/indian-express-tamil/media/media_files/2025/03/03/EEtPND9EMwy0it69ao1Y.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 02, 2025 22:00 IST
தமிழகத்தில் எப்பொழுதும் இருமொழிக் கொள்கைதான் - உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிக்க முடியாது. தமிழகத்தில் எப்பொழுதும் இருமொழிக் கொள்கைதான்; இந்தியைத் திணிக்க குறுக்கு வழியில் மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது; நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க-வோ எடப்பாடி பழனிசாமியோ கிடையாது” என்று கூறியுள்ளார்.
-
Mar 02, 2025 20:31 IST
பொதுத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
பொதுத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள்; மாணாக்கர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆதரவு முக்கியமானது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
-
Mar 02, 2025 19:57 IST
வன்னி அரசுக்கு த.வெ.க கண்டனம்
விஜய் குறித்து வன்னி அரசு கூறிய கருத்துகளுக்கு த.வெ.க கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்படி, "அறமற்ற அபாண்டமான பொய்யை வன்னி அரசு பேசியுள்ளார். சி.ஏ.ஏ சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு விஜய் ஆதரவாக நிற்கிறார். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாகரிகமான அரசியல் பாதையில் பயணிக்க வன்னி அரசு முயற்சிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 19:21 IST
5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு - அரசாணை வெளியீடு
5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்க ரூ. 122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கரூர், மணப்பாறை, கோவில்பட்டி, மேட்டுபாளையம் மற்றும் செங்கோட்டை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தபடவுள்ளது. கும்பகோணம், தென்காசி, காங்கேயம் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.
-
Mar 02, 2025 19:02 IST
தீக்குளிப்பு போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு
அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, நாளை திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்றும், நாளை மறுநாள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
-
Mar 02, 2025 18:36 IST
குழந்தைக்கு காலாவதியான மருந்து கொடுத்ததாக புகார்
கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாத குழந்தைக்கு காலாவதியான மருந்து வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து மருத்துவர் அலட்சியமாக பதிலளித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
-
Mar 02, 2025 18:15 IST
தென்மாவட்ட பேருந்துகள் - கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்
தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்துகள், மார்ச் 4-ஆம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 17:47 IST
செபி முன்னாள் தலைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு
செபி முன்னாள் தலைவர் மாதபி புரி நச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 17:29 IST
மத்திய இணை அமைச்சர் மகளிடம் ஈவ்டீசிங்
மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய இணை அமைச்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும்? மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே கேள்வி எழுப்பியுள்ளார்
-
Mar 02, 2025 17:01 IST
ஸ்டாலினுக்கு இளையராஜா நன்றி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி! என இசையமைப்பாளர் இளையராஜா தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
Mar 02, 2025 16:38 IST
3வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி அசத்தல்
3வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி அசத்தியுள்ளது. இறுதிப் போட்டி டிரா ஆன நிலையில், முதல் இன்னிங்ஸில் கேரள அணியை விட கூடுதல் ரன்கள் எடுத்திருந்ததால் விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
-
Mar 02, 2025 16:09 IST
அனைத்து கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க பங்கேற்கும் - பிரேமலதா விஜயகாந்த்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 5ல் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க பங்கேற்கும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்
-
Mar 02, 2025 15:50 IST
தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள் - ஸ்டாலின் வாழ்த்து
'தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதுங்கள்’ என 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
Mar 02, 2025 15:27 IST
பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது - நடிகர் கூல் சுரேஷ்
பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது, அதிகம் நகைகளை அணிந்து கொண்டு சென்றால், பார்ப்பவர்களுக்கு திருடனும் என்றுதான் தோன்றும், எல்லா இடத்திற்குமே போலீசார் பின் தொடர்ந்து வர முடியாது. பாலியல் தாக்குதலில் இருந்து நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார்
-
Mar 02, 2025 15:06 IST
கல்வி நிதியை வழங்க மாட்டோம் என்று கூறுவது மிக மிக தவறு - அன்புமணி ராமதாஸ்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் கல்வி நிதியை வழங்க மாட்டோம் என்று கூறுவது மிக மிக தவறு என கோவை விமான நிலையத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
Mar 02, 2025 14:59 IST
சென்னை காமராஜர் சாலையில் வழித்தடம் மாற்றம்
மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக மெரினா காமராஜர் சாலையில் சோதனை முறையில் வழித்தடம் மாற்றம் செய்யப்படுகிறது. காமராஜர் சாலை காந்தி சிலை அருகே பேரிகார்டு அமைத்து ஒரு வழிப்பாதையை மூடி அருகிலேயே இரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.
-
Mar 02, 2025 14:30 IST
தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். நாளை முதல் 6ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Mar 02, 2025 13:49 IST
2026 தேர்தலில் மாற்றம் வருவது உறுதி - அண்ணாமலை
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வருவது உறுதி. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரச்சினை எதுவும் இல்லாதபோது அனைத்துக் கட்சி கூட்டம் எதற்கு? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
-
Mar 02, 2025 13:44 IST
ஸ்ரீவைகுண்டத்தில் 11 செ.மீ மழை பதிவு
தூத்துக்குடியில் அதிகாலையில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
-
Mar 02, 2025 13:20 IST
வழக்கு நிலுவையில் இருக்கும் போது என்னை பாலியல் குற்றவாளி என்பீர்களா? - சீமான்
வழக்கு நிலுவையில் இருக்கும் போது பாலியல் குற்றவாளி என்று என்னை எப்படி கூறுவீர்கள்? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் சம்பவங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன்? என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? என சென்னை விமான நிலையத்தில் சீமான் தெரிவித்துள்ளார்
-
Mar 02, 2025 13:19 IST
பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும்
தென் மாவட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
-
Mar 02, 2025 12:54 IST
இளம்பெண்ணை கடத்திய இளைஞர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த உறவினர்கள்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாளை திருமணம் நடைபெற இருந்த பெண்ணை தூக்கிச் சென்றதாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட அடிதடியால் பரபரப்பு ஏற்பட்டது. இளம்பெண்ணை காரில் தூக்கிச் சென்ற இளைஞர்களை மடக்கி பிடித்து பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்
-
Mar 02, 2025 12:36 IST
இளையராஜாவை நேரில் வாழ்த்திய ஸ்டாலின்
லண்டன் சிம்பொனி இசைநிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு நினைவு பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼
— M.K.Stalin (@mkstalin) March 2, 2025
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில்… pic.twitter.com/bv9AUVxpl0 -
Mar 02, 2025 12:16 IST
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை சந்தித்தார் ஆளுநர் ரவி
இலங்கை கடற்படையை கண்டித்து, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், ராமேஸ்வரம் சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி, மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்
-
Mar 02, 2025 12:15 IST
இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணியினர் இடையே வாக்குவாதம்
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விவகாரம் தொடர்பாக இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
-
Mar 02, 2025 11:57 IST
எது தவெக கருத்து? - ஆனந்த் விளக்கம்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் வெளியிடும் கருத்தே தவெக நிலைப்பாடு ஆகும். ஊடக விவாத நிகழ்ச்சிகளில் தவெக ஆதரவாளர்களை சித்தரித்து விஷமக் கருத்துக்களை திணிக்க முயற்சி செய்கின்றனர்.
-
Mar 02, 2025 11:32 IST
சீமான் எங்களுக்கு தூசு மாதிரி - அமைச்சர் ரகுபதி
சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி; சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசிஅய்ம் இல்லை; உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படிதான் வழக்கு நடந்து வருகிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
-
Mar 02, 2025 11:13 IST
வளங்களை அழிப்பதே வளர்ச்சியா? - சீமான்
வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பது உங்கள் கொள்கையா? எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
Mar 02, 2025 11:12 IST
என்னை குற்றவாளி எனக்கூற நீங்கள் யார்? - சீமான்
கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என கூற நீங்கள் யார்? நீங்கள் என்ன நீதிபதியா என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
-
Mar 02, 2025 10:42 IST
3 மருத்துவமனைகளை மூட உத்தரவு
சேலத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கூறிவந்த 3 மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி தலைமையில் மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்பட்டது.
-
Mar 02, 2025 10:10 IST
குற்றாலத்தில் குளிக்க தடை
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 09:59 IST
ரம்சானுக்கு மோடி வாழ்த்து
ரம்சான் நோம்பு இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ’ரம்சான் மாதம் நம் சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Mar 02, 2025 09:58 IST
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு - அமெரிக்கவாழ் தமிழர்கள் போராட்டம்
மும்மொழி கொள்கை திணிப்பை எதிர்த்து அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 02, 2025 09:54 IST
திமுக கூட்டணியை தகர்க்க முடியாது - சேகர்பாபு
தி.மு.க கூட்டணி இரும்புக் கோட்டைகளால் ஆனது; அதனை தகர்க்க முடியாது. அரசியல் ஞானோதயம் மிக்க முதல்வர் தி.மு.க கூட்டணியை எந்நாளும் சிதறவிடமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
Mar 02, 2025 09:29 IST
சிங்கங்களை பாதுகாக்க ரூ.2900 கோடி!
இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கு 2900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
Mar 02, 2025 09:28 IST
வரலாற்று சாதனை விராட் படைக்கும் விராட் கோலி
தற்போது 125 டி20, 123 டெஸ்ட் மற்றும் 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் இன்று 300ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். இதன்மூலம் 300 ஒருநாள், 100 ட்20,199 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் படைக்க உள்ளார்.
-
Mar 02, 2025 09:27 IST
ராஜமவுலி மனரீதியாக சித்ரவதை செய்ததாக புகார்
பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமவுலி மனரீதியாக சித்ரவதை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளர் சீனிவாசராவ் வீடியோ வெளியிட்டதால் தெலுங்கு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
Mar 02, 2025 08:58 IST
பாஸ்போர்ட் - பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை. மற்றவர்கள் பாஸ்போர்ட் திருத்த விதிகள் 2025-ன் படி பிறப்பு சான்றாக மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 08:57 IST
மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் முதல் ஷோரூம்
மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் முதல் ஷோரூம் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஷோரூம் திறக்க மாதம் ரூ.35 லட்சம் வாடகைக்கு டெஸ்லா நிறுவனம் இடம் தேர்வு செய்துள்ளது.
-
Mar 02, 2025 08:54 IST
அனைத்து கட்சி கூட்டத்தில் தமாகா பங்கேற்காது - ஜி.கே.வாசன்
மார்ச் 5 நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் த.மா.கா பங்கேற்காது என ஜி.கே வாசன் கூறியுள்ளார். மும்மொழிக் கொள்கை, நீட் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தீர்க்கப்படாத பல பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே அனைத்து கட்சி கூட்டம் என்றும் சாடியுள்ளார்.
-
Mar 02, 2025 08:29 IST
திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதிகளில் விமானங்கள் பறக்க தடை
திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதிகளில், விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 08:27 IST
நயன்தாராவுக்கு வில்லனாகும் ஹீரோ
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிகை நயன்தாராவுக்கு அருண்விஜய் வில்லனாக நடிக்க உள்ளார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் வில்ல நடிகருக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
-
Mar 02, 2025 08:26 IST
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 3316 தேர்வு மையங்களில் 8.21 லட்சம் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,344 தனித்தேர்வர்களும் 145 கைதிகளும் எழுத உள்ளனர்.
-
Mar 02, 2025 08:23 IST
தொடர்ந்து அதிகரிக்கும் GST வசூல்
நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.1.84 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூலாகி உள்ளதாக நிதியமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இது 9.1% அதிகரித்துள்ளது.
-
Mar 02, 2025 08:22 IST
4 புதிய ரயில் சேவைகள் அறிமுகம்
சென்னைக்கு 4 புதிய மின்சார ரயில் சேவைகளை மார்ச் 3 ம் தேதி முதல் ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்கிறது.காலை 11.15க்கு மூர் மார்க்கெட் - ஆவடி, காலை 5.25க்கு ஆவடி - மூர் மார்க்கெட் இடையே ரயில். இரவு 10.35க்கு மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி; காலை 9.10 க்கு கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் ரயில் என மொத்தம் 4 புதிய ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 08:17 IST
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mar 02, 2025 07:29 IST
இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. துபாயில் மதியம் 2.30க்கு நடக்கும் போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
-
Mar 02, 2025 07:22 IST
4 பேர் மரணம் - முதல்வர் நிவாரணம்
கன்னியாகுமரி இனையம்புத்தன் துறை கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல். தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Mar 02, 2025 07:21 IST
ரமலான் நோன்பு தொடக்கம்
தமிழ்நாடு முழுக்க ரமலான் நோன்பு தொடங்கியது. அதிகாலையில் இஸ்லாமியர்கள் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.