Chennai News Highlights: டெல்லி விமான நிலையம் சென்று கத்தார் அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
qatar

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.90-க்கும், டீசல் விலை, ரூ92.48-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

டெல்லி நில அதிர்வு: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணிக்கு லேசான அதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு, படுக்கையில் உணரப்பட்டதாக பலரும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். 

  • Feb 18, 2025 00:28 IST

    புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்

    புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 19 ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 17, 2025 21:18 IST

    அ.தி.மு.க விரைவில் நம் கரங்களுக்கு வரும் - ஓ.பி.எஸ்

    அ.தி.மு.க விரைவில் தன் கரங்களுக்கு வரும் என்றும், அதற்கான சில ரகசியம் தன்னிடம் இருப்பதாகவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், "அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒரு தொண்டர் வருவார். பொதுச் செயலாளர் பதவியே இருக்காது. சாதாரண தொண்டர்களும் ஒருங்கிணைப்பாளராக அமரலாம் என்ற நிலைக்கு தான் இந்த போராட்டம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 17, 2025 20:42 IST

    சி.வி. சண்முகத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி

    சி.வி. சண்முகம், நிதானம் இல்லாமல் உளறி இருக்கிறார் என அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், "அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுத்துவது அரிய கலை. அது சி.வி. சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார். 



  • Feb 17, 2025 19:52 IST

    நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு

    சென்னையில் 10 நவீன காவல் உதவி மையங்களை, துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.



  • Feb 17, 2025 18:41 IST

    அந்தியூர் தொகுதியில் துரோகிகளால் தோற்றோம் - செங்கோட்டையன்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “தொடர்ந்து வென்ற அந்தியூர் தொகுதியில் துரோகிகளால் தோற்றோம் என்றேன். அந்தியூர் தொகுதியை பற்றி மட்டும்தான் குறிப்பிட்டுப் பேசினேன். அந்தியூர் தொகுதியில் வெளிப்படையாகவே சிலர் எதிராக வேலை செய்தார்கள். அ.தி.மு.க-வில் நான் சாதாரண தொண்டன், அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்பதெல்லாம் கிடையாது.” என்று பேசினார்.



  • Feb 17, 2025 18:06 IST

    அண்ணா பல்கலை. வழக்கு: தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் உட்பட பாலியல் புகார்களில் காவல்துறையால் துரிதமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள், டி.ஐ.ஜி தற்காலிக பணிநீக்கம் போன்றவற்றக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் தங்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி தைரியமாக வேலைக்கு செல்லுகிற நிலையை உருவாக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.



  • Feb 17, 2025 17:20 IST

    அ.தி.மு.க-வில் 82 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமித்து இ.பி.எஸ் உத்தரவு

    அ.தி.மு.க-வில் அமைப்பு ரீதியாக 82 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிப் பணிகளைத் துரிதப்படுத்துவது உளிட்டவற்றுக்காக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Feb 17, 2025 16:30 IST

    சென்னை குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ரூ.9 லட்சம் பணம் கொள்ளை

    சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ரூ.9 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது



  • Feb 17, 2025 16:25 IST

    "இனி சான்ஸ் இல்ல..!" - வெற்றிமாறன்

    உடல் உழைப்பு, மூளை உழைப்பு, தத்துவ, அரசியல் ரீதியாக கத்துகிட்ட எல்லா விசயத்தையும் சேர்ந்து நான் பண்ண சிறப்பான படம் விடுதலை. இனி அப்படியொரு படம் பண்ண முடியுமான்னு தெரியல என விடுதலை 2 படத்திற்கான விருது வழங்கும் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்



  • Feb 17, 2025 15:45 IST

    ரயில் நிலையத்தில் கத்தியுடன் கல்லூரி மாணவர் கைது

    சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய பச்சையப்பன் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தப்பியோடியுள்ளார். ரயில்நிலையத்தில் கத்தியுடன் சுற்றி திரிந்த கல்லூரி மாணவர் பார்த்திபனை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Feb 17, 2025 15:43 IST

    தமிழகத்தில் போதை மாத்திரை பயன்பாடு அதிகரிப்பு – காவல்துறை

    தமிழகத்தில் போதை மாத்திரை பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதை மாத்திரைகள் பறிமுதல் 3 மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த வலி நிவாரணி மாத்திரைகள் அதிகளவில் போதைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது



  • Feb 17, 2025 15:42 IST

    பள்ளி நிதி விவகாரம்; சீமான் கருத்து

    "தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது" என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்



  • Feb 17, 2025 15:21 IST

    புதிய கல்விக் கொள்கையில் 3வது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

    புதிய கல்வி கொள்கையில் உறுதியாக உள்ளோம். இந்தி மொழியை திணிக்கவில்லை, அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். தமிழக மாணவர்கள் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் என்ன தவறு? புதிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்தி கட்டாயம் இல்லை. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்



  • Feb 17, 2025 15:18 IST

    மகாசிவராத்திரி; தமிழகம் வருகிறார் அமித்ஷா

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் அமித்ஷா பிப்ரவரி 26ம் தேதி ராமநாதபுரம், திருவண்ணாமலை, கோவை உட்பட 5 மாவட்ட பா.ஜ.க அலுவலகங்களை திறந்து வைக்கிறார்



  • Feb 17, 2025 14:18 IST

    பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு - தர்மஅடி

    சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு தந்த ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைக்கும் வீடியோ வைரல்



  • Feb 17, 2025 14:14 IST

    மற்றொரு இந்திய மொழியை தமிழ்நாடு மாணவர்கள் கற்பதில் என்ன தவறு? தர்மேந்திர பிரதான் கேள்வி

    தேசிய கல்வி கொள்கையில் நாங்கள் இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்கவில்லை. தமிழ் ஆங்கிலத்துடன் மற்றொரு இந்திய மொழியை தமிழ்நாடு மாணவர்கள் கற்பதில் என்ன தவறு? என்று மத்திய் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 



  • Feb 17, 2025 14:12 IST

    யாழ்பானம் பொது நூலகத்தை மேம்படுத்த இலங்கை அரசு நிதி ஒதுக்கீடு

    வரலாற்று சிறப்புமிக்க, யாழ்பானம் பொது நூலகத்தை மேம்படுத்த 2.94 கோடி நிதி ஒதுக்கி, இலங்கை அதிபர், அநுர குமர திசநாயக அறிவித்துள்ளார். வரலாற்றில் ஒரு காலத்தில் வாக்குகளுக்காக, நூல்கள் எரிக்கப்பட்டது. யாழ் நூலகத்திற்கும் அதுதான் நடந்தது. வடக்கு, கிழக்கு மாகாணத்தில், விரிவான அபிவிருத்தி திட்டம், மலையாக தமிழர், வாழ்வாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



  • Feb 17, 2025 13:25 IST

    என்னை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: உதயகுமாருக்கு ஒபிஎஸ் கண்டனம்

    ஆ.பி உதயகுமார் எப்படிப்பட்டவர் என்பது மதுரை மக்களுக்கு தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததற்கு முழு காரணகர்த்தா அவர்தான். என்னை பற்றி பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • Feb 17, 2025 13:22 IST

    நீதிபதிகளில் எஸ்.சி./எஸ்டி, பி.சி பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது: நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு

    உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள் அரசியலமைப்பின்படி, நிரப்பப்படவில்லை. நீதிபதிகளில் எஸ்.சி./எஸ்டி, பி.சி பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது, 79 சதவீதம் உயர் சாதியினருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று சென்னையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.



  • Feb 17, 2025 12:42 IST

    ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்!

    சென்னை: தனது ஆட்டோவில் பயணித்த நித்திஷ் என்பவர் தவற விட்டுச் சென்ற ~25 லட்சம் மதிப்புள்ள 40 சவரன் நகைகளை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் என்பவர். இவருடைய இந்த நேர்மையான செயலுக்காக சென்னை காவல் ஆணையர் அருண், இவரை நேரில் அழைத்து பாராட்டினார்.



  • Feb 17, 2025 12:41 IST

    ஏஞ்சல் பட வழக்கு - துணை முதல்வருக்கு உத்தரவு

    ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், ரூ.25 கோடி இழப்பீடு வழங்க கோரி பட தயாரிப்பாளர் மேல் முறையீடு செய்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 17, 2025 12:38 IST

    மெட்ரோ காவலாளிகள் மீது கல்லெறிந்த 3 பேர் கைது

    பெருங்குடி OMR சாலையில் மெட்ரோ காவலாளிகள் மீது கல்லெறிந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மெட்ரோ பணிக்கான இரும்புகளை ஆட்டோவில் திருடுவதை தடுக்க முயன்றபோது காவலாளிகள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.



  • Feb 17, 2025 12:19 IST

    மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை - உதயநிதி ஸ்டாலின்

    'தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Feb 17, 2025 12:12 IST

    தமிழ்நாட்டில் 46.35 லட்சம் விதைகள் நடப்பட்டுள்ளன!

    தமிழ்நாடு அரசின் 'ஒரு கோடி பனை விதைகள் நடும்’ திட்டத்தின் கீழ் இதுவரை 46.35 லட்சம் விதைகள் நடப்பட்டுள்ளன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள செயலி உதவியுடன் சுற்றுச்சூழல், வனத்துறை, தன்னார்வலர்கள் அமைப்புகளுடன் இணைந்து விதைகள் நடப்பட்டன. தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் விதைக்கப்பட்ட 30 லட்சம் விதைகளை இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.



  • Feb 17, 2025 12:02 IST

    பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு உயிரிழந்த மான்கள்

    சென்னை வண்டலூர் மலை அடிவாரத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிட்டு உயிரிழந்த மான்கள். குப்பை கொட்டுவதை தடுக்க வனத்துறை சார்பில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை 



  • Feb 17, 2025 11:52 IST

    அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

    அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளனர்.



  • Feb 17, 2025 11:48 IST

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

    UGC வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்



  • Feb 17, 2025 11:39 IST

    8,525 மெகாவாட் மின்சாரத்தை வழங்க உத்தரவு

    கோடைக்கால தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க மின்சார வாரியத்திற்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 17, 2025 11:05 IST

    பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்

    சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுளளது. நடைமேடையில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தின் வெளியே நடந்து செல்லும் போது கீழே தள்ளி பாலியல் துன்புறுத்தல் என புகார். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Feb 17, 2025 11:04 IST

    மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியது ஏன்?

    தேசிய கல்வி கொள்கையை ஏற்று PM SHRI திட்டத்தை செயல்படுத்த MoU போட தயார் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என எடப்பாடி பழனிசாமி வேலூரில் நேற்று (பிப்.16) தெளிவாக பேசிவிட்டார் என்று அதிமுக சட்டப்பிரிவு செயலாளர் இன்பதுரை X தள பதிவிட்டுள்ளார். 



  • Feb 17, 2025 10:58 IST

    திமுக நிலைப்பாடு - அதிமுக கேள்வி

    தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது ஏன்? இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற லட்சணம் இதுதானா? என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கேள்வி எழுப்பி உள்ளார்.



  • Feb 17, 2025 10:56 IST

    பெண்ணின் 4 மாத சிசுவுக்கு உடற்கூராய்வு

    ரயிலில் இருண்து தள்ளிவிடப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 4 மாத சிசுவுக்கு உடற்கூராய்வு செய்யப்படுகிறது.



  • Feb 17, 2025 10:03 IST

    டெல்லியை தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்

    தலைநகர் டெல்லியை தொடர்ந்து பீகார் மாநிலம் சிவான் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிவான் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளது.



  • Feb 17, 2025 09:20 IST

    மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம் - ஓபிஎஸ்

    தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால்தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.



  • Feb 17, 2025 08:46 IST

    மோடியை பாராட்டியது ஏன்? - சசி தரூர் விளக்கம்

    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், நம் நாட்டுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதனாலேயே அவரை பாராட்டினேன். நான் அனைத்து நேரங்களிலும் காங்கிரஸ்காரராக பேச முடியாது. ட்ரம்ப் பதவியேற்ற பின் அவரை சந்தித்த நான்காவது உலக தலைவர் பிரதமர் மோடி என்பது, உலக அரங்கில் நம் நாட்டுக்குள்ள முக்கியத்துவத்தை அடிகோடிட்டுக் காட்டுகிறது என காங்கிரஸ் எம்.பி. சசை தரூர் தெரிவித்துள்ளார்.



  • Feb 17, 2025 08:43 IST

    ஏழை மனுதாரர்களுக்கு இளம் வழக்கறிஞர்கள் உதவ வேண்டும் - உச்சநீதிமன்றம்

    வழக்கறிஞர்களை நியமிக்க பணவசதி இல்லாத ஏழை மனுதாரர்களுக்கு இளம் வழக்கறிஞர்கள் தானாக முன்வந்து உதவ வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், மனுதாரருக்கு இலவசமாக வாதிட ஆஜரான இளம் வழக்கறிஞர் சஞ்சார் ஆனந்த என்பவரை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இவ்வழக்கில் 14 தடவை சஞ்சார் ஆனந்த் ஆஜராகி உள்ளார். 



  • Feb 17, 2025 08:20 IST

    மேலும் 112 இந்தியர்கள் நாடு கடத்தல்

    மூன்றாவது கட்டமாக மேலும் 112 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா. ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸ் அழைத்து வரப்பட்டனர்.



  • Feb 17, 2025 08:18 IST

    பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ - இருவர் கைது

    சென்னை அரும்பாக்கம் பகுதியில் கையில் ஆட்டோவில் அமர்ந்து பட்டாக் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இருவர், ரோந்து போலீசாரிடம் சிக்கினர். பிடிபட்ட சந்தோஷ் என்பவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



  • Feb 17, 2025 08:02 IST

    மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்

    டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் மக்கள் பதற்றத்தை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் அதிகாரிகள் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மக்கள் அமைதியாக, அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்ற பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.



  • Feb 17, 2025 07:45 IST

    திமுக கூட்டணி நாளை போராட்டம்

    மும்மொழி கொள்கையை பின்பற்றுமாறு மத்திய அரசு மிரட்டுவதை கண்டிக்கும் வகையில் தி.மு.க கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பன்மைத்துவத்தை பாதுகாக்க ஒன்றியணைய வேண்டும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.



  • Feb 17, 2025 07:42 IST

    டெல்லி முதலமைச்சரை பாஜக தலைமை இன்று தேர்வு செய்யலாம் என தகவல்

    டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில் யார் முதலமைச்சர்? என்பதை பாஜக தலைமை இன்று முடிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 19 அல்லது 20 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.



  • Feb 17, 2025 07:38 IST

    அமெரிக்கா வழங்கும் நிதியுதவி நிறுத்தம்

    இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கும் ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. 



  • Feb 17, 2025 07:37 IST

    சிறந்த ஊராட்சி நிர்வாகம் - முன்னணியில் தமிழ்நாடு

    ஊராட்சிகளில் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் அறிவித்துள்ளது. திறன் மேம்பாடு பிரிவில் 2 ஆவது இடத்திலும் நிதிப்பரிவர்த்தனையில் 3 ஆவது இடத்திலும் தமிழ்நாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 17, 2025 07:34 IST

    டெல்லியில் நில அதிர்வு - மக்கள் வீதிகளில் தஞ்சம்

    டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 5.36 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டடு. ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.



  • Feb 17, 2025 07:32 IST

    ஜவுளித் துறை ஏற்றுமதியில் 6வது இடத்தில் உள்ளோம் - பிரதமர் மோடி

    ஜவுளித்துறை ஏற்றுமதியில், தற்போது நாம் உலகின் ஆறாவது மிகப்பெரிய நாடாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஜவுளித் துறையில் அன்னிய முதலீடு 2 மடங்காக உயர்ந்துள்ளதாகவும் பாரத் டெக்ஸ் கண்காட்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: