/indian-express-tamil/media/media_files/2025/03/14/1ClW7FqsFEbvWCm6RNjV.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 14, 2025 00:47 IST
'₹' - சின்னத்தை அகற்றியது குறித்து தமிழக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
ரூபாயில் '₹' - சின்னத்தை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது. இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது
-
Mar 14, 2025 00:46 IST
மும்பையின் பிரபல மருத்துவமனையில் 1,200 கோடி முறைகேடு
கத்திகுத்துப்பட்டு நடிகர் சைஃப் அலிகான் அனுமதிக்கப்பட்ட பிரபல மருத்துவமனையில் 1,200 கோடி முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு. எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு பில்லி சூனியம் நடந்துவருவதாகவும் மனித முடி, 8 மண் கலசங்கள், மனித எலும்பு, அரிசி போன்றவை அறங்காவலர்கள் அறையில் கிடைத்துள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
-
Mar 14, 2025 00:45 IST
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் ஏற்பு
30 நாட்களுக்கு தற்காலிகமாக போரை நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், ரஷ்யாவும் சம்மதம் தெரதிவித்துள்ளது.உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புதின் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது,
-
Mar 13, 2025 20:46 IST
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சட்டமன்ற பேரவையில் தலைவர் அப்பாவு ஆய்வு
2025-ம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் எ.வ.வேலு, ஆகியோர் சட்டமன்ற பேரவையை ஆய்வு செய்தனர்.
-
Mar 13, 2025 19:37 IST
கொளுத்தும் வெளியின் தாக்கம்: வேலூரில் 101 ஃபாரன்ஹீட் பதிவு
கர்நாடகாவின் விஜயவாடாவில், இன்று அதிகபட்சமாக 105 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆந்திராவின் நந்தியாலியில் அதிகபட்சமாக 104 ஃபாரன்ஹீட், வேலூரில் 101 ஃபாரன்ஹீட பதிவாகியுள்ளது.
-
Mar 13, 2025 18:49 IST
யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரம் - விசாரணை அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளதாக ஐகோர்ட் கருத்து
தருமபுரி மாவட்டம் நெருப்பூரில் யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரத்தில், விசாரணை அறிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
-
Mar 13, 2025 18:29 IST
இளையராஜாவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து
லண்டனில் சிம்போனி இசையை வெற்றிகரமாக அரங்கேற்றிய இளையராஜாவை நேரில் சந்தித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார்
-
Mar 13, 2025 18:27 IST
ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் வலிமை எமக்கும், எமது தாய்மொழியாம் தமிழுக்கும் உண்டு - ஜோதிமணி
ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் வலிமை எமக்கும், எமது தாய்மொழியாம் தமிழுக்கும் உண்டு என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
Mar 13, 2025 17:51 IST
த.வெ.க மாவட்ட செயலாளராக விஜயின் உதவியாளர் மகன் நியமனம்
த.வெ.க.,வின் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விஜயின் முன்னாள் ஓட்டுநரும் இந்நாள் உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் (27) நியமனம் செய்யப்பட்டுள்ளார்
-
Mar 13, 2025 17:28 IST
ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு - உயர் நீதிமன்றம் உத்தரவு
ஊட்டிக்கு வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களும் மட்டுமே இயக்க வேண்டும். கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Mar 13, 2025 17:07 IST
இ.பி.எஸ் சவாலுக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் - ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: “எதிர்க்கட்சித் தலைவரின் சவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லி இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்லாமல் அமைச்சர் ரகுபதி ஏன் பதில் சொல்ல வேண்டும்; ரகுபதியை நாங்கள் அழைக்கவில்லை. அமைச்சர் ரகுபதியை அடையாளம் காட்டியதே அ.தி.மு.க.தான். கட்சி கரை வேட்டியை மாற்றாமல் நாங்கள் உள்ளோம்” என்று கூறினார்.
-
Mar 13, 2025 17:07 IST
தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்தது யார்? நேரடி விவாதத்திற்கு முதல்வர் தயாரா? - ஜெயக்குமார் கேள்வி
எடப்பாடி பழனிசாமி சவாலுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லி இருக்கவேண்டும். முதல்வர் பதில் சொல்லாமல் அமைச்சர் ரகுபதி ஏன் பதில்சொல்ல வேண்டும். ரகுபதியை நாங்கள் அழைக்கவில்லை. தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்தது யார்? ஒரே மேடையில் நேரடி விவாதத்திற்கு நாங்கள் தயார். முதல்வர் தயாரா? என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
-
Mar 13, 2025 16:40 IST
பட்ஜெட் இலச்சினையில் ஏன் ₹ -க்கு பதில் ரூ..? - ஜெயரஞ்சன் விளக்கம்
பட்ஜெட் இலச்சினையில் ஏன் ₹ -க்கு பதில் ரூ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், ஏனென்றால் அது தேவநாகரி என்று கூறினார். இந்த இலச்சினை தமிழர் உருவாக்கியது என்ற பா.ஜ.க-வினரின் கருத்து குறித்த கேள்விக்கு தமிழர்கள் இன்னும் நிறைய செய்திருக்கிறார்கள் அதையெல்லாம் போட முடியாது” என்று கூறினார்.
-
Mar 13, 2025 16:14 IST
மு.க. ஸ்டாலின் பெயரை மாற்றிக்கொள்ள தயாரா? - தமிழிசை சௌந்தரராஜன்
பட்ஜெட் இலச்சினையில் ‘ரூ’ முதன்மைப்படுத்தியது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து: “முதலமைச்சர் தனது பெயரை மாற்றிக்கொள்ளத் தயாரா?தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் பெயரை மாற்றிக்க்கொண்டு சட்டப்பேரவைக்கு வரட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்துக்கொண்டிருக்கிறார்.
-
Mar 13, 2025 15:46 IST
மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கர்நாடகா சார்பில் டி.கே.சிவகுமார் பங்கேற்பார் - சித்தராமையா அறிவிப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 22-ம் தேதி நடத்த உள்ள கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்பார் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
-
Mar 13, 2025 15:32 IST
தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ1.69 லட்சத்தைவிட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் - ஜெயரஞ்சன்
மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், “தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் 2022-23-ல் ரூ.2.78 லட்சமாக உள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூ1.69 லட்சத்தைவிட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.
-
Mar 13, 2025 15:27 IST
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தயாரித்து வெளியீடு - ஜெயரஞ்சன்
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை விவரித்து பேசிய மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்: “தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
-
Mar 13, 2025 15:15 IST
மார்ச் 14ம் தேதி மாலை தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் தலைமையில் நாளை மாலை திமுக எம்எல்ஏக்கள் ஆலேசானை கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
-
Mar 13, 2025 15:13 IST
‘தர்மேந்திர பிரதான் மன்னிப்பும் கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை’ - திருமாவளவன்
வி.சி.க தலைவர் திருமாவளவன்: “தர்மேந்திர பிரதான் மன்னிப்பும் கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை. தான் சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறார். அவர் சொன்னதற்கு அதே மக்களவையில் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். தமிழ் தேசிய பேரினத்தை நாகரீகமற்றவர்கள் என்று அவர் சொன்னது அநாகரீகமானது. அவர்தான் அநாகரீகமாக நடந்துகொண்டார். அதை வரவேற்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் பேசுவது மேலும் அவர்களின் அநாகரீகத்தை உறுதிப்படுத்துகிறது.” என்று கூறினார்.
-
Mar 13, 2025 14:57 IST
நாளை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (மார்ச்.14) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அரசு தலைமைக் கொறடா கா.இராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
-
Mar 13, 2025 14:57 IST
ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பதிவாளர் மீது புகார்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ராஜசேகர் மீது உயர்கல்வி செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலியான அனுபவச் சான்றிதழை பயன்படுத்தி பொறுப்புக்கு வந்ததாக ராஜசேகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.
-
Mar 13, 2025 14:47 IST
பட்ஜெட்டில் இலச்சினை மாற்றம் - அண்ணாமலை விமர்சனம்
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட தமிழக பட்ஜெட் புரோமோவில் ₹-க்கு பதிலாக 'ரூ' இலச்சினை இடம்பெற்றுள்ளது. தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் புரோமோ வெளியிட்டார்
"₹ என்ற அடையாளத்தை வடிவமைத்த உதயகுமார், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் தான்" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
-
Mar 13, 2025 14:10 IST
அவிநாசி: விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை - இ.பி.எஸ். கண்டனம்
அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லிக் கொண்டால் சட்டம்-ஒழுங்கை சீர் செய்ய முடியாது. வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) March 13, 2025
இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி,… pic.twitter.com/FnLQ20nKB8 -
Mar 13, 2025 13:57 IST
தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தெலங்கானா முதல்வருக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு இதுவரை ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
-
Mar 13, 2025 13:51 IST
நாளை கூடுகிறது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6.30 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
-
Mar 13, 2025 13:37 IST
பரவலான வளர்சியை உறுதி செய்யும் பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெரும் வகையில் பட்ஜெட் அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் என்றும் அவர் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…#DravidianModel #TNBudget2025 pic.twitter.com/83ZBFUdKZC
— M.K.Stalin (@mkstalin) March 13, 2025 -
Mar 13, 2025 13:34 IST
இளையராஜாவுக்கு வைகோ நேரில் வாழ்த்து
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
-
Mar 13, 2025 12:52 IST
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 - முதலமைச்சர் வெளியிட்டார்
மாநில திட்டக் குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட "தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25"-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்
-
Mar 13, 2025 12:48 IST
நவீன இந்தித் திணிப்பு - அன்புமணி கண்டனம்
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு நிறுவனங்கள் இந்தியில் மட்டுமே வாடிக்கையாளர் சேவை வழங்குவதாக அன்புமணி கண்டனம். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில்; தமிழில் உரையாட வேண்டும் என்றால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிப்பு; இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான்; இதை அனுமதிக்க முடியாது; மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை தருவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை
-
Mar 13, 2025 12:43 IST
புதிய டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
மதுக்கடை திறந்தால் எங்களுக்கு பாதுகாப்பு இருக்காது, டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க முடியாது என்று பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுக்கடையை திறக்கும் திட்டம் தற்போது இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
-
Mar 13, 2025 12:41 IST
ரங்கராஜன் நரசிம்மனுக்கு நீதிபதி கண்டனம்!
முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணையின் போது சத்தமாக பேசிய ரங்கராஜன் நரசிம்மனுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘இது சந்தை அல்ல, நீதிமன்றம்' என எச்சரிக்கை. இதையடுத்து, நீதிபதி இளந்திரையனிடம் மன்னிப்புக் கேட்டார்.
-
Mar 13, 2025 12:40 IST
அரசுப் பள்ளிகளில் 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்க்கை!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 7 நாட்களில் 41,931 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல். 1ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. அரசின் நலத்திட்டங்களை மக்களிடையே கொண்டு சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கிறது பள்ளிக் கல்வித்துறை.
-
Mar 13, 2025 12:38 IST
சீமான் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன்
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாதுகாவலர் சுபாகர், பணியாளர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சீமான் வீட்டில் காவல் துறை ஒட்டிய சம்மனை கிழித்ததாக சுபாகர், அமல்ராஜ் கைது செய்யப்பட்டனர்; மறு உத்தரவு வரும் வரை இருவரும் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட ஆணை
-
Mar 13, 2025 12:36 IST
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை - அதிர்ச்சி தகவல்
மயக்க ஊசி செலுத்தி இரண்டு மகன்களை மருத்துவர் பாலமுருகன் தூக்கிலிட்டிருக்கலாம் என தகவல். 2 மகன்களும் தற்கொலைக்கு ஒத்துழைக்காததால் மருத்துவரே கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை. மகன்களை கொன்ற பிறகு மருத்துவர் பாலமுருகன், மனைவியுடன் த*கொலை செய்திருக்கலாம் என தகவல்
-
Mar 13, 2025 12:09 IST
அழைப்பை ஏற்ற ரேவந்த்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி. காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று கூட்டத்தில் பங்கேற்பதாக உறுதி
-
Mar 13, 2025 11:43 IST
OMR சாலையில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை சோழிங்கநல்லூர் சந்திப்பில் மெட்ரோ குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் OMR சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 13, 2025 11:32 IST
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு அமைச்சர் கே.என்.நேரு. திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் டெல்லியில் சந்தித்து அழைப்பு; தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மார்ச் 22இல் சென்னையில் கூட்டம் நடத்த உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
Mar 13, 2025 11:31 IST
சீமான் தலைமையிலான பேரணிக்கு அனுமதி மறுப்பு
சென்னையை அடுத்த திருப்போரூரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வரும் 16-ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு. மாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறும் நிலையில் எத்தனை பேர்பங்கேற்பார்கள் என குறிப்பிடவில்லை என்று கூறி அனுமதி மறுத்த காவல் துறை
-
Mar 13, 2025 11:30 IST
MTC ரூ.2,000 மாத கட்டணத்தில் புதிய திட்டம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 2000 ரூபாய் கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த போக்குவரத்துத்துறை முடிவு
-
Mar 13, 2025 11:21 IST
பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருள தடை
பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருளலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு
தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. தமிழ்நாடு அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு -
Mar 13, 2025 11:11 IST
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மின் ஆட்டோக்கள்
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் காலநிலை வீரர்கள் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 ஆட்டோக்கள் வழங்கப்பட்டன
-
Mar 13, 2025 11:10 IST
சுனிதா வில்லியம்ஸை அழைத்துவருவதில் மீண்டும் சிக்கல்
விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் மீண்டும் தள்ளிப்போனது. அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை புறப்படவிருந்த ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் நாளை அனுப்ப திட்டம்.
-
Mar 13, 2025 10:38 IST
தெலங்கானா முதலமைச்சருக்கு அழைப்பு!
சென்னையில் வரும் 22ம் தேதியன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைக்கின்றனர் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் என்.ஆர்.இளங்கோ எம்.பி. புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர்.
-
Mar 13, 2025 10:16 IST
தார்ப்பாய்கள் கொண்டு மூடப்படும் பள்ளிவாசல்கள்
உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தார்ப்பாய்கள் கொண்டு மூடப்படும் மசூதிகள் ஹோலி பண்டிகை நாளில் மார்ச் 14 (வெள்ளிகிழமை) 'சவுபாய்' என்ற பேரணி நடைபெற உள்ளது; இந்த பேரணிக்கான பாதையில் பள்ளிவாசல்கள் உள்ளதால் திரையிட்டு மூடுவதற்கு உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
Mar 13, 2025 10:14 IST
"நாங்கள் என்ன நாகரிகம் அற்றவர்களா?" - உதயநிதி
நாங்கள் என்ன நாகரிகம் அற்றவர்களா? எங்களைப் பார்த்தால் அப்படித் தெரிகிறதா? இப்படி சொல்பவர்கள்தான் நாகரிகமில்லாமல் தமிழர்களை விமர்சிக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என உதயநிதி கூறியுள்ளார்.
-
Mar 13, 2025 10:12 IST
பிடிஆர் மகன்கள் படித்த மொழிகள் எவை?: அண்ணாமலை
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன்கள் படித்த இருமொழிகள் எவை தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? அமைச்சரின் மகன்களுக்கு கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏழை குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
-
Mar 13, 2025 09:40 IST
நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி பதில்
"தமிழை காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னது அக்கறையோடு. எங்களை அவமானப்படுத்த அல்ல.எங்களுடைய தந்தையான பெரியார் பேசுவதற்கும், இன்னொருவர் எங்களை காட்டுமிராண்டி என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில் கூறியுள்ளார்.
-
Mar 13, 2025 09:38 IST
நட்சத்திர ஹோட்டலில் லிஃப்ட் விபத்து - இருவர் கைது!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல ஹயாத் ஹோட்டலில் லிஃப்ட்-ன் கயிறு அறுந்து விழுந்துொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் ஹோட்டலின் தலைமை பொறியாளர் மற்றும் இரும்பு வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Mar 13, 2025 09:16 IST
டாக்டர், வழக்கறிஞர் உட்பட 4 பேர் தற்கொலை
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை. மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி வழக்கறிஞர் சுமதி, இரு மகன்கள் தற்கொலை. கடன் தொல்லை காரணமாக தற்கொலை என முதற்கட்ட விசாரணையில் தகவல்
-
Mar 13, 2025 08:47 IST
AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை..!
சென்னையில் மாதம் ரூ.2000 பஸ் பாஸ் முறையில் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்துத்துறை திட்டம். தற்போதுள்ள ரூ.1000 பாஸில் ஏசி பஸ் தவிர்த்து மற்ற பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.