Chennai News Updates: பக்தர்கள் அங்கே கடவுளை பார்த்தார்கள்: கும்பமேளா குறித்த குற்றச்சாட்டுக்கு யோகி பதில்!

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM Yogi Adityanath Will send UP bulldozers to crush Punjab mafia Tamil News

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Feb 25, 2025 00:14 IST

    கும்பமேளாவில் அசுத்தம்: எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு உ.பி.முதல்வர் பதில்

    கும்பமேளாவில் அசுத்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ``கழுகுகள் அங்கே பிணங்களை பார்த்தன, பன்றிகள் அழுக்கை பார்த்தன, நம்பிக்கை கொண்டோர் ஒழுக்கத்தை பார்த்தார்கள், பக்தர்கள் அங்கே கடவுளை பார்த்தார்கள் என்று கூறியுள்ளார்.



  • Feb 25, 2025 00:12 IST

    போதையில் மாறிய மாலையால் திருமணம் நிறுத்தம் 

    உ.பி. : மணமேடைக்கு முழு போதையில் வந்த மணமகன் மாலையை மணப்பெண் கழுத்தில் போடுவதற்கு பதிலாக அவரது நண்பரின் கழுத்தில் போட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. மணமகன் வீட்டார் எவ்வளவோ கேட்டும் பெண் மறுப்பு தெரிவித்ததோடு, அவரது புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தாரின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Feb 24, 2025 20:46 IST

    2025-26 நிதியாண்டில் 100% மின்ரயில் பாதைகள்: மத்திய அமைச்சர் உறுதி 

    தற்போது நாட்டில் 97% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2025-26 நிதியாண்டுக்குள் 100% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.



  • Feb 24, 2025 20:11 IST

    ரஜினிகாந்துடன் உரியடி விஜயகுமார் சந்திப்பு

    கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்த நடிகரும், இயக்குனருமான விஜய்குமார். நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற உதவிய ``நண்பன்'' லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Feb 24, 2025 19:27 IST

    டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் நீக்கம் 

    டெல்லி முதல்வர் இருக்கைக்கு அருகே இருந்த அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பட்டியலின மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை பாஜக மீண்டும் நிரூபித்துள்ளது''  முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.



  • Feb 24, 2025 18:52 IST

    பொன் மாணிக்கவேல் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது ஏற்புடையதா? - நீதிபதி கேள்வி

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்த முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது ஏற்புடையதா? இதுபோன்று வழக்கு பதிவு செய்தால், முக்கிய வழக்குகளை விசாரிக்க எந்த உயர் அதிகாரி முன் வருவா என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்



  • Feb 24, 2025 18:31 IST

    நியூசிலாந்துக்கு 237 ரன்கள் இலக்கு

    சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு 237 ரன்களை வங்கதேசம் இலக்காக நிர்ணயித்துள்ளது. ராவல்பிண்டியில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது



  • Feb 24, 2025 18:19 IST

    மாவட்டப் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மாவட்டப் பொறுப்பாளர்களுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்



  • Feb 24, 2025 18:08 IST

    'டிராகன்' திரைப்படம் 3 நாட்களில் ரூ.50.22 கோடி வசூல்

    பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான 'டிராகன்' திரைப்படம், வெளியான 3 நாட்களில் ரூ.50.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது



  • Feb 24, 2025 17:25 IST

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மனிதாபிமான மிக்க தலைவர் ஜெயலலிதா - மோடி

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மனிதாபிமான மிக்க தலைவர் ஜெயலலிதா. அவருடன் எண்ணிலடங்கா முறை உரையாட வாய்ப்பு கிடைத்தது கவுரவம் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Feb 24, 2025 17:10 IST

    மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய பதவிகளை 3 மாதங்களில் நிரப்புக – ஐகோர்ட் உத்தரவு

    தமிழ்நாட்டில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும். நியமனங்கள் குறித்து ஜூன் 20ம் தேதி அறிக்கை சமரிப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Feb 24, 2025 16:19 IST

    சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து  செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு 

    சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து  செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பதிவான வழக்குகளை கோவை சைபர் குற்றப்பிரிவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • Feb 24, 2025 15:19 IST

    சென்னை தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

    இந்தி திணிப்புக்கு எதிராக சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தி.மு.க-வினர் கருப்புமை வைத்து அழித்தனர்.



  • Feb 24, 2025 15:07 IST

    14 நாள் வேலை நிறுத்தம் - கடலுக்கு சென்ற காரைக்கால் மீனவர்கள்

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த காரைக்கால் மீனவர்கள், 14 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையினரைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காரைக்காலில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.



  • Feb 24, 2025 15:01 IST

    வழிப்பறி செய்த வழக்கு - ஜாமின் கோரி எஸ்.ஐ. 

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஜாமின் கோரி எஸ்.ஐ. ராஜா சிங் மனு தாக்கல் செய்தார். ராஜா சிங் மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை பிப்ரவரி .27க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

     



  • Feb 24, 2025 15:01 IST

    உண்மையாய், உறவாய் பழகிய பயணித்த... நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகல் 

     

    நா.த.க.வில் இருந்து அக்கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகினார். இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். என்றும் தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வழியில் என் பயணம் தொடரும் என காளியம்மாள் தெரிவித்துள்ளார்.



  • Feb 24, 2025 14:56 IST

    சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் - சுப்ரீம் கோர்ட் மறுப்பு 

    சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சவுக்கு சங்கர் மீறினால் நீதிமன்றம் முன் அரசு கொண்டு வரலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



  • Feb 24, 2025 14:52 IST

    மத்திய அரசுக்கு வரியை கொடுக்காமல் தமிழ்நாடு அரசு இருக்க வேண்டும் - கிருஷ்ணசாமி பேச்சு 

    மத்திய அரசுக்கு வரியை கொடுக்காமல் தமிழ்நாடு அரசு இருக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு வரியை கொடுக்காமல் இருந்தால்தான் மத்திய அரசின் சரி எது, தவறு எது என்று மக்களுக்கு தெளிவு கிடைக்கும் என தெரிவித்தார்.



  • Feb 24, 2025 14:24 IST

    தமிழகத்தில் மழை 

    "வரும் 28 ஆம் தேதி தமிழகத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Feb 24, 2025 14:02 IST

    மதவெறுப்புப் பேச்சு - நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளா பா.ஜ.க நிர்வாகி 

    மதவெறுப்புப் பேச்சு விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்க மறுத்ததால், அம்மாநில பாஜக நிர்வாகி பி.சி. ஜார்ஜ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்

    போலீசார் அவரை கைது செய்ய உள்ளனர். “மதம், சாதியைக் கொண்டு மக்களை பிளவுபடுத்துவோர் மீது கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இவரின் முன்ஜாமின் மனு விசாரணையில் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது



  • Feb 24, 2025 13:54 IST

    ஆட்டோக்கள் மோதி விபத்து - உதயநிதி உதவி 


    சென்னை கோபாலபுரத்தில் இரு ஆட்டோக்கள் மோதி விபத்து ஏற்பட்ட நில்லயில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



  • Feb 24, 2025 13:50 IST

    மார்ச் 10 வரை ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் - ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு

    வருகிற மார்ச் 10 ஆம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருட்டு வழக்குகளில் மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



  • Feb 24, 2025 13:36 IST

    மாறி மாறி கருப்பு மை பூச்சு - கர்நாடகா - மகாராஷ்டிரா பஸ் சேவை நிறுத்தம் 

    நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சூழ்நிலையை நேரில் ஆய்வு செய்ய பெலகாவி விரைந்துள்ள கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்



  • Feb 24, 2025 12:48 IST

    "நீதிமன்றத்தை அவமதித்த சவுக்கு சங்கர்": தமிழக அரசு

    சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும், பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனிடையே, நீதிபதிகள், அரசியல்வாதிகள் குறித்து சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது வீடியோ பதிவிடக் கூடாது என்ற உத்தரவை மீறியதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.



  • Feb 24, 2025 12:19 IST

    ஞானசேகரன் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொல்லை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்யும் பணியை நீதிமன்றம் தொடங்கியுள்ளது.



  • Feb 24, 2025 12:17 IST

    த.வெ.க ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு

    தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அந்நிகழ்வில் கலந்து கொள்கிறார். முன்னதாக, கட்சி தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் இரண்டு முறை பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.



  • Feb 24, 2025 11:49 IST

    அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை

    அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.



  • Feb 24, 2025 11:39 IST

    முதல்வர் மருந்தகம் தொடங்க மானியம்

    முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கு ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பி.ஃபார்ம் படித்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 24, 2025 11:17 IST

    கேக் வெட்டி கொண்டாடிய இ.பி.எஸ்

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, 77 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டிய எடப்பாடி பழனிசாமி, அதனை தொண்டர்களுக்கு வழங்கினார்.



  • Feb 24, 2025 11:14 IST

    ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்திய ரஜினிகாந்த்

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வேதா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்  படத்திற்கு, நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



  • Feb 24, 2025 11:12 IST

    முதல்வர் மருந்தகங்கள் தொடக்கம்

    சென்னை, பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.



  • Feb 24, 2025 10:40 IST

    ஓ.பி.எஸ் செய்தியாளர் சந்திப்பு

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம் நடந்தது. ஒற்றை  தலைமைதான் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அடம்பிடித்ததே, அதிமுகவின் தோல்விகளுக்கு காரணம். இருமொழிக் கொள்கையைத்தான் தமிழ்நாடு மக்கள் விரும்புகிறார்கள்.



  • Feb 24, 2025 10:09 IST

    ஹிந்தியும் தமிழ் மக்களும் - ராம சீனிவாசன் கருத்து

    பிரதமர் மோடி பேசுவது நேரடியாக புரிந்துவிடும் என்பதால் தமிழ்நாட்டு மக்கள் ஹிந்தி கற்பதை திமுக எதிர்க்கிறது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.



  • Feb 24, 2025 10:07 IST

    ஜெயலலிதா புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அண்ணாமலை

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர்;  மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் என்றும் அண்ணாமலை கூறினார். 



  • Feb 24, 2025 09:45 IST

    7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

    சென்னை புளியந்தோப்பு பகுதியில் 7 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரியை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட கோயில் பூசாரி சேகரை கைது செய்து போலீசார் விசாரணைசெய்து வருகின்றனர்.



  • Feb 24, 2025 09:45 IST

    சின்னத்திரை துணை நடிகையிடம் நகைப்பையை பறித்த காவலர்

    சென்னையில் ஓடும் ரயிலில் பை அழகாக இருந்ததால் சின்னத்திரை துணை நடிகையிடம் நகைப்பையை பறித்த காவலர் வசந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



  • Feb 24, 2025 09:37 IST

    எது கோழைத்தனம்?: அன்புமணிக்கு சேகர்பாபு பதில்

    வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்; மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி சவால் விடுபவர் முதல்வர் ஸ்டாலின். கோழை எனக் கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்கள்; மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் எங்கள் முதல்வர் இரும்பு முதல்வர் அமைச்சர் சேகர்பாபு என்றார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி பேசியிருந்தார்.



  • Feb 24, 2025 09:20 IST

    தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து

    பாண்டிச்சேரியிலிருந்து விஜயவாடா சென்ற தனியார் சொகுசு பேருந்து, சூலூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



  • Feb 24, 2025 09:09 IST

    டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

    நியூயார்க் - டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. 285 பயணிகளுடன் போயிங் 787 விமானம் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு ரோம் நகருக்கு சென்றது. அமெரிக்க விமானக் குழுவினர் மற்றும் விமானிகள் வந்து சேர்ந்ததும் விமானம் மீண்டும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Feb 24, 2025 09:06 IST

    முழு கொள்ளளவை நெருங்கிய செம்பரம்பாக்கம் ஏரி

    சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கோடையிலும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • Feb 24, 2025 09:05 IST

    பள்ளிக்கரணை திருட்டு வழக்கு; ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகைகள் பறிமுதல்

    பள்ளிக்கரணை திருட்டு வழக்குகளில் ஞானசேகரனிடம் இருந்து மேலும் 20 சவரன் நகைகளை காவல்துறை பறிமுதல் செய்தது. ஏற்கனவே 100 சவரன் நகைகள் ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இதுவரை 120 சவரன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, இன்று காலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்படுகிறார்.



  • Feb 24, 2025 08:15 IST

    ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு

    ஜல்லி, எம்.சாண்ட் விலை 100 சதவிகிதம் உயர்ந்துள்ளதால், 5 ஆயிரம் கோடி ரூபாய் அரசு கட்டுமான பணிகள் பாதிப்பு. விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வருக்கு, இந்திய கட்டுநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



  • Feb 24, 2025 08:13 IST

    இந்திய அணி வெற்றிக்கு வாழ்த்து: முதல்வர்

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள். சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.



  • Feb 24, 2025 07:52 IST

    அமெரிக்காவில் இருந்து 12 இந்தியர்கள் வருகை

    சட்டவிரோத குடியேற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நான்காம் கட்டமாக 12 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அவர்கள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.



  • Feb 24, 2025 07:51 IST

    புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புடன் இன்று கூடுகிறது டெல்லி சட்டப்பேரவை!

    டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்புடன் இன்று சட்டப்பேரவை கூடுகிறது. இடைக்கால சபாநாயகராக அரவிந்தர் சிங் லவ்வி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை துணை நிலை ஆளுநர் சக்சேனா உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.



  • Feb 24, 2025 07:35 IST

    தாயார் குறித்து அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

    "வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த எனது தாயாரிடம் கரண்ட் பில் கட்டுவதற்குக் கூட பணமில்லை" நகைகளை அடகுவைத்துவிட்டு காதில் துடைப்ப குச்சியுடன் உயிரிழந்ததாக ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.



  • Feb 24, 2025 07:34 IST

    இந்த மாநாடு வெறும் ட்ரைலர் தான்

    கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, இந்த மாநாடு வெறும் ட்ரைலர் தான் பாமகவின் அடுத்த மாநாடு மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடைபெறும் என்றார். 



  • Feb 24, 2025 07:32 IST

    முதல்வர் மருந்தகம்

     தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் 



  • Feb 24, 2025 07:31 IST

    ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று!

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று



  • Feb 24, 2025 07:30 IST

    ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின்ன் வேலை நிறுத்தம் தொடங்கியது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: