Chennai News Highlights: 3 நாள் பயணமாக குஜராத் சென்றார் மோடி

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரதமர் மோடி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 02, 2025 00:05 IST

    72-ஆவது பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: மு.க.ஸ்டாலின் பதிவு

    எனது 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்களிலும் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, ஊக்கமளிக்கும் பாராட்டுகளை, கனிவுமிகுந்த சொற்களைத் தெரிவித்த அகில இந்திய அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், கலையுலகத்தைச் சேர்ந்தவர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! இனத்தையும் மொழியையும் காக்க, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்த உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதரவோடும் தொடர்ந்து உழைப்பேன்! தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



  • Mar 01, 2025 20:38 IST

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

    10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • Advertisment
  • Mar 01, 2025 19:43 IST

    அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரைன் அதிபர் உருக்கம்

    வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட பரபரப்பான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை மட்டுமே விரும்புவதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 01, 2025 19:38 IST

    பொது நோக்கத்துக்காக இணைத்திருக்கிறோம்: விஜய் பற்றி பிரஷாந்த் கிஷோர் கருத்து

    விஜய் சொல்வது போல, நாங்க நண்பர்கள், சகோதரர்கள், சகாக்கள் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வரணும்னு பொது நோக்கத்துக்காக இணைத்திருக்கிறோம். இந்த முயற்சி பீகார், தமிழகத்தோடு நிற்க போறது இல்லை, இது மேலும் விரிவடையும் என்று தந்தி டிவி-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 01, 2025 17:41 IST

    சீமான் மேல்முறையீட்டு மனு மீது திங்கட்கிழமை விசாரணை

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. நடிகை பாலியல் வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



  • Mar 01, 2025 17:38 IST

    புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியல் வெளியீடு

    சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்ட மண்டலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னர் இருந்த 14 மண்டலங்கள், 6 புதிய மண்டலங்கள் என அதன் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



  • Mar 01, 2025 17:15 IST

    காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு திட்டம்

    டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 01, 2025 16:55 IST

    சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமின்

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போது ஏற்பட்ட தகராறில், காவலாளிகளான அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில், காவலாளிகள் இருவருக்கும், ஒரு வழக்கில் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Mar 01, 2025 16:33 IST

    மத்திய அரசு மீது வேல்முருகன் குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை அளிக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 01, 2025 16:06 IST

    வரலாறு தெரிந்து பேச வேண்டும் - கனிமொழி

    மொழிப்போர் வரலாறு குறித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய்க்கு, கனிமொழி எம்.பி பதிலளித்துள்ளார். அதன்படி, "மொழிப் போராட்டத்தின் வரலாறு மிக நீண்டது. யாராக இருந்தாலும் அது குறித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும். மொழிக்காக பலரும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை மறக்க கூடாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 01, 2025 15:41 IST

    "மும்மொழிக் கொள்கை தேவையற்றது": நடிகர் எஸ்.வி சேகர் கருத்து

    மும்மொழிக் கொள்கை தேவையற்றது என நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில் தான் சொல்லிவிட்டுச் சென்றார். மும்மொழி கொள்கை தேவையற்றது. அவரவருக்கு பிடித்த மொழியை அவரவர் படிக்கலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, வீராணம் பைப் வழியாக தப்பித்து வீடு வந்து சேர்ந்தேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 01, 2025 15:31 IST

    103 ரஷ்ய ட்ரோன்களை அழித்தது உக்ரைன்

    உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா ஏவிய 154 ட்ரோன்களில் 103ஐ தாக்கி அழித்தது அந்நாட்டு ராணுவம். வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் 103 டிரோன்களை வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தகவல் அளித்துள்ளது.



  • Mar 01, 2025 15:29 IST

    சீமான் வீட்டில் சம்மன் - 'காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை': அண்ணாமலை பேச்சு 

    சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியில்லை. ஆஜராகவில்லை என்றால் தான் காவல்துறை நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

     



  • Mar 01, 2025 15:16 IST

    மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தண்டனையா? - அன்புமணி கேள்வி 

    தொகுதி மறுசீரமைப்பு மூலம் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக் கூடாது என்று பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தி வருகிறது என்று கூறிய அவர், பீகார், உ.பி., மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை என்றும் தமிழ்நாட்டின் தொகுதிகளை குறைக்க மாட்டோம் எனக்கூறி வடமாநிலங்களின் தொகுதிகளை உயர்த்தக் கூடாது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். 



  • Mar 01, 2025 15:06 IST

    வடமாநில இளைஞருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - டீன் விளக்கம் 

    பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை இருந்தும் சிகிச்சை அளிக்க மறுப்பு என வடமாநில இளைஞர் வேதனை தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் செங்கல்பட்டு மருத்துவமனை டீன் சிவசங்கரன் விளக்கம் அளித்துள்ளார். 

    "5 நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். நோயாளி சொந்த விருப்பத்தின் பேரில் டிஸ்சார்ஜ் ஆனார். காப்பீடு இல்லை என்றாலும் உரிய சிகிச்சை அளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

     



  • Mar 01, 2025 14:52 IST

    'அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்காது" - அண்ணாமலை பேட்டி

    அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. தொகுதி மறுவரையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவுபடுத்திவிட்டார். தெளிவான விளக்கத்திற்கு பிறகும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏற்புடையதல்ல.

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து புரளி பரப்புகின்றனர். தமிழக மக்களை குழப்புவதே திமுகவின் நோக்கம். கற்பனையான அச்சங்களை பரப்பவும், பொய் சொல்லவுமே அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார்." என்றும் அவர் கூறியுள்ளார். 



  • Mar 01, 2025 14:49 IST

    வடமாநில இளைஞருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு

    சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் கட்டுமான தொழிலாளியாக உள்ள மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஹரதன் பவுரி (35) என்பவருக்கு சாலை விபத்தில் கால் எலும்பு முறிந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்ய செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டதில் காலில் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டாலும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்

    மருத்துவமனை டீன் தரப்பில் முறையீடு செய்தும் கடந்த 6 நாட்களாக எந்த பதிலும் இல்லாத நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்து சொந்த ஊருக்கு செல்லக்கூறி அனுப்பி வைத்துள்ளனர். ரயிலில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். 



  • Mar 01, 2025 14:39 IST

    போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம் 

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த மாதம் 14-ந் தேதி ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில்,  போப்பின் உடல்நிலையில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா அல்லது அவரது உடல்நிலை மீண்டும் சீரானவகையில் திரும்பியுள்ளதா என்பதைத் தீர்மானிக்க 24-48 மணிநேரம் தேவை என்று வாடிகன் தேவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது போப் விழிப்புடன் இருக்கிறார் என்றும், நல்ல மனநிலையில் இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

     



  • Mar 01, 2025 13:53 IST

    நடிகை விஜயலட்சுமி வழக்கு - சீமான் மேல்முறையீட்டு மனு விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்  

    நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். சீமானின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச் 7ம் தேதி விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     



  • Mar 01, 2025 13:49 IST

    தெலுங்கானா சுரங்க விபத்து - மண் சரிவில் சிக்கிய 8 பேர் பலி 

     

    தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர்.  



  • Mar 01, 2025 12:53 IST

    நடிகை புகார்; சீமான் அளித்த வாக்குமூலம்... சரிபார்க்கும் பணியில் வளசரவாக்கம் போலீஸ்

    நடிகை விஜயலக்ஷ்மி கொடுத்த புகாரில், சீமான் அளித்த வாக்குமூலத்தை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் வளசரவாக்கம் போலீசார். நடிகை அளித்த வாக்குமூலத்தையும், சீமான் அளித்த வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர் காவல்துறையினர். சீமானின் மருத்துவ அறிக்கை, பணப்பரிவர்த்தனை ஆவணங்களையும் வளசரவாக்கம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தேவைப்பட்டால் சீமானை விசாரணைக்கு மீண்டும் அழைப்போம் எனவும் வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 



  • Mar 01, 2025 12:41 IST

    ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் முதலமைச்சர்

    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் சிஐடி காலனியில் உள்ள எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து அம்மாவிடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார் என்று திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இன்று 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜாத்தி அம்மாளிடம் நேரில் வாழ்த்தும் பெற்றுள்ளார். 



  • Mar 01, 2025 12:17 IST

    கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

    தன பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 



  • Mar 01, 2025 12:11 IST

    பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை

    பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை “வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.65,000 கோடி ஒதுக்கலாம்” நெல்லுக்கு ரூ.3,500; கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம்; நியாயவிலை கடைகளில் நாட்டுச் சர்க்கரை விநியோகிக்கலாம் என்று வேளாண் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த பாமக கோரிக்கை வைத்துள்ளனர்.



  • Mar 01, 2025 11:52 IST

    ’பொதிகை’ தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    டெல்லியில் உள்ள ’பொதிகை’ தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அங்கிருந்து விருந்தினர்கள், ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 



  • Mar 01, 2025 11:42 IST

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

    கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 86.65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 7ம் தேதி 3.56 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Mar 01, 2025 11:36 IST

    "பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார்"

    பொதுவெளியில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசிய சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது; தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது; தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும்,பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல; பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது என்று  காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Mar 01, 2025 11:28 IST

    மகா கும்பமேளா - 15 நாட்கள் தூய்மைப் பணி

    மகா கும்பமேளாவையொட்டி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குப்பைகள் குவிந்துள்ளன. 15 நாட்களில் முழுமையாக சுத்தப்படுத்த தூய்மைப் பணிகள் மும்முரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 01, 2025 11:22 IST

    "பெண்மையை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான்"

    “தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, அநாகரீகமான மனிதர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சீமான்" 50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான்; தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்; சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது என்று காங்கிரஸ் எம்.பி. சுதா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Mar 01, 2025 11:08 IST

    தனது பிறந்தநாள் செய்தியைச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    "மாநிலத்தில் சுயாட்சி, இந்தி திணிப்பை தடுப்பது, இருமொழி கொள்கை தொடர்வது. இதுதான் என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளான இன்று கூறியுள்ளார். 



  • Mar 01, 2025 11:06 IST

    எனது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - ராகுல் காந்தி

    எனது சகோதரரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி மதிப்புகளை பாதுகாக்க நாங்கள் இணைந்து நிற்போம்; முதல்வர் ஸ்டாலின், நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 



  • Mar 01, 2025 10:51 IST

    இனிப்பு ஊட்டி கி.வீரமணி வாழ்த்து

    பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இனிப்பு ஊட்டி விட்டு திக தலைவர் கி. வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Mar 01, 2025 10:50 IST

    ஸ்டாலினுக்கு கார்கே வாழ்த்து

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Mar 01, 2025 10:19 IST

    ஸ்டாலினுக்கு அண்ணாமலை வாழ்த்து

    "நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், முதல்வர் ஸ்டாலின் மக்கள் பணிகளை தொடர வாழ்த்துகிறேன்" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Mar 01, 2025 10:16 IST

    ஸ்டாலினுக்கு விஜய் வாழ்த்து

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



  • Mar 01, 2025 10:15 IST

    இந்தி திணிப்பு இருக்கக் கூடாது என்பதே எனது பிறந்தநாள் செய்தி - ஸ்டாலின்

    மாநிலத்தில் சுயாட்சி இருக்க வேண்டும்; இந்தி திணிப்பு இருக்கக் கூடாது என்பதே எனது பிறந்தநாள் செய்தி என முதல்வர் ஸ்டாலின் பேட்டி  அளித்துள்ளார்.



  • Mar 01, 2025 09:54 IST

    முதல்வருக்கு ஆளுநர் வாழ்த்து

    ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.



  • Mar 01, 2025 09:53 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

    தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது.



  • Mar 01, 2025 09:20 IST

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்த ஸ்டாலின்

    மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • Mar 01, 2025 09:00 IST

    அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை

    72 ஆவது பிறந்த நாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை செய்தார்.



  • Mar 01, 2025 08:59 IST

    மாணவர் சேர்க்கையை தொடங்கிவைத்தார் முதல்வர்

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தனது 72 ஆவது பிறந்தநாளையொட்டி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்கிவைத்து இனிப்புகளை ஸ்டாலின் வழங்கினார்.



  • Mar 01, 2025 08:34 IST

    தெலங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

    தெலங்கானாவில் கடந்த 22ஆம் தேதி சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாககவல் வெளியாகி உள்ளது. 



  • Mar 01, 2025 08:30 IST

    தமிழைக் காப்பேன் - ஸ்டாலின்

    உடன்பிறப்புகளின் அன்பான வாழ்த்துக்கள் என்னை மேலும் உறுதியுடன் உழைப்பதற்கும் இனம், மொழி காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன் என இந்தப் பிறந்தநாளில் சூளுரைக்கிரேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Mar 01, 2025 08:25 IST

    உக்ரைன் அதிபரை முகத்திற்கு நேராகவே விமர்சித்த ட்ரம்ப்

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே கடுமையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் குறித்து பேசியபோது வாக்குவாதம். அமெரிக்காவை ஜெலன்ஸ்கி அவமதித்துவிட்டதாக ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு   



  • Mar 01, 2025 07:47 IST

    பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்

    மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 01, 2025 07:44 IST

    PF வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

    2024-25 ஆம் ஆண்டிற்கான PF வைப்பு நிதி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, 8.25 சதவீதமாகவே தொடரும் என EPFO அறிவித்துள்ளது.



  • Mar 01, 2025 07:39 IST

    தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்கறிச்சி, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 01, 2025 07:34 IST

    முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

    ”மாண்புமிகு முதல்வர் அப்பா ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். செய்தியாளர் பிறந்தநாள் குறித்து கேள்வி எழுப்பியதும் வாழ்த்து தெரிவித்தார்.



  • Mar 01, 2025 07:33 IST

    வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைவு

    சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1965 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: