Chennai News Highlights: பிரேமலதா விஜயகாந்த்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMDK Premalatha Drum

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 08, 2025 05:41 IST

    வடநாட்டவர்கள் ஏன் மும்மொழி படிப்பதில்லை? - தயாநிதி மாறன் கேள்வி

    தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் “நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆங்கிலமும் தமிழும் படித்து எங்களது பிள்ளைகள் சிறப்பான முறையில் இத்தனை ஆண்டு காலம் சாதனை படைத்து வருகின்றனர். கூகுள் நிறுவனத் தலைவரே இருமொழிதான் படித்துள்ளார். வடநாட்டவர்கள் ஏன் மும்மொழி படிப்பதில்லை? எங்கள் பிள்ளைகள் மட்டும் மும்மொழி படிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.



  • Mar 07, 2025 22:08 IST

    சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச் செய்த பா.ஜ.க-வினர் 5 பேர் கைது

    சென்னை காரப்பாக்கம் பகுதியில் பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் பா.ஜ.க-வினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.



  • Advertisment
  • Mar 07, 2025 22:04 IST

    திருத்தணி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் ஸ்டாலின்

    திருவள்ளூர், திருத்தணியில் லாரி - பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறித்துள்ளார். லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட்ள்ளார்.



  • Mar 07, 2025 20:53 IST

    எடப்பாடி பழனிசாமி - மாஃபா பாண்டியராஜன் திடீர் சந்திப்பு

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாஃபா பாண்டியராஜனை கடுமையாக விமர்சித்து மிரட்டல் தொணியில் பேசியிருந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியை மாஃபா பாண்டியராஜன் சந்தித்தார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 07, 2025 20:05 IST

    ஏ.டி.எம். போல இனி பி.எஃப் கணக்கில் இருண்நு பணம் எடுக்கலாம் - மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா

    மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா: “பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும் ஏ.டி.எம் போல், இனி பி.எஃப் கணக்கிலிருந்தும் பணம் எடுக்க முடியும். கிளெய்ம்கலை விரைந்து செயல்படுத்துவது, முகவரி உள்ளிட்ட விவரங்களில் விரைவான திருத்தம், எந்த வங்கியிலிருந்தும் பி.எஃப் ஓய்வூதியத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கிழ் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.



  • Mar 07, 2025 20:02 IST

    தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்; ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்



  • Mar 07, 2025 19:28 IST

    நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி - விஜய்

    என்னுடைய அன்பான அழைப்பை ஏற்று இஸ்லாமிய மக்கள் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார் 



  • Mar 07, 2025 18:46 IST

    இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஜய்

    சென்னை, ராயப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏராளமான இஸ்லாமியர்களுடன் சேர்ந்து அவர் நோன்பு திறந்தார்.



  • Mar 07, 2025 17:47 IST

    த.வெ.க நிகழ்வு - கண்ணாடி கதவு உடைப்பு

    சென்னை, ராயப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்வு நடைபெறும் அரங்கின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Mar 07, 2025 17:09 IST

    தி.மு.க எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து - ஐகோர்ட் உத்தரவு 

    கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி பலியானது தொடர்பான வழக்கில் தி.மு.க எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்ததை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை மீண்டும் சட்டப்படி விசாரித்து தீர்ப்பளிக்க கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 



  • Mar 07, 2025 16:46 IST

    புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா - வழிகாட்டு நெறிமுறை

    ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் நடைமுறை  உள்ளிட்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது 



  • Mar 07, 2025 16:40 IST

    நடிகை ரன்யா ராவ்-க்கு 3 நாள் போலீஸ் காவல் 

     

    தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ்-க்கு 3 நாள் போலீஸ் காவல் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  



  • Mar 07, 2025 16:34 IST

    சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து

    போதிய பயணிகள் இல்லாததால் 2 வருகை, 2 புறப்பாடு விமானங்கள் என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமொகா செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Mar 07, 2025 16:22 IST

    'இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்' - அண்ணாமலை பேச்சு 

    "பள்ளி கல்வித்துறை அமைச்சர், பல மொழிகளை கற்று கொடுப்பதை பாடத்திட்டமாக கொண்ட பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடையாது என்று அமைச்சர் கூறுகிறார். இத்தனை ஆண்டு காலம் இது போன்ற இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்" என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

     



  • Mar 07, 2025 15:57 IST

    சட்டம் நம் பக்கம் இருக்கிறது - துரைமுருகன்

    "எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது அந்த அளவிற்கு விட்டு விட மாட்டோம். மேகதாது அணை - சட்டம் நம் பக்கம் இருக்கிறது, நியாயமும் நம் பக்கம் இருக்கிறது" என்று  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  



  • Mar 07, 2025 15:47 IST

    சீமான் பாதுகாவலர்கள் ஜாமின் கோரி மீண்டும் மனு

    நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுப் பணியாளர்  சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்கள். அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஜாமின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

     



  • Mar 07, 2025 15:44 IST

    குட்கா முறைகேடு வழக்கு -  நீதிமன்றம் உத்தரவு!

    குட்கா முறைகேடு வழக்கில் சி.விஜயபாஸ்கருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகை நகலை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு வழங்கியது சென்னை சிறப்பு நீதிமன்றம். தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்களை விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

     



  • Mar 07, 2025 15:19 IST

    ஞானசேகரனின் கூட்டாளி கைது

    சென்னை அண்ணா பல்கலை . மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனின் கூட்டாளி பொள்ளாச்சி முரளி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஞானசேகரனுடன் சேர்ந்து 2022-ல் 2 திருட்டு சம்பவங்களை பொள்ளாச்சி முரளி அரங்கேற்றியதாக பள்ளிக்கரணை போலீசார் தெரிவித்தனர். ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கியதாக நகை வியாபாரி குணால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.



  • Mar 07, 2025 14:59 IST

    மு.க.ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி

    "தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியலை கற்பிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியும் அதை செய்யாமல் இருப்பது ஏன்? கல்வி கொள்கையில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறும் முதல்வர், அமித்ஷா வலியுறுத்தியும் செய்யாமலிருப்பது ஏன்? ஆட்சியை பிடிக்க பல்வேறு அரசியல் நாடகங்களை நிகழ்த்திய நீங்கள் கடமையை செய்யாமல் ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? தமிழ் மொழியில் மாணவர்கள் படிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கூறுவதற்கு நீங்கள் கடமைபட்டுள்ளீர்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.



  • Mar 07, 2025 14:57 IST

    அரசு சார்பில் புதிய ஓடிடி தளம: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

    கன்னட திரைப்படங்களின் முன்னேற்றத்திற்காக மாநில அரசின் சார்பில் ஒடிடி தளம் உருவாக்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார்.



  • Mar 07, 2025 14:52 IST

    தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: 7 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்ற பிரதிநித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், முடிவுகள் குறித்தும் கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது தொடர்பாக வரும் 22ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக  7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சித்தராமையா, பினராயி விஜயன், பக்வத்சிங் மான், சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் சந்திரசேகர் ராவ், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



  • Mar 07, 2025 13:54 IST

    ராஜேந்திர பாலாஜி வழக்கு: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்குகள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது, இது குறிதது ஆளுனரின் செயலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



  • Mar 07, 2025 13:15 IST

    அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும்: வாலிலை மையம் தகவல்

    தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இன்று மூதல் 3 நாட்களுக்கு,  அதிகபட்ச வெப்பநிலை, 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும். வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,



  • Mar 07, 2025 12:58 IST

    மாணவர்களிடம் கையெழுத்து பெற்றால் நடவடிக்கை

    மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகின்றனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். 



  • Mar 07, 2025 12:35 IST

    சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை மையம்

    ரூ.200 கோடி முதலீட்டில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு உறுதி



  • Mar 07, 2025 12:18 IST

    தென் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதும் மு.க.ஸ்டாலின்

    அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடர்பாக பிற மாநில முதலமைச்சர்களுக்கு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்புகிறார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சர்களுடன் பேசவும் திட்டம்



  • Mar 07, 2025 12:14 IST

    பெண்கள் பாதுகாப்பிற்கான முன்னெடுப்பு.. புதிய திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    சென்னையில் ஆட்டோ, வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ அல்லது வாடகை கார்களில் செல்லும் சமயத்தில் ஆபத்து நேரிட்டால் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்



  • Mar 07, 2025 11:54 IST

    மேகதாது அணைக்கான ஆயத்தப் பணிகள் நிறைவு

    அதன் பிறகு இது போல காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நிறைவு என கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு. மத்திய அரசிடம் உரிய அனுமதி கிடைத்ததும் மேகதாது அணைக்கான பணிகள் தொடங்கும் என அறிவிப்பு



  • Mar 07, 2025 11:19 IST

    மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நீக்கம்

    மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம்
    கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிப்பு. 



  • Mar 07, 2025 11:12 IST

    2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்



  • Mar 07, 2025 11:09 IST

    தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. மத்திய சென்னை தொகுதிக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை செல்லாது என அறிவிக்ககோரி அதே தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் 



  • Mar 07, 2025 11:06 IST

    வேலை போன விரக்தியில் விபரீத முடிவு..!

    சென்னை: தேனாம்பேட்டையில் தன்னை வேலையை விட்டு நீக்கியதால் அலுவலகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, தற்கொலைக்கு முயன்ற பெண். தனியார் நிறுவன HR-இடம் போலீசார் விசாரணை! 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழும் இவர், தூய்மை பணிகளை மேற்கொண்டு தனது பிள்ளைகளை படிக்கவைத்து வந்துள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Mar 07, 2025 11:05 IST

    வெட்கக்கேடான நிலைக்கு தள்ளிய அரசு

    தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை; வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் அரசு தள்ளி இருப்பது கண்டனத்திற்குரியது அமலாக்கத் துறையால் கைதாகி பிணையில் வருவதை தியாகமாக ஊழல் திலகங்கள் கருதுகின்றனர்; இவர்களின் ஆட்சியில் நேர்மையை எப்படி எதிர்பார்ப்பது? என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியை எழுப்பியுள்ளார். 



  • Mar 07, 2025 10:20 IST

    மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் - அமித்ஷா

    ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. பிரதமர் மோடி தமிழுக்கும் அடஹ்ன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழ்நாட்டின் வளமான கலாசாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது.



  • Mar 07, 2025 10:18 IST

    சவரனுக்கு ரூ. 240 குறைந்த தங்கம் விலை!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 64,240க்கு விற்பனையாகிறது.



  • Mar 07, 2025 09:43 IST

    மாதவிடாய் விடுப்பு

    L&T நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் L&T தலைவர் SN.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.



  • Mar 07, 2025 09:42 IST

    இந்தி காலனித்துவம் - தமிழ்நாடு பொறுப்பேற்காது

    பாஜகவின் சர்க்கஸ் போல மும்மொழி ஃபார்முலா கையெழுத்துப் பிரச்சாரம் தமிழகத்தில் சிரிப்பலையாக மாறியுள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவம் வருவதை தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளாது என  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Mar 07, 2025 09:40 IST

    இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.



  • Mar 07, 2025 08:55 IST

    தற்கொலை விவகாரம் - பாடகி கல்பனா விளக்கம்

    "தூக்கமின்மை காரணமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை" என பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.



  • Mar 07, 2025 08:50 IST

    வீடு கட்ட உடனடி பட்டா

    மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பட்டா இடமும், வீடு கட்ட உதவுமாறும் கோரிக்கை வைத்த பெண் சுகன்யா. உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிசீலித்து, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள பட்டவை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.



  • Mar 07, 2025 08:49 IST

    CISF ஆண்டுவிழா - அமித்ஷா பங்கேற்பு

    ராணிப்பேட்டை மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56 ஆவது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை அமித்ஷா ஏற்றுக்கொண்டார். 



  • Mar 07, 2025 08:22 IST

    எந்த மொழிக்கும் திமுக எதிரியல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    திமுக எந்த மொழிக்கும் எதிரியல்ல; வலிந்து திணிக்கப்படும் மொழிகளையே எதிர்க்கிறது; இந்தி ஆதிக்கத்தில் இருந்து இந்திய மொழிகளை காப்பது திராவிட இயக்கத்தின் மொழிக்கொளகைதான். 



  • Mar 07, 2025 08:19 IST

    போட்டி கடிதத்துடன் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

    சாம்சங் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கொழிற்சங்க ஊழியர்கள் தொடர் போராட்டம். இனி போராட மாட்டோம் உள்ளிட்ட நிபந்தனைகளை உள்ள்டக்கிய கடிதத்தில் கையெழுத்திட வலியுறுத்தும் நிர்வாகம். சாம்சங் நிர்வாகத்தின் நிபந்தனை கடிதத்தில் கையெழுத்திட மறுத்து போட்டி கடிதத்துடன் வந்த ஊழியர்கள். 



  • Mar 07, 2025 07:50 IST

    தவெக சார்பில் இஃப்தார் நிகழ்வு-விஜய் பங்கேற்கிறார்

    தவெக சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1500 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.



  • Mar 07, 2025 07:48 IST

    புதுச்சேரி போலீசாருக்கு கட்டாய நடைபயிற்சி

    தொப்பையை குறைக்கும் வகையில், புதுச்சேரியில் போலீசாருக்கு கட்டாய நடைபயிற்சி. குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதியில் நடைபயிற்சியோடு அணிவகுப்பு.



  • Mar 07, 2025 07:47 IST

    சுனிலை வரவேற்ற FIFA

    கடந்தாண்டு ஓய்வு அறிவித்து மீண்டும் அணிக்குத் திரும்பிய இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி இதனைக் குறிப்பிட்டு FIFA உலக கோப்பையின் X தள பதிவிட்டுள்ளார்.



  • Mar 07, 2025 07:47 IST

    டாஸ்மாக் அலுவலகத்தில் 2 ஆவது நாளாக தொடரும் சோதனை

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Mar 07, 2025 07:29 IST

    தடையற்ற மின்விநியோகம்

    கோடை காலம், பட்ஜெட் தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 



  • Mar 07, 2025 07:24 IST

    பிடிவாதம் அல்ல தெளிவு

    "தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை, மொழிக் கொள்கையில் தெளிவாக உள்ளது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Mar 07, 2025 07:23 IST

    பாஜக அரசை விமர்சித்த முதலமைச்சர்

    இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கும் முயற்சிதான் இந்தித் திணிப்பு என்று பாஜக அரசை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: