Chennai News Highlights: மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்தே தீரும் - அண்ணாமலை

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai

இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 10, 2025 23:19 IST

    ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவன் மீது சாதி ரீதியாக தாக்குதல்; திருமாவளவன் கடும் கண்டனம்

    வி.சி.க தலைவர் திருமாவளவன்: “தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் மீது சாதிவெறியர்கள் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன; தமிழக உரிய நடவடிக்கைகளை எடுத்து சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 10, 2025 20:31 IST

    தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னையில் மார்ச் 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் கட்சி  அறிவிப்பு

    தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை அநாகரிகமாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (மார்ச் 11) அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Mar 10, 2025 20:04 IST

    கதுவாவில் 3 சிவிலின்கள் மரணம்: அரசியலாக்க முயற்சிகள் நடக்கிறது - ஒமர் அப்துல்லா

    திங்கட்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய ஒமர் அப்துல்லா, இறப்புகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி, துயரமடைந்த குடும்பத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

    கதுவாவில் உள்ள ஒரு ஆற்றில் மூன்று பொதுமக்கள் இறந்து கிடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, முதல்வர் உமர் அப்துல்லா, இந்த இறப்புகளை "அரசியலாக்க" முயற்சிகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் சர்மாவின் சமீபத்திய வருகை குறித்தும் அவர் ஆச்சரியம் தெரிவித்தார், துணை முதல்வர் சுரிந்தர் குமார் சவுத்ரி அங்கு செல்வதைத் தடுத்தபோது அவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்று ஆச்சரியப்பட்டார்.



  • Mar 10, 2025 18:50 IST

    விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் டீசர் எப்போது?

    அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் டீசர் வரும் 12ம் தேதி மாலை 5.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது



  • Advertisment
    Advertisements
  • Mar 10, 2025 18:21 IST

    மத நல்லிணக்கம் தொடர்பாக தி.மு.க அரசின் சாயம் வெளுக்கிறது – த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர்

    மத நல்லிணக்கம் வலியுறுத்தும் பேரணியை எந்த கட்சி நடத்தினாலும் அது கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று. அனுமதிக்காததன் மூலம் மத நல்லிணக்கம் தொடர்பாக தி.மு.க அரசின் சாயம் வெளுக்கிறது என த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.



  • Mar 10, 2025 17:53 IST

    நான் தற்கொலைக்கு முயலவில்லை - பாடகி கல்பனா

    நான் தற்கொலைக்கு முயலவில்லை. மகா சிவராத்திரி வரை மிகவும் சிரமப்பட்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். எனக்கும், என் கணவருக்கும் பிரச்சினை என கூறினார்கள். என் பின்னால் என் கணவர் தான் உள்ளார், அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் சாதிக்க முடிகிறது என பின்னணி பாடகி கல்பனா தெரிவித்துள்ளார்



  • Mar 10, 2025 17:28 IST

    பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி அறிவிப்பு

    பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகைகள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாகவும், இரு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.25000இலிருந்து ரூ.50000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது



  • Mar 10, 2025 17:11 IST

    திருத்தணி புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு காமராசர் பெயர்

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்



  • Mar 10, 2025 16:59 IST

    பூஜா ஹெக்டே சொந்த குரலில் தமிழில் டப்பிங் 

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் காமிக் காட்சிகளை  படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்காக முதன்முதலாக சொந்த குரலில் தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. 



  • Mar 10, 2025 16:58 IST

    பீகாரில் துப்பாக்கி முனையில் கொள்ளை 

    பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகை கடைக்குள் புகுந்து ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகையை கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் "ஹேப்பி ஹோலி"  என வாழ்த்து கூறியுள்ளனர். 

     



  • Mar 10, 2025 16:56 IST

    பள்ளி கட்டட பராமரிப்பு - தமிழக அரசுக்கு பரிந்துரை

    தர்மபுரியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில்  பலியான மாணவனின் தந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது  "மழை மற்றும் பள்ளி திறக்கும் காலங்கள், மாதம்  ஒரு முறை பள்ளி கட்டடங்களின் நிலை குறித்து ,ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்" என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 10, 2025 16:44 IST

    ஓய்வு பற்றி மனம் திறந்த விராட் கோலி 

    "இளம் வீரர்கள் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து சென்று போட்டிகளை வெல்ல முடியும் என்று தெரிந்த பிறகே ஓய்வு பெறுவேன்" என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்  விராட் கோலி கூறியுள்ளார். 

     



  • Mar 10, 2025 16:34 IST

    மக்களை மதரீதியாக பிரித்து ஆட்சியில் நீடிக்க விரும்பும் பா.ஜ.க: திருமா தாக்கு

    வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேசுகையில், "இந்து மத நம்பிக்கை வேறு. அதனை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு. மத குருமார்களை வைத்து அரசியல் செய்வதை நாம் கண்டிக்க வேண்டும். சங்கராச்சாரியார்கள் பாஜவை கண்டிக்காமல் இருக்கின்றனர். சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைக்கின்றனர். நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வில் வெள்ளையனை வெளியேற்ற போராடினோம். ஆனால், பாரதீய ஜனதா இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் என மக்களை மத ரீதியாக பிரித்து, ஆட்சியில் நீடிக்க விரும்புகிறது.

    ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என, பாஜவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒரே நாளில் கொண்டு வந்து, ஓபிசி பிரிவினருக்கு துரோகம் செய்தனர். இந்த நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால், மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்"  என்று அவர் கூறியுள்ளார்.  



  • Mar 10, 2025 16:14 IST

    நயன்தாரா - தனுஷ் தொடர்ந்த வழக்கு -  ஏப்.9ம் தேதி இறுதி விசாரணை

    நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். 



  • Mar 10, 2025 16:03 IST

    யார் அந்த சூப்பர் முதல்வர்?  - அண்ணாமலை கேள்வி 

    "தி.மு.க-வினர் நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார். மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சி.பி.எஸ்.இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?. யார் அந்த சூப்பர் முதல்வர்?  ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது " என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

     



  • Mar 10, 2025 16:00 IST

    தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை - தி.மு.க-வினர் போராட்டம்

    தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மக்களை நாகரிகமற்றவர்கள் என விமர்சித்த அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் தர்மேந்திர பிரதானை கண்டித்து தி.மு.க-வினர் முழக்கமிட்டு வருகின்றனர்.



  • Mar 10, 2025 15:17 IST

    நயன்தாரா மீது தனுஷ் வழக்கு: ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ₹10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் 



  • Mar 10, 2025 15:13 IST

    தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு எம்.பி.க்களை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்



  • Mar 10, 2025 14:32 IST

    போரூர் ஏரியி மீன் பிடிக்க வீசிய வலையில் சிக்கிய ஆண் சடலம்: போலீஸ் விசாரணை

    சென்னை போரூர் ஏரியில் மீன் பிடிக்க வீசிய வலையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் சிக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் என தகவல்



  • Mar 10, 2025 14:27 IST

    தலைமைச் செயலகம் அருகே பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து

    தலைமைச் செயலகம் அருகே பள்ளி வேன் மீது கார் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்தில் பள்ளி மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக ராஜாஜி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



  • Mar 10, 2025 13:46 IST

    ராணிப்பேட்டை அரசுப்பள்ளிக்கு ரூ10 லட்சம் நிதி வழங்கிய எம்.பி என்.ஆர்.இளங்கோ

    நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குப் பயன்படுத்திடும் வகையில் ரூ10 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் என்.ஆர்.இளங்கோ எம்.பி.,



  • Mar 10, 2025 13:42 IST

    உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையில், தமிழக எம்.பிக்களை அநாகரிகமானவர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதை பிரதமர் ஏற்கிறாரா? பிரதான் அவர்களே, “நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்.. உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.



  • Mar 10, 2025 13:29 IST

    பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: முதல்வர்

    “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தன்னை மன்னரென எண்ணிக்கொண்டு ஆணவத்துடன் பேசுகிறார் தர்மேந்திர பிரதான் நிதியை தராமல் ஏமாற்றுபவர்கள் தமிழ்நாட்டு எம்பிக்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என்பதா?” என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியுள்ளார். 



  • Mar 10, 2025 13:12 IST

    "தமிழ் மக்களை தர்மேந்திர பிரதான் அவமதித்துள்ளார்"

    மக்களவையில் ‘தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்” என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து தெரிவித்துள்ளார். PM SRHI திட்டத்தை ஏற்க தமிழ்நாடு அரசு முதலில் ஒப்புக்கொண்டதாக மக்களவையில் தர்மேந்திர பிரதான் உண்மைக்கு புறம்பாக பேசியதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 



  • Mar 10, 2025 12:42 IST

    மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் - கனிமொழி

    “மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது; மத்திய அமைச்சர் தர்மேந்திர் பிரதானின் பேச்சு வருத்தமளிக்கிறது” என்று மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி பேசியுள்ளார். 



  • Mar 10, 2025 12:17 IST

    கோத்ரேஜ் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்த முதல்வர்

    ரூ.515 கோடி முதலீட்டில் கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.  கோத்ரேஜ் நிறுவன ஆலையால் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு



  • Mar 10, 2025 11:47 IST

    திமுக எம்.பி.க்கள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

    தமிழ்நாடு எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு; “தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்காதே” என தமிழில் முழக்கம் எழுப்பிய எம்.பிக்கள் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது குறித்து திமுக எம்.பி.க்களின் அமளி



  • Mar 10, 2025 11:28 IST

    மாசி திருவிழா - தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

    திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் மாசி தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்



  • Mar 10, 2025 11:26 IST

    "மாணவர்களை தமிழ்நாடு அரசு வஞ்சிக்கிறது"

    “தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களை மாநில அரசு பெரிய அநீதி இழைக்கிறது; பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கர்நாடகா உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். 



  • Mar 10, 2025 11:25 IST

    மத்திய அரசு பழிவாங்குகிறது - தமிழச்சி தங்கபாண்டியன்

    “புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் மத்திய அரசு பழிவாங்குகிறது; தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது மத்திய அரசு” என்று  மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசியுள்ளார். 



  • Mar 10, 2025 11:18 IST

    நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடக்கம்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கூட்டத் தொடர் தொடங்கியது. மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப உள்ள எதிர்க்கட்சிகள்; சாம்பியன்ஸ் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து



  • Mar 10, 2025 11:10 IST

    ஆமை வேகத்தில் மேம்பால பணி - பொதுமக்கள் அவதி

    செங்கல்பட்டு அருகே 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணி மேம்பால பணிகளுக்காக ரயில்வே கேட் முன்பு சுவர் வைத்து அடைத்ததால் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் - பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை



  • Mar 10, 2025 10:05 IST

    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து 64,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,050 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



  • Mar 10, 2025 10:03 IST

    லலித் மோடிக்கு வனுவாட்டு குடியுரிமை ரத்து

    வனுவாட்டு தீவில் தொழிலதிபர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட குடியுரிமையை ரத்து செய்ய குடியுரிமை ஆணையத்திற்கு வனுவாட்டு தீவு பிரதமர் நபாத் உத்தரவிட்டுள்ளது.



  • Mar 10, 2025 09:07 IST

    13 தேசங்களில் சிம்பொனி இசை

    சென்னை வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இளையராஜா, மலர்ந்த முகத்தோடு என்னை வழியனுப்பி வைத்தது மகிழ்ச்சி. என்னுடைய இசை குறிப்புகளை சரியாக இசைக் கலைஞர்கள் வாசித்தார்கள். சிம்பொனி - அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி ரசித்தனர். சிம்பொனி இசையை கைத்தட்டி ஆரவாரம் செய்தது மகிழ்ச்சி. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த விஷயமாக மாறிய சிம்பொனி. தமிழக மக்கள் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சியளிக்கிறது.சிம்பொனி இசையை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள். என்னுடைய பாடல்களை வெளிநாட்டு இசைக் கலைஞர்களை இசைக்க வைத்தேன். சிம்பொனி இசையை அமைதியாக இருந்து கேட்பது சிறப்பு. சிம்பொனி இசை - உலகமெங்கும் கொண்டு செல்லப்படும். இது ஆரம்பம்தான் என்றார்.



  • Mar 10, 2025 09:05 IST

    விபத்தில் சிக்கிய லாரி - கேஸ் கசிவால் பரபரப்பு

    அருப்புக்கோட்டை அருகே மருத்துவ கேஸ் ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து. மருத்துவ கேஸ் லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம்.



  • Mar 10, 2025 09:03 IST

    ரவுடி படுகொலை

    புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஐயப்பன் (48), திருவண்ணாமலையை அடுத்த நீலந்தாங்கல் பகுதியில் வெட்டிப்படுகொலை. சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ஐயப்பன், திருவண்ணாமலை பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் டி.எஸ்.பி. அறிவழகன் விசாரணை.



  • Mar 10, 2025 09:02 IST

    நான் இசை தெய்வமல்ல: இளையராஜா

    ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம்; இனிமேல்தான் ஆரம்பிக்க போகிறேன் என சென்னை விமான நிலையத்தில் இளையராஜா பேட்டி அளித்தார்.



  • Mar 10, 2025 08:39 IST

    ஓய்வு - விராட் கோலி பதில்

    இந்திய அணி சிறந்த இடத்தில் இருக்கும்போது அணியை விட்டு வெளியேற வேண்டும் என ஓய்வு குறித்த கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்துள்ளார். அடுத்த 8 ஆண்டுகளுக்கு உலகை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருப்பதாகவும் பேட்டி அளித்துள்ளார்.



  • Mar 10, 2025 08:37 IST

    விஜய்க்கு திருமாவளவன் பாராட்டு

    தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தவெக தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி என விசிக தலைவர் பாராட்டியுள்ளார்.



  • Mar 10, 2025 08:35 IST

    சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

    சிம்போனி அரங்கேற்றம் முடிந்து சென்னை வந்த இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



  • Mar 10, 2025 08:06 IST

    இன்று முதல் ஜெயிலர்-2 படப்பிடிப்பு..!

    ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. சென்னையில் 15 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் பல்வேறு நடிகர்கள் பங்கேற்கிறார்கள்.



  • Mar 10, 2025 08:02 IST

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடக்கம்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்க உள்ள நிலையில் வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டம.. பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து விவாதிக்க வேண்டும் எனக்கோர எதிர்க்கட்சிகள் திட்டம். 



  • Mar 10, 2025 07:57 IST

    ஓய்வுபெறும் எண்ணமில்லை: ரோகித் சர்மா

    ஒருநாள் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. ஓய்வு என்ற கேள்விக்கே இடமில்லை என இந்திய கேப்டன் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.



  • Mar 10, 2025 07:36 IST

    இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ``ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் முழுவதும் அசத்தலாக விளையாடியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.



  • Mar 10, 2025 07:35 IST

    இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை 3வது முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து. ``சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.



  • Mar 10, 2025 07:34 IST

    கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி

    ஜஸ்டின் ட்ரூடோ விலகலை தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமராகிறார் மார்க் கார்னி. லிபரல் கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்கிறார். கனடாவில் இந்தாண்டு அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது, அதுவரை பிரதமராக மார்க் கார்னி நீடிப்பார்.



  • Mar 10, 2025 07:33 IST

    எம்பியின் அசத்தல் ஆஃபர்..!

    மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றுக்கொண்டால் 50 ஆயிரமும் ஆண் குழந்தை பெற்றெடுத்தால் மாடும் பரிசாக வழங்கப்படும் என ஆந்திர எம்.பி.அப்பலா நாயுடு அறிவித்துள்ளார்.



  • Mar 10, 2025 07:31 IST

    விக்ரமன் மனைவி புகார்

    அடுக்குமாடி குடியிருப்பில் லேடி கெட்டப்பில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக திருவேற்காடு காவல் நிலையத்தில் பிக்பாஸ் பிரபலம் விக்ரமனின் மனைவி புகார் அளித்துள்ளார். 



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: