/indian-express-tamil/media/media_files/2025/03/19/7nKtqR22o5AtvqMrHFuE.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 18, 2025 20:43 IST
கோதுமை வயலில் முதலை: பத்திரமாக மீட்ட வனத்துறையினர்
உத்திரபிரதேசலம் : லலித்பூரில் கோதுமை வயலில் உலா வந்த 12 அடி நீள ராட்சத முதலையை கண்டதும் அலறி அடித்து ஓட்டம் பிடித்த கிராம மக்கள். புல்வனத்துடோசர் உதவியுடன் பத்திரமாக மீட்டு டிராக்டரில் ஏற்றிச்சென்ற றையினர்.
-
Mar 18, 2025 20:08 IST
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியவர்: சுனிதா வில்லியம்ஸ்க்கு 2-வது இடம்
நாசா விண்வெளி வீரர்களில் மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் தங்கி அதிகபட்ச நேரத்தை கழித்தவர்கள் பட்டியலில், சுனிதா வில்லியம்ஸ் 2-வது இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில், 675 நாட்கள் தங்கி பெக்கி விட்சன் முதலிடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க விண்வெளி வீரர்கள்:
பெக்கி விட்சன் - 675 நாட்கள்
சுனிதா வில்லியம்ஸ் - 608 நாட்கள்
ஜெஃப் வில்லியம்ஸ் - 534 நாட்கள்
மார்க் வந்தே ஹெய் - 523 நாட்கள்
ஸ்காட் கெல்லி - 520 நாட்கள்
-
Mar 18, 2025 19:27 IST
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்: குஜராத்தில் சிறப்பு யாகம் நடத்தும் உறவினர்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பவுள்ள நிலையில், குஜராத்தில் அவரது உறவினர் தினேஷ் ராவல் ஒரு 'யாகம்' செய்து, பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளுடன் அவர் வீடு திரும்புவதைக் கவனித்து வருகிறார். இது குறித்து குஜராத் அரசாங்கத்தின் கூற்றுப்படி, வில்லியம்ஸ் தனது மூதாதையர் வேர்களை குஜராத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ஜூலாசனில் கண்டுபிடித்துள்ளார், அந்த கிராமம் ஒரு காலத்தில் தனது தந்தை மற்றும் தாத்தா பாட்டியின் தாயகமாக இருந்தது. சுமார் 7,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தொடர்பைப் பற்றி மிகுந்த பெருமை கொள்கிறது என்று பதிவிட்டுள்ளது.
-
Mar 18, 2025 18:49 IST
தி.மு.க தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்
தி.மு.க தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வத்தை நீக்கி தி.மு.க தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு பதில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தி.மு.க தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
Mar 18, 2025 18:12 IST
நாசா விண்வெளி வீரர் சுனிதா திரும்பும் விமானம்: முக்கிய விவரங்கள்
ஏறுதல்: ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் ஹட்ச் இரவு 11:05 மணிக்கு ET (காலை 8:35 IST, செவ்வாய்) சீல் வைக்கப்பட்டது. பின்னர் குழுவினர் விமான உடைகளை அணிந்து பாதுகாப்பு சோதனைகளை முடித்தனர்.
புறப்பாடு: விண்கலம் அதிகாலை 1:05 மணிக்கு ET (காலை 10:35 IST, செவ்வாய்) மணிக்கு ISS இலிருந்து திறக்கப்பட்டது, நாசா நேரடி ஆடியோ கவரேஜை வழங்கியது.
ஸ்பிளாஷ் டவுன்: க்ரூ டிராகன் புளோரிடாவின் கடற்கரையில் மாலை 5:57 மணிக்கு ET (காலை 3:27 IST, புதன்கிழமை) மணிக்கு கீழே விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூஸ்டனுக்குச் செல்வதற்கு முன் மீட்புக் குழுக்கள் விண்வெளி வீரர்களுக்கு உதவும்.
கவரேஜ்: ஸ்பிளாஷ் டவுன் வீடியோ கவரேஜ் பிற்பகல் 4:45 மணிக்கு ET (காலை 2:15 IST, புதன்கிழமை) மணிக்குத் தொடங்குகிறது.
-
Mar 18, 2025 17:36 IST
சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக திரும்புவதற்காக யாகம் செய்யும் குஜராத் உறவினர்
வில்லியம்ஸின் குஜராத்தின் உறவினர் ஒருவர், 'அவள் பாதுகாப்பாக திரும்புவதற்காக யாகம் செய்கிறேன்' என்று கூறுகிறார். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பவுள்ள நிலையில், குஜராத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸின் உறவினர் தினேஷ் ராவல், ஒரு 'யாகம்' செய்து வருவதாகவும், பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளுடன் அவள் வீடு திரும்புவதைக் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“அவரது தாய், சகோதரர் மற்றும் சகோதரி உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர் வீடு திரும்புவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். எங்கள் முழு குடும்பமும் மகிழ்ச்சியடைந்து, அவர் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்... நாங்கள் பிரார்த்தனை செய்யத் தொடங்கினோம், அவரது பாதுகாப்பிற்காக பல கோயில்களுக்குச் சென்றுள்ளோம்... இது எங்களுக்கு ஒரு பெரிய நாள்... அவர் நாட்டின் பெருமை... அவர் திரும்பி வருவதற்காக நாங்கள் ஒரு 'யாகம்' செய்கிறோம், அவர் திரும்பியதும் இனிப்புகளை வழங்குவோம்” என்று ராவல் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
-
Mar 18, 2025 17:31 IST
இளையராஜாவின் சாதனையால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை - ராஜ்யசபாவில் ஜெகதீப் தன்கர் பாராட்டு
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த ‘இசைஞானி’ இளையராஜா எம்.பி.க்கு மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார். இளையராஜாவின் சாதனையால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை என்று ராஜ்ய சபாவில் ஜெகதீப் தன்கர் பாராட்டினார்.
-
Mar 18, 2025 17:03 IST
இளையராஜா குறித்து மோடி பெருமிதம்
இசை, கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இளையராஜா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 18, 2025 16:35 IST
தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவரையே வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 18, 2025 15:49 IST
டெல்லியில் இளையராஜா - மோடி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை, இளையராஜா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து இளையராஜா பதிவிட்டுள்ளார் அதில், "சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்கள் குறித்து இருவரும் பேசினோம். இந்த சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. மோடியின் பாராட்டு மற்றும் வாழ்த்துகளுக்கு தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 18, 2025 15:33 IST
சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு அப்பால் இருந்தாலும், எப்போதும் எங்கள் இதயத்துக்கு நெருக்கமானவர்தான்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Mar 18, 2025 15:11 IST
விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. 17 மணி நேரத்தில் அவர்கள் பூமியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mar 18, 2025 14:02 IST
அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா? -பிரேமலதா பதில்
அ.தி.மு.க.-வுடன் கூட்டணி தொடருமா என 2026 மார்ச் 18-ம் தேதி என்னுடைய அடுத்த பிறந்தநாளன்று தெளிவாகச் சொல்கிறேன் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
Mar 18, 2025 13:47 IST
செங்கோட்டையனுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையனுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முறையிட்டார். கடந்த சில நாட்களாக சட்டப்பேரவைக்கு செங்கோட்டையன் தனியாக வந்து சென்ற நிலையில், இன்று சகஜமான சூழல் ஏற்பட்டது.
-
Mar 18, 2025 13:39 IST
சீமானின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
பெரியார் தொடர்பாக அவதூறாக பேசிய சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரி சீமான் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
Mar 18, 2025 13:27 IST
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது - அண்ணாமலை
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாஹீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, படுகொலை செய்யுமளவுக்கு சட்டம்-ஒழுங்கு உள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார். திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது என்றும், கையாலாகாத தி.மு.க. அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்க போகிறோம் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Mar 18, 2025 13:25 IST
தமிழகத்தில் 22ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் வரும் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3°C அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 18, 2025 13:24 IST
ரூ.120 கோடி செலுத்தி அமிதாப் பச்சன் முதலிடம்!
இந்தியாவின் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024-25ம் நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக, அமிதாப் பச்சன் தொடர்ந்து திகழ்கிறார். இதன் மூலம் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
-
Mar 18, 2025 13:11 IST
மகா கும்பமேளாவுக்கு பிரதமர் பாராட்டு - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி
மக்களவையில் கும்பமேளா குறித்து பேசிய பிரதமர் மோடி, முக்கியப் பிரச்னைகள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. கும்பமேளாவில் நடந்த உயிரிழப்புகள் குறித்து மோடி பேசாதது ஏன்? என எம்.பி.க்கள் கேள்வி அவையின் மையப்பகுதியில் எம்.பி.க்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
-
Mar 18, 2025 13:05 IST
வளர்ப்பு நாய்க்கு வாய்மூடி கட்டாயம் - சென்னை மாநகராட்சி
சென்னையில் வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் உரிமையாளர்கள், அதற்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
Mar 18, 2025 13:04 IST
காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 250+ பேர் பரிதாப பலி!
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஹமாஸ் படையினர் ஈடுபட்டதால் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது.
-
Mar 18, 2025 12:37 IST
“நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சி கும்பமேளா"
“பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை வெற்றியடைய செய்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி; நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக கும்பமேளா அமைந்தது மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தமுடியுமா என சந்தேகம் எழுப்பியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் விழா நடந்தது" - மக்களவையில் பிரதமர் மோடி உரை
-
Mar 18, 2025 12:17 IST
ஓசூர் விமான நிலையம் குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம்
"தண்ணீரில் தெர்மாகோல் விடுவது எளிதானது. ஆனால் புதிதாக விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்” என்று விமான நிலையம் குறித்த செல்லூர் ராஜூ கேள்விக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.
-
Mar 18, 2025 12:01 IST
மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதிக்காததால் மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு. ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு
-
Mar 18, 2025 11:58 IST
"நில உரிமையாளர்கள் பிச்சை பாத்திரம் ஏந்தும் நிலை"
கையகப்படுத்திய நிலத்திற்கு அரசு இழப்பீடு - வழங்காததால் உரிமையாளர்கள் பிச்சை பாத்திரம் ஏந்தியுள்ளனர் - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு: பெருந்தொகை இழப்பீடாக வழங்க வேண்டியுள்ளதால், இதற்கு தீர்வு காண அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும் - நீதிபதி
-
Mar 18, 2025 11:53 IST
தலைமைச் செயலகத்தை சுற்றி வாகனங்கள் பரிசோதனை
பாஜக போராட்டம் எதிரொலியாக சென்னை தலைமைச் செயலகத்தை சுற்றி போலீசார் தீவிர சோதனை. தலைமைச் செயலகத்தை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது; அரசுப் பேருந்துகளில் போராட்டக்காரர்கள் வர வாய்ப்பு என்பதால் பேருந்துகளில் ஏறி போலீஸ் சோதனை
-
Mar 18, 2025 11:51 IST
சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும் - ராகுல் காந்தி
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; நடத்திக் காட்டுவோம். சாதிவாரி கணக்கெடுப்பில் தெலங்கானா காட்டிய வழி ஒட்டுமொத்த நாட்டிற்கு தேவையானது; பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்திற்கான நியாயமான உரிமை சாதிவாரி கணக்கெடுப்பு என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
Mar 18, 2025 11:49 IST
"தாய் மொழியில் பயின்றவர்களே உலகளவில் சாதனை படைத்துள்ளனர்"
“தாய்மொழியே சிறந்தது, இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி; இந்தி கற்றுக்கொண்டால் டெல்லி செல்லும்போது மற்றவர்களிடம் கூச்சப்படாமல் பேசலாம்” மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே; எனவே மொழி அரசியல் தேவையற்றது; தாய்மொழியில் பயின்றவர்களே உலகளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளனர் - மொழிக் கொள்கை குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் பேச்சு
-
Mar 18, 2025 11:42 IST
புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்
அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 18, 2025 11:16 IST
திமுக வெற்றி செல்லும்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அன்னியூர் சிவாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
-
Mar 18, 2025 11:09 IST
"விதிகளை மீறும் சுங்கச்சாவடிகளை அகற்ற முயற்சி”
விதிகளை மீறி இயங்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து முயற்சி நடக்கிறது உள்ளூர் பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாஸ் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது; கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற 2,3 கடிதங்களை நிதின் கட்கரிக்கு அனுப்பிவிட்டோம் - அமைச்சர் வேலு
-
Mar 18, 2025 10:33 IST
சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதில்
இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என நாகை மாலி கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
-
Mar 18, 2025 10:29 IST
பெட்ரோல் பங்க் அமைக்க தடையில்லா சான்று
விபத்துகளை தவிர்க்கும் வகையில் பெட்ரோல் பங்குகள் அமைக்க தடையில்லா சான்று வழங்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகளின் சந்திப்பில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கலாம். இதர சாலைகளின் சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பெட்ரோல் ப்ங்க் அமைக்க தடையில்ல சான்று தரப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
-
Mar 18, 2025 10:24 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் 66,000 க்கு விற்பனையாகிறது.
-
Mar 18, 2025 10:24 IST
தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை - துரைமுருகன்
கிணத்துக்கடவு தொகுதி வழுக்கல் கிராமத்தில் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
Mar 18, 2025 09:48 IST
தொகுதி மறுசீரமைப்பு - கனிமொழி கோரிக்கை
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தக்கோரி திமுக எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார்.
-
Mar 18, 2025 09:33 IST
வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகளை நீக்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை வாக்குகளை நீக்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனையைத் தொடங்கி உள்ளது. ஒன்றிய உள்துறை செயலாளர், ஆதார் செயல் அதிகாரி உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடந்த 2021 முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்.ஆதார் எண் இணைப்பைக் கட்டாயமாக்குவது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Mar 18, 2025 09:05 IST
3 நாள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்
ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி பயணத்தின்போது மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு நபர்களை சந்தித்தபின் மார்ச் 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து ஆளுநர் ரவி வருகிறார்.
-
Mar 18, 2025 08:32 IST
மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு
திருப்பரங்குன்றம் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்திற்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் எழுந்தருளவுள்ளதால் முருகன் கோயில் நடை அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை அடைக்கப்பட்டிருக்கும். மீனாட்சி அம்மன் வளாகத்தில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தை மட்டும் பக்தர்கள் பார்வையிடலாம்.
-
Mar 18, 2025 08:27 IST
தமிழிசை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எச்.ராஜா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Mar 18, 2025 07:54 IST
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்
கலிபோர்னியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூடான பானம் சரியாக மூடப்படாததால் டெலிவரிக்கு சென்ற ஓட்டுநர் மைக்கேல் கார்சியாமீது சிந்தி கடும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 2020யில் நடந்த சம்பவத்திற்கு ரூ. 434.78 கோடி இழப்பீடு வழங்க நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 18, 2025 07:50 IST
போர் முடிவுக்கு வருமா?
3 ஆண்டுகளாக நடக்கும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இன்று அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
-
Mar 18, 2025 07:47 IST
அனுமதியின்றி போராட முயற்சி - தமிழிசை மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் 86 பேர் மீது வழக்குப்பதிவு; பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கரு. நாகராஜன் உள்ளிட்ட 700 பேர் மீது எழும்பூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
Mar 18, 2025 07:44 IST
நாக்பூரில் பல பகுதிகளில் வன்முறை
மஹாராஷ்ட்ராவில் அவுரங்கசீப் கல்லறை தொடர்பான விவகாரத்தில் நாக்பூரில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பஜ்ரங் தள உறுப்பினர்கள் போராட்டத்தின்போது குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது.
-
Mar 18, 2025 07:23 IST
நாக்பூரில் வதந்தியால் கலவரம்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் வன்முறை வெடித்தது. 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் போராட்டத்தை கட்டுப்படுத்தினர்.
-
Mar 18, 2025 07:21 IST
நாக்பூரில் வன்முறை; 144 தடை உத்தரவு அமல்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
Mar 18, 2025 07:19 IST
தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.