/indian-express-tamil/media/media_files/2025/03/17/WWEixlO0RK2WfdgWeupq.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 17, 2025 22:31 IST
அண்ணாமலை 5 மணி நேரம் கூட காவலில் இருக்க முடியாதா? - சேகர்பாபு கேள்வி
அமைச்சர் சேகர் பாபு: “நாட்டுக்காகப் போராடுவதாகக் கூறும் அண்ணாமலையால் 5 மணி நேரம் காவலைல் இருக்க முடியவில்லை. எங்கள் முதல்வர் திருமணமான ஓராண்டிலேயே மிசாவில் கைதாகி சிறையில் கழித்தவர். அண்ணாமலை முதலில் உ.பி-க்கு சென்று அங்குள்ள முதல்வர் படத்தை அடித்து மாட்டட்டும்” என்று கூறியுள்ளார்.
-
Mar 17, 2025 21:39 IST
மும்மொழியில் தலையணை, போர்வை கவர்கள் - ஒப்பந்த நிறுவனத்திற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 13 ரயில்களின் ஏசி பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வை, தலையணை கவர்களில் தமிழ் உட்பட மும்மொழிகள் இருக்க வேண்டும். ஒப்பந்த நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. 1 ஏசி, 2 ஏசி, 3 ஏசி பெட்டிகளில் இதற்கு முன்பு வரை இரண்டு மொழிகளில் மட்டுமே இருந்து வந்தது.
-
Mar 17, 2025 21:28 IST
ஊழலை தட்டிக் கேட்டால் சித்திரவதை செய்கிறார்கள் - அண்ணாமலை கண்டனம்
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை: “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்தால் ராஜ மரியாதை, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் நஷ்ட ஈடு தருகிறார்கள். ஆனால், ஊழலை தட்டிக்கேட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்குகின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகள் நடந்து கொண்ட விதத்தை கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
-
Mar 17, 2025 21:25 IST
ஊழலை தட்டிக்கேட்டதற்கு கைது செய்தனர் - தமிழிசை சௌந்தரராஜன்
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌதந்தரராஜன்: “ஊழலை தட்டிக்கேட்க சென்ற என்னை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர். தி.மு.க-வை எதிர்த்து குரல் கொடுத்தால் இந்த நிலைமையா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
-
Mar 17, 2025 20:26 IST
"எங்களை விடுவிக்க உத்தரவு தராதது யார்?" காவல் துறையினருடன் தமிழிசை வாக்குவாதம்
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பா.ஜ.க சார்பில் டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பா.ஜ.க-வினர் கைது செய்யப்பட்டனர். இநிலையில் மாலை 6 மணி ஆகியும் தங்களை விடுவிக்காதது ஏன், எங்களை விடுவிக்க உத்தரவு தராதது யார்? எனக் கேட்டு தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
Mar 17, 2025 20:16 IST
தி.மு.க-வின் பி டீம், நாடகம் போடுவது விஜய்தான்: அண்ணாமலை கடும் விமர்சனம்
தி.மு.க-வும் பா.ஜ.க-வும் சண்டை போடுவது போல நாடகம் போடுவதாக த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் கூறிய நிலையில், தி.மு.க-வின் பி டீம் விஜய், நாடகம் போடுவது விஜய்தான் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில், “வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்யும் விஜய்க்கு மக்கள் பிரச்னைகள் பற்றி என்ன தெரியும். சினிமாவில் குடித்து, புகைபிடித்துவிட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது? எனக்கும் பேசத் தெரியும். த.வெ.க எல்லை மீறக்கூடாது; தி.மு.க-வின் பி டீம், நாடகம் போடுவது விஜய்தான்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
Mar 17, 2025 19:32 IST
தெலங்கானாவில் ஓ.பி.சி பிரிவினருக்கு 42% இடஒதுக்கீடு உறுதி - ரேவந்த் ரெட்டி அறிவிப்பு
தெலங்கானாவில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநித்துவத்தில் ஓ.பி.சி பிரிவினருக்கு 42% இடஒதுக்கீடு வழங்குவது உறுதி செய்யப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
-
Mar 17, 2025 19:30 IST
தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரிக்கு வெப்பைநிலை பதிவு; மக்கள் அவதி
தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்-க்கு மேல் வெயில் வெப்பைநிலை பதிவாகி உள்ளது. கடும் வெயிலால் மக்கள் அவதி அடைந்தனர். கரூர் பரமத்தி வேலூரில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட், திருப்பத்தூர், சேலத்தில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
-
Mar 17, 2025 18:44 IST
போலீசாருடன் அண்ணாமலை வாக்குவாதம்
சென்னையில், திருமண மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள அண்ணாமலை, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, 6 மணிக்கு மேலும் தன்னை விடுவிக்கவில்லை எனக் கூறிய அவர், வெளியூர் செல்ல 3 விமானங்களை தான் தவறவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
-
Mar 17, 2025 18:10 IST
சிறுமி வன்கொடுமை வழக்கு - இழப்பீடு வழங்க உத்தரவு
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சத்தை இடைக்கால இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 17, 2025 17:48 IST
பா.ஜ.க - தி.மு.க மறைமுக கூட்டணி - புஸ்ஸி ஆனந்த்
பா.ஜ.க - தி.மு.க மறைமுக கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர் என த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விமர்சித்துள்ளார். மேலும், இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது அனைத்தும் நாடகம் எனக் கூறிய அவர், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் உண்மையான விசாரணை வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
Mar 17, 2025 17:26 IST
பா.ஜ.க மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
மாற்றுக்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பதற்கான ஆதாரம் எங்கே என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 17, 2025 17:00 IST
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தமிழகத்தில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படுள்ள்ளது. 23ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
-
Mar 17, 2025 16:35 IST
தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவு
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மான தேபேந்திர பிரதான் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
Mar 17, 2025 16:25 IST
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்
"தமிழகத்தில் டாஸ்மாக் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறையின் அறிக்கையால் ஆடிப்போயுள்ள தி.மு.க அரசு, தகவல்கள் மக்களிடம் சென்றடையாமல் தடுக்கிறது. ஊழலை தமிழக மக்களிடத்தில் எடுத்து சென்று, உண்மையை அம்பலப்படுத்தி வருகிறது தமிழக பாரதிய ஜனதா கட்சி. தமிழக பா.ஜ.க தலைவர்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோக செயலை காவல்துறை கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Mar 17, 2025 16:16 IST
"கொறடா உத்தரவை மீற கூடாது என்பதற்காக வாக்களித்தேன்" - ஓ.பி.எஸ்
அ.தி.மு.க உறுப்பினர் என்ற அடிப்படையில் கொறடா உத்தரவை மீற கூடாது என சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
Mar 17, 2025 16:06 IST
கடல் சீற்றம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் சீற்றத்துடன் காண வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் கடலுக்கும், கடற்கரை பரப்புக்கும் செல்வதை தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
-
Mar 17, 2025 15:42 IST
ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு - ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பணமுறைகேடு குற்றச்சாட்டில் சி.பி.ஐ விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், கோப்புகளை 2 வாரங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 வாரங்களில் மொழிபெயர்ப்பு கோப்புகளை வழங்கியதும், உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 17, 2025 15:30 IST
சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்க வேண்டும் - டி.ஆர்.பாலு வேண்டுகோள்
அடுத்த ஆண்டிற்கான குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு சேர்க்க வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய டி.ஆர்.பாலு குடியரசு தினத்திற்கான அலங்கார ஊர்திகளை தேர்வு செய்யும் குழு, தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அங்கீகரிக்க தவறிவிட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை வெள்ளையர்கள் மிருகத்தனமாக கொலை செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ்நாட்டின் விடுதலை போராட்ட வீரர்கள் வவுசி, வேலு நாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்டோர் குறித்த அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், பொது இடங்களுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்படுமா என்றும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 17, 2025 15:21 IST
ஐ.பி.எல் - ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை
சேப்பாக்கத்தில் வரும் 23 ஆம் தேதி சென்னை - மும்பை இடையிலான முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்படுள்ளது.
-
Mar 17, 2025 15:01 IST
நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? - ஸ்டாலினுக்கு சரத்குமார் கேள்வி
நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சரத்குமார் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 17, 2025 14:04 IST
மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்
மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை, அதிமுக ஆட்சியிலேயே நிறுத்திவிட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம் என்றோம் என்றார்.
-
Mar 17, 2025 14:02 IST
மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் எவ்வளவு நேரம் பேசினாலும் இடையூறு இல்லாமல் அனுமதிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏராளமான மக்கள் பிரச்னைகள் உள்ளதால் அதிக நேரம் பேச வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றி, தோல்வி என்பதல்ல நடுநிலையோடு சபாநாயகர் செயல்பட வேண்டும் என்பதற்காக தீர்மானம் கொண்டு வந்தோம். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுவது முக்கியம் இல்லை, மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்றார்.
-
Mar 17, 2025 13:27 IST
மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு!
அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைணநத நிலையில், மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 154 பேர் எதிராகவும், 63 பேர் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.
-
Mar 17, 2025 13:16 IST
செந்தில் பாலாஜி உத்தமரா? - அண்ணாமலை விமர்சனம்
2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை டாஸ்மாக் ஊழல் பணத்தை வைத்து தி.மு.க. நடத்த திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். 2024 மக்களவைத் தேர்தலை தி.மு.க. டாஸ்மாக் ஊழல் பணத்தை வைத்து தான் நடத்தி உள்ளதாகவும் அண்ணாமலை கூறி உள்ளார். செந்தில் பாலாஜி உத்தமரா? காந்தியவாதி போல் வேடமிடுகின்றனர், தலை முதல் கால் வரை ஊழல் ஆட்சி நடைபெறும் தி.மு.க. அமைச்சரவையில் உள்ளவர்தான் செந்தில் பாலாஜி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 17, 2025 13:14 IST
அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 154 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இதனால், தீர்மானம் தோல்வி என அறிவிக்கப்பட்டது. சபாநாயகரை நீக்கக்கோரிய நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 17, 2025 13:11 IST
அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து - ஐகோர்ட்
தமிழ்நாடு அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரசாரம் செய்ததாக, அமைச்சர் சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அமைச்சர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
-
Mar 17, 2025 13:06 IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 17, 2025 13:01 IST
மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் விஸ்வா (20) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
-
Mar 17, 2025 12:54 IST
அதிமுக தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த செங்கோட்டையன்
சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்; 6வது டிவிசன் வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த செங்கோட்டையன்
-
Mar 17, 2025 12:52 IST
மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு மநீம புதிய முயற்சி
அமெரிக்காவின் லீப் (Language Education and Proficiency) என்ற அமைப்புடன் சேர்ந்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த மக்கள் நீதி மய்யம் சார்பில் விரிவான ஏற்பாடு. ஆன்லைன் வாயிலாக வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து 6 வாரங்களுக்கு இலவசமாக பயிற்சி முகாம்களை நடத்த முடிவு.
-
Mar 17, 2025 12:32 IST
"உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
“இந்த அரசின் மீது குற்றம், குறை கூற வாய்ப்பில்லாததால் இப்படி ஒரு தீர்மானமா? உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், அதை திசைதிருப்ப இப்படி ஒரு தீர்மானமா?” சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
-
Mar 17, 2025 12:18 IST
"5 ஆண்டுகள் நீதி மறுக்கப்பட்டாலும் கனிவோடு நடக்கிறார்"
"ஒரு விரலை உயர்த்தி சுட்டிக்காட்டும் போது, மீதி விரல்கள் நம்மை நோக்கி சுட்டி காட்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; அப்பாவுவிற்கு 5 ஆண்டுகள் நீதி மறுக்கப்பட்டுள்ளது” ஜனநாயக முறைப்படி நடந்து வரும் சபாநாயகரை பாராட்டுகிறேன்; இந்த தீர்மானத்தை எதிர்க்கிறேன் - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன்
-
Mar 17, 2025 12:09 IST
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு
சபாநாயகர் அப்பாவுவிற்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வி - துணை சபாநாயகர் பிச்சாண்டி
-
Mar 17, 2025 12:02 IST
“சபாநாயகர் அப்பாவு கனிவானவர்”
யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம்; நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு
ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்த சபாநாயகர் அப்பாவு கனிவானவர்; அதே நேரம் கண்டிப்பானவர் - சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேச்சு -
Mar 17, 2025 11:50 IST
"சபாநாயகர் அப்பாவு எங்களை கிண்டல் செய்கிறார்" - பேரவையில் இபிஎஸ் பேச்சு
"நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். ‘போங்க போங்க' என கிண்டல் செய்கிறார்” -சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
-
Mar 17, 2025 11:45 IST
பாஜக போராட்டம் - திருமாவளவன் வரவேற்பு
டாஸ்மாக்கிற்கு எதிரான பாஜகவின் போராட்டத்தை வரவேற்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
-
Mar 17, 2025 11:39 IST
முதல்வர் வீட்டைக்கூட முற்றுகையிடுவோம் - கைதான அண்ணாமலை பேச்சு
நானோ பாஜக நிர்வாகிகளோ பேசக் கூடாது என தமிழ்நாடு அரசு நினைக்கிறது; நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள் தேதியை அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம்; அப்போது என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்; தேவையெனில் முதல்வரை வீட்டை முற்றுகையிடுவோம் - டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பான போராட்டத்திற்கு செல்லும் வழியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. டாஸ்மாக் மீதான ஊழல் புகாரில், போராட்டம் நடத்த எழும்பூர் நோக்கி சென்றபோது பாதிவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது. கானத்தூரிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அண்ணாமலையை சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் காவலர்கள் கைது செய்தனர்
-
Mar 17, 2025 11:35 IST
"சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்"
"பேரவைத்தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்; சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது" அதிமுக உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர் 5 அவசரப்படுத்துகிறார் - சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
-
Mar 17, 2025 11:20 IST
ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு - அண்ணாமலை
டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. டாஸ்மாக்கில் 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கும்; டாஸ்மாக் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜி 2ஆவது குற்றவாளிதான்; 3 முதல் தகவல் அறிக்கைகளை வைத்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது; டாஸ்மாக்கில் 40% சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது - அண்ணாமலை
-
Mar 17, 2025 11:16 IST
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதம்
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு. அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவை; தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், சபாநாயகர் அப்பாவு வெளியேறிய நிலையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை வழிநடத்துகிறார்
-
Mar 17, 2025 10:52 IST
திமுக உறுப்பினர்களுக்கு வாய்மொழி உத்தரவு
திமுக எம்.எல்.ஏக்கள் எவரும் சட்டப்பேரவையை விட்டு வெளியே செல்ல வேண்டாம். சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் துணை சபாநாயகர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 17, 2025 10:50 IST
வீட்டுச் சிறை - அண்ணாமலை பரபரப்பு கேள்வி
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பையொட்டி பாஜக தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள்? ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே இந்த நடவடிக்கை என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தேதியே அறிவிக்காமல், திடீரென ஒருநாள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என்றும் கூறியுள்ளார்.
-
Mar 17, 2025 10:47 IST
நம்பிக்கையில்லா தீர்மானம் - செங்கோட்டையனுடன் ஆலோசனை
சட்டமன்ற வளாகத்தில் செங்கோட்டையனுடன், தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அவைக்கு மீண்டும் வருவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்த 16 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் செங்கோட்டையனும் ஒருவராவர். நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனவரியில் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Mar 17, 2025 10:30 IST
தமிழிசை சௌந்தரராஜன் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தின் முன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Mar 17, 2025 10:26 IST
புதுவையில் கலைஞர் பெயர் சூட்ட பரிசீலிக்கப்படும் - ரங்கசாமி
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மதிப்புமிக்க தலைவர் மொழிக்காக பாடுபட்டவர் போற்றக்கூடிய தலைவர் எனவே புதுச்சேரியில் உள்ள ஏதாவது ஒரு இடத்திற்கு கலைஞரின் பெயர் சூட்ட பரிசீலிக்கப்படும் என புதுவை சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
-
Mar 17, 2025 10:23 IST
"திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்?" - அண்ணாமலை
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளை திமுக அரசு வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. தேதியே அறிவிக்காமல் திடீரென்று ஒருநாள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Mar 17, 2025 10:06 IST
இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி
திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். கணவருக்கு சுவாசப் பிரச்சனை இருக்கிறது என்று மனைவி கைப்பட கடிதம் எழுதி கொடுத்த நிலையில் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
Mar 17, 2025 09:45 IST
சட்டப்பேரவையில் கேள்வி - பதில்!
உத்திரமேரூர் தொகுதி வெண்குடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நிதி நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கூறி வருகிறார். பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. முன்னூரிமை அடிப்படையில் இந்த திட்டம் எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
-
Mar 17, 2025 09:36 IST
சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.