/indian-express-tamil/media/media_files/2025/03/04/B2O0oJtLyykrtx2xVy1O.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 04, 2025 21:56 IST
அதிகளவு சுற்றுலா வந்த இந்தியர்கள்: இலங்கை சுற்றுலா ஆணையம் தகவல்
2025 பிப்., வரை சுற்றுலா வந்த 4,92,000 பயணிகளில் அதிகபட்சமாக 80,000 பேர் இந்தியர்கள் வருகை தந்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ரஷ்யா மற்றும் பிரிட்டன் மக்கள் உள்ளனர் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 04, 2025 21:53 IST
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்
பட்டங்களும் விருதுகளும் மதிப்புமிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை வேலையில் இருந்தும், கலைத்தொழிலில் இருந்தும், உங்கள் அன்பான தொடர்பில் இருந்தும் பிரிக்கக் கூடும் அதனால் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Mar 04, 2025 20:14 IST
இளையராஜாவுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ள இளையராஜாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
Mar 04, 2025 19:35 IST
உங்களுக்கு கோபம் வருதுன்னா இன்னும் முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்: உதயநிதி ஸ்டாலின்
வக்ஃபு வாரியம் சார்பில் சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நொன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உங்களுக்கு கோபம் வருதுன்னா இன்னும் முறை ரமலான் வாழ்த்து சொல்வோம் என்று பேசியுள்ளார்.
-
Mar 04, 2025 18:34 IST
எந்த சாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது - ஐகோர்ட்
எந்த சாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது; கோயிலை சாதி அடிப்படையில் நிர்வகிப்பது என்பது மத நடைமுறையும் அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும், பெரும்பலான பொதுக்கோயில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. சாதிப்பாக்குபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்ற நீதிபதி தெரிவித்துளார்.
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 3 கோயில்களில் இருந்து காளியம்மன் கோயிலை தனியாக பிரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 04, 2025 17:34 IST
மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மா. சுப்பிரமணியன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு தொடர்பான மருத்துவத் துறையின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒப்படைத்தார்.
முக்கிய கோரிக்கைகள் :
1. தமிழ்நாடு சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் நடைமுறைக்கு எதிரான சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரக் கோருதல்.
2. கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல்.
3. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்.
4. தமிழ்நாட்டில் 24 நகர்ப்புற மற்றும் 26 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 500 துணை சுகாதார நிலையங்களுக்கு அனுமதி வழங்குதல்.
5. தேசிய மருத்துவ ஆணையத்தின் தேசிய வெளியேறும் தேர்வு விதிமுறைகள், 2023 மீதான ஆட்சேபணை தெரிவித்தல்.
6. பொது கலந்தாய்வுத் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டப்படிப்பு, மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023க்கு ஆட்சேபணை தெரிவித்தல்.
7. தேசிய மருத்துவ ஆணையத்தின். "புதிய மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல்.
8. ₹447.94 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மற்றும் சேவைகளை மேம்படுத்துதல்.
9. 22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ₹603.45 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தி திறன் ஆய்வகங்கள் அமைத்தல்.
-
Mar 04, 2025 17:25 IST
கோடை வெயில்: ஜூஸ் கடைகளில் சோதனை - உணவு பாதுகாப்பு துறைக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு
தமிழகத்தில் ஜூஸ் கடைகள், குளிர்பான மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுகாதாரம் இல்லை என்றால் கடைக்கு அபராதம் விதித்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்எ என்றும் உணவு பாதுகாப்பு துறைக்கு, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 04, 2025 16:58 IST
ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் மரணம்
ரத்த தானத்தின் மூலம் சுமார் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ``Man with the Golden Arm'' என அறியப்பட்ட சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) மரணமடைந்தார். 1954 முதல் 2018 வரை 1,173 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளார். ஜேம்ஸின் பிளாஸ்மாவில் அரியவகை ஆன்டிபாடி Anti-D இருந்துள்ளது. இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் ரீசஸ் நெகட்டிவை தடுக்க உதவியது
-
Mar 04, 2025 16:42 IST
எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. கூட்டணி குறித்து வரும் காலங்களில் பேசலாம் - அண்ணாமலை
அ.தி.மு.க உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, “எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. கூட்டணி குறித்து வரும் காலங்களில் பேசலாம்” என சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Mar 04, 2025 16:21 IST
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 150 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்பு - மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 150 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
-
Mar 04, 2025 16:03 IST
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ மனு!
முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி சி.பி.ஐ மனு தாக்கல் செய்துள்ளது. நிபந்தனைகளை மீறி சாட்சிகளை மிரட்டுவதாக சி.பி.ஐ புகார் தெரிவித்துள்ளது
-
Mar 04, 2025 15:54 IST
தன்னுடைய சாதனையை தானே முறியடித்த அஜித்
நடிகர் அஜித்குமார் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தன்னுடைய ரெக்கார்டை தானே முறியடித்து புது சாதனை படைத்துள்ளார். இந்தப் பந்தயத்தில் 270 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த நடிகர் அஜித்குமார், தனது பழைய ரெக்கார்டான ஒரு நிமிடம் 51 நொடிகள் என்ற சாதனையை தற்போது ஒரு நிமிடம் 47 நொடிகளில் முறியடித்துள்ளார்
-
Mar 04, 2025 15:13 IST
சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் மற்றும் கந்தசாமி ராஜசேகர் ஆகிய நான்கு பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
-
Mar 04, 2025 14:50 IST
இளையராஜாவை நேரில் சந்தித்த திருமாவளவன்
இசையமைப்பாளர் இளையராஜாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். இளையராஜா, லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் நிகழ்த்தவுள்ள நிலையில், அவரை சந்தித்த திருமாவளவன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
Mar 04, 2025 13:55 IST
தே.மு.தி.க-விற்கு இ.பி.எஸ் கேள்வி
தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் தருவதாக நாங்கள் எப்போது கூறினோம்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-விற்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று பிரமேலதா கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 04, 2025 13:42 IST
வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் 8-ஆம் தேதி வரை தமிழகத்தில் இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்ப நிலை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 04, 2025 13:22 IST
கரும்புக்கான கொள்முதல் விலை நிர்ணயம்
2024-25ஆம் ஆண்டு பருவத்திற்கான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 3151 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
Mar 04, 2025 13:20 IST
ஜிஎஸ்டி சாலையின் குறைந்த டிராபிக்
தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கணிசமாக குறைந்த போக்குவரத்து நெரிசல்
-
Mar 04, 2025 13:19 IST
தொண்டர்கள் துணை நிற்க வேண்டும் - இ.பி.எஸ் வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருக்கும் போது கட்சி வளர எப்படி துணை நின்றீர்களோ, அதேபோல எப்போதும் துணை நிற்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
-
Mar 04, 2025 13:06 IST
கவிஞரும் பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா காலமானார்
உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
-
Mar 04, 2025 12:33 IST
சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கட்டப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். 4.08 ஏக்கர் பரப்பளவில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் வரவேற்பு பகுதி, உடை மாற்றும் அறைகள், கழிப்பறை வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
-
Mar 04, 2025 12:31 IST
அனைத்துக்கட்சி கூட்டம் - தவெக பங்கேற்பு?
நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பதில் 2வது கட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்
-
Mar 04, 2025 12:23 IST
ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமனம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்படத்தில் எந்த அரசியல் காரணமும் இல்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
Mar 04, 2025 12:20 IST
சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜனவரி மாதம் நடைபெற்ற சி.ஏ அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23 ஆயிரத்து 861 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் 533 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 21.52 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் ஐதராபாத் மாணவர் முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
-
Mar 04, 2025 12:01 IST
காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை நிராகரிப்பு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Mar 04, 2025 11:53 IST
சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி: "திமுகவினர் காரணம் அல்ல"
தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி - கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக்கொள்கையே தவிர திமுகவினரோ, வேறு எந்தக் கட்சியினரோ அல்ல திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுவதாக வைக்கப்படும் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
-
Mar 04, 2025 11:30 IST
தேர்தல் வழக்கு - மாணிக்கம் தாக்கூர் மனு தள்ளுபடி
தனக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் சில குற்றச்சாட்டுகளை நீக்கக் கோரிய மாணிக்கம் தாக்கூர் மனு தள்ளுபடி
கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதற்கு எதிராக வழக்கு; தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கில் உள்ள சில குற்றச்சாட்டுகளை நீக்க கோரிக்கை -
Mar 04, 2025 11:29 IST
அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் வருகை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார் முதலமைச்சர். மூச்சுத்திணறல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தயாளு அம்மாள்.
-
Mar 04, 2025 11:27 IST
அப்போலோ மருத்துவமனைக்கு மு.க.அழகிரி வருகை
தாயார் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மு.க.அழகிரி வருகை தந்துள்ளார். தயாளு அம்மாள் உடல் நிலை, சிகிச்சை குறித்து மு.க.அழகிரி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
-
Mar 04, 2025 10:38 IST
தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள் - ஸ்டாலின்
"பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் 3 மொழி அல்ல 30 மொழி கூட கற்றுத் தாருங்கள். தமிழ்நாட்டை விட்டுவிடுங்கள்" என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். நாங்கள் கேட்பதெல்லாம் இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்பதுதான்; வட இந்தியர்கள் தமிழோ அல்லது வேறு தென்னிந்திய மொழியோ கற்க நாங்கள் வலியுறுத்தியதே இல்லை என்றும் கூறியுள்ளார்.
-
Mar 04, 2025 10:13 IST
பாமக உத்தேச பொருளாதார அறிக்கை
"2025-26ம் ஆண்டில் வருவாய் உபரி சாத்தியமில்லை, 2030ம் ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் வாய்ப்பில்லை". 2025-26ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறைரூ. 1.20 லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளது. அரசின் நேரடி கடன் ரூ.9.55 லட்சம் கோடி, மொத்த கடன் ரூ.15.05 லட்சம் கோடியாக உயரும் என பாமக வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Mar 04, 2025 10:12 IST
தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை இயக்கம்
தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் இன்று நள்ளிரவு முதல் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகரத்திற்குள் செல்ல கூடுதலாக 104 பேருந்துகள் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Mar 04, 2025 10:11 IST
விஜய் பகல் கனவு காண்கிறார் - ஜெயக்குமார்
“2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
-
Mar 04, 2025 09:48 IST
பேடிஎம் நிறுவனத்துக்கு இடி நோட்டீஸ்
ரூ.611 கோடி பணப்பரிமாற்றத்தில் விதிமீறல் புகார். பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓ.சி.எல்., அதன் நிர்வாக இயக்குனருக்கும் அமலாக்கத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
Mar 04, 2025 09:46 IST
தங்கம் விலை உயர்வு
கடந்த 5 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது விலை மீண்டும் உயர்ந்துள்ளது.ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ. 64,080க்கு விற்பனையாகிறது.
-
Mar 04, 2025 09:44 IST
வாயால் வடை சுட்ட சீமான் என விமர்சனம்
தமிழ்நாட்டில் எவ்வளவோ அவலங்கள் நடந்தபோதெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பி இருந்த சீமான். அனைத்து போராட்டங்களையும் களத்தில் இருந்து கம்யூனிஸ்டுகள் செய்தபோது வாயால் வடை மட்டுமே சுட்டு கொண்டிருந்தார் என மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
-
Mar 04, 2025 09:41 IST
20 திருமணங்கள் செய்த அதிசய மனிதர்!
20 திருமணங்கள் செய்து அதிலும் தகராறு இல்லாமல் 16 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வரும் அதிசய மனிதர். பழங்குடியினத்தில் கூடுதல் திருமணங்கள் செய்துகொள்ள தடை இல்லாததால் 1961யில் தொடங்கி தற்போது வரை 20 திருமணங்கள் செய்துள்ளார். தான்சானியா நாட்டைச் சேர்ந்த எம்.சி எர்னஸ்டோ முயினுச்சி கபிங்கா; 4 மனைவிகள் இறந்த நிலையில் அவருக்கு 104 வாரிசுகள், 144 பேரன் பேத்திகள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனி வீடு, தனித்தனியாக சமைத்தாலும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.
-
Mar 04, 2025 09:14 IST
பிறந்தநாள் வாழ்த்து கூறிய சகோதரி தமிழிசைக்கு நன்றி
தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து தெலுங்கு மொழியிலும் பிறந்தநள் வாழ்த்து கூறிய சகோதரி தமிழிசைக்கு நன்றி தேவைப்படும் எனில் எந்த மொழியையும் கற்கலாம் என்பதற்கு தமிழிசை தெலுங்கு கற்றதே எடுத்துக்காட்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
Mar 04, 2025 08:45 IST
வெயிலை சமாளிக்க காவலர்களுக்கு ஏசி தொப்பி
கொளுத்தும் வெயிலை சமாளிக்க, போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. பொருத்திய ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. நாரால் செய்யப்பட்ட தொப்பியையும் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர் வழங்கினார்.
-
Mar 04, 2025 08:43 IST
தொகுதி மறு வரையறை விவகாரம் - அப்பாவு ஆவேசம்
"மக்கள் தொகை அடிப்படையில் தான் எம்.பி சீட்டு வரும் என்றால் ஜிஎஸ்டியும் மக்கள் தொகை அடிப்படையில் வாங்கிக் கொள்வார்களா? " தொகுதி மறு வரையறை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 04, 2025 08:28 IST
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா
உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
Mar 04, 2025 08:27 IST
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான்
"தமிழ்நாடு இருமொழி கொள்கையைதான் பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என நேர்காணல் ஒன்றில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
-
Mar 04, 2025 08:26 IST
கர்நாடகாவில் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு வர மறுத்த ராஷ்மிகா மந்தனா. எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது என ராஷ்மிகா மாந்தனா சொன்னதால் பாடம் புகட்ட வேண்டாமா? என அம்மாநில எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
Mar 04, 2025 07:55 IST
வடஇந்தியாவில் தமிழ் பிரச்சார சபா உள்ளதா? - முதல்வர் ஸ்டாலின்
தென்னிந்தியர்கள் இந்தியை கற்க பல இடங்களில் இந்தி பிரச்சார சபா நிறுவப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழியைக் கற்றுக்கொள்ள வட இந்தியாவில் தமிழ் பிரச்சார சபா உள்ளதா? தமிழ் பிரச்சார சபாவையோ திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா? இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற பெயரில் தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Mar 04, 2025 07:21 IST
மது அருந்திய 19 வயது கல்லூரி மாணவி பலி
சென்னை அருகே படூரில் மது அருந்திய 19 வயது கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி "தோழியின் விடுதியில் நடந்த மது விருந்தில் 3-க்கும் மேற்பட்ட மதுபானங்களை அளவுக்கு அதிகமாக அருந்தியதே இறப்புக்கு காரணம்" போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 04, 2025 07:20 IST
வந்தவாசியில் அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் 3 ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் இருவரை தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Mar 04, 2025 07:19 IST
மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்க ஸ்டாலின் உத்தரவு
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கும் நிவாரணத்தொகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 04, 2025 07:17 IST
"தமிழையும், பிறமொழிகளையும் அழிப்பதுதான் பாஜகவின் ரகசியத் திட்டம்" - ஸ்டாலின்
பாஜகவின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும், சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதுதான். அதனால் தான் இந்தி படிக்க தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை? என்று கரிசனம் வழிவது போல கேட்கிறார்கள்.
-
Mar 04, 2025 07:14 IST
ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.