/indian-express-tamil/media/media_files/2025/02/22/cDBfwOVlYG0PoKTtW5uZ.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சி.பி.எஸ்.இ பள்ளிகள்: மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிப்எஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
-
Feb 23, 2025 00:02 IST
மீண்டும் கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்
ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. ரேஸிங்கில் ஈடுபட்டபோது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் அஜித்துக்கு காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 22, 2025 21:19 IST
கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - ரங்கசாமி
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், த.வெ.க தலைவர் விஜய்யை, தனது நண்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 22, 2025 20:51 IST
இந்தியா வெற்றிபெற சிறப்பு யாகம்
நாளை (பிப் 23) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என, கொல்கத்தாவில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
-
Feb 22, 2025 19:32 IST
ஓடிடி தளங்களுக்கு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்
ஓடிடி, டிஜிட்டல் தளங்களுக்கு புதிய சட்டங்களை வகுக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை மற்றும் ஆபாச பதிவுகள் ஆகியவை சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், புதிய சட்டங்களின் தேவை குறித்து ஆராயப்படுவதாக கூறப்படுகிறது.
-
Feb 22, 2025 18:56 IST
சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Feb 22, 2025 18:33 IST
கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள் நாளை காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல் முதல் பொன்னேரி வரை மட்டும் கணிசமான அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Feb 22, 2025 18:14 IST
மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் பதவிக் காலம் வரை சக்திகாந்த தாஸ் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Feb 22, 2025 16:35 IST
பாகிஸ்தானில் ஒலித்த இந்திய தேசிய கீதம்
சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டி லாகூரில் நடைபெற்று வரும் நிலையில், போட்டிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலிபரப்பின்போது ஆஸ்திரேலிய தேசிய கீதத்திற்கு பதிலாக தவறுதலாக இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது. பாரத பாக்ய விதாதா என்ற வரிகள் வரும் போது அதனை நிறுத்திவிட்ட டி.ஜே. அதன்பிறகு ஆஸ்திரேலிய தேசிய கீதத்தை ஒலிபரப்பியுள்ளார்.
-
Feb 22, 2025 16:29 IST
படகுகளை ஏலம் விட இலங்கை அரசு நடவடிக்கை: மத்திய மாநில அரசிடம் மீனவர்கள் கோரிக்கை
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களின் படகுகளை ஏலம் விட இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிடிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2வது முறையாக ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், மொத்தம் 67 படகுகளின் பட்டியலை இலங்கை நீரியல் வளத்துறை வெளியிட்டுள்ளது மத்திய - மாநில அரசுகள் ஏலத்தை தடுத்து படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Feb 22, 2025 16:02 IST
மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி நடந்தாலே காமராஜர் ஆட்சிதான். காமராஜர் ஆட்சியா? நல்லாட்சியா? என புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
-
Feb 22, 2025 16:00 IST
ஒன்றிய அரசு ஒதுக்காவிட்டாலும் திட்டங்கள் தொடரும்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு பள்ளி கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காவிட்டாலும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், திட்டங்கள் எதையும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 22, 2025 15:58 IST
'இந்தி பெல்ட்' மாநிலங்களில் 25 மொழிகள் அழிந்துள்ளன: மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில், ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளம்பிற்கு சென்றுள்ளது. இந்தி பெல்ட் என்ற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகளில் அழிந்திருக்கிறன. தாய் மொழியை இழந்து இந்தி மொழியின் ஆதிக்கத்திற்கு ஆளான மாநிலங்கள் இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்புணர்வு அடைந்து வருகின்றன. இதற்கு காரணம் தமிழ்நாடு தனது தாய் மொழியான தமிழை தற்காத்துக்கொண்டது தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 22, 2025 15:18 IST
“தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது: மு.க.ஸ்டாலின்
“தேசிய கல்விக் கொள்கை என்பது சமூகநீதிக்கு, தமிழுக்கு, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்து என்று கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Feb 22, 2025 15:16 IST
எதிர்த்து பேசியதால் அபராதமா? போக்குவரத்து காவல்துறை விளக்கம்
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் சோதனையின் போது உரிய ஆவணங்களை கொடுக்காத வாகன ஓட்டி, அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
Feb 22, 2025 15:14 IST
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய அல்பாசியிடம் என்.ஐ.ஏ விசாரணை
அல்பாசி விவகாரம் - என்ஐஏ விசாரணை
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்புடைய அல்பாசித்தை 7 நாட்கள் காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். மயிலாடுதுறையை சேர்ந்த அல்பாசித்தை கடந்த மாதம் 8ம் தேதி புரசைவாக்கத்தில் என்.ஐ.ஏ கைது செய்திருந்தது.தமிழகத்தில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் சதி திட்டம் ஏதேனும் தீட்டப்பட்டதா? என அல்பாசித்திடம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர்களை குறிவைத்து மூளை சலவை செய்யப்பட்டதா உடந்தையாக யாரேனும் இருந்தனரா? என அல்பாசித்திடம் விசாரணை -
Feb 22, 2025 14:51 IST
மத்திய அமைச்சரிடம் மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா
தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் சவுகானுக்கு விளக்கம் அளித்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை ஒதுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போபால் – டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் உடைந்த இருக்கையிலேயே சிவ்ராஜ் சிங் சவுகான் பயணித்துள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு ஏற்பட்ட அசவுகரியத்தை குறிப்பிட்டு ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பதிவிட்டுள்ளார். உட்காருவதில் உள்ள அசவுகரியத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் முழு தொகையையும் வசூலித்த பிறகு பயணிகளை மோசமான மற்றும் சங்கடமான இருக்கைகளில் அமர வைப்பது தவறு அல்லவா?
இது பயணிகளை ஏமாற்றுவதாக இல்லையா? எதிர்காலத்தில் எந்தவொரு பயணியும் இதுபோன்ற சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா அல்லது பயணிகளின் அவசரத்தை தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் சவுகானுக்கு விளக்கம் அளித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
-
Feb 22, 2025 14:49 IST
ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறா? - த.வெ.க பதிலடி
எம்.ஜி.ஆரை போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார் . ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசிய கமல், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார். ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும். எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்.ஜி.ஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என தெரிவித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 22, 2025 14:48 IST
எதிர்த்து பேசியதால் அபராதமா? - போக்குவரத்து போலீஸ் விளக்கம்
சோதனையின் போது உரிய ஆவணங்களை கொடுக்காத வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் கொடுக்காமல், அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த வாகன ஓட்டிக்கு ரூ.3000 அபராதம் விதித்த விவகாரத்தில் போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
Feb 22, 2025 14:10 IST
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இருக்கும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தருணம் - ஐகோர்ட் யோசனை
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் விதிகளை தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் யோசனை கூறியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் உள்ள ராஜ்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
Feb 22, 2025 13:57 IST
சென்னையில் 150 சவரன் நகைகள் கொள்ளை
சென்னை நொளம்பூரில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கருங்கல்லால் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். முக்கிய பிரமுகர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர் சிவகுமார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
-
Feb 22, 2025 13:53 IST
மத்திய அரசின் கொள்கைகளால் என்னென்ன பாதிப்பு? பட்டியல் போட்ட ஸ்டாலின்
மத்திய அரசின் கொள்கைகளால் என்னென்ன பாதிப்புகள் வரும் - எதிர்ப்புக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதி கொள்கையை நீர்த்துப் போகச் செய்வது. பட்டியலின பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நாம் உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு கொள்கை இதை மறுக்கிறது.
3ம் வகுப்பு, 5ம் வகுப்பு எனப் பொதுத்தேர்வு வைத்துப் பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதனால் நம் பிள்ளைகள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர முடியாது.
10ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை உள்ள மாணவர்கள், படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றால் அவர்களாகவே வெளியேறலாம் என சொல்கிறார்கள். இது படிக்காமல் போ என்று சொல்வதற்கு சமம் இல்லையா? படித்து முன்னேற போகிறவர்களை மீண்டும் குலத்தொழிலை நோக்கிக் கொண்டு செல்ல பார்க்கிறார்கள்.
-
Feb 22, 2025 13:51 IST
வாட்டி வதைக்கும் வெயில் - மக்களே உஷார்!
தமிழகத்தில் வெப்பநிலை பிப்ரவரி மாதம் முதலே உயரத் தொடங்கியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Feb 22, 2025 13:49 IST
தேசிய கல்விக் கொள்கை - 'கோடி கொடுத்தாலும் கையெழுத்திட மாட்டேன்': ஸ்டாலின் பேச்சு
"இந்தி மொழிக்கு எதிர்ப்பு இல்லை, திணிப்புக்கு தான் எதிர்ப்பு. மாணவர்கள் தான் தமிழ்நாட்டின் சொத்து. ஒவ்வொரு மாணவனும் தமிழ்நாட்டின் சொத்து, கல்வித்துறையில் சாதனைகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும் அக்கறை, தமிழக அரசுக்கும் உள்ளது
இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கையெழுத்திட மாட்டேன். ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
Feb 22, 2025 12:47 IST
"பெண்களை பாதுகாப்பதில் அரசு படுதோல்வி" - அன்புமணி ராமதாஸ்
பெண்களை பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது முதல் கடமை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 22, 2025 12:29 IST
விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்
"ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய தகுதி இழக்க செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய தக்க தருணம்" உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை செய்துள்ளது.
-
Feb 22, 2025 12:09 IST
சென்னை: செம்மர கட்டைகள் பறிமுதல்
சென்னை வியாசர்பாடியில் வீட்டில் வைத்திருந்த 960 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகமது ரசூல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த நாகராஜ், ஈஸ்வரய்யா மூலம் காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
-
Feb 22, 2025 11:51 IST
“கட்சிக்கு இது களையுதிர் காலம்”
"இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்; யார் வேண்டுமானாலும் கட்சியில் இருந்து செல்லலாம்; அது அவர்கள் முடிவு கட்சியில் இருப்பதற்கும், விலகுவதற்கும் காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது" என்று நாதக-வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா என்ற கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
-
Feb 22, 2025 11:49 IST
தவெக முதலாம் ஆண்டு விழா - இன்று முதல் பாஸ்?
தவெக முதலாம் ஆண்டு நிகழ்ச்சிக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல்; நிகழ்ச்சிக்கான பாஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் தவெக ஆண்டு விழா வரும் 26 ஆம் தேதி ஈசிஆர் சாலையில் உள்ள Confluence Centre-ல் நடைபெறுகிறது. சுமார் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்.
-
Feb 22, 2025 11:26 IST
காளியம்மாள் கூறிய பதில்
"என் முடிவை நானே அறிவிப்பேன்" முழு மனதோடு நாதகவில் பயணிக்கிறீர்களா என்ற கேள்விக்கு காளியம்மாள் கூறிய பதில் இது தான்.
-
Feb 22, 2025 11:22 IST
தமிழக அரசு உதவ வேண்டும்"...அண்ணாமலை வலியுறுத்தல்
கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என தமிழக அரசு கூறியிருக்கும் நிலையில், மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, மாணவர்கள் கற்க விரும்பும் மொழிகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என அவர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
-
Feb 22, 2025 11:15 IST
சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.- உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா
“பெற்றோர்கள் தங்கள் மகன்களை விட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மகள்-மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நெறிமுறைகளைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும். பள்ளிகளில் முறையான ஒழுக்கக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. சில பள்ளிகளில் இருந்தாலும், அந்த வகுப்பு நேரத்தை வேறு பாடங்கள் எடுக்கப் பயன்படுத்துகின்றனர்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா கருத்து தெரிவித்துள்ளார்.
-
Feb 22, 2025 10:29 IST
நாதக-வில் இருந்து காளியம்மாள் விலகலா?
நா.த.க மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகினாரா? மணப்பாடு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் காளியம்மாள் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் காளியம்மாள்.
-
Feb 22, 2025 09:48 IST
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்றிரவு மாற்றம் செய்யப்படுகிறது. நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விமான நிலையம் விம்கோ நகர் வரை மட்டுமே மெட்ரோ சேவை இருக்கும்.
-
Feb 22, 2025 08:56 IST
ரோஜா வடிவில் முட்டைகோஸ்
சீனாவில் வழக்கமான முட்டைகோசை விட ரோஜா வடிவிலான முட்டைகோஸ் விற்பனைக்கு வந்தது. இதில் 3 மடங்கு அதிக நன்மைகளை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றன.
-
Feb 22, 2025 08:55 IST
மெரினாவை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை - மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நடந்த தூய்மைப் பணியில் 5000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மெரினா கடற்கரைஅயி தூயமையாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
-
Feb 22, 2025 08:30 IST
மகா கும்பமேளா - உ.பி. அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய்!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 57 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி வழிபாடு செய்துள்ளனர். உத்தரபிரதேச அரசுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Feb 22, 2025 08:28 IST
அரசை கவிழ்த்து விடுவேன் - ஷிண்டே எச்சரிக்கை!
2022யில் மகாராஷ்டிரா அரசாங்கத்தை கவிழ்த்த என்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மிரட்டல் விடுத்துள்ளார். பாஜக கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Feb 22, 2025 08:26 IST
ராகுலை சந்திக்கும் அதிருப்தி காங்.மாவட்ட தலைவர்கள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிருப்தி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு எதிராக மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
-
Feb 22, 2025 07:41 IST
மொழியின் பெயரால் பிரிவினை ஏற்படுத்துவதை கைவிடுங்கள் - பிரதமர்
மொழியின் பெயரால் பிரிவினை ஏற்படுத்துவதை கைவிடுங்கள். மொழியை வைத்து பிரிவினையை உருவாக்கும் முயற்சியை கைவிடுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல் இந்திய மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் ஆவேசம்
-
Feb 22, 2025 07:38 IST
3.80 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறும் டெஸ்லா நிறுவனம்!
அமெரிக்கா பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால் சுமார் 3லட்சத்து 80 ஆயிரம் மின்சார வாகனங்களைத் திரும்பப் பெற டெஸ்லா முடிவு செய்துள்ளது. வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளதாகவும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வாடிக்கையாளரகள் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Feb 22, 2025 07:36 IST
7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் 7 திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கரணௌ பகுதிகளில் உள்ள வில்லா டைப் வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
Feb 22, 2025 07:33 IST
‘மாநிலஅரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்' - சிபிஎஸ்இ
மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே இனி சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிப்எஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கான விதிகளில் திருத்தம் செய்தது மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.