Chennai News Highlights: நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா கோலாகலம்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahasivarathri

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ101.23-க்கும், டீசல் விலை, ரூ92.81-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Feb 26, 2025 20:36 IST

    வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் பா.ஜ.க குறித்து  பதுங்கி பேசுவது ஏன்? - பெ. சண்முகம் கேள்வி

    சி.பி.ஐ (எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்: “வசனம் பேசுவதில் வல்லவரான த.வெ.க தலைவர் விஜய், ஒன்றிய பா.ஜ.க அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும்  பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் - பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால், இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியுள்ளது” என்று கடுமையகா விமர்சித்துள்ளார்.



  • Feb 26, 2025 20:12 IST

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு கே.டி.ராமராவ் ஆதரவு

    “தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கையஒ பொறுப்புணர்வோடு செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்துகொள்ளக்கூடாது” என்று தெலங்கானா பி.ஆர்.எஸ் கட்சியில் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Advertisment
  • Feb 26, 2025 19:26 IST

    வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் கொடுத்தாலும் அநீதிதான் - ஆ. ராசா

    தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா: “எங்களுடைய மக்களவை தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது என்பது மட்டுமல்ல, எங்களுக்கு அதே எண்ணிக்கையை வைத்துவிட்டு வடமாநிலங்களுக்கு மட்டும் அதிக எண்ணிக்கையில் கொடுத்தாலும் அநீதிதான்” என்று கூறினார்.



  • Feb 26, 2025 19:19 IST

    ட்ரெண்டிங்கில் லக்கி பாஸ்கர் 

    கடந்த ஆண்டு அக்., 31ம் தேதி ரிலீசான `லக்கி பாஸ்கர்' இந்திய அளவில் பெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் கடந்த நவ., 28ம் தேதி ஓ.டி.டி  தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் தொடர்ந்து 13 வாரங்களாக ட்ரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Feb 26, 2025 18:57 IST

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்

    சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப் பணி வல்லுநரும் ஆவார் ஆர்.பாலகிருஷ்ணன் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி பண்பாட்டு தரவுகளை சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டு அகழாய்வு தரவுகளோடு ஒப்பிட்டு நூல் எழுதி உள்ளார்.



  • Feb 26, 2025 18:36 IST

    மக்களவை தொகுதி மறுசீரமைப்பு - தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும்: ஆ.ராசா பேட்டி

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய ஆ.ராசா எம்.பி, "மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி உயருமா அல்லது விகிதாச்சார அடிப்படையில் உயருமா?. மக்கள் தொகை அடிப்படையில் வட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை வழங்கினாலும் எங்களுக்கு அநீதிதான். மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

     



  • Feb 26, 2025 18:31 IST

    அண்ணாமலைக்கு முத்தரசன் கண்டனம்

    முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசட்டும்; அவர் கேட்கும் கேள்விக்கு விரிவான பதில் கிடைக்கும் என தெரிவித்தார்.

     



  • Feb 26, 2025 18:12 IST

    நாளை ‘கூலி’ படத்தின் புதிய அப்டேட் 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் புதிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.



  • Feb 26, 2025 18:10 IST

    `One Last Time' - தோனியின் கடைசி சீசன்? 

    Morse Codeல் `One Last Time' என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட்டுடன் சென்னை வந்து இறங்கினார் தோனி. எனவே இது தோனியின் கடைசி IPL சீசனாக இருக்குமோ என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.



  • Feb 26, 2025 18:05 IST

    சென்னையில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள தங்கப் பசை பறிமுதல் 

    மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.8 கோடி மதிப்புள்ள தங்கப் பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரிடம் 3.5 கிலோ தங்கப் பசை சிக்கியது. 3 பயணிகளும் தங்களின் உடைகளுக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



  • Feb 26, 2025 18:04 IST

    செல்வப்பெருந்தகை மீதான புகார் - கார்த்தி சிதம்பரம் விளக்கம் 

    ``தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதை நான் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளவும் இல்லை..'' என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 



  • Feb 26, 2025 17:52 IST

    `நெஞ்சார்ந்த அஞ்சலி' -  ஆளுநர் ஆர்.என்.ரவி

    ``அசாத்திய தேசபக்தர், அச்சமற்ற புரட்சியாளர் சாவர்க்கரின் புண்ணிய திதியில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறோம்..'' என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 



  • Feb 26, 2025 17:33 IST

    ஜனநாயகத்தில் இந்தியா குழந்தைதான் - சென்னை ஐகோர்ட் கருத்து 

    ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இந்தியா குழந்தைதான் என்று கருத்து கூறியுள்ள சென்னை ஐகோர்ட் சாதி, மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 



  • Feb 26, 2025 17:23 IST

    5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

    ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நதியில் குளிக்க சென்ற ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவராத்திரியில் கோயில் தரிசனம் செய்வதற்கு முன் கோதாவரி நதியில் குளிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

     



  • Feb 26, 2025 16:37 IST

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் - சீமான்

    அனைத்து கட்சி கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மறுவரையறை குறித்து 2003-ஆம் ஆண்டே தான் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தனித்து போராடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 26, 2025 16:30 IST

    விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில், நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



  • Feb 26, 2025 16:16 IST

    சி.பி.எஸ்.இ பள்ளியில் தெலுங்கு கட்டாயம் - தெலங்கானா அரசு அறிவிப்பு

    தெலங்கானாவில் செயல்பட்டு வரும் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, ஐ.பி பள்ளிகளில் தெலுங்கு, கட்டாய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.



  • Feb 26, 2025 16:08 IST

    விஜய் மீது அண்ணாமலை விமர்சனம்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதன்படி, "விஜய்யின் குழந்தைகள் மூன்று மொழிகளை கற்கலாம், விஜய்யின் பள்ளியில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படலாம். ஆனால், த.வெ.க தொண்டர்களின் குழந்தைகள் மட்டும் 2 மொழிகளை கற்கின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 26, 2025 15:52 IST

    விஜய்க்கு தமிமுன் அன்சாரி கண்டனம்

    த.வெ.க தலைவர் விஜய்க்கு, ம.ஜ.க தலைவர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "அடக்குமுறையை ஏவுபவனுன், அடக்குமுறையை எதிர்ப்பவனும் ஒன்று அல்ல என்பது விஜய்க்கு தெரியாதா? ஃபாசிசத்தில் விஷம் இருக்கிறது. பாயாசத்தில் இனிப்பு இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை எதிரியாக கூறுபவர்களிடம் பணிவன்பை காட்டுகிறார். அரசியல் எதிரி என்று கூறும் தி.மு.க-வின் கொள்கைகளை விஜய் பலகீனப்படுத்த முயல்கிறார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Feb 26, 2025 15:28 IST

    விஜய்க்கு திருமாவளவன் பதில்

    தன்னுடைய சினிமா புகழைக் கொண்டு மற்ற கட்சியினரை விஜய் ஓரம்கட்டி விட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பதிலளித்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற த.வெ.க நிகழ்வில், தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சியினரை விஜய் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Feb 26, 2025 15:01 IST

    தொகுதி மறுசீரமைப்பு; ஸ்டாலின் நிலைப்பாட்டுக்கு பி.ஆர்.எஸ் ஆதரவு

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு தெலுங்கானாவில் உள்ள பி.ஆர்.எஸ் கட்சியின் கே.டி.ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்



  • Feb 26, 2025 14:36 IST

    அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு என்ன அவசியம்? – அண்ணாமலை

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார் மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த என்ன தேவை உள்ளது? என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்



  • Feb 26, 2025 14:11 IST

    இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் – முத்தரசன்

    மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்



  • Feb 26, 2025 13:52 IST

    எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல த.வெ.க – விஜய்

    எந்த பெரிய கட்சிக்கும் சளைத்தது அல்ல த.வெ.க, விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்த உள்ளோம். த.வெ.க பூத் கமிட்டி மாநாட்டுக்கு பிறகு எங்களின் பலம் அனைவருக்கும் தெரியும் என விஜய் கூறியுள்ளார்



  • Feb 26, 2025 13:29 IST

    கல்வி நிதி விவகாரத்தில் எல்.கே.ஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள் – விஜய்

    கல்வி நிதி விவகாரத்தில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி பிள்ளைகள் போல் சண்டையிடுகிறார்கள். வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ. தி.மு.க, பா.ஜ.க.,வின் ஏமாற்று வேலைகள் குறித்து மக்களுக்கு நன்றாகவே தெரியும் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்



  • Feb 26, 2025 13:23 IST

    த.வெ.க ஒன்றும் பண்ணையார்கள் கட்சி அல்ல - விஜய்

    த.வெ.க.,வில் இளைஞர்களே அதிகம், நமது கட்சி ஒன்றும் பண்ணையார்கள் கட்சி அல்ல. பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றுவது தான் நமது முதல் வேலை. அண்ணா, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போதும் அவர்களின் பின்நின்றவர்கள் இளைஞர்களே என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்



  • Feb 26, 2025 13:22 IST

    3-வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம் - விஜய்

    நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம், வேறொரு மொழியை அரசியல் ரீதியாக திணிப்பதை அனுமதிக்க முடியாது. 3வது மொழியை திணிக்கும் மும்மொழி கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்



  • Feb 26, 2025 13:10 IST

    "எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை"

    "கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வலுக்கட்டாயமாக திணித்தால் எப்படி ப்ரோ. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்; அது தனிப்பட்ட உரிமை" என்று தவெக ஆண்டு விழாவில் விஜய் பேசியபோது கூறியுள்ளார். 



  • Feb 26, 2025 12:48 IST

    "எனது வியூகங்கள் விஜய்க்கு தேவையில்லை"

    “பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும் இல்லை, உங்கள் உழைப்பே வெற்றி தரும். தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார். தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசியபோது கூறியுள்ளார். 

     



  • Feb 26, 2025 12:47 IST

    பிரஷாந்த் கிஷோருக்கு தந்தை பெரியார் சிலை பரிசு

    தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருக்கு தந்தை பெரியார் சிலையை நினைவு பரிசாக வழங்கினார் விஜய் 



  • Feb 26, 2025 12:17 IST

    "அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது"

    தொகுதி மறு வரையறை தொடர்பான விவகாரத்தில் நாங்கள் தனித்துப் போராடுவோம். அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 



  • Feb 26, 2025 11:42 IST

    "மக்கள் பணியில் திராவிட மாடல் அரசு”

    திராவிட மாடல் அரசு மக்களை காக்கும் அரசு. எத்தனை தடைகள் வந்தாலும், எப்படிப்பட்ட நெருக்கடி வந்தாலும் மக்களுக்கான பணியை திராவிட மாடல் அரசு மேற்கொள்கிறது. சட்ட நெருக்கடிக்கு பிறகுதான் பணி ஆணைகளை வழங்கியுள்ளோம். இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு காரணம் கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்புதான் என்று 2,642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Feb 26, 2025 11:35 IST

    தவெக 2ஆம் ஆண்டு விழாவில் உறுதிமொழி ஏற்பு

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்போம்" என்று தவெக 2ஆம் ஆண்டு விழாவில் உறுதிமொழி ஏற்றுள்ளனர். 



  • Feb 26, 2025 11:33 IST

    செல்போன் கொண்டு செல்ல தடை

    தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க  விழா நடக்கும் அரங்கத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. 



  • Feb 26, 2025 11:21 IST

    தவெக பவுன்சர்கள் - செய்தியாளர்கள் இடையே தள்ளுமுள்ளு

    கூட்ட அரங்கில் தவெக பவுன்சர்கள் செய்தியாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பவுன்சரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த செய்தியாளர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 



  • Feb 26, 2025 11:18 IST

    "உலக அளவில் பாராட்டும் மருத்துவக் கட்டமைப்பு"

    தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டும் வகையில் உருவாக்கி இருக்கிறோம் என்று  2,642 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 



  • Feb 26, 2025 10:47 IST

    த.வெ.கவும் ஜன் சுராஜ் கட்சியும் தேசிய அளவில் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட முடிவு

    விஜய்யின் த.வெ.கவும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேசிய அளவில் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. த.வெ.கவுக்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்படமாட்டார் என தகவல்வெளியாகி உள்ளது. விஜய், பிரசாந்த் கிஷோர் கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இணையலாம் என தகவல் தெரிவித்துள்ளது. நெருங்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை இந்த இரு கட்சிகள் மற்றும் உடன் வரும் கட்சிகளை வைத்து சந்திக்க முடிவு 2029 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான கூட்டமைப்பை அமைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் விஜயின் தோழமை கட்சியாக பிரசாந்த் கிஷோர் கட்சி செயல்பட முடிவு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 26, 2025 10:44 IST

    பவுன்சர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு

    தவெக ஆண்டுவிழாவில் அக்கட்சியின் பவுன்சர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது



  • Feb 26, 2025 10:21 IST

    த.வெ.க-வின் 2ம் ஆண்டு விழா; கிடாக்குழி மாரியம்மாளின் இசைநிகழ்ச்சியுடன் தொடக்கம்

    தவெக-வின் 2ம் ஆண்டு விழா, ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் புகழ் கிடாக்குழி மாரியம்மாளின் இசைநிகழ்ச்சியுடன் தொடங்கியது.



  • Feb 26, 2025 09:53 IST

    தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெறும் அரங்கிற்கு விஜய் வருகை

    தவெக அரங்கிற்கு விஜய் வருகை தந்துள்ளார். இன்னும் சிறிது நேரத்தில் விழா ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Feb 26, 2025 09:52 IST

    தங்கம் விலை குறைவு

    தங்கம் விலை சவரனுக்கு 200 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.64,400க்கு விற்பனையாகிறது.



  • Feb 26, 2025 09:01 IST

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தவெகவுக்கு அழைப்பு

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது அனைத்து கட்சி கூட்டம். அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.



  • Feb 26, 2025 08:59 IST

    தவெக சார்பில் கையெழுத்து இயக்கம்?

    வாக்கு வங்கிக்காக சாதி, சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகர்களுக்கு #GETOUT என தவெக விழாவில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனரில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் திணிப்பிற்கு எதிராக போராட உறுதியேற்போம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவெக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள்து.



  • Feb 26, 2025 08:33 IST

    பல்லவன் சாலையில் பராமரிப்பு பணி

    சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 28 இரவு 10 மணி முதல் மார்ச் 2 இரவு 10 மணி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 26, 2025 08:30 IST

    சி.பி.எஸ்.இ புதிய அறிவிப்பு

    ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும். ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Feb 26, 2025 08:05 IST

    விஜய் வீடு மீது காலணி வீச்சு

    சென்னை அடுத்த நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்குள் காலணியை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடக்க உள்ள நிலையில் விஜய் வீட்டில் காலணி வீசப்பட்டது.



  • Feb 26, 2025 08:03 IST

    “எனது கடமையாக கருதுகிறேன்” - மாணவி அக்‌ஷயா

    எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது. இதை கருத்தில் கொண்டு மாநில அளவிலான போட்டியில் எனக்கு கிடைத்த பரிசுத் தொகையை முதல்வருக்கு வழங்குகிறேன். இதை எனது கடமையாக கருதுகிறேன் என திருவாரூர் அரசு உதவி பெறும் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவி அக்ஷயா கூறியுள்ளார்.  



  • Feb 26, 2025 07:28 IST

    "இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு, அதை சீண்டிப் பார்க்க எவர் நினைத்தாலும் அனுமதிக்க முடியாது. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். இறக்கும் வரை தமிழ் உணர்வு அழியாது, தமிழை அழிக்க நினைப்பவர்களை விட மாட்டோம் என தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • Feb 26, 2025 07:25 IST

    கும்பமேளாவில் புதிய கின்னஸ் சாதனை

    கும்பமேளாவில் ஒரே நேரத்தில் 15,000 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.



  • Feb 26, 2025 07:24 IST

    லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 78 பேருக்கு சம்மன்

    பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 78 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



Tamilnadu News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: