/indian-express-tamil/media/media_files/2025/03/14/33r5JGQRDsqPkayQ2zRS.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 19, 2025 22:10 IST
தற்காலிக கூடாரங்கள் அகற்றம்: 200 விவசாயிகள் கைது: பஞ்சாப்பில் பதற்றம்!
பஞ்சாப் ஹரியானாவின் சம்பு எல்லையில், விவசாயிகள் போராட்டத்திற்காக அமைத்த தற்காலிக கூடாரங்களை பஞ்சாப் போலீஸ் ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு அகற்றியுள்ளது, இதில் 200-க்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Mar 19, 2025 22:06 IST
எல்லை தாண்டி மீன் பிடிதததாக 11 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன் பிடிதததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதில் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
Mar 19, 2025 22:03 IST
அணைக்கட்டு தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து தர எம்.எல்.ஏ கோரிக்கை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைத்து தர எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார், கிராம பகுதிகள் நிறைந்த அணைக்கட்டு தொகுதியில், 40 முதல் 50 கி.மீ. தொலைவில் பால் குளிர்விக்கும் மையம் உள்ளதால், பால் கெட்டுப் போகிறது, எனவே அணைக்கட்டு, ஒடுகத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதை அமைத்து தர வேண்டும் என அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Mar 19, 2025 22:02 IST
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார எம்.எல்.ஏ
மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ பராக் ஷா, 3,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ.-வாக திகழ்கிறார். கர்நாடகாவின் கனகபுரா எம்.எல்.ஏ.வும் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் 1,413 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 2ம் இடத்தில் உள்ளார்
-
Mar 19, 2025 20:34 IST
இஸ்லாமிய பெண்களை அவசமதித்த வழக்கில் 8 வாரத்திற்குள் விசாரணை: சுங்கவரித்துறைக்கு உத்தரவு
சென்னை ஏர்போர்ட்டில் சோதனையின் போது இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தியதாக சுங்க அதிகாரி மீது சபீனா என்பவர் தொடர்ந்த வழக்கில் 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுங்கத்துறை தலைமை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 19, 2025 20:30 IST
13 வேலை நாட்களில், 87,852 மாணவர்கள் சேர்க்கை: அரசுப்பள்ளி பற்றி அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 13 வேலை நாட்களில், 87,852 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
Mar 19, 2025 19:45 IST
எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட்டாது: கல்வி அமைச்சகம் பதில்
எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்பட்டாது என மாநிலங்களவையில், கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள நிலையில், மும்மொழி கொள்கையில் மூன்றில் இரு மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும். அதனை தேர்வு செய்வது அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாணவர்கள் தான் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 19:43 IST
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: வேல்முருகன் கோரிக்கை
பெண்கள் அரைகுறை ஆடையுடன் ஆடுகிறார்கள். இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
-
Mar 19, 2025 19:39 IST
ரயில்கள் மீது 7971 முறை கல்லெறிதல் சம்பவம்: ரயில்வேதுறைக்கு 5.79 கோடி சேதம் என தகவல்
கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை, வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது, 7971 முறை கல்லெறிதல் சம்பவம் நடந்துள்ளது, இந்த சம்பவம் தொடர்பாக4549 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த கல்வீச்சு சம்பவத்தால், 5.79 கோடி மதிப்பில் ரயில்வே துறைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 18:34 IST
எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என மாநிலங்களவையில் கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. மும்மொழிக் கொள்கையில் மூன்றில் இரண்டு இந்திய மொழியாக இருக்க வேண்டும்; கற்க விரும்பும் மூன்று மொழிகளையும் தேர்வு செய்வது அந்தந்த மாநிலங்கள் மற்றும் மாணவர்கள்தான் எனவும் கல்வி அமைச்சக பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 18:27 IST
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைகோரி டாஸ்மாக் தரப்பில் 3 மனுக்கள் தாக்கல்
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எ மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும்; விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களைத் துன்புறுத்த தடை விதிக்க வேண்டும்; சோதனையில் ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்வதை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 17:53 IST
தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு தி.மு.க நேரில் அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு தி.மு.க சார்பில், கனிமொழி, அமைச்சர் ரகுபதி நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக டி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அழைப்பிதழை வழங்கினர்.
-
Mar 19, 2025 17:31 IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடு மண் பதக்கம்; இரும்பு கண்டுபிடிப்பு - தங்கம் தென்னரசு தகவல்
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில், “விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 19, 2025 17:27 IST
தனியார் மருத்துவமனையில் தந்தை குமரி அனந்தனின் பிறந்தநாளைக் கொண்டாடிய தமிழிசை
தனியார் மருத்துவமனையில் தனது தந்தை குமரி அனந்தனின் பிறந்தநாளை தமிழிசை சௌந்தரராஜன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், மருத்துவக் குழுவிற்கும் நன்றி தெரிவித்தார். இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “என் அன்பு தந்தை குமரி அனந்தன் அவர்களீன் 93வது பிறந்தநாள் இன்று; மக்களோடு கொண்டாட வேண்டிய பிறந்தநாள்; மருத்துவர்களோடு கொண்டாட வேண்டியதாயிற்று. ஆனாலும், அவர் நலமாகிக் கொண்டு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 19, 2025 16:44 IST
சம்பந்தம் இல்லாத இடங்களில் சோதனை - செந்தில் பாலாஜி
டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தம் இல்லாத இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அவசரகதியில் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தி.மு.க ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அரசியல் கட்சி இது போன்று செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 19, 2025 16:11 IST
தவறான தகவல் அளித்ததாகக் கூறி வங்கிக்கு அபராதம்
நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்ததாகக் கூறி கோட்டாக் மகேந்திரா வங்கிக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு மேலாளருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 15:50 IST
சென்னை மாநகராட்சிக்கு ரூ. 5,145 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீடு!
சென்னை மாநகராட்சிக்கு ரூ. 5,145 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 4,464 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 681 கோடி உயர்த்தப்பட்டு மொத்தமாக ரூ. 5,145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Mar 19, 2025 15:43 IST
இளையராஜாவை குடும்பத்தினருடன் சந்தித்த சிவகுமார்
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்து சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதன்படி, நடிகர் சிவகுமார் தனது மகன் சூர்யா மற்றும் மகள் ஆகியோருடன் இன்று இளையராஜாவை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து கூறினார்.
-
Mar 19, 2025 15:15 IST
ரூ. 2.63 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - தங்கம் தென்னரசு
மத்திய அரசு தர வேண்டிய ரூ. 2.63 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடன் வாங்காமல் மாற்று வழிகளை தமிழ்நாடு அரசு தேட வேண்டும் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, ரூ. 2.63 லட்சம் கோடியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும். இது தமிழ்நாட்டின் மீதான கடனில் 32 சதவீதம் என்றும் அவர் கூறினார்.
-
Mar 19, 2025 14:34 IST
புதுச்சேரி: மஞ்சள் நிற குடும்ப அட்டை மகளிருக்கு மாதம் ரூ.1,000
புதுச்சேரியில் மஞ்சள் நிற குடும்பை அட்டை வைத்துள்ள தகுதியான மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சிகப்பு நிற அட்டைதாரர்களுக்கு மட்டுமே தற்போது மகளிர் உதவித் தொகை வழங்கப்படுகிறது,
-
Mar 19, 2025 14:17 IST
சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்ம அடி
சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக பேராசிரியருக்கு மாணவர்கள் தர்ம அடி கொடுத்தனர். பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் கல்லூரி மாணவர்கள் ஒப்படைத்தனர்.
-
Mar 19, 2025 13:27 IST
தமிழகத்தில் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 19, 2025 13:15 IST
ஆர்.ஆர்.பி. தேர்வு கடைசி நேரத்தில் ரத்து - தேர்வர்கள் தவிப்பு
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்காக இன்று ஷிஃப்ட் முறையில் நடைபெற இருந்த 2 தேர்வுகளும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டன. தொழிநுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆர்.ஆர்.பி. தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால், தமிழ்நாட்டில் இருந்து தெலனங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் பரிதவிப்புக்குள்ளாகினர்.
-
Mar 19, 2025 13:09 IST
தி.மு.க. கொடிக் கம்பங்களை அகற்றுக - கட்சித் தலைமை உத்தரவு
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தி.மு.க தலைமை உத்தரவிட்டு உள்ளடு. அகற்றப்பட்ட கொடி கம்பங்களின் விவரங்களை தலைமைக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவை ஏற்று தி.மு.க நிர்வாகிகள்,கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 19, 2025 13:04 IST
சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ஐ.பி.எல். டிக்கெட்டுகள்!
ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் பெருமளவிலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
-
Mar 19, 2025 13:03 IST
"தெருநாய் விவகாரம்- உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் தீர்வு"
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால் மட்டுமே தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார். "கருத்தடை செய்த பிறகு, பிடித்த இடங்களிலேயே விடப்படும் தெருநாய்கள் கடித்து கால்நடைகள் அதிகளவில் உயிரிழப்பதாக புகார் எழுந்துள்ளது.
-
Mar 19, 2025 13:00 IST
பூங்காக்களில் புத்தக வாசிப்பு மண்டலங்கள்
சென்னை மாநகராட்சியில் உள்ள 70 பூங்காக்களில் புத்தக வாசிப்பு மண்டலங்கள் அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு - சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
Mar 19, 2025 12:57 IST
இன்று நடைபெறவிருந்த ரயில்வே தேர்வு ஒத்திவைப்பு
நாடு முழுவதும் இன்று (மார்ச் 19) நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ஒத்திவைப்பு. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதாக ரயில்வே தேர்வு வாரியம் தகவல் தமிழ்நாட்டில் மையம் ஒதுக்கப்படாத தேர்வர்கள் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்ற நிலையில் தேர்வு ஒத்திவைப்பு
-
Mar 19, 2025 12:57 IST
பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும் - பொதுச்செயலாளர் துரைமுருகன்
"பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களில் அகற்றிட வேண்டும்" பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
-
Mar 19, 2025 12:40 IST
பூங்காக்களில் உணவு விற்பனை
சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சுய உதவிக் குழுக்களால் தரமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் அமைக்கப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு
-
Mar 19, 2025 12:28 IST
தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு!
"தெரு நாய்கள் கடித்து மரணம் அடைந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் ரூ.42 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.
தெரு நாய் கடித்து உயிரிழக்கும் மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.4,000, கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது - சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள், எடுக்கப்பட நடவடிக்கைகள்| குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்! -
Mar 19, 2025 11:53 IST
பள்ளி சீருடை வழங்க ரூ.8.50 கோடி ஒதுக்கீடு - மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளிகளில் 1.20 லட்சம் மாணவர்களுக்கு ரூ.8.50 கோடியில் தலா 2 சீருடை வழங்கப்படும். அதிக மதிப்பெண் பெறும் பள்ளிகளில் பணியாற்ற விரும்புவோருக்கு வளமிகு ஆசிரியர் குழு அமைப்பு; வளமிகு ஆசிரியர் குழு சார்பில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
Mar 19, 2025 11:50 IST
"இந்திய கடற்படை என்ன செய்கிறது?"
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தினமும் தாக்குதல் நடத்தப்படுகிறது; பிரதமர் மோடி இதனை கண்டிக்க வேண்டும் பிரதமர் எதற்கு இலங்கை செல்கிறார்? வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி இலங்கை செல்கிறார்கள்; தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேசினார்களா? - நிலங்களவையில் வைகோ கேள்வி
-
Mar 19, 2025 11:48 IST
தெருநாய்களுக்கு தடுப்பூசி - ரூ. 3 கோடி ஒதுக்கீடு
1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி, மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு - சென்னை மேயர் பிரியா
-
Mar 19, 2025 11:31 IST
சுகாதார நிலையங்களில் Lift வசதி
சென்னை மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் Lift வசதி. புதிதாக கட்டப்பட்டுள்ள 22 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ 5 கோடியில் லிப்ட் வசதி - சென்னை பட்ஜெட்டில் அறிவிப்பு
-
Mar 19, 2025 11:28 IST
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் வாழ்த்து!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் வாழ்த்து! “சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்தடைந்த செய்தி நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது” என நெகிழ்ச்சி
-
Mar 19, 2025 11:26 IST
சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மேயர் பிரியா
-
Mar 19, 2025 11:12 IST
தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி கடத்தி கொலை
சென்னையை சேர்ந்த திமுக தொழிற்சங்க நிர்வாகி கடத்தி செல்லப்பட்டு படுகொலை.அயனாவரம் வசந்தம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் குமார், வயது 71. தொமுசவில் அனைத்து மாநகராட்சி தொழிலாளர் சங்க பொது செயலாளராக குமார் பதவி வகித்து வந்தார். கடந்த 16ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற குமார் காரில் கடத்தல். காரில் கடத்தி செல்லப்பட்ட குமாரை, செஞ்சி அருகே படுகொலை செய்த கும்பல். உத்தண்டி அருகே குமாரின் உறவினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கும்பலை தட்டி கேட்டதால் கொலை நடந்ததாக தகவல்
-
Mar 19, 2025 11:10 IST
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்
புதுச்சேரியில் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார்.
-
Mar 19, 2025 11:09 IST
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பிக்கள் பல முறை நோட்டீஸ் கொடுத்தும் இரு அவைகளிலும் விவாதம் நடத்தப் படாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
-
Mar 19, 2025 10:36 IST
வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்க ஆலோசனை
ஆந்திராவில் வீட்டிற்கே சென்று ரேசன் கடை பொருட்களை வழங்கும் திட்டம் உள்ளது. வரும் 20ம் தேதி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
Mar 19, 2025 10:35 IST
சென்னையில் ரூ.2000 மாதாந்திர பயண அட்டை அறிமுகம்
சென்னையில் ஏசி உள்பட அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பயணிக்க ரூ.2000 மாதாந்திர பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே சாதாரண மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்க ரூ.1000 பயண அட்டை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Mar 19, 2025 10:32 IST
சென்னையில் சிலை திறப்பு விழா - ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
-
Mar 19, 2025 10:31 IST
‘‘சுரங்கப்பாதைகள் திறப்பு எப்போது?’’
போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி எப்போது நிறைவுபெறும் என ராயபுரம் மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை போஜராஜன் நகர் சுரங்கப்பாதை இரண்டு மாதத்தில் திறக்கப்படும், தியாகராய நகர் பாலம் 3 மாதத்திற்குள் திறக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்துள்ளார்.
-
Mar 19, 2025 10:01 IST
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கும், ஒரு கிராம் ரூ.8,290-க்கும் விற்பனையாகிறது.
-
Mar 19, 2025 10:00 IST
ரூ.2,000-க்கு மாதாந்திர பாஸ் - அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.2,000-க்கு மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். ரூ.2000 கட்டணத்தில் ஏசி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம்.
-
Mar 19, 2025 09:24 IST
திடீரென டெல்லி சென்ற செந்தில் பாலாஜி!
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென டெல்லி சென்று திரும்பியுள்ளார். நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்று அவர் இன்று காலை திரும்பினார். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
Mar 19, 2025 09:00 IST
மம்முட்டிக்காக சபரிமலையில் இருமுடிகட்டி தரிசனம் செய்துள்ளார் மோகன்லால்
நடிகர் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் பரவிய நிலையில் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் மோகன்லால் தரிசனம் செய்துள்ளார். முகமது குட்டி என்ற மம்முட்டியின் இயற்பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டுள்ளார்.
-
Mar 19, 2025 08:43 IST
துபாய் - சென்னை தங்கம் கடத்தல்
துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.1.23 கோடி மதிப்புடைய, 1.5 கிலோ தங்கப் பசை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தண்ணீர் பாட்டில் குடிநீருக்குள், தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்த சென்னையைச் சேர்ந்த பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Mar 19, 2025 08:42 IST
சென்னையில் அனுமதி பெற்று நடத்தப்படும் போராட்டங்களுக்கான இடம் மாற்றம்..!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மாறாக திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் இடம் ஒதுக்கீடு செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரிவிட்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பால பணிகள் தொடங்க உள்ளதால் அங்கு போராட்டம் நடத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.