/indian-express-tamil/media/media_files/2025/03/08/aMyNr9MfCmFKdhqkEIss.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 08, 2025 22:09 IST
மணிப்பூரில் மீண்டும் கலவரம்
மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. சுமார் 22 மாதங்களுக்கு பிறகு பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
-
Mar 08, 2025 21:09 IST
உத்தர பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலரும், பத்திரிகையாளருமான ராகவேந்திர பாஜ்பாய் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.
-
Mar 08, 2025 19:52 IST
ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறிய துரை வைகோ
மக்காச் சோளத்திற்கான 1% செஸ் வரி நீக்கப்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி., நன்றி தெரிவித்தார்.
-
Mar 08, 2025 19:00 IST
டி.டி.எஃப் வாசனின் வங்கி கணக்கு முடக்கம்
திருப்பதி மலையில் வீடியோ எடுத்த விவகாரத்தில் யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் வங்கி கணக்கு முடக்க்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், திருப்பதி மலைக்கு வந்திருந்த டி.டி.எஃப் வாசன், தரிசன வரிசையில் வீடியோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
Mar 08, 2025 18:48 IST
சுற்றுலா வந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை
கர்நாடக மாநிலம், ஹம்பியில் சுற்றுலா வந்த இஸ்ரேல் பெண்ணும், அவரது பனிப்பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அப்பெண், தன் மூன்று ஆண் நண்பர்களுடன் துங்கபத்ரா அணைக்கட்டுக்கு சென்றிருந்த போது, அங்கிருந்த கும்பல் 3 ஆண் நண்பர்களையும் வாய்க்காலில் தள்ளி விட்டு, இரு பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
Mar 08, 2025 18:33 IST
காங்கிரஸில் இருந்து கொண்டே சிலர் பா.ஜ.க-வுக்கு வேலை செய்கிறார்கள் - ராகுல் காந்தி
காங்கிரஸில் இருந்து கொண்டே சிலர் பா.ஜ.க-வுக்கு வேலை செய்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அதன்படி, "காங்கிரஸில் இருந்து கொண்டே பா.ஜ.க-வுக்கு வேலை செய்பவர்களை கட்சியில் இருந்து நீக்க உள்ளோம். குஜராத் காங்கிரஸ் கமிட்டியில் 40 பேர் வரை கட்சியில் இருந்து நீக்க தயார்" எனக் கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 18:09 IST
டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்கும் திட்டம்
டெல்லியில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்கும் `மஹிலா சம்ரிதி யோஜனா' திட்டத்திற்கு, அமைச்சரவையில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்காக டெல்லி பட்ஜெட்டில் ரூ. 5100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
Mar 08, 2025 16:36 IST
கோடை வெயில் தாக்கம்: மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
கோடை வெயில் காலத்தில் அதிகபட்ச மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் MW வரை பதிவாகும் என மின்வாரியம் கணித்துள்ள நிலையில், மே மாதத்தில் மின்தேவையை சமாளிக்க 8525 MW மின்சாரம் தனியாரிடம் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவுமு், அதீத வெப்பத்தால் மின்மாற்றிகள் பழுது , மின்மாற்றிகளில் தீப்பிடிப்பு, மின்தடை போன்ற சூழலை தடுக்க மாவட்ட வாரியாக புதிய மின்மாற்றிகளை கையிருப்பில் வைக்க நடவடிக்கை எடுகக்ப்பட வேண்டும் என்றும், மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு மின்வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 08, 2025 16:34 IST
கப்பல்களின் கட்டுமானத் திட்டங்கள் குறித்து வடகொரிய அதிபர் நேரில் ஆய்வு
கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானத் திட்டங்கள் குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு செய்துள்ள நிலையில், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை'' என்று கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 15:39 IST
தமிழக டி.ஜி.பி-க்கு பறந்த கடிதம்
"போக்சோ உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து உடனடியாக மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, தமிழக அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார்.
-
Mar 08, 2025 15:32 IST
பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள் - அமைச்சர் கீதா ஜீவன்
"பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான ஆட்சி என பச்சை பொய் கூறுகிறார்கள். மகளிர் மத்தியில் முதல்வருக்கு உள்ள நற்பெயரை கண்டு பொறுக்க முடியாமல் பேசுகிறார்கள். தமிழகத்தில் மகளிர் காவல் நிலையம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதிக்கப்படும் போது தைரியமாக புகார் அளிக்கிறார்கள், உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 15:27 IST
பெண்கள் சமூகத்தின் தூண்கள் - செல்வப்பெருந்தகை
"பெண்கள் ஒரு குடும்பத்தின் தூண் மட்டுமல்ல; சமூகத்தின் தூண்கள்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார். நீங்கள் விரும்பும் உலகை உருவாக்க, உங்கள் எண்ணங்களும் செயல்களும் புதிய பாதைகளை உருவாக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 15:12 IST
25 புறநகர் ரயில்கள் ரத்து
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Mar 08, 2025 15:04 IST
'கூட்டணி வைக்க அ.தி.மு.க தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது' - இ.பி.ஸ் பேச்சு
"எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது" என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக கட்சிகள் தவமாய் தவம் இருப்பதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 15:00 IST
இரட்டை இலை பலவீனப்பட்டு வருகிறது – டி.டி.வி தினகரன் பேச்சு
நாளுக்கு நாள் இரட்டை இலை சின்னம் பலவீனப்பட்டுக் கொண்டே வருகிறது என அமமும நாளுக்கு நாள் இரட்டை இலை சின்னம் பலவீனப்பட்டுக் கொண்டே வருகிறது என அமமும பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய ஒரு சிலர்தான் தடையாக உள்ளனர். தடைகளை எல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும். அதிமுகவினர் விழிப்புணர்வுடன் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதிமுகவினர் விழித்துக் கொள்ளவில்லை என்றால் 2026 தேர்தலுக்கு முன்போ, பிறகே இரட்டை இலை இருக்காது என்று கூறினார்.
-
Mar 08, 2025 14:16 IST
பெண்களைப் போற்றுவோம், பெருமைமிக்க நாடாக மாற்றுவோம் - சீமான் வாழ்த்து
"பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை பெற்றுத்தரவும் நாதக சமரசமின்றி சமர் செய்யும். ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம், உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்." என்று மகளிர் தினத்தையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 14:10 IST
பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னுரிமை - உதயநிதி பேச்சு
"பெண்கள் முன்னேற்றத்திற்காக முன்னுரிமை கொடுத்து திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் 1 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் கொடுக்கப்படுகிறது" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 13:42 IST
மத்தியப் பிரதேச முதல்வர் செயல்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது அலுவலகப் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைத்துள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.
-
Mar 08, 2025 13:29 IST
அ.தி.மு.க மீது அவதூறு பரப்பவேண்டாம் - எடப்பாடி பழனிசாமி!
கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கிறது என அண்ணாமலை சொன்னதாக தவறான தகவல் பரப்ப வேண்டாம் என கூட்டணி குறித்த அண்ணாமலை கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு கூட்டணி குறித்து பதில் சொல்கிறேன். அண்ணாமலை பேசியது குறித்து அ.தி.மு.க மீது அவதூறு பரப்பவேண்டாம். என்று கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 13:27 IST
ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் - தி.மு.க அறிவிப்பு
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 12:53 IST
பெண்கள், தியாகம் செய்ய பிறக்கவில்லை - மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
"ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும்; பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் உரிய மதிப்பு, மரியாதை, பாதுகாப்பு வழங்க வேண்டும்; கேலி பேசுவது, பெண்களின் வளர்ச்சியை கொச்சைப்படுத்துவது இருக்கவேகூடாது; அதுதான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. பெண்கள், தியாகம் செய்ய பிறக்கவில்லை" என்று மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Mar 08, 2025 12:35 IST
தவெக ஆர்ப்பாட்டம்... பேனரில் எழுத்துப் பிழைகள்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம். இதில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தவறிய என்பதற்கு பதிலாக 'தவரிய' என்றும், கண்டித்து என்பதற்கு பதிலாக ‘கன்டித்து' என்றும் எழுத்துப் பிழைகள் உள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது
-
Mar 08, 2025 12:33 IST
மகளிர் தின கொண்டாட்டம் - முதல்வர் பங்கேற்பு
தமிழ்நாடு காவல்துறையின் பெண் கமாண்டோ படையினர் சாகசம். தற்காப்பு கலைகளை நிகழ்த்தி காட்டிய பெண் கமாண்டோ படை. நிகழ்ச்சியால் முதல் கலந்து கொண்டுள்ளார்.
-
Mar 08, 2025 12:18 IST
மகளிர் தினம் - மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!
“பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் உண்மையான தேசத்தைக் கட்டமைக்க முடியாது. அவர்களின் தலைமை, வலிமை மற்றும் தொலைநோக்குப் பார்வை முன்னேற்றத்திற்கு முக்கியமானவை. ஆட்சியிலும் அவர்களின் சமமான பங்கை உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 106வது சட்டத் திருத்தத்தில் உள்ளபடி பெண்களுக்கு அதிகாரம் கொடுங்கள், தேசத்திற்கு அதிகாரம் கொடுங்கள் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் மகிலீர் தின வாழ்த்து கூறியபோது பேசினார்.
-
Mar 08, 2025 11:36 IST
திமுக அரசை 2026ல் மாற்றுவோம் - விஜய்
எல்லாமே இங்கு மாறக் கூடியதுதான்; மாற்றத்துக்கு உரியதுதான்; மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இந்த அரசை நாம் எல்லோரும் சேர்ந்து 2026இல் மாற்றுவோம். நாம் என எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம்; ஆனால் இந்த அரசு எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்பது இப்போதுதான் தெரிகிறது என்று தவெக தலைவர் விஜய் மகளிர் தின வாழ்த்து சொல்லியபோது கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 11:14 IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின கொண்டாட்டம்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடந்து வருகிறது. கேக் வெட்டி, பெண் நிர்வாகிகளுக்கு பகிர்ந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
-
Mar 08, 2025 10:55 IST
தமிழகத் தாய்மார்கள்... அண்ணாமலை மகளிர் தின வாழ்த்து
சர்வதேச மகளிர் தினமான இன்று தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 10:25 IST
திமுக அரசை மாற்றுவோம் - விஜய்
நீங்கள், நாம் என எல்லோரும் சேர்ந்துதான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம்; ஆனால் அந்த திமுக அரசு எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக் கூடியதுதான்; மாற்றத்துக்கு உரியதுதான்; மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசை 2026யில் மாற்றுவோம் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 09:56 IST
மகளிர் தினத்தையொட்டி மாரத்தான்
உலக மகளிர் தினத்தையொட்டி, ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 1000க்கும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
Mar 08, 2025 09:55 IST
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
மகளிர் தினத்தன்று நமது பெண் சக்திக்கு தலை வணங்குகிறோம். எங்கள் அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது என்பது திட்டங்களில் பிரதிபலிக்கிறது. பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் எனது சமூக ஊடக கணக்குகள் இன்று கையாளப்படும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எங்கள் அரசு பாடுபட்டுள்ளது என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 09:04 IST
ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு வாழ்த்து
மாணவ, மாணவிகள் என்னை அப்பா அப்பா என அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்; மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களால் பெண்கள் பயனடைகின்றனர். திமுக ஆட்சியில் மகளிருக்கான திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 09:00 IST
கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை நத்தம் விஸ்வநாதன் பதில்
பாஜக கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், யாரும் தவம் கிடக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
-
Mar 08, 2025 08:59 IST
ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு
ஸ்பெயினில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது.
-
Mar 08, 2025 08:27 IST
சர்வதேச மகளிர் தினம்- தமிழிசை வாழ்த்து
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி, சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன். சர்வதேச மகளிர் தினத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 08:26 IST
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென்னிந்திய மாநிலங்களை பாஜக பழிவாங்க துடிக்கிறது. மத்திய அரசு அனைத்து கட்சிக்கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
-
Mar 08, 2025 08:24 IST
மகளிருக்கு பிங்க் ஆட்டோக்களை முதல்வர் வழங்குகிறார்
உலக மகளிர் தினத்தையொட்டி பெண் ஓட்டுநர்களுக்கு 250 பிங்க் ஆட்டோக்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
Mar 08, 2025 07:47 IST
மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு
திமுக சார்பில் வரும் 12 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Mar 08, 2025 07:45 IST
ரூ. 80 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்.
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு ரூ. 80 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்திச் சென்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 11 பேரிடம் விசாரணை. கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து பறிமுதல் செய்தனர். இதில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்.
-
Mar 08, 2025 07:43 IST
லண்டனில் இளையராஜா கான்செர்ட்
லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கிய சிம்பொனியை இன்று இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றுகிறார்.
-
Mar 08, 2025 07:41 IST
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது; தமிழக அரசை மீறி மத்திய அரசால் ஒப்புதல் வழங்க முடியாது; சட்டம் நம் பக்கம் உள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாட்க முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்த நிலையில் தமிழக அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.