/indian-express-tamil/media/media_files/iRzDXhgGJAeSgpkeGONE.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 20, 2025 23:33 IST
பிரபல பாடகர் அசல் கோலார் நண்பரை தாக்கிய அதிகாரிகள்
பிரபல ராப் பாடகர் அசல் கோலாரின் மலேசிய நண்பர் நவீன்ராஜை, குடியுரிமை அலுவலக அதிகாரிகள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுலா விசாவிற்கு வந்த நவீன்ராஜ் விசா முடிந்தும் சென்னையில் இருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிக்க சென்றபோது தகராறு நவீன்ராஜை விசா தாண்டி தங்க வைத்ததாக அசல் கோலார் தந்தையின் பாஸ்போட்டை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
-
Mar 20, 2025 23:31 IST
ஆந்திரப் பிரதேச அரசின் கெளரவ ஆலோசகராக சதீஷ் ரெட்டி நியமனம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (DRDO) முன்னாள் தலைவரான சதீஷ் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசின் கெளரவ ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விண்வெளி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொடர்பாக இவர் அரசுக்கு ஆலோசகராக அமைச்சர் அந்தஸ்தில் இருப்பார் என தெரிவித்துள்ளது,
-
Mar 20, 2025 23:29 IST
கடும் வெயில் தாக்கம்: ஒடிசாவில் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்
ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக நாளை முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம். செய்யப்ட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
-
Mar 20, 2025 21:29 IST
அரசு திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை பழுதுபார்க்க ரூ600 கோடி ஒதுக்கீடு
கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
Mar 20, 2025 20:35 IST
ராமநவமிக்கு போலீஸ் பாதுகாப்பு: ஐபிஎல் போட்டியை மாற்றி வைக்க கொல்கத்தா போலீஸ் கோரிக்கை
வரும் ஏப்ரல் 6-ந் தேதி ராமநவமி நடைபெற உள்ளதால், அதிக போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் இதனால் அன்று நடைபெறும் கொல்கத்தா – லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைவேறு தேதிக்கு மாற்றம் செய்ய கொல்கத்தா போலீஸ் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளது,
-
Mar 20, 2025 19:23 IST
காதலிப்பதாக கூறி ஆண்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய வடமாநில பெண் கைது
இன்ஸ்டா-வில் காதல் வலைவீசி, ஆண்களை கஞ்சா வியாபாரியாக மாற்றிய வடமாநில இளம்பெண்ணை பெண் திரிசூலம் ரயில்வே கேட் அருகே கைது செய்த காவல்துறை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கைதான இளம்பெண் பாயல் தாஸ், திரிபுரா மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
-
Mar 20, 2025 19:21 IST
கடும் வெப்பத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்பு: ராயப்பேட்டை மருத்தவமனையில் தனி வார்டு அமைப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாத பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக 20 படுக்கைகளுடன் பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது, இந்த வார்டுக்காக சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ORS, ஆக்சிஜன் வசதி, ஐஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன
-
Mar 20, 2025 18:56 IST
இம்பேக் பிளேயர் விதியை நீக்க ஆலோசனை
ஐ.பி.எல்-ல் உள்ள இம்பேக் பிளேயர் விதியை நீக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள 10 அணி கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் இன்று ஆலோசனை நடத்தியது. பந்தின் மீது எச்சில் தேய்க்க விதிக்கப்பட்ட தடையை நீக்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில், ஐபிஎல்-ல் உள்ள Impact player விதியை நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023-ல் அறிமுகப்படுத்த இந்த விதியால் பல ஆட்டங்களின் போக்கு மாறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
-
Mar 20, 2025 18:32 IST
ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது - இ.டி-க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்
ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது எனக் குறிப்பிட்டு அமலாக்கத்துறைக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். முதுகெலும்பில்லாத கோழைகள் பா.ஜ.க-வுக்கு அடிபணியலாம், ஒருகாலமும் திராவிட மாடல் அரசை துரும்பு அளவு கூட அசைத்துப் பார்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமலாக்கத் துறையின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு அஞ்சாது, என்பதை அறியாத ஆதிக்கவாதிகளின் அராஜக நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்குக் குட்டு வைத்திருக்கிறது உயர் நீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிலேயே உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட அமலாக்கத்துறை தற்போது மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் போர்க்குணத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் திராணி இல்லாத பாஜக, தனது அச்சுறுத்தல் ஆயுதத்தை அமலாக்கத் துறை மூலம் நீட்டியது. பாஜகவின் ஆணவத்திற்கான அடிதான் உயர்நீதிமன்றம் இப்போது எழுப்பிய கேள்விகள்.
“இரவில் சோதனை நடக்கவில்லை; அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்; அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை” என்றெல்லாம் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சொன்ன போது, “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது” என நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25-ஆம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது’ என அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
* எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் எனத் தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் எப்படித் தடுத்து வைக்க முடியும்?
அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதைச் செயல்படுத்திய விதம் தவறு.
அமலாக்கத்துறை சோதனை நடத்தக் காரணமான வழக்குகள், விவரங்களைப் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்.
இரவு வரை பெண் அதிகாரியை சிறைபிடித்து சோதனை நடவடிக்கை எடுப்பது அச்சுறுத்தல்.
என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறது உயர் நீதிமன்றம்.எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்காக அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற அதிகார அமைப்புகளைத் தனது கைப்பாவையாக ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் முகாந்திரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளைப் புனைந்து, எதிர்க்கட்சிகளை முடக்குவதையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் செயல்படுகிறது அமலாக்கத் துறை.
மோடி அரசின் 10 ஆண்டு ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 193 ஆனால், இதுவரை 2 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சிளிழிக்ஷிமிசிஜிமிளிழி ஸிகிஜிணி வெறும் 1.03 சதவிகிதம்தான். இதனை நாடாளுமன்றத்திலேயே பாஜக ஒத்துக் கொண்டிருக்கிறது. சோதனைகள், கைதுகள் மூலம் தனது அரசியல் எதிரிகளை மிரட்டிப் பழிவாங்கவும் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும் அமலாக்கத் துறை அரசியல் சதியை நடத்தி கொண்டிருப்பதைத்தான் சிளிழிக்ஷிமிசிஜிமிளிழி ஸிகிஜிணி வெளிக்காட்டுகிறது.
அமலாக்கத் துறையால் வழக்குகள் பதியப்பட்டவர்கள், பாஜகவில் இணைந்ததும், அவர்கள் மீதான நடவடிக்கைகள் நின்றுவிடுவது அமலாக்கத்துறையின் அறிவிக்கப்படாத விதியாகும். அமலாக்கத்துறை சோதனை நடத்துவதும் வழக்கு பதிவதும் முழுக்க முழுக்க பாஜகவுக்கு ஆள்பிடிக்க மட்டுமே. எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து சோதனை நடத்துவது அதை வைத்து வழக்கு போடுவேன் எனச் சொல்லி மிரட்டி அவர்களை பாஜகவிற்கு ஆதரவாளராக மாற்றுவது என ஒன்றிய பாஜக அரசின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பாஜகவின் இந்த ணிஞி பேர அரசியலுக்கு அடிபணியாதவர்களை மட்டும் சிறையில் வைத்து மிரட்டிப் பார்ப்பது என்ற மிக மிகக் கேடுகெட்ட கேவலமான வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.
அமலாக்கத் துறையை வைத்து பூச்சாண்டி காட்டியதால் பாஜகவோடு இணைந்தவர்களைப் பட்டியல் போட்டால், சுவேந்து அதிகாரி, முகுல் ராய், ஷிண்டே, அஜீத் பவார், பிரேம் காந்த் என அவர்கள் நம்பும் அனுமார் வால் போல அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
வடக்கே அமலாக்கத்துறையை வைத்து பாஜகவிற்கு ஆள் பிடித்த பார்முலாவை இங்கே செய்து பார்க்கலாம் எனக் கணக்கு போடுகிறது பாஜக ஆனால் முதுகெலும்பில்லாத கோழைகள் வேண்டுமானால் பாஜகவின் சித்து விளையாட்டிற்குப் பயந்து பாஜகவை ஆதரித்து அடிபணியலாம் ஆனால், ஒருகாலமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடைக்கோடித் தொண்டனையோ, திராவிட மாடல் அரசையோ துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது. பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத்துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் சோதனை மேற்கொண்டது.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் இப்போது எடுத்திருக்கும் முயற்சி நாடாளுமன்ற மட்டுமல்லாது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு பாஜக-வை நிலைகுலையச் செய்திருக்கிறது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டத் தொகுதி சீரமைப்பின் பெயரால் பாஜக போட்டிருந்த பாசிசத் திட்டத்தை முளையிலேயே முதலமைச்சர் அம்பலப்படுத்திவிட்டார் என்ற ஆத்திரத்திரத்தில் ஆற்றாமையிலும் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஏவிவிட்டுள்ளது.
வரும் மார்ச் 22-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிற ஆலோசனைக் கூட்டம் பாஜகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. அதனால்தான் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையைப் புனிதமான விசாரணை அமைப்பாகக் காட்டி வந்த பாஜகவின் பிம்பம் தமிழ்நாட்டில்தான் முதல்முறையாகத் துடைத்தெறியப்பட்டது. திண்டுக்கல் மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைதானார். கொள்ளையனோடு கூட்டுச் சேர்ந்த காவலனாக அமலாக்கத்துறை பாஜகவோடு கூட்டு வைத்து, பாஜகவின் குற்றங்களுக்குத் துணை போய்க் கொண்டிருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Mar 20, 2025 18:25 IST
தடை நீக்கம்
ஐ.பி.எல் போட்டிகளில் பந்தை வழுவழுக்கச் செய்ய எச்சில் தொட்டு தேய்ப்பதற்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஐ.சி.சி. விதித்த இந்த தடையை முதன்முதலாக தற்போது பி.சி.சி.ஐ நீக்கியுள்ளது.
-
Mar 20, 2025 18:17 IST
வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.
-
Mar 20, 2025 17:35 IST
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு உண்டா இல்லையா? தங்கமணி கேள்விக்கு செந்தில்பாலாஜி பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி, “கடந்த காலங்களில் தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று சொன்னது; தற்போதைக்கு தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு உண்டா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்ச செந்தில்பாலாஜி, “கடந்த காலங்களில் இத்துறையின் அமைச்சராக நீங்களும் நத்தம் விசுவநாதனும் இருந்தபோது, பேரவையில் பூரண மதுவிலக்கு பற்றி என்னென்ன பதில் அளித்திருப்பீர்கள் என்ற குறிப்பை நான் கையில் வைத்திருக்கிறேன்; அதைப் பற்றியெல்லாம் இப்போது பேச வேண்டாம்” என்று கூறினார்.
-
Mar 20, 2025 16:47 IST
தாலிக்குத் தங்கம் அ.தி.மு.க ஆட்சியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது - தங்கமணிக்கு சபாநாயகர் பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி: “தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு, தற்போது மாணவிகளுக்கு படிக்கும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், அப்பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.36,000 மட்டுமே கிடைக்கிறது. தங்கம் விலையோ சவரனுக்கு ரூ.67,000 தொட்டுவிட்டது. திருமணத்தின்போது தங்கம் என்பது தமிழர்களுடைய மரபு; எனவே அதனை மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரினார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு, “அத்திட்டம் அ.தி.மு.க ஆட்சியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் இங்கே பேச வேண்டாம்” என்று கூறினார்.
-
Mar 20, 2025 16:30 IST
“தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்” - இயக்குநர் கோபி நயினார்
திரைப்பட இயக்குநர் கோபி நயினார்: “தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கு திராவிட சித்தாந்தவாதிகளுக்கு பெரும் கோபம் ஏற்படுத்துகிறது. இது ஒரு சர்வாதிகார போக்கின் மனநிலை.
அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் அதை நான் நடைமுறைப்படுத்தும் போது என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்தரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
Mar 20, 2025 16:05 IST
100 நாள் வேலைத் திட்டம்; சட்டப்பேரவையில் தங்கமணி - ஐ. பெரியசாமி விவாதம்
100 நாள் வேலைத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி இடையே விவாதம் நடைபெற்றது.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி: “100 நாள் வேலைத் திட்டத்தில் நிலுவையில் இருக்கும் ஊதியத்தை மாநில அரசே வழங்க வேண்டும்; மத்திய அரசு கொடுத்த பின் அதனை மாநில அரசு எடுத்துக்கொள்ளலாம்; ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருந்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.
இதற்கு பதிலளித்த ஊரக வளர்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி: “100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசுதான் செயல்படுத்தி வருகிறது. 10% ஊதியத்தை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். மத்திய அரசின் நிதி நேரடியாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கே செல்கிறது. மாநில அரசுக்கு வந்து பணியாளர்களுக்கு செல்வதில்லை” என்று கூறினார்.
-
Mar 20, 2025 15:48 IST
சூதாட்ட மொபைல் செயலி - நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்குப் பதிவு
சூதாட்ட மொபைல் செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா, நடிகை நிதி அகர்வால் உள்பட 25 பேர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
-
Mar 20, 2025 15:07 IST
பால் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன்
பால் விலையை உயர்த்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என சட்டப்பேரவையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்
-
Mar 20, 2025 14:45 IST
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
-
Mar 20, 2025 14:29 IST
வேல்முருகன் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
த.வா.க. உறுப்பினர் வேல்முருகன் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமாரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவைக்குறிப்பில் இருந்து வேல்முருகன் பேச்சு நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று எந்த உறுப்பினரும் நடந்துகொள்ளக் கூடாது என சபாநாயகர் அப்பாவு எச்சரித்திருந்த நிலையில், வேல்முருகன் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
-
Mar 20, 2025 14:22 IST
மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் சுட்டுக்கொலை
மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் சகோதரர் மகன் சுட்டுக் கொல்லப்பாடர். பீகார் மாநிலம் ஜகத்பூரில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. விகல் யாதவ் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
-
Mar 20, 2025 14:00 IST
சத்தீஸ்கரில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கங்கலூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பிஜாப்பூர்-தந்தேவாடா எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதற்றத்தை தணிக்க சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
Mar 20, 2025 13:55 IST
சென்னை - ஆட்டோவில் 400 நட்சத்திர ஆமைகள் கடத்தல்..
சென்னை ரிசர்வ் வங்கி அருகே ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன். துணி எனக்கூறி நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த யாசின் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 20, 2025 13:50 IST
முதலமைச்சர் பரிந்துரை - அப்பாவு எச்சரிக்கை
சட்டப்பேரவையில் வேல்முருகன் பேசியதை ஏற்க முடியாது. அவர் தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். இது போல இனிமேல் யாராவது நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Mar 20, 2025 13:48 IST
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பரிந்துரை
சட்டப்பேரவையில் த.வா.க. தலைவர் வேல்முருகன் அதிகபிரசிங்கித் தனமாக நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. எனவே அவர் மீது பேரவைத் தலைவர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். ஒருமையில் பேசியது மற்றும் அமைச்சர்களை கைநீட்டி பேசியதை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
-
Mar 20, 2025 13:46 IST
த.வெ.க. பொதுக்குழு - நிர்வாகிகள் ஆய்வு
மார்ச் 28-ம் தேதி த.வெ.க. பொதுக்குழு நடைபெற உள்ள திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் அக்கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
-
Mar 20, 2025 13:42 IST
மாநில கல்விக் கொள்கை அறிக்கை - பரிசீலனை
மாநில கல்விக் கொள்கை தொடர்பான நீதிபதி முருகேசன் அறிக்கை பரிசீலனையில் உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவதாத்தில் பேசிய பாமக உறுப்பினர் ஜி.கே. மணி மாநில அரசின் கல்விக் கொள்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
-
Mar 20, 2025 13:30 IST
நாளை மறுநாள் ம.நீ.ம. செயற்குழு கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், வரும் 22-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற உள்ளது.
-
Mar 20, 2025 13:29 IST
தமிழ்நாட்டில் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 26-ம் தேதி வரையிலான 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
-
Mar 20, 2025 13:27 IST
2024-ல் தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைவு - முதலமைச்சர் ஸ்டாலின்
2024-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், 200-க்கும் மேற்பட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
Mar 20, 2025 13:08 IST
தங்கம் விலை நிலவரம் போல தினமும் கொலை நிலவரம்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
தங்கம் நிலவரத்தைப் போல கொலை நிலவரம் எப்படி இருக்கிறது என்ற அவலநிலை இனி இருக்கக் கூடாது என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். குற்றம் நடக்காமல் பார்ப்பதுதான் அரசின் கடமை; முந்தைய ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவது முறையல்ல என்றும் அவர் கூறினார்.
-
Mar 20, 2025 13:06 IST
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு!
துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. இந்த தொகை போட்டியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர்கள், பிற அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
-
Mar 20, 2025 13:00 IST
பால் விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை!
"பால் உற்பத்தியாளர்களும் ஏழை, வாங்கி பருகும் மக்களும் ஏழை. எனவே தனியார் பால் விலையை உயர்த்தினாலும், பால் விலையை உயர்த்தும் எண்ணம் தமிழ்நாடு அரசிற்கு இல்லை!”- சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
-
Mar 20, 2025 12:58 IST
தவெக பொதுக்குழு - நிர்வாகிகள் ஆய்வு
வரும் மார்ச் 28-ல் தவெக பொதுக்குழு நடைபெறவுள்ள திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் அக்கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்துவருகின்றனர் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு
-
Mar 20, 2025 12:41 IST
தமிழ்நாடு எம்.பி.க்கள் அமளி - முடங்கிய நாடாளுமன்றம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை மதியம் 2 மணி வரையும் மாநிலங்களவை 15 நிமிடங்களுக்கும் ஒத்திவைப்பு
-
Mar 20, 2025 12:41 IST
அமேசான், ஃப்ளிப்கார்ட் கிடங்குகளில் அதிரடி சோதனை
திருவள்ளூர்: புதுவாயலில் உள்ள அமேசான் குடோனிலும், கொடுவள்ளி பகுதியிலுள்ள ஃப்ளிப்காட் குடோனிலும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் சோதனை; BIS முத்திரை இல்லாத லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தரமற்ற பொருட்கள் பறிமுதல் உலோக குடிநீர் பாட்டில்கள், சீலிங் ஃபேன்கள், பொம்மைகள் என ரூ.36 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
-
Mar 20, 2025 12:16 IST
மின்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகளிடமோ பொதுமக்களிடமோ கட்டணம் வசூல் செய்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
-
Mar 20, 2025 12:10 IST
டாஸ்மாக் சோதனை தொடர்பான வழக்கில் வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
"டாஸ்மாக் சோதனை தொடர்பான வழக்கில் வரும் 25ஆம் தேதி வரை நடவடிக்கை கூடாது" அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
Mar 20, 2025 12:03 IST
சென்னை வாகன ஓட்டிகளுக்கு ஒரு இன்ப செய்தி.. இனி இந்த ஏரியாவில் ட்ராபிக் குறையும்
சென்னை வாகன ஓட்டிகளுக்கு ஒரு இன்ப செய்தி.. இனி இந்த ஏரியாவில் ட்ராபிக் குறையும். சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் மேம்பால பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் கூறினார்.
-
Mar 20, 2025 11:46 IST
அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது.
அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது. 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது. - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
Mar 20, 2025 11:35 IST
'விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது'
விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது; முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் பரப்பு விளை நிலங்கள் மனைபட்டாவாக மாற்றம்; முப்போகம் விளையும் பூமியாக இருந்தாலும் பிளாட் போட்டு விற்கும் நிலை உள்ளது; ஏரி, குளம், நீர் நிலைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - பாமக நிறுவனர் ராமதாஸ்
-
Mar 20, 2025 11:34 IST
தமிழ்நாடு எம்.பி.க்களின் அமளியால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு
தமிழ்நாடு எம்.பி.க்களின் அமளியால் மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு; தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் முழக்கம்
-
Mar 20, 2025 11:09 IST
ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து 2வது நாளாக தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டம்! ‘குறைக்காதே குறைக்காதே தொகுதிகளை குறைக்காதே' என முழக்கமிட்டப்படி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 20, 2025 10:34 IST
மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு -அமைச்சர் கீதா ஜீவன்
மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள்ளதாக தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
Mar 20, 2025 10:32 IST
ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர்கள் மட்டுமே
வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 15 சிலிண்டர் பெற்றவர்கள் அதற்குமேல் தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்தபின் சிலிண்டர்களை பெறலாம்.
-
Mar 20, 2025 10:29 IST
அனைத்து தளத்திலும் திமுக அரசு தோல்வி - ஆர்.பி.உதயகுமார்
அனைத்து தளத்திலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. இனியும் பொறுத்துக் கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர். அனைத்துக கட்சி கூட்டம் என்ற பெயரில் மக்களை திசை திருப்புகின்றனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கொலை நடைபெறும் காலமாக தமிழகம் மாறியுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் காவல்துறை படுதோல்வி அடைந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
-
Mar 20, 2025 09:55 IST
சட்டப்பேரவை கேள்வி பதில் நிகழ்வு
தரமணி பகுதியில் குடிநீர் பிரச்னை காரணமாக அடிக்கடி போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
-
Mar 20, 2025 09:54 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு 160 உயர்ந்து ஒரு பவுன் 66,480க்கு விற்பனையாகிறது.
-
Mar 20, 2025 09:25 IST
பராமரிப்பு பணி - புறநகர் ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி இடையே மதியம் 1.20 மாலை 5.20 வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி. சூலூர்பேட்டை - மூர் மார்க்கெட் புறநகர் ரயில்கள், கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை, நெல்லூர் - சூலூர்பேட்டை மெமு ரயில், செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - தாம்பரம் ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Mar 20, 2025 08:42 IST
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்றுடன் நிறைவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
-
Mar 20, 2025 08:40 IST
செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்- இருவர் கைது
கிண்டி பேருந்து நிலையத்தில் கபிலன் என்பவரிடம் செல்போனை பறித்துச் சென்ற நந்தனம் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூர்யா என்ற மாணவன் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும், 17 வயதுடைய மற்றொரு மாணவன் கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.