/indian-express-tamil/media/media_files/2024/12/25/jEuuCr1cmQrSZYyZClD9.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 28, 2025 00:10 IST
போலீசை தாக்கிய விவகாரம் - 2 பேருக்கு நீதிமன்ற காவல்
சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டில் விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, காவலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
Feb 27, 2025 21:06 IST
சாதிப்பெயரில் பள்ளி, கல்லூரிகள்: பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் சாதி தொடர்பான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற பரிந்துரைகளை பெற்றது. அவ்வாறு இருக்கும் போது, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்?" எனக்கூறிய நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒருவார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 27, 2025 21:01 IST
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் சந்திப்பு
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அடுத்த வருடம் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிப்பணிகள் தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 27, 2025 19:47 IST
ஏர்போர்ட்டில் டீ இனி 10 ரூபாய்: மலிவு விலை உணவகத்தை திறந்த மத்திய அமைச்சர்
கொல்கத்தாவை தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டில் `உதான் யாத்திரி கஃபே' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்தார். இதன்படி இங்கு டீ ரூ.10, காபி ரூ. 20, தண்ணீர் பாட்டில் ரூ.10, சமோசா ரூ.20, வடை 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
Feb 27, 2025 19:46 IST
என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம்: நடிகை த்ரிஷா
என் திரைப்பயணத்தின் மிகச் சிறந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி கௌதம் மேனன். இதில் நடித்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன்'' `விண்ணைத்தாண்டி வருவாயா' என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம். ஜெஸ்ஸியை இன்னும் ஞாபகப்படுத்தி கொண்டிருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
-
Feb 27, 2025 19:03 IST
ஏர்போர்ட்டில் டீ இனி 10 ரூபாய்
கொல்கத்தாவை தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டில் `உதான் யாத்திரி கஃபே' என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்தார். இதன்படி இங்கு டீ ரூ.10, காபி ரூ. 20, தண்ணீர் பாட்டில் ரூ.10, சமோசா ரூ.20, வடை 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
Feb 27, 2025 18:39 IST
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் - ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என சென்னை கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Feb 27, 2025 18:37 IST
வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய மனைவி கயல்விழி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்
-
Feb 27, 2025 18:12 IST
பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் ஸ்டாலின்
சென்னை கொளத்தூரில் 560 படுக்கை வசதிகளுடன் கொண்ட, பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
Feb 27, 2025 18:09 IST
சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
விஜயலட்சுமியின் புகார் மீது விசாரணை நடத்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
-
Feb 27, 2025 17:48 IST
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி காட்டி மிரட்டிய நிலையில் ஆயுத தடுப்புச் சட்டப்பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
-
Feb 27, 2025 17:45 IST
அரசியலை விடுங்கள், மொழியை கற்றுக்கொள்ளுங்கள் - சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
அரசியலை விடுங்கள், மொழியை கற்றுக்கொள்ளுங்கள். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்
-
Feb 27, 2025 17:27 IST
பாடகர் யேசுதாஸ் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் – உதவியாளர் தகவல்
அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது; அவர் பூரண நலத்துடனும், நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று அவரின் உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார்
-
Feb 27, 2025 17:25 IST
பாகிஸ்தான் - வங்கதேச போட்டி மழையின் காரணமாக டாஸ் போடாமலேயே ரத்து!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மழையின் காரணமாக டாஸ் போடாமலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது
-
Feb 27, 2025 16:45 IST
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் தாக்குதலில் காயமடைந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஸ்க்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.உடலின் பல இடங்களில் நகக்கீறல் காயங்கள் இருப்பதால் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
-
Feb 27, 2025 16:43 IST
சீமான் வீட்டில் காவலாளியுடன் மோதல்: 2 வழுக்குகளைப் பதிவு செய்தது காவல்துறை
சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் டொடர்பாக 2 வழக்குகளைக் காவல்துறை பதிவு செய்துள்ளது. சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக காவலர் புகார் அளித்த நிலையில், காவலர்களை தாக்கியதாகவும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதகவும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
-
Feb 27, 2025 16:36 IST
சீமான் வீட்டு காவலாளி காவலாளியிடம் இருந்து துப்பாக்கி, 20 தோட்டாக்கள் பறிமுதல் - போலீஸ் தகவல்
சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு வந்தபோது, காவலாளிக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் பின் காவலாளி கைது செய்யப்பட்டார். சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கியில் 20 தோட்டாக்கள் இருந்ததாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Feb 27, 2025 16:27 IST
கேரளப் பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை: ரூ.1 கோடி வழங்கிய தமிழ்நாடு அரசு
கேரளப் பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் பங்குத்தொகையாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வி.சி.க தலைவர் திருமாவளவனின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ரவிக்குமார் நன்றி தெரிவித்து வி.சி.க எம்.பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
-
Feb 27, 2025 16:18 IST
ஆஜராவேன்... உறுதி கொடுத்த பிறகும் என்னை ஏன் விரட்டுகின்றனர்? நான் தலைமறைவாக இல்லை - சீமான்
ஒசூரில் செய்தியாளர்களிடம் பேசிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாளை காலை 11 மணிக்கெல்லாம் என்னால் ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும? நாளை தருமபுரி செல்கிறேன். நானே ஒருநாள் வருவேன் என்றுதான் சொல்லியுள்ளேன். ஆஜராவேன் என்று உறுதி கொடுத்த பிறகும் என்னை ஏன் விரட்டுகின்றனர். நான் தலைமறைவாக இல்லை” என்று கூறியுள்ளார்.
-
Feb 27, 2025 15:46 IST
நாளை என்னால் ஆஜராக முடியாது... என்ன செய்வீர்கள்? - சீமான்
பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை காலை ஆஜராக வளசரவாக்கம் போலீசார் 2வது முறையாக மீண்டும் சம்மன் அளித்துள்ளனர். இந்நிலையில், ஒசூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது; என்ன செய்வீர்கள்?” என்று சவால் விடுத்துள்ள்ளார்.
-
Feb 27, 2025 15:30 IST
தமிழகத்தில் மார்ச் 3 வரை வெப்பம் சற்றே குறையும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் நாளை பிப்ரவரி 28 முதல் மார்ச் 3 வரை வெப்பநிலை சற்றே குறையக்கூடும் தமிழகத்தில் இன்று வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Feb 27, 2025 15:23 IST
தழிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லைஏன்? என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் ஸ்டாலின்? - அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “திருவள்ளூரில் திமுக அமைச்சர்கள் கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தழிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு புதியதாக என்ன நாடகம் அறங்கேற்றப்போகிறார் முதலமைசர் மு.க.ஸ்டாலின்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Feb 27, 2025 15:08 IST
கொலை செய்து ரீல்ஸ் - தனிப்படை அமைப்பு
சென்னையில் கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு குற்றவாளிகள் கொண்டாடியுள்ளனர். கொலை குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர். அண்ணாநகரில் சின்ன ராபர்ட் என்பவரை கொன்று விட்டு, அயனாவரத்தில் ரேவதி என்ற பெண்ணை கொல்ல முயன்று அந்த கும்பல் தப்பியுள்ளது.
-
Feb 27, 2025 15:00 IST
வெல்லமண்டி நடராஜனின் மனைவி மரணம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜா தேவி, உடல் நலக் குறைவால் காலமானார். வெல்லமண்டி நடராஜன் தற்போது ஓ.பி.எஸ் அணியின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Feb 27, 2025 14:48 IST
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் - ஐகோர்ட் அனுமதி மறுப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை அறிவிக்கப்பட்ட போரட்டத்திற்கு அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்கக்கோரி கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.பாலசந்தர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், போரட்டம் நடத்துவது தொடர்பாக சம்மந்தபட்ட மாவட்டங்களில் உள்ள காவல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை எனவும் காவல்துறை பதில் அளித்துள்ளது.
-
Feb 27, 2025 14:33 IST
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், தர்மேந்திர பிரதான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதானுக்கு பதில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் பங்கேற்கிறார்.
-
Feb 27, 2025 14:11 IST
சம்மன் கிழிப்பு - சீமானின் மனைவி வாக்குவாதம்
துப்பாக்கியை காட்டிய காவலாளியை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். காவலாளியை விடுவிக்க கோரி, சீமானின் மனைவி போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
-
Feb 27, 2025 14:10 IST
சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு
நடிகை பாலியல் புகார் வழக்கில், சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
-
Feb 27, 2025 14:09 IST
100 நாள் வேலை திட்டம்; 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்!
வேலை திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்ய 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், கடலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், கள்ளகுறிச்சி, புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர்கள் நியமனம். நெல்லை, நாகை, தேனி, ஈரோடு, தென்காசி, நீலகிரி, விழுப்புரம், விருதுநகரிலும் குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
-
Feb 27, 2025 13:00 IST
தெருநாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தும் பணி
சென்னையில் தெருநாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்தும் பணி துவங்கியது. இதன் முலம், தெருநாய்களின் இடம், வயது, தடுப்பூசி நிலை, நிறம், பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டதன் விவரம் ஆகியவற்றை செயலி மூலம் கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
-
Feb 27, 2025 12:54 IST
ஜெயக்குமார் கைது கோழைத்தனத்தின் உச்சம் - ஈபிஎஸ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் போராட்டம் நடத்த முயன்ற ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே ஜெயக்குமார் உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டது கோழைத்தனத்தின் உச்சம்; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது; ஜெயக்குமார் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Feb 27, 2025 12:43 IST
மார்ச் - 5ஆம் தேதிக்குள் வாடகை செலுத்தாவிட்டால் அபராதம்
சென்னையில் வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகையை 5-ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம் என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். ஒவ்வொரு ஆண்டும் 15% வாடகை உயர்த்தப்பட்ட நிலையில் 5 சதவீதமாக குறைத்து தீர்மானம்; 5,914 கடைகள் மூலம் மாதந்தோறும் ரூ.180 கோடி வசூல் செய்துவரும் மாநகராட்சி; வணிக வளாக கட்டிடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
-
Feb 27, 2025 12:35 IST
விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு மீண்டும் சம்மன்
நடிகை விஜயலட்சுமி புகாரில், வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று விசரணைக்கு ஆஜராகாத சீமானுக்கு மீண்டும் சம்மன் அளித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் போலீசார் சம்மன் நோட்டீஸை ஒட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
-
Feb 27, 2025 12:27 IST
குடியிருப்பு கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
ரூ.659.96 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளியில் முதல்வர் திறந்து வைத்தார். நெற்குன்றத்தில் ரூ.433.59 கோடியில் 570 அடுக்குமாடி குடியிருப்புகளையும், செனாய் நகரில் ரூ.131.27 கோடியில் 240 குடியிருப்புகளையும், கே.கே.நகரில் ரூ.51.29 கோடியில் 120 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
Feb 27, 2025 12:12 IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு
"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைக்க தடையில்லை” கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி மனு. சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
-
Feb 27, 2025 12:09 IST
தனியார் மயமாகும் கடற்கரை தூய்மை பணிகள்
சென்னையில் 5 கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகளை தூய்மைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரினா கடற்கரையை ஒரு வருடத்திற்கு தூய்மை பணி செய்ய மேற்கொள்ள 4 கோடியே 54 இலட்சத்து, 99 ஆயிரத்து 139 ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
-
Feb 27, 2025 11:57 IST
ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்: பிரதமர் மோடி
ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது பிரயாக்ராஜில் நடந்த ஒற்றுமைக்கான மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை 45 நாட்களில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரயாக்ராஜில் கூடியது மிகப்பெரியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
Feb 27, 2025 11:55 IST
கழிப்பறைகளை பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்
சென்னையில் 372 இடங்களில் உள்ள 3,270 கழிப்பறை இருக்கைகளை பராமரிக்க தனியாரிடம் ரூ.430 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 2159 கழிப்பறைகள், திருவிக நகர் 958 கழிப்பறைகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன ஒரு கழிப்பறை இருக்கைக்கு ரூ.364 செலவு என்ற வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 27, 2025 11:35 IST
ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,488.50 கோடி கடன் நிலுவையில் இருப்பதாக மேயர் பிரியா தகவல் "ரூ.3,065.65 கோடி கடன் இருந்த நிலையில் அதில் ரூ.1,577.10 கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது; ரூ.1,488.50 கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருகிறது” என்று சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.
-
Feb 27, 2025 11:33 IST
தடையை மீறி போராட்டம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயற்சி - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட முயற்சி. காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவித்துள்ளார். ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Feb 27, 2025 11:28 IST
சீமானின் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஆஜர். திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார்.
-
Feb 27, 2025 11:13 IST
குண்டாஸை எதிர்த்த வழக்கு - காவல்துறை பதில் தர ஆணை
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனின் குண்டாஸ் வழக்கிற்கு காவல்துறை பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டள்ளது. மகன் குண்டர் சட்டத்தில் கைதானதை எதிர்த்து தாய் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதில் தர உத்தரவிட்டுள்ளது. ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நோக்கில் பழைய வழக்குகளை காவல்துறை காரணம் காட்டியுள்ளது என்று ஞானசேகரனின் தாய் கூறியுள்ளார்.
-
Feb 27, 2025 10:54 IST
கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அலர்ட்
இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
-
Feb 27, 2025 10:51 IST
காங்கோவை மிரட்டும் நோய்
ஆப்பிரிக்காவின் காங்கோவில் வவ்வாலை சாப்பிட்ட 3 சிறுவர்களால் பரவும் மர்ம நோய். கடந்த ஒன்றரை மாதத்தில் 53 பேர் ரத்த வாந்தி எடுத்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Feb 27, 2025 10:21 IST
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் - பூவுலகின் நண்பர்கள்
தென் தமிழக ஆழ்கடல் பகுதியில் சுமார் 9,990 கி.மீ தூரத்திற்கு ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஏலம் அறிவிக்கப்பட்டது. ஆழ்கடலில் எரிவாயு எடுத்ததால் மீன்வளம் பாதிப்பதுடன், மீனவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
Feb 27, 2025 09:51 IST
தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி
சென்னையில் உள்ள தெருநாய்கள், மாடுகளுக்கு மைக்ரோசிப் மற்றும் QR Code பொருத்தும் பணி துவங்கியது. சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக 3500 தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டு உள்ளது.
-
Feb 27, 2025 09:37 IST
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Feb 27, 2025 09:36 IST
தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ. 64,080க்கு விற்பனையாகிறது.
-
Feb 27, 2025 08:59 IST
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆகும் - ஞானேஷ்குமார்
18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை ஆகும். தேர்தல் ஆணையம் எப்போதுமே வாக்காளர்கள் நலனுக்காகவே செயல்பட்டு வருவதாகவும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி அளித்துள்ளார்.
-
Feb 27, 2025 08:57 IST
சமஸ்கிருத மொழியின் முகமூடி இந்தி
முகமூடி இந்தி, அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம். எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று ஒரு தினுசாக பேசுகின்றனர். தமிழர் பண்பாட்டை அழிக்க பன்னெடுங்காலமாக படையெடுக்கும் இனப்பகைவர் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.