இலக்காக கொள்ள முடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Feb 15, 2025 18:34 IST
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர்
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக கூறியுள்ளார்
-
Feb 15, 2025 18:16 IST
விரைவில் சிவகார்த்திகேயன் புதுப்பட அப்டேட்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
Feb 15, 2025 17:31 IST
பிரசாந்த் கிஷோரால் ஒரு தொகுதியில் ஜெயிக்க முடிந்ததா? - சீமான் கேள்வி
பீகாரில் போட்டியிட்டு பிரசாந்த் கிஷோரால் ஒரு தொகுதியில் ஜெயிக்க முடிந்ததா? கருணாநிதி, ஜெயலலிதா இருக்கின்ற வரை வியூக வகுப்பாளர்களுக்கு தேவை இருந்ததா? என நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்
-
Feb 15, 2025 17:15 IST
பத்ம விருது - ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா
பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும், கிண்டி ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. பத்ம விருதுக்கு தேர்வான நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆளுநரின் பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை
-
Feb 15, 2025 16:55 IST
த.வெ.க ஆண்டு விழா நாளில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் 26ம் தேதி நடைபெறுவதாக உறுதியாகியுள்ளது. சென்னை, ஈசிஆரில் உள்ள தனியார் கன்வென்ஷன் சென்டரில் தவெக ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது
-
Feb 15, 2025 16:54 IST
தமிழ் சங்கமம் ரயிலில் அத்துமீறிய வடமாநிலத்தவர்கள்
நாக்பூர் அருகே காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் சென்ற ரயிலில் வடமாநிலத்தவர்கள் அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Feb 15, 2025 16:43 IST
சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை: சீமான்
த.வெ.க தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய சீமான், என் நாட்டுக்கு நான் தான் பாதுகாப்பு. சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
-
Feb 15, 2025 16:39 IST
நமது நாட்டிற்கு வலுவான கட்டமைப்பு தேவை: ராகுல்காந்தி
பிரதமர் மோடி டெலி பிராம்டரை பார்த்து உரையாற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில், நமது போட்டியாளர்கள் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகின்றனர். நமது நாட்டிற்கு வலுவான கட்டமைப்பு தேவையே தவிர, வெற்று வார்த்தைகள் அல்ல என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
-
Feb 15, 2025 16:23 IST
27 கிலோ ஆபரணங்கள் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ ஆபரணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு. தங்க ஆபரணங்கள் உரிய மதிப்பீடு செய்து 6 பெட்டிகளில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் கிரண் ஜாவர்கி ஒப்படைத்தார்.
-
Feb 15, 2025 15:14 IST
ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன
-
Feb 15, 2025 15:04 IST
படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய, படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Feb 15, 2025 15:03 IST
கேரளா வங்கிக்குள் புகுந்து ரூ.15 லட்சம் கொள்ளை
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 லட்சம் கொள்ளை அடித்து சென்றனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 15, 2025 14:43 IST
ஹோட்டல் ஓனருக்கு அரிவாள் வெட்டு
சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ரவுடி கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. படுகாயம் அடைந்த உணவக உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Feb 15, 2025 14:26 IST
மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்கள் பலி - குடியரசு தலைவர் இரங்கல்
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்களின் கார் பேருந்து மீது மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Feb 15, 2025 13:59 IST
அமெரிக்க விஸ்கிக்கு 50% வரி குறைத்தது இந்தியா!
அமெரிக்க போர்பன் விஸ்கிக்கான வரியை 150%லிருந்து 100%ஆக இந்தியா குறைத்துள்ளது. கடந்த 13ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேசிய நிலையில் வரி குறைப்பு. இந்தியா மீது பரஸ்பரம் வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் அறிவித்ததன் எதிரொலியாக வரி குறைக்கப்பட்டது.
-
Feb 15, 2025 13:47 IST
சாதனை படைத்த பி.எஸ்.என் எல்
17 ஆண்டுகளுக்கு பிறகு 200 கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் ஈட்டி பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என் எல் புதிய சாதனை படைத்துள்ளது. மூன்றே மாதங்களில் ரூ.262 கோடி லாபம் ஈட்டி அசத்தியுள்ளது. சம்பள உயர்வு கிடைக்கும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
Feb 15, 2025 13:34 IST
சாதி பெயரில் சங்கமா? - உயர்நீதிமன்றம் கேள்வி
``சாதி சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?'. சாதி பெயரில் சங்கம் துவங்க முடியுமா? சாதியை நிரந்தரமாக்குவதை அந்த சங்கம் இலக்காக கொள்ள முடியுமா?.
`சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பெயரில் சாதியை சேர்த்துள்ளனர்'. சாதி பெயரை கொண்ட கல்வி நிறுவனங்களில் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என பாடம் நடத்தும் நிலையே உள்ளது'' என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
Feb 15, 2025 12:44 IST
முதல்வருக்குதான் டப்பிங் தேவை: அண்ணாமலை
முதல்வருக்குதான் டப்பிங் தேவை, பாஜகவிற்கு அல்ல. திமுக அமைச்சரவையில் 32 பேரில் 12 பேர் அதிமுகவில் இருந்துவந்தவர்கள் அறநிலையத் துறையில் ஊழல் மலிந்து கிடக்கிறது. உதவாத துறை அறநிலையத் துறை துன்று பாஜகவின் டப்பிங் இபிஎஸ் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
-
Feb 15, 2025 12:35 IST
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரி மனு
பிரபாகரன் படத்தை பொதுவெளியில் சீமான் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுடன் சீமான் இருப்பது போலவும், ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருப்பது போல் வன்முறை தூண்டும் வகையிலும் மார்ஃபிங் செய்த படங்களை சீமான் பயன்படுத்தி வருகிறார் என்று மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
Feb 15, 2025 12:13 IST
காசித் தமிழ்ச் சங்கம் - பிரதமருக்கு எல்.முருகம் நன்றி
இன்று தொடங்கும் மூன்றாவது காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்வானது, தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். விழா நிகழ்ந்திட வழிவகுத்து, வாழ்த்துச் செய்தியுடன் ஊக்கமளித்துள்ள பிரதமர் மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்தார்.
-
Feb 15, 2025 12:01 IST
"தமிழகத்தில் கனிமவளம் காணாமல் போய்விடும்" - அன்புமணி ராமதாஸ்
கேரளாவுக்கு கனிமவளம் எடுத்துச் செல்ல அனுமதித்தால், தமிழ்நாட்டில் கனிமவளம் காணாமல் போகும். கனிமவளங்களை கேரளாவுக்கு எடுத்துச் செல்லும் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் கேரளாவுக்கு கனிமவளம் எடுத்துச்செல்ல உரிமம் வழங்கப்பட்டதன் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 15, 2025 11:56 IST
விஜய்-க்கு Y பிரிவு - அண்ணாமலை விளக்கம்
தவெக தலைவர் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் கிடைத்ததால், Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் பாஜகவை எதிர்த்து பேசியுள்ளார் ஆனாலும் பாரபட்சம் பார்க்காமல் மக்களுக்காக செயலாற்றுவதுதான் பாஜக என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Feb 15, 2025 11:48 IST
தொடங்கியது ‘திஷா கமிட்டி’
முதல்வர் தலைமையில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாவதை கண்காணிக்கும் ‘திஷா கமிட்டி’. கூட்டத்தில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகப்பேறு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள எண் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
-
Feb 15, 2025 11:22 IST
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள எண் வழங்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்க முடிவெடுத்துள்ளனர்.
-
Feb 15, 2025 11:05 IST
21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளன.
நேற்று நீதிமன்றத்தில் பெரும்பான்மையான நகைகள் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், இன்று 2வது நாளாக தங்க நகைகளை மதிப்பீடு செய்யும் பணி 11 மணிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. இன்று மீண்டும் நகைகளை எடுத்துச் செல்ல அரசு கருவூலத்திற்கு பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் வருகை.
-
Feb 15, 2025 10:41 IST
கோயிலில் அரை கிலோ தங்கம் திருட்டு
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஜெயின் கோயிலில் 500 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 6 ஊழியர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
-
Feb 15, 2025 09:53 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் 63,120க்கு விற்பனையாகிறது.
-
Feb 15, 2025 09:23 IST
இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும்- ப.சிதம்பரம்
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அழைத்து கொண்டு அமெரிக்க விமானம் அமிர்தசரஸ் வருகிறது. அழைத்து வரப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கு உண்டா? கால்கள் கட்டப்பட்டிருக்குமா? இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும். இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
-
Feb 15, 2025 09:02 IST
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அமெரிக்க ராணுவத்தில் அனுமதி மறுப்பு
மூன்றாம் பாலினத்தவர்களை இனி ராணுவத்தில் சேர அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவ சேவை உறுப்பினர்களுக்கான பாலின மாற்றம் தொடர்பான நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன.
-
Feb 15, 2025 08:59 IST
காதலர் தின எதிர்ப்பு - இந்து முன்னணியினர் கைது!
சிவகங்கையில் காதலர் தினத்திற்காக பேக்கரி கடையில் அறிவித்த சலுகையை எதிர்த்து கடைக்கு வருபவர்களுக்கு திருமணம் செய்வோம் என தாலியுடன் வந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அக்னி பாலா, சுரேஷ், மாரியப்பன், தினேஷ்ராஜா, கார்த்திக்கேயன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Feb 15, 2025 08:56 IST
மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 மாணவர்கள் மீது போக்ஸோ!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதே பள்ளியின் 3 மாணவர்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
Feb 15, 2025 08:55 IST
பாஜகவின் 'டப்பிங்' குரல் இ.பி.எஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் பா.ஜ.க அறிக்கையை போல் இருக்கின்றன. இ.பி.எஸ் குரலே பாஜகவின் ‘டப்பிங்' குரல்தான்; கள்ளக்கூட்டணி என்பதை நிரூபித்துள்ளார் என ஸ்டாலின் கூறியுள்ளார்.பாஜகவின் 'டப்பிங்' குரல் இ.பி.எஸ் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Feb 15, 2025 08:14 IST
டிரம்ப் விமர்சனம் - இந்தியாவின் ரியாக்சன்
போர்போன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை 150%-லிருந்து 50%-ஆக இந்தியா குறைத்தது. வரிவிதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், முதற்கட்ட நகர்வு
-
Feb 15, 2025 08:13 IST
காசி தமிழ்ச் சங்கமம் இன்று தொடங்கிவைப்பு
உ.பியில் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. காசி தமிழ்ச் சங்கம் நிகழ்வை வாரணாசியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் எல். முருகன் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
-
Feb 15, 2025 08:11 IST
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை முழுவடும் புறக்கணித்துள்ளனர். சில ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் இல்லை. பெயரையும் சொல்வதில்லை. தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசே அறிக்கை வெளியிடுகிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று உள்ளதா என கேட்கத் தோன்றுகிறது.
-
Feb 15, 2025 07:43 IST
மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 பேர் கொலை
மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். சாராய வழக்கில் கைதாகி பிணையீல் வெளிவந்த நபரின் கொலை செய்த நிலையில் சாராயம் வியாபாரிகள்ராஜ்குமார், தங்கதுரை ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Feb 15, 2025 07:40 IST
வைரல் கண்ணுக்கு வைர நெக்லெஸ்
கோழிக்கோட்டில் செம்மனூர் ஜூவல்லர்ஸின் புதிய ஷோரூமை கும்பமேளாவில் வைரலான மோனாலிசா திறந்து வைத்தார். மோனாலிசாவிற்கு பாபி செம்மனூர் வைர நெக்லெஸ் ஒன்றை பரிசளித்தார்.
-
Feb 15, 2025 07:39 IST
மழைக்கு வாய்ப்பில்லை! வெயில் சுட்டெரிக்கும்!
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். 20ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Feb 15, 2025 07:38 IST
சாம்பியன்ஸ் டிராபி - ரூ.19.5 கோடி பரிசு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பட்டம் வெல்லும் அணிக்கு 19 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
-
Feb 15, 2025 07:37 IST
பழனி உண்டியல் காணிக்கை ரூ.3.31 கோடி!
பழனி தண்டாயுதபாணி கோயிலில், தைப்பூசத் திருவிழா உண்டியல் காணிக்கை, 3 கோடியே 31 லட்சம் ரூபாயை தாண்டியது. 557 கிராம் தங்கம், 21 கிலோ வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Feb 15, 2025 07:37 IST
ஜெ.நகைகள் ஒப்படைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. முதல் நாளில் 285 நகைகளின் எடை அளவு மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.
-
Feb 15, 2025 07:34 IST
இந்தியா திரும்பிய மோடி
பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் 5 நாள் அரசு முறை பயணம் முடித்து பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.
-
Feb 15, 2025 07:31 IST
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 7,842 மையங்களில் மொத்தம் 42 லட்சம் பேர் சிபிஎஸ்இேர்வு எழுத உள்ளனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 வரையும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் 4 வரை தேர்வு நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.