Chennai News Highlights: காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலிசாரே காரணம் - சீமான்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
seeman releive

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 01, 2025 00:18 IST

    தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைப்பேன்: சீமான்

    விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், புதிய கேள்விகள் ஒன்றும் இல்லை. பழைய கேள்விகளே கேட்கப்பட்டன. தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தனர். விசாரணைக்கு தாமதமாக வர, காவல்துறையே காரணம். காவல்துறைக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று கூறிய சீமான், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று கூறியுள்ளார்.



  • Mar 01, 2025 00:14 IST

    சீமானிடம் நடத்திய விசாரணை முழுவதும் வீடியோ பதிவு

    நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம், 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகையிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், சீமானிடம் கேள்விகள் கேட்கப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சீமானிடம் நடத்தப்படும் விசாரணை வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



  • Advertisment
  • Feb 28, 2025 23:13 IST

    சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை

    நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில்,30 முதல் 45 நிமிடங்கள் வரை விசாரணை நடத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Feb 28, 2025 22:35 IST

    சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்

    நடிகை தொடர்ந்த வழக்கில் காவல்துறையின் விசாரணைக்காக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜரானார்



  • Advertisment
    Advertisements
  • Feb 28, 2025 21:44 IST

    வட பழனியில் நிறுத்தி வைக்கப்பட்ட சீமான் கார்: சீமான் ஆஜராவதில் காலதாமதம்?

    நடிகை விஜயலட்சுமி புகார் மீதான வழக்கு விசாரணையில், 8 மணிக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு அறிவுறுத்திய நிலையில், பின்னர் 8.30க்கு ஆஜராகுமாறு சீமானிடம் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது 9 மணியை கடந்தும் சீமானின்  கார் வடபழனியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது 



  • Feb 28, 2025 21:05 IST

    உங்கள் ஆசையில் மண் விழுமே தவிர எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது: மு.க.ஸ்டாலின்

    "கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்குள் கருத்து மாறுதல் வரும். ஆனால் விரிசல் வராது. எங்களின் ஒற்றுமையைப் பார்த்து எரிச்சலோடு, இதில் விரிசல் வருமா என சிலர் எதிர்பார்க்கலாம். உங்கள் ஆசையில் மண் விழுமே தவிர எங்கள் கூட்டணியில் விரிசல் விழாது என்று, தனதுபிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



  • Feb 28, 2025 21:01 IST

    விசாரணைக்கு பிறகு சீமான் கைது செய்யப்படுவாரா?

    சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோ அருகே  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  விசாரணைக்கு பிறகு சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,



  • Feb 28, 2025 20:12 IST

    வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியல்

    நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான வழக்கு விசாரணைக்கு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதால், காவல் நிலையம் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளை அகற்ற கோரியும், தங்களை உள்ளே விட வேண்டும் என்றும் கூறி நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



  • Feb 28, 2025 19:42 IST

    நாட்டில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பில்லை: திருமாவளவன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் "நாட்டில் மொழிக்கு பாதுகாப்பில்லை, மக்களுக்கு பாதுகாப்பில்லை, பன்மைத்துவத்திற்கு பாதுகாப்பில்லை, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பில்லை என்று கூறியுள்ளார்.



  • Feb 28, 2025 18:55 IST

    ஸ்டாலினை நேரில் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மு.க.அழகிரி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்



  • Feb 28, 2025 18:54 IST

    சீமானிடம் கேட்க 300 கேள்விகளுடன் காவல்துறை தயாராக உள்ளதாக தகவல்

    நடிகை விஜயலட்சுமி வழக்கில் இன்று இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும் சீமானிடம் கேட்க 300 கேள்விகளுடன் காவல்துறை தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • Feb 28, 2025 18:49 IST

    வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை

    வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தி வருகிறார். பின்னர் அங்கிருந்து வளசரவாக்கம் காவல் நிலையம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது



  • Feb 28, 2025 18:37 IST

    ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் பிறந்தநாள் வாழ்த்து

    முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார



  • Feb 28, 2025 18:36 IST

    ஆஸி.க்கு 274 ரன்கள் இலக்கு

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு 274 ரன்களை ஆப்கானிஸ்தான் இலக்காக நிர்ணயித்துள்ளது



  • Feb 28, 2025 18:19 IST

    வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, முதல் பெண் தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் 



  • Feb 28, 2025 18:04 IST

    அரை மணி நேரத்தில் பிரச்னை முடிந்துவிடும் - சீமான்

    என்னையும் விஜயலட்சுமியையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரித்தால், அரை மணி நேரத்தில் பிரச்னை முடிந்துவிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்



  • Feb 28, 2025 18:03 IST

    தாசில்தார் அலுவலகம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

    அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே தினேஷ் பாபு என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Feb 28, 2025 17:45 IST

    கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை - சீமான்

    விசாரணைக்கு வருவதாக சொன்னேன். காவல்துறையினர் தான் இரவு 8 மணிக்கு வரச் சொன்னார்கள். கைது நடவடிக்கைக்கு பயப்படும் ஆள் நான் இல்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்



  • Feb 28, 2025 17:28 IST

    சீமான் ஆஜராக உள்ள நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ் குவிப்பு

    நடிகை விஜயலட்சுமி வழக்கில், சீமான் இன்று காவல்நிலையில் ஆஜராக உள்ள நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்



  • Feb 28, 2025 17:08 IST

    மார்ச் 1 முதல் மாற்றம் – மெட்ரோ புதிய அறிவிப்பு

    மெட்ரோ ரயிலில் 10% தள்ளுபடியுடன் வழங்கப்பட்ட 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவிற்கான காகித குழு பயணச்சீட்டு வசதி மார்ச் 1 முதல் திரும்ப பெறப்படுகிறது. அதற்கு மாற்றாக மொபைல் செயலி மூலம் 20% தள்ளுபடி கட்டணத்துடன் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது



  • Feb 28, 2025 17:02 IST

    சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

    நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  • Feb 28, 2025 16:49 IST

    பி.எஃப் வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிப்பு

    2024-25 ஆம் ஆண்டிற்கான பி.எஃப் வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என இ.பி.எஃப்.ஒ அறிவித்துள்ளது. தற்போதைய 8.25 சதவீத வட்டி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 28, 2025 16:34 IST

    மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்

    சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பிச் சென்றார். அதன்படி, தப்பிச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி சீனுவை போலீசார் தேடி வருகின்றனர்.



  • Feb 28, 2025 16:22 IST

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

    அரசு பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. கடந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போல மார்ச் மாதம் முதலே மாணவர் சேர்க்கை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே அரசு தொடக்கப்பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். அதன்படி, அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Feb 28, 2025 16:13 IST

    மாநிலங்களுக்கு 50%  நிதி பகிர்வு வேண்டும் - தங்கம் தென்னரசு

    மாநிலங்களுக்கு 50%  நிதி பகிர்வு வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். அதன்படி, "மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி ஒதுக்கீட்டை 41%-ல் இருந்து 50%-ஆக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்துகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Feb 28, 2025 15:48 IST

    ஸ்டாலின் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

    தமிழகத்தில் நிர்வாக சீர்கேட்டை மறைக்க இல்லாத இந்தி திணிப்பை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "தனியார் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கற்க ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 28, 2025 15:23 IST

    மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

    மத்திய அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிர்வில் ரூ. 35 ஆயிரம் கோடியை குறைக்க துடிப்பதா? மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கு போதுமானதாக அல்ல என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களுக்கான நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

     



  • Feb 28, 2025 15:01 IST

    முட்டை கொள்முதல் விலை சரிவு 

    முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் சரிந்துள்ளது. பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.60 ல் இருந்து 40 காசுகள் குறைத்து ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



  • Feb 28, 2025 15:00 IST

    2 பேர் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் - சென்னை போக்குவரத்து காவல்துறை 

    வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்களுக்கு கட்டுப்பாடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்தது. வாகன தணிக்கையில் ஈடுபடும் காவலர்கள் கும்பலாக நின்று சோதனை மேற்கொள்ளக் கூடாது. வாகன சோதனை நடத்தும் உதவி ஆய்வாளர், காவலர் ஒருவர் மட்டுமே அங்கு இருக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்கள் கும்பலாக நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • Feb 28, 2025 14:59 IST

    பத்ரிநாத்தில் பனி வெடிப்பு -  57 தொழிலார்கள் சிக்கித் தவிப்பு 

    உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே எல்லைச் சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) திட்ட தளத்தில் பணிபுரியும் 57 தொழிலாளர்கள், இந்தியாவின் வடக்கு கிராமமான மானா அருகே பனிச்சரிவில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



  • Feb 28, 2025 14:32 IST

    தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    திருவாரூர் ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    வேட்புமனுவில் விவரம் மறைத்தவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால், எதற்காக தகவல் கேட்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பிய  உயர் நீதிமன்றம் திருவாரூர் மாவட்ட வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்துள்ளது. 



  • Feb 28, 2025 14:27 IST

     ஸ்டாலின் உடன் கமல் திடீர் சந்திப்பு 

    முதல்வர் ஸ்டாலின் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டார்.  இந்த சந்திப்பு சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் நடைபெற்றது. நாளை பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    மேலும், தற்போதைய அரசியல் நிலவரம், 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரும் ஜூலை மாதம் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 



  • Feb 28, 2025 14:10 IST

    சென்னையில் நில அதிர்வா? அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

    சென்னையில் நில அதிர்வு நிகழ்வு காரணமாக அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் கட்டிடம் அதிர்ந்ததாக கூறி தனியார் நிறுவன பணியாளர்கள் வெளியேறினர். 5 மாடி கட்டிடத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உண்மையாகவே நில அதிர்வா அல்லது வதந்தியா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Feb 28, 2025 13:49 IST

    “குட் பேட் அக்லி” படத்தின் டீசர் அப்டேட்

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் குட் பேட் அக்லி ‘Good Bad Ugly' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 



  • Feb 28, 2025 13:47 IST

    தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

    தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Feb 28, 2025 13:15 IST

    சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை அப்டேட்!

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இன்றும் (பிப் 28), கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளையும் (மார்ச் 01) கனமழைக்கு வாய்ப்பு! இன்று சென்னையின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று அறிவித்துள்ளது. 



  • Feb 28, 2025 13:05 IST

    சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும்

    நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் சனிக்கிழமைகளில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது. ஆவணப் பதிவிற்கு ஏற்ப காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்படும்; ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்று பதிவுத் துறை அறிவித்துள்ளது. 



  • Feb 28, 2025 12:42 IST

    ஆட்கொணர்வு மனு- அவசரமாக விசாரிக்க முடியாது

    சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த  ஆட்கொணர்வு மனு - அவசரமாக விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 24 மணி நேர அவகாசம் உள்ளதாக கூறி வழக்கை அவசரமாக  விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த விவகாரத்தில் சீமான் வீட்டு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • Feb 28, 2025 12:39 IST

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பு - ஈபிஎஸ்

     "மார்ச் 5ல் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்பு. அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்" என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 



  • Feb 28, 2025 12:03 IST

    வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம்

    இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 



  • Feb 28, 2025 11:57 IST

    "தமிழர்களுக்கு மொழி உணர்வு குறித்து பாடம் வேண்டாம்" - அமைச்சர் ரகுபதி

    "தமிழர்களுக்கு மொழி உணர்வு குறித்து பாடம் வேண்டாம்" தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி பாடம் எடுக்க வேண்டாம்; 5 தமிழ்நாடு எதில் பின்தங்கியுள்ளது என ஆளுநரால் பதில் சொல்ல முடியுமா? தமிழ், தமிழ்நாடு, தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தொடர்ந்து வெறுப்பை உமிழ்கிறார் ஆளுநர்; பொருளாதாரத்திலும், கல்வியிலும் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை ஆளுநரால் பொறுக்க முடியவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 



  • Feb 28, 2025 11:30 IST

    பிரதமர் மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதல்

    பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் பதிலளித்துள்ளது. 1978ல் பட்டப்படிப்பு முடித்தோரின் தகவல்களையும் RTI-யின் கீழ் அளிக்க மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தகவலை கொடுக்க முடியாது என டெல்லி பல்கலை. உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது.



  • Feb 28, 2025 11:16 IST

    ஐஐடி வளாகம் எதிரே கருப்பு கோடி ஏந்தி போராட்டம்.

    மத்திய கல்வி இணை அமைச்சருக்கு எதிராக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.  கல்வி நிதி வழங்க நிபந்தனை விதிப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 



  • Feb 28, 2025 11:14 IST

    சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

    காவல் துறையின் சம்மனை கிழிப்பதும் கிழிக்காததும் எங்கள் விருப்பம்; அதற்காக கைது செய்வீர்களா? சம்மனை கிழிக்காமல் பூஜை அறையிலா மாட்ட முடியும்?; சம்மனை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்விகளை எழுப்பியுள்ளார். விசாரணைக்கு வரமாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை. வீட்டில் நான் இல்லாதது தெரிந்தும் சம்மனை ஒட்டச் சென்றது ஏன்?; சம்மன் நான் படிக்கவா, நாட்டு மக்கள் படிக்கவா? என்றும் கூறியுள்ளார். 



  • Feb 28, 2025 11:10 IST

    ‘ஆய்வாளர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் தருவோம்'

    காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடருவோம். எங்கள் வீட்டு பாதுகாவலர் துப்பாக்கியை எடுத்துதான் கொடுத்தார்; மிரட்டவில்லை என்று சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். 



  • Feb 28, 2025 10:38 IST

    "படிப்பதற்காக கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன்" - கயல்விழி

    சம்மனை படிக்க வேண்டும் என்பதற்காகவே அதை கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன். பாதுகாவலரை கைது செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. எனக்கு வெளியே வர சங்கடமாக இருந்ததால் சம்மனை கிழித்துக் கொண்டு வரச் சொன்னேன் என சீமான் மனைவி கயல்விழி பேட்டி அளித்துள்ளார்.



  • Feb 28, 2025 09:53 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.63,680க்கு விற்பனையாகிறது.



  • Feb 28, 2025 09:44 IST

    வேலைவாய்ப்பை இழக்கும் இளைஞர்கள் - ஆளுநர் ஆர்.என். ரவி

    இருமொழிக் கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார். "தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பெரும் தேவை உள்ளது. இந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென்மாநில மொழிகளையும் கூட படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Feb 28, 2025 09:15 IST

    நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

    நேபாளத்தில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது. இந்தியாவில் பாட்னா, சிலிகுரி உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்க தாக்கம் ஏற்பட்டுள்ளது.



  • Feb 28, 2025 08:47 IST

    "சீமான் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்" - சேகர்பாபு

    பெரியார் குறித்து சீமான் இன்னும் கூட பேசட்டும், பெரியார் மண்ணின் உரத்தை இன்னும் பலமாக்குவோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: