/indian-express-tamil/media/media_files/2025/03/11/6HySxOIVOXlWya0bir4Y.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 11, 2025 23:53 IST
பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு
தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள் என நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். குறிப்பாக, "உங்களது போராட்டம் அநாகரீகமானது என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 11, 2025 21:31 IST
தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதிலடி
தவறான தகவலை பரப்புவதால் உண்மைகள் மாறாது என தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். அதன்படி, "15.3.2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதல் இல்லை. குழு அமைக்கப்படும் என்றும், அதன்படி முடிவு எடுக்கப்படும் என்றும் தான் கடிதத்தில் தெளிவாக கூறியிருந்தோம். தமிழ்நாட்டின் கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 11, 2025 20:34 IST
மோடியின் அரசு தமிழர்களுக்கு எதிரானது அல்ல - தர்மேந்திர பிரதான்
மோடியின் அரசு தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, "புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. மோடி கூறியது போல் தமிழ் மிக மூத்த மொழி என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 11, 2025 19:38 IST
100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் - தர்மேந்திர பிரதான்
தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு, தான் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என அவர் பேசியதற்கு கண்டனம் வலுத்த நிலையில், தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
-
Mar 11, 2025 19:09 IST
மார்ச் 14 முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல்
த.வெ.க தலைவர் விஜய்க்கு, மார்ச் 14-ஆம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Mar 11, 2025 18:42 IST
வரியை குறைக்க சொல்லாதீர்கள் - நிதின் கட்கரி
நாங்கள் வரியை குறைத்தால், நீங்கள் இன்னும் அதிகம் குறைக்கச் சொல்லி கேட்பீர்கள். பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரியை குறைக்க கோரிக்கை வைக்க கூடாது. வரி வருவாய் இல்லாமல் மக்கள் நலத்திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்; அரசாங்கம் எப்படி இயங்கும்? என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்
-
Mar 11, 2025 18:18 IST
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவு
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
-
Mar 11, 2025 18:17 IST
ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி
காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதற்கு கண்டனம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
-
Mar 11, 2025 18:03 IST
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்
பாகிஸ்தானின் போலன் நகரில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை ராணுவம் கடத்தியுள்ளது. கடும் தாக்குதலுக்குப் பிறகு, நூற்றுக்கும் மேற்பட்டோரை பலூச் கிளர்ச்சிப் படை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்றுவிடுவதாக பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Mar 11, 2025 17:36 IST
கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் தன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
-
Mar 11, 2025 17:30 IST
கஞ்சா பயன்படுத்தியதாக புகார் - 3 பயிற்சி மருத்துவர்கள் கைது
மருத்துவ மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி அறைகளில் கஞ்சா, கேட்டமைன் ஊசி வடிவில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 பயிற்சி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ரோட்னி ரோட்ரிகோ என்பவரை கைது செய்த காவல்துறை, 1.4 கிலோ கிரீன் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளது.
-
Mar 11, 2025 16:39 IST
மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது பா.ஜ.க அரசுதான் - லோக்சபாவில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன்
லோக்சபாவில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பேச்சு: “மணிப்பூரை கலவர பூமியக மாற்ற யார் காரணமாக இருந்தார்களோ அவர்கள்தான் அதை சரி செய்ய வேண்டும். எனவே, மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது பா.ஜ.க அரசுதான். இரட்டை எஞ்ஜின் ஆட்சி எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்தியாவுக்கே அம்பலப்படுத்தி உள்ளடு மணிப்பூர் கலவரம்” என்று கூறினார்.
-
Mar 11, 2025 16:36 IST
எனது கூட்டத்திற்கே தமிழக அமைச்சர்கள் வரவில்லை - லோக்சபாவில் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “நானே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒரு முறை வேளாண் துறை பணிக்காகவும், ஒரு முறை ஊரக வளர்ச்சிக்காகவும் வந்தேன். இப்போது நான் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. ஆனால், இரண்டு முறையும் தமிழக ஊரக வளர்ச்சி அமைச்சரோ அல்லது வேளாண் அமைச்சரோ எனடு கூட்டத்திற்கு வரவில்லை” என்று கூறினார்.
-
Mar 11, 2025 16:32 IST
நாம் அனைவரும் இந்திய தாயின் மகன்கள்; பாகுபாடுக்கு இடமில்லை - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “தமிழகத்திற்கான உதவிகளைத் தர மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. தமிழக மக்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் போற்றுகிறேன். நாம் அனைவரும் இந்திய தாயின் மகன்கள்; இதில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியுள்ளார்.
-
Mar 11, 2025 16:28 IST
பாலியல் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட 23 பேர் பணியில் இருந்து நீக்கம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி
பாலியல் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத 23 பேரை பணியில் இருந்து நீக்கி பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போக்ஸோ வழக்கில் 53 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 23 பேர் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
-
Mar 11, 2025 15:55 IST
இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - தி.மு.க எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு
மாநிலங்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு, “தமிழ்நாட்டுக்கான உள்கட்டமைப்பு நிதிகளை பிற மாநிலங்களுக்கு வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் இருமொழி கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று பேசினார்.
-
Mar 11, 2025 15:24 IST
வருத்தம் தெரிவித்தாலும் தமிழர்கள் மீது பா.ஜ.க.வினரின் வன்மம் வெளிப்பட்டுவிட்டது - ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்.
2025-ல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!.
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 11, 2025 15:10 IST
தொகுதி மறுசீரமைப்பு - 'ஒருபோதும் ஏற்க முடியாது': மக்களவையில் தி.மு.க எம்.பி பேச்சு
மக்களவையில் தி.மு.க எம்.பி. கிரிராஜன் பேசுகையில் , “மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் பல தொகுதிகளை இழக்கும். அதேநேரத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்தரப்பிரதேசம், பீகார்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பல தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தரும் தண்டனையா இது?. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.
-
Mar 11, 2025 14:56 IST
ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து - பயணிகள் படு காயம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செம்மேடு பகுதியில் சாலையோர பள்ளத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
-
Mar 11, 2025 14:15 IST
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல்ராஜா கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டில் பிரபல ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ரவுடி வசூல்ராஜா மீது 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Mar 11, 2025 13:47 IST
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 11, 2025 13:31 IST
பிளாக் மெயில் செய்யும் மத்திய அமைச்சர் - ஸ்டாலின் தாக்கு
"செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 25,965 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது. இன்று 13,960 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. நகர்ப்புறங்களில் நீண்டகாலமாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். செய்யூர் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்கா
இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு. சில தடைகள் இல்லாமல் இருந்தால் தமிழகம் மேலும் வேகமாக வளரும். இந்தியை ஏற்றால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி என மத்திய அமைச்சர் திமிராக பேசுகிறார். கல்வியில் இருந்து மாணவர்கள் நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல் திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாக் மெயில் செய்கிறார்.
மத்திய அரசின் சதிகளுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடுவதால் பொறுக்க முடியவில்லை. தமிழகத்தின் உரிமைகளுக்காக போர் குணத்தோடு போராடும் தி.மு.க எம்பிக்கள்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். -
Mar 11, 2025 13:00 IST
"முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்” - முதல்வர் ஸ்டாலின்
-
Mar 11, 2025 12:54 IST
"கல்வி நிதி குறித்து விவாதிக்க அனுமதி தரப்படவில்லை''
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க மக்களவையிலும் அனுமதி மறுப்பு. கனிமொழி நோட்டீஸ் கொடுத்த நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்துவிட்டார்; துரை வைகோ, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கோரியிருந்தனர்; தொகுதி மறுசீரமைப்பு, கல்வி நிதி குறித்து விவாதிக்க ஏற்கனவே மாநிலங்களவையிலும் அனுமதி மறுப்பு
-
Mar 11, 2025 12:40 IST
“ஐ.பி.எல் விளம்பரம் - பாமகவிற்கு கிடைத்த வெற்றி” -அன்புமணி
“ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது, புகையிலை தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும். எங்களின் கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி” என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Mar 11, 2025 12:20 IST
பேருந்தில் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்
மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். 100 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்
-
Mar 11, 2025 12:18 IST
சீமான் வீட்டு பாதுகாவலர்களின் ஜாமின் வழக்கில் உத்தரவு
சீமான் வீட்டு பாதுகாவலர்கள் ஜாமின் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக, கைதான இருவரும் ஜாமின் கோரி மனு - மார்ச் 13க்கு தள்ளிவைப்பு
-
Mar 11, 2025 11:45 IST
மனுவை திரும்பப்பெற்றார் ஈபிஎஸ்
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப்பெற்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என தயாநிதி மாறன் குறித்து தேர்தல் நேரத்தில் பேசிய ஈபிஎஸ்; வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி
-
Mar 11, 2025 11:41 IST
நாடாளுமன்றம் தொடங்கியதும் திமுக எம்.பி.க்கள் அமளி
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கம். திமுக எம்.பி.க்கள் குறித்து பேசிய தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோர வேண்டும் என முழக்கம்.
-
Mar 11, 2025 11:13 IST
சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை
சென்னை அம்பத்தூர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தகவல்
-
Mar 11, 2025 11:06 IST
திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, மதிமுக எம்.பி. வைகோ, விசிக எம்.பி. திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 11, 2025 10:55 IST
திருப்பதியில் பக்தர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையின் மேற்கூரை இடிந்து விபத்து
திருப்பதியில் பக்தர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையின் மேற்கூரை இடிந்து விபத்து. ஓட்டல் அறையில் இருந்து அலறி அடித்து வெளியே ஓடி வந்த பக்தர்கள் சப்தம் கேட்டு மற்ற அறையில் தங்கியிருந்த பக்தர்களும் வெளியேறினர். திருப்பதி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த போலீசார்.
-
Mar 11, 2025 10:49 IST
வேங்கை வயல் விவகாரம் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
-
Mar 11, 2025 10:00 IST
பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்களுக்கு சலுகை
பேருந்துகளில் 100 கிமீ வரை, 25 கிலோ வரையிலான பொருட்களை சுய உதவிக்குழு பெண்கள் கட்டணமின்றி எடுத்து செல்லலாம். சுய உதவி குழு அடையாள அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு, பேருந்துகளில் கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
-
Mar 11, 2025 09:44 IST
கனிமொழி எம்.பி. மக்களவை ஒத்திவைப்பு கடிதம்
கல்வி நிதி குறித்து விவாதிக்க அவை அலுவலை ஒத்திவைக்கக் கோரி சபாநாயகருக்கு கனிமொழி எம்.பி மக்களவை ஒத்திவைப்பு கடிதம்.
-
Mar 11, 2025 09:39 IST
சென்னை வந்தடைந்த ஜடேஜா
சாம்பியன்ஸ் டிராஃபியை வென்ற பின் சென்னை வந்தடைந்த இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி. ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இன்று சிஎஸ்கே அணியுடன் இணைந்தார் ஜடேஜா.
-
Mar 11, 2025 09:38 IST
சென்னையை குளிர்வித்த கோடை மழை!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், செம்பாக்கம், சேலையூர், இரும்புலியூர், பெருங்களத்தூர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில்ம் மழை.
-
Mar 11, 2025 08:55 IST
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு நீக்கம்
தமிழ்நாட்டு எம்.பி.க்கள் குறித்து மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய சர்ச்சைக்குரிய பகுதி அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
-
Mar 11, 2025 08:36 IST
மொழிக் கொள்கை குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி., நோட்டீஸ்.
மொழிக் கொள்கை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழர்களை அவமரியாதையாகப் பேசிய தர்மேந்திர பிரதான மீது ஏற்கனவே உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.
-
Mar 11, 2025 08:06 IST
தனுஷ் வழக்கில் ஏப் 9 ல் இறுதி விசாரணை
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதாக தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஏப்.9ல் இறுதி விசாரணை. படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதி தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
-
Mar 11, 2025 08:05 IST
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிக்கை
இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி புகார். தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீது புகார். தவெக சார்பில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Mar 11, 2025 07:58 IST
ரயிலில் மாணவர் மீது தாக்குதல்
சென்னை கடற்கரை - அரக்கோணம் புறநகர் ரயிலில் நேற்று பயணம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கொரட்டூர் ரயில் நிலையம் அருகே கற்களை வீசி தாக்கிய சம்பவத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது. மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
-
Mar 11, 2025 07:28 IST
ஒரே நாடு ஒரே தேர்தல் குழு இன்று ஆலோசனை
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான குழு இன்று மீண்டும் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. பாஜகவின் பி.பி. சவுத்ரி தலைமையிலான குழு சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது.
-
Mar 11, 2025 07:27 IST
நீட் விண்ணப்பம்- அவகாசம் இன்றுடன் முடிவு
நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்யும் அவகாசம் இன்றுடன் முடிகிறது. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.
-
Mar 11, 2025 07:25 IST
நீட் தேர்வில் முறைகேடு - ஒப்புக்கொண்ட பாஜக அரசு
நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாக நாடு முழுவதும் புகார் எழுந்து வந்த நிலையில் முறைகேடு அதிகரித்து வருவதை அசாம் மாநில பாஜக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
-
Mar 11, 2025 07:24 IST
X தளத்திற்கு எதிராக பெரிய அளவில் சைபர் தாக்குதல்.. எலான் மஸ்க் குற்றச்சாட்டு
X தளத்திற்கு எதிராக பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு நாடு இருக்க வாய்ப்புள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் நேற்று 3 முறை எக்ஸ் தளம் முடங்கிய நிலையில் அதின் உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Mar 11, 2025 07:22 IST
அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மொரீஷியஸ் புறப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.