/indian-express-tamil/media/media_files/Vi8hmfzmhnQbWESE4bnx.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 04, 2025 05:32 IST
தயாளு அம்மால் மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Mar 04, 2025 05:30 IST
மீனவர்களுக்கான நிவாரணத் தொகை உயர்வு - ஸ்டாலின் உத்தரவு
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு
உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவி தொகை ரூ.350ல் இருந்து ரூ.500ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். -
Mar 03, 2025 22:17 IST
கனிமவள கடத்தலை தடுக்கக் கோரி செங்கோட்டையில் மார்ச் 6-ல் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு
அ.தி.மு.க பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி, “கனிமவள கடத்தலை தடுக்கக் கோரி மார்ச் 6-ல் செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்வதை தமிழக அரசு தடுக்கவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 03, 2025 21:11 IST
நங்கநல்லூர் அருகே ரூ.65 கோடியில் புதிய ஹஜ் இல்லம்; ஸ்டாலினுக்கு ஹச் தலைவர் அபூபக்கர் நன்றி
சென்னை நங்கநல்லூர் அருகே ஹஜ்யாத்திரை செல்லும் புனிதப் பயணிகளின் பயன்பாட்டுக்காக ரூ.65 கோடியில் புதிய ஹஜ் இல்லம் கட்டப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் நன்றி தெரிவித்துள்ளர். "தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள 42 கோடி இஸ்லாமியர்களும் நன்றி கடன்பட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
-
Mar 03, 2025 20:38 IST
ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை - பொன்முடி
"சங்க இலக்கியத்தில் ஆரியர் என்ற இனமே இல்லை; திராவிடச் சிந்தனைதான் ஆரியர் - திராவிடர் என்ற வேறுபாட்டை உருவாக்குகிறடு என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு, பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, “ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை” என்று பதிலட் கொடுத்துள்ளார்.
-
Mar 03, 2025 19:46 IST
சர்தார்-2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி காயம் - ஷூட்டிங் நிறுத்தம்
சர்தார்-2 படப்பிடிப்பின்போது காயம் அடைந்த நடிகர் கார்த்தி பெங்களூருவில் நடைபெற்ற ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. சர்தார் 1 பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது.
-
Mar 03, 2025 19:44 IST
கோடை காலை தொடங்குவதற்கு முன்பே திருப்பத்தூரில் சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. கோடை காலை தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Mar 03, 2025 19:41 IST
தமிழ்நாட்டில் தொடர்ந்து சரியும் முட்டை விலை; கடந்த 5 நாட்களில் ரூ.1.10 சரிவு
தமிழ்நாட்டில் முட்டை விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 நாட்களில் ரூ.1.10 சரிந்துள்ளது. நாமக்கல் பண்ணையில் இன்று முட்டை ஒன்றின் கொள்முதல் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம். நாளை காலை இந்த விலை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வு மற்றும் விற்பனை குறைவால் விலை சரிந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Mar 03, 2025 19:35 IST
தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி 4வது நாளாக தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ அமைப்பினருடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து வழக்கறிஞர்களை நியமித்து மேல்முறையீடு செய்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
Mar 03, 2025 18:44 IST
நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது தி.மு.க: அமைச்சருக்கு அண்ணாமலை பதில்
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, "எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களைக் கூறி, ஆட்சிக்கு வந்த பின், சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.
தமிழக நிதியமைச்சருக்கு ஒரு மாநிலத்தை மற்றொரு மாநிலத்துடன்தான் ஒப்பிட வேண்டும் என்பது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது. 2004 – 2014 வரையிலான பத்து ஆண்டுகள், காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, ஊழலைத் தவிர வேறொன்றும் செய்யாமல் நாட்டைத் தேக்க நிலையில் வைத்திருந்த திமுக, கடந்த 2014 – 2024 வரை, பத்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம்.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சென்னை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்கள், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்கள், மெட்ரோ திட்டங்கள் என, தமிழக முதலமைச்சரும், திமுக அமைச்சர்களும், தினந்தோறும் பயன்படுத்தும் போக்குவரத்து தொடங்கி, தமிழகத்தில் உங்கள் கண்முன்னே மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு எத்தனை? மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக?
உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். வாங்கிய கடனில் உங்கள் கமிஷன் எவ்வளவு? அல்லது, கமிஷன் வாங்கத்தான் கடனே வாங்குகிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துங்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Mar 03, 2025 18:29 IST
த.வெ.க இஃப்தார் நோன்பு - விஜய் பங்கேற்பு
ரம்ஜான் பண்டிகையையொட்டி த.வெ.க., சார்பில் வரும் 7ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க., தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
-
Mar 03, 2025 18:26 IST
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே நோக்கம்: டிரம்ப்
சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதே முதல் நோக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது. அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேறிகள் 8326 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்தார்.
-
Mar 03, 2025 18:09 IST
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகள் மாற்றம்
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை சி.பி.ஐ வசம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து 2022ம் ஆண்டு காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதம். சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 03, 2025 17:49 IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு - இன்று நடந்த மொழிப்பாடத் தேர்வை 8,02,567 மாணவர்கள் எழுதியுள்ளனர். 11,430 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 03, 2025 17:32 IST
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்: ஜெலன்ஸ்கி வீடியோ
அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்கிறோம்; உக்ரைனுக்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். போர் நிறுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியிட்டு பதிவிட்டார். ஓவல் அலுவலக சந்திப்பின்போது போதுமான நன்றியை ஜெலன்ஸ்கி தெரிவிக்கவில்லை என டிரம்ப், வான்ஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
-
Mar 03, 2025 17:26 IST
ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த சதி
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதல் நடத்த அப்துல் ரகுமான் திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியை பாதுகாப்பு படையினர் முறியடித்ததாக குறைப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி அப்துல் ரஹ்மானிடமிருந்து இரண்டு கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Mar 03, 2025 16:44 IST
த.வெ.க சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றங்களை தடுக்க த.வெ.க சார்பில் மார்ச் 8-ஆம் தேதி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Mar 03, 2025 16:13 IST
பார்வைக் குறைபாடு உடையவர்களும் நீதிபதி தேர்வில் பங்கேற்கலாம் - உச்ச நீதிமன்றம்
பார்வைக் குறைபாடு அல்லது குறைவான பார்வை உள்ளவர்களும் நீதிபதி பணிக்கான தேர்வில் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவில் நீதிபதிகள் தேர்வில் பார்வைக் குறைபாடு உள்ளோர் பங்கேற்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
-
Mar 03, 2025 15:55 IST
ஓலா நிறுவனத்தில் 1,000 பேர் வேலை இழப்பு என தகவல்
ஓலா நிறுவனத்தில் 1,000 பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் இழப்புகளை சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
-
Mar 03, 2025 15:26 IST
ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமையாளர் உரிமம் ரத்து
சென்னை, ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமையாளர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில் காலாவதியான உணவுகள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன்பேரில், கேண்டீன் உரிமையாளர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
-
Mar 03, 2025 15:11 IST
கிர் தேசிய பூங்காவை பார்வையிட்ட மோடி
குஜராத் மாநிலத்தில் கிர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 3) நேரில் சென்று பார்வையிட்டார்.
-
Mar 03, 2025 14:17 IST
அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய மனு மீது விரைவில் விசாரணை
தங்களுக்கு அழைப்பு விடுக்காததால், அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுப்பதா? விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசு அழைக்க முடியாது என்று கூறியுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
-
Mar 03, 2025 13:33 IST
மார்ச் 8ல் பிங்க் ஆட்டோ திட்டம்: மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகரத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பிங்க் ஆட்டோ திட்டம் வரும் 8ம் தேதி பயன்பாட்டுக்கு வருகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 8ல் பிங்க் ஆட்டோ திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
-
Mar 03, 2025 13:31 IST
நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை: சீமான்!
நடிகை தொடர்ந்த பாலியல் வழக்கில், இரு தரப்பும் கலந்து பேசி, உடன்பாடு காண உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், இது குறித்து பேசிய சீமான், நடிகையுடன் சமரசம் பேச வாய்ப்பில்லை. அதற்கான தேவையும் இல்லை. இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு என்று கூறியுள்ளார்.
-
Mar 03, 2025 13:02 IST
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக மனு!
"எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை; எனவே அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்; எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பாரபட்சமானது” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி மனு அளித்திள்ளார். விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது என்று தகவல்.
-
Mar 03, 2025 12:38 IST
தமிழ்நாடு ஹஜ் இல்லம்
சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Mar 03, 2025 12:36 IST
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில், காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்ததாக புகார்!
சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் சுகாதாரமற்ற கெட்டுப்போன குளிர்பானங்களை விற்பனை செய்ததால் பரபரப்பு. குளிர்பானம் காலாவதி ஆகி இருப்பதாக குற்றம் சாட்டி கேன்டீன் நிர்வாகத்தினருடன் நித்யா என்பவர் வாக்குவாதம்! காவல்துறையினர் அனைத்தையும் சோதனை செய்ததில் சில குளிர்பான பாட்டில்களில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திரையரங்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Mar 03, 2025 12:12 IST
சீமான் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை..!
சீமானுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி, 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
-
Mar 03, 2025 12:10 IST
சென்னையில் செமிகண்டக்டர் தொழிற்சாலை
இந்தியாவில் தனது முதல் Semi Conductor ஆலையை சென்னைக்கு அருகில் அமைக்கிறது மலேசியாவை சேர்ந்த விசிஐ குளோபல் நிறுவனம். F305 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் இந்தாண்டு இறுதியில் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Mar 03, 2025 11:56 IST
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஆணை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின், ஈசன் புரொடக்ஷன்ஸ் ஜகஜால கில்லாடி படத்திற்கு ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளது; தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கடனை திருப்பித் தரவில்லை என புகார். வட்டியுடன் ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ஜகஜால கில்லாடி பட உரிமைகளை வழங்க பேரனுக்கு மத்தியஸ்தர் ஆணை.
-
Mar 03, 2025 11:27 IST
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாள்
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசிநாள் மார்ச் 7ஆம் தேதி இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
-
Mar 03, 2025 11:26 IST
பிளஸ் 2 மனைவி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி
திருவள்ளூர் - இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியுள்ள நிலையில், அதிகாலையில் வீட்டின் மாடியில் பெட்ரோல் ஊற்றி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தற்கொலைக்கு முயன்ற அந்த மாணவி தீக்காயங்களுடன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக மதிப்பெண் எடுக்க மாணவிக்கு அழுத்தம் அளித்திருந்தால், தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் ஆட்சியர்ன் கூறியுள்ளார்.
-
Mar 03, 2025 11:14 IST
சென்னை To கும்மிடிப்பூண்டி - ரயில் பயணிகளுக்கு வெளியான குட் நியூஸ்
பயணிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி - சென்னை மார்கத்தில் குறைக்கப்பட்ட புறநகர் மின் ரயில்களில் மீண்டும் 2 ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது
-
Mar 03, 2025 10:27 IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.
-
Mar 03, 2025 10:20 IST
நாகை சென்ற முதல்வர் ஸ்டாலின்
பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க நாகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்பிதுரை பூங்கா அருகே சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
-
Mar 03, 2025 09:50 IST
காய்கறிகள் விலை கடும் சரிவு
கோயம்பேடு மொத்த வியாபார கடைகளில் காய்கறிகளின் விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்கப்பட்ட காய்கறிகளின் விலை, தற்போது கிலோ ரூ. 15 -20 க்கு விற்கப்படுவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-
Mar 03, 2025 09:29 IST
பெருவில் கடும் வெள்ளப்பருக்கு
பெரு நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
Mar 03, 2025 09:28 IST
வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் அதிகரிக்கவில்லை - அரவிந்த் விர்மானி
“வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் சம்பளம் அதிகரிக்கவில்லை..” நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கருத்து தெரிவித்துள்ளார்.
-
Mar 03, 2025 09:27 IST
ஆஸ்கர் விருது
சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை தி புருடலிஸ்ட் படத்திற்காக லால் க்ராவ்லி வென்றார்.
-
Mar 03, 2025 08:58 IST
புது யுக்தியை கையாளும் அதிமுக
அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயமும், 300 பேருக்கு வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்படும் என துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது
-
Mar 03, 2025 08:57 IST
டீசல் பேருந்துகளை CNG பேருந்துகளாக மாற்ற முடிவு
தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 டீசல் பேருந்துகளை சி.என்.ஜி பேருந்துகளாக மாற்ற அரசுப் பேக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.70 கோடி ஒதுக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
-
Mar 03, 2025 08:55 IST
சாலையில் சென்ற கார் தீ விபத்து
சென்னை மயிலாப்பூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. காரில் இருந்த சிறுவனும், முதியவர் ரவீந்திரனும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். தீ விபத்து குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 03, 2025 08:54 IST
தேனியில் பேசிய எடப்பாடி பழனிசாமி
“திமுகவைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி இல்லை” என தேனியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
-
Mar 03, 2025 08:23 IST
இருகைகளையும் விட்டு பைக் ஓட்டி சாகசம்
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு கைகளையும் விட்டு பைக் ஓட்டி சாகசம் செய்த இளைஞரின் பைக்கை பறிமுதல் செய்த போலீசார். குற்றத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர்.
-
Mar 03, 2025 08:22 IST
சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்..
சென்னையின் பல்வேறு இடங்களில் சீமானை தப்ப விடாதே என்று பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
-
Mar 03, 2025 07:39 IST
அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி ஆங்கிலம்
அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலம் நிர்ணயம் செய்து அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
Mar 03, 2025 07:37 IST
'நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்?’ - ஸ்டாலின்
ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழிக்கிறீர்களே? ரூபாய் நோட்டில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்க வேண்டியதுதானே? என்று அப்போதும் சில அதிமேதாவிகள் அதிகப்பிரசிங்கித் தனமாகக் கேட்டார்கள். நாங்கள் ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்? ரூபாய் நோட்டில் இருப்பது மொழி சமத்துவம். ரயில்வேயிலும் ஒன்றிய அரசின் மற்ற துறைகளிலும் நடப்பது மொழித்திணிப்பு. ரூபாய் நோட்டில் இந்தி மட்டுமா உள்ளது? என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Mar 03, 2025 07:31 IST
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் என த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன் என்றார்.
-
Mar 03, 2025 07:29 IST
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது. நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வுக்கென தமிழகத்தில் 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.