Chennai News Highlights: "அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே உள்ளது" - பியூஷ் கோயல்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
"அமைச்சர் பியூஷ் கோயலின் பேச்சு ஜனநாயகத்திற்கு எதிரானது”

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Feb 20, 2025 23:49 IST

    எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமனம்

    தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி. ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காலியாக இருந்த உறுப்பினர் பதவிகளையும் நிரப்பி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.



  • Feb 20, 2025 23:48 IST

    பேட் கேர்ள் (`Bad Girl') படத்தின் சர்ச்சை - குரல் கொடுத்த ஆர்.கே.செல்வமணி 

    குக்கரில் சாதம் பொங்கும் பொழுது ஓரிரு அரிசிகள் வெளியே வரும், அதற்குள் சாதம் வேகவில்லை என முடிவு பண்ண முடியுமா?'' ``ஒரு திரைப்படத்தை முழுமையாக பார்க்காமல் அது சரியா..தவறா..? என்று கருத்து கூறுவது அரை வேக்காட்டுத்தனம் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.



  • Advertisment
  • Feb 20, 2025 23:46 IST

    கடவுளே வந்தாலும் வாய்ப்பில்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

    கர்நாடக துணை முதல்வரும் பெங்களூர் நகரின் பொறுப்பு அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடவுளே கீழே இறங்கி வந்தாலும் 3 ஆண்டுகளுக்குள் பெங்களூரு நகரை மேம்படுத்த வாய்ப்பில்லை  என்று பேசியுள்ளது பரபரப்பாகியுள்ளது.



  • Feb 20, 2025 23:45 IST

    ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவமனையில் அனுமதி

    ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Feb 20, 2025 21:33 IST

    சென்னை ஆவடி அருகே கெமிக்கல் குடோனில் தீ விபத்து

    சென்னை ஆவடி அருகே கெமிக்கல் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து - அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் பதறியடித்து ஓடினர். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது



  • Feb 20, 2025 21:30 IST

    ஜனாதிபதி ஆட்சியில் மணிப்பூர்: துப்பாக்கிகளை ஒப்படைக்க கோரிக்கை

    குடியரசுத் தலைவர் ஆட்சியில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை உடனே ஒப்படைக்க மாநில ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆயுதங்களை ஒப்படைப்போர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஆனால், இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Feb 20, 2025 20:34 IST

    இந்தி மீது எனக்கு வெறுப்பு கிடையாது: திருமாவளவன்

    இந்தி மீது எனக்கு வெறுப்பு கிடையாது; விசிகவுக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. இந்தியா முழுவதும் ஒரே மொழியை திணிக்க முயல்வதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்; ஏழை மாணவர்கள் இந்தி படித்துவிட்டால், வேலை கிடைத்து விடுமா? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Feb 20, 2025 19:47 IST

    தொழிலாளர் போராட்டம் - சாம்சங் விளக்கம் 

    ஊழியர்கள் பணியிடை நீக்கத்தை கண்டித்து, ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிலாளர்கள் 16வது நாளாக போராட்டம்  நடைபெற்று வருகிறது. எங்கள் கொள்கைகளை மீறுபவர்கள் உரிய செயல்முறைக்கு பிறகு ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் நிறுவனத்தில் ஒழுக்கத்தையும், பாதுகாப்பையும் பராமரிக்க, மாநில அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம் உற்பத்தி பிரிவில் நடந்த போராட்டம் வருவாய், காவல்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டு, ஆலை வளாகத்தில் தொடர்கிறது.



  • Feb 20, 2025 19:26 IST

    வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை 

    உத்தரகாண்டில் 2 மாவட்டங்களைத் தவிர்த்து 11 மாவட்டங்களில், வெளி மாநிலத்தவர்கள் நிலங்கள் வாங்குவதை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 



  • Feb 20, 2025 19:19 IST

    சரிவில் முடிவடைந்த மும்பை பங்குச்சந்தை

    மும்பை பங்குச்சந்தை இன்று சரிவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவில் முடிவடைந்தன.

    சென்செக்ஸ் இறுதியில் 203.22 புள்ளிகள் (0.27 சதவீதம்) இழப்புடன் 75,735.96-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இறுதியில் 19.75 புள்ளிகள் (0.09 சதவீதம்) இழப்புடன் 22,913.15-இல் நிறைவடைந்தது.

     



  • Feb 20, 2025 19:06 IST

    இரட்டை வேடம் பேட வேண்டிய நிலை எனக்கு இல்லை -  திருமாவளவன் பேச்சு 

    "நான் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்துவதாக பரபரப்புக்காக அண்ணாமலை பேசுகிறார். இரட்டை வேடம் பேட வேண்டிய நிலை தனக்கு இல்லை என்று அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார். யாரும் எந்த மொழியையும் கற்கலாம்; ஆனால் திணிக்கக் கூடாது என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

     



  • Feb 20, 2025 18:57 IST

    கனக சபையில் பக்தர்கள் - விளக்கமளிக்க உத்தரவு

     

    சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் அதிக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிப்பதற்கு மேற்கொள்ள உள்ள ஏற்பாடுகள் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு  உத்தரவிட்டுள்ளது. 

    கனகசபை தரிசனத்துக்கு ஒரே வழியை பயன்படுத்துவதற்கு பதில் மற்றொரு வழியை அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 20, 2025 18:32 IST

    இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்

    இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 



  • Feb 20, 2025 18:31 IST

    கம் கொடுத்த ஷமி 

    ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது ஷமி. 



  • Feb 20, 2025 18:29 IST

    இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேச அணி.  முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. அதிகபட்சமாக ரிதாய்  100 ரன்களும், ஜகெர் அலி 68 ரன்களுக்கு எடுத்தனர்



  • Feb 20, 2025 18:27 IST

    30 வருட மோசடி வழக்கு - மகாராஷ்டிர விவசாய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை 

    மகாராஷ்டிர விவசாய அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவுக்கு 30 ஆண்டுகால ஆவணங்களைத் திருத்தி மோசடி செய்த வழக்கில் நாசிக் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முதலமைச்சரின் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தியது தொடர்பான அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

     



  • Feb 20, 2025 17:57 IST

    மாத ஊதியத்தில் 3ல் ஒரு பங்கு, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த செலவு -ஆய்வில் தகவல்

    மாத ஊதியத்தில் 3ல் ஒரு பங்கு, வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் செலவாகிவிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. வீட்டுக் கடன், கார் கடன், டி.வி. என பல பொருட்களையும் கடனில் வாங்கி, பலர் மாதாந்திர தவணை செலுத்துகின்றனர். வீடு, கார் கடன்களை திருப்பிச் செலுத்தும் மாதத் தவணையாகவே சம்பளத்தில் 33%ஐ மாத ஊதியதாரர்கள் செலவிடுகின்றனர். உணவு, போக்குவரத்து, மருத்துவம் போன்ற தவிர்க்கவே முடியாத தேவைகளுக்கு ஊதியத்தில் 39% தொகையை செலவிடுகின்றனர்.



  • Feb 20, 2025 17:20 IST

    'மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்' - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 

    ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திட கோரி முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். 



  • Feb 20, 2025 16:19 IST

    தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பா.ஜ.க-வுக்கு பிடிக்காது -தமிழன் பிரசன்னா குற்றச்சாட்டு 

    தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா பேட்டி: “ஒர் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாட அண்ணாமலை, எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த எங்கள் துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு நியாயமாக பகிர்ந்து அளிக்கக் கூடிய நிதியைக் கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறது. தமிழ்நாட்டையும், தமிழர்களையும் பாஜகவுக்கு பிடிக்காது.” என்று கூறினார்.



  • Feb 20, 2025 15:24 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி போராட்டம் தொடரும் - அன்புமணி ராமதாஸ்

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அறிவிக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க வேண்டும். தமிழக அரசு அறிவிக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 20, 2025 14:45 IST

    புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் வருகிறது - அமுதா ஐ.ஏ.எஸ்

    ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்



  • Feb 20, 2025 14:34 IST

    அஞ்சலை அம்மாள் நினைவு நாள்; த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

    சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் நினைவு நாளான இன்று, தன் அலுவலகத்தில் உள்ள அவரின் சிலைக்கு த.வெ.க தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்



  • Feb 20, 2025 14:11 IST

    பெண்களுக்கு மாதம் ரூ.2,500 எப்போது? – டெல்லி புதிய முதல்வர் தகவல்

    டெல்லியில் மார்ச் 8 முதல் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி பா.ஜ.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்



  • Feb 20, 2025 13:35 IST

    திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் பயங்கர தீ

    திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தின்னர் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்



  • Feb 20, 2025 13:12 IST

    சாலை மறியல் செய்து இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு; எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி விடுதலை

    மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி விடுதலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது



  • Feb 20, 2025 13:08 IST

    அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்; தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் பதில் மனு

    அ.தி.மு.க பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சூரியமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது. சூரியமூர்த்தி அ.தி.மு.க.,வில் அடிப்படை உறுப்பினர் இல்லை என அந்த பதில் மனுவில் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்



  • Feb 20, 2025 12:42 IST

    டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா!

    ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஷேனா, ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சுஷ்மா சுராஜ், ஷீலா தீட்க்ஷித், அதிஷியை தொடர்ந்து டெல்லியின் 4வது பெண் முதலமைச்சரானார் ரேகா குப்தா. 



  • Feb 20, 2025 12:30 IST

    சாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதி கூட்டமைப்பு கட்சிகள் போராட்டம்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி பாமக மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு கட்சிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 



  • Feb 20, 2025 12:29 IST

    "தேவநாதன் சொத்துகள் முடக்கமா? இல்லையா?"

    நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்று காவல்துறை தெளிவுபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரூ.24.50 கோடி முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 7 பேர் கைதான வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளது. தேவநாதன் உள்பட 3 பேர் ஜாமீன் கோரி விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையாக விசாரணை நிறைவடையவில்லை என்று  காவல்துறை தரப்பு இரண்டாவது முறையாக மனு தாக்கல்.



  • Feb 20, 2025 12:24 IST

    அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

    “தமிழ்நாடு கேட்கும் நிதியை வாங்கித் தர துப்பில்லை. சவால் விடுகிறார். பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார் முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள்.” என்று அண்ணாமலைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 



  • Feb 20, 2025 12:02 IST

    மெரினா கடற்கரையில் காவலரிடம் பெண் ஒருவர் வாக்குவாதம்

    சென்னை மெரினா கடற்கரையில், காவலரிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இரவில் ஆண் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணிடம், நீங்கள் கணவன் - மனைவியா என்று காவலர் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன்-மனைவியா என்று கேட்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என அப்பெண் காவலரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலான நிலையில். ரோந்து காவலர் ராஜ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 



  • Feb 20, 2025 11:34 IST

    சென்னை கார் பந்தைய செலவு - உச்சநீதிமன்றம் உத்தரவு

    சென்னையில் நடந்த கார் பந்தயத்திற்கான செலவை தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். 'Racing Promotions' தனியார் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 20, 2025 11:18 IST

    கல்வி நிதி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 



  • Feb 20, 2025 11:10 IST

    நடிகர் சூர்யா படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள வெளிச்சை கிராமத்தில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 45-ஆவது படப்பிடிப்பு அனுமதி பெறாமல் நடைப்பெற்றதால் தடுத்து நிறுத்தியது காவல்துறை. 



  • Feb 20, 2025 10:38 IST

    சேவலால் கெட்ட தூக்கம்.. தீர்வு கேட்டு வருவாய் கோட்ட அலுவலகம் சென்ற நபர்..!

    கேரளா மாநிலம் பத்தினம்திட்டாவில் பக்கத்து வீட்டு சேவல் அதிகாலை 3 மணி முதல் கூவிக்கொண்டே இருப்பதால் தனது தூக்கம் பாதிக்கப்படுவதாக வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகாரளித்த நபர். பக்கத்து வீட்டு சேவல் மேல் தளத்தில் இருப்பதே பிரச்சனைக்கு காரணம் எனக் கண்டறிந்த அதிகாரிகள், அதை 14 நாட்களுக்குள் வேறு திசைக்கு மாற்ற உரிமையாளருக்கு உத்தரவிட்டு தீர்வு கண்டுள்ளனர்.



  • Feb 20, 2025 10:35 IST

    பெண்கள் நீராடுவதை வீடியோ எடுத்து விற்பதாக குற்றச்சாட்டு

    மகா கும்பமேளாவில் பெண்கள் புனித நீராடுவதையும் உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஒரு கும்பல் விற்பனை செய்வதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 20, 2025 10:34 IST

    துணை முதல்வர் ஏற்பாட்டில் சென்னை வரும் வீரர்கள்

    வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் விமானத்தில் சென்னை வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி உத்தரவின் பேரில், விமானம் மூலம் பெங்களூரு வழியாக வீரர்களை சென்னை அழைத்து வர மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கும்பமேளா கூட்டத்தால் 6 தமிழ்நாடு வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் சென்னை திரும்ப முடியாமல் தவித்தனர்.



  • Feb 20, 2025 09:34 IST

    சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு - நாளை வரை அவகாசம்

    சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலை தேர்வுக்கு வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 22 முதல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம். 



  • Feb 20, 2025 09:21 IST

    கண் விழிக்காத மனைவி

    சென்னை முகப்பேரில் உள்ள frontier lifeline என்ற மருத்துவமனை முன்பு அழுது புரண்ட கணவன். இருதய அறுவை சிகிச்சை முடிந்தும் பெண்ணுக்கு சுய நினைவு திரும்பாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. 



  • Feb 20, 2025 09:03 IST

    செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி புகார் மனு


    காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை மாற்றக்கோரி டெல்லியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரை சந்தித்து 20க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். அதிருப்தி நிர்வாகிகள் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் கோட்டாங்கரை சந்தித்து புகார் அளித்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Feb 20, 2025 08:39 IST

    எங்களுக்கு என்ன லாபம் ? - உக்ரைனை கைவிடும் அமெரிக்கா

    வெற்றி பெற முடியாது என்று தெரிந்தும் வேண்டுமென்றே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுடன் போருக்குள் நுழைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு தான் இந்த போர் முக்கியமே தவிர இதில் அமெரிக்காவுக்கு லாபம் ஒன்றும் இல்லை என சாடியுள்ளார். அப்படி இருக்கையில் அமெரிக்காவுக்கு இணையாக உக்ரைன் போரில் ஏன் ஐரோப்பிய நாடுகள் செலவிடவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 20, 2025 08:26 IST

    கும்பமேளா கூட்டம் - தவிக்கும் தமிழ்நாடு வீரர்கள்!

    உ.பி-யில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விட்டு ஊர் திரும்ப முடியாமல் ரயில் நிலையத்திலேயே அமர்ந்துள்ளனர்.



  • Feb 20, 2025 08:25 IST

    மலிவு விலையில் "ஐபோன் 16E" அறிமுகம்

    "ஐபோன் 16E" என்ற புதிய செல்போனை அறிமுகம் செய்தது, ஆப்பிள் நிறுவனம். 128 GB version 59 ஆயிரத்து 900 ரூபாயில் தொடங்கி 512 GB Version 89 ஆயிரத்து 900 ரூபாயாக இந்தியாவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முன்பதிவு தொடங்கி 28ஆம் தேதி முதல் விற்பனை ஆரம்பமாகிறது.



  • Feb 20, 2025 08:24 IST

    திமுக சார்பில் 'அமுதக் கரங்கள்' - துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

    ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் அமுதக் கரங்கள் திட்டத்தை சென்னை கொளத்தூரில் அமுதக் கரங்கள் திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 



  • Feb 20, 2025 07:54 IST

    வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.



  • Feb 20, 2025 07:53 IST

    விஜய் - பார்த்திபன் சந்திப்பு

    நேற்று இரவு த.வெ.க தலைவர் விஜயுடன் பேசியதாக நடிகர் பார்த்திபன் கனவு கண்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Feb 20, 2025 07:30 IST

    "Fastag புதிய விதி - யாருக்கும் பாதிப்பு ஏற்படாது"

    Fastag புதிய விதிகளால், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. சுங்கச்சாவடியை கடக்கும் முன் எந்த நேரத்திலும் ரீசார்ஜ் செய்யலாம் என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.



  • Feb 20, 2025 07:29 IST

    மார்ச் 1 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

    மார்ச் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 20, 2025 07:28 IST

    OMRல் ஜப்பான் நிறுவனம்

    ஜப்பானைச் சேர்ந்த `Murata' எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை OMRல் அமைகிறது. மல்டிலேயர் செராமிக் கேபாசிட்டர் உதிரிபாகத்தை தயாரிக்க திட்டம். ``ஓராண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும்'' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா



  • Feb 20, 2025 07:27 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது

    எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.



Tamil News Live Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: