Chennai News Updates: தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும்போது தமிழில் படிக்க ஏற்பாடு: அமித்ஷா

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amit

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 22, 2025 00:39 IST

    `திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

    திருப்பதி : திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். பிற மதத்தை சேர்ந்தவர்கள் தற்போது பணியில் இருந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.



  • Mar 22, 2025 00:36 IST

    தமிழகத்தில் என்.டி.ஏ (NDA) கூட்டணி ஆட்சி அமையும்போது தமிழில் படிக்க ஏற்பாடு: அமித்ஷா

    தமிழகத்தில் என்.டி.ஏ (NDA) கூட்டணி ஆட்சி அமையும்போது பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை தமிழில் படிக்க ஏற்பாடு செய்யப்படும்  என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.



  • Advertisment
  • Mar 21, 2025 20:57 IST

    உயர்நீதிமன்றங்களில், 18.34 லட்சம் வழக்குகள் நிலுவை: மத்திய சட்ட அமைச்சகம் தகவல்

    நாடு முழுவதும் கிரிமினல் வழக்குகள் அதிகமாக நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில், 17,647 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில், 18.34 லட்சம், மாவட்ட மற்றும் கீழமை நீதிமனறங்களில், 3.46 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில், சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் போலி சாட்சி தொடர்பான வழக்கு, 7.72 லட்சம் நிலுவையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 21, 2025 20:49 IST

    சிக்னல் கோளாறு: சென்னையில் புறநகர் ரயில்கள் தாமதம்

    சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்கமாக செல்லும் புறநகர் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றதால், பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.



  • Advertisment
    Advertisements
  • Mar 21, 2025 20:01 IST

    தொகுதி மறுவரை தொடர்பான கூட்டம்: தெலுங்கான முதல்வர் சென்னை வருகை

    தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ள நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்



  • Mar 21, 2025 19:32 IST

    பஞ்சாப் முதல்வர் சென்னை வருகை

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் நாளை நடைப்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வருகை தந்துள்ளார். 

     



  • Mar 21, 2025 19:30 IST

    ஐ.பி.எல் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்

    ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை காணச்செல்லும் ரசிகர்கள், தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 



  • Mar 21, 2025 19:27 IST

    அனுமதியின்றி போராடினால் அபராதம் – சென்னை ஐகோர்ட் யோசனை

    அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் உடனடி அபராதம் விதிக்கலாமே? என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை வழங்கியது. அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்த வேண்டாம். அரியலூர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டதாக அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.



  • Mar 21, 2025 19:16 IST

    பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை - இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் இ.பி.எஸ் பேச்சு 

    சென்னை எழும்பூரில் அ.தி.மு.க சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய அவர், 'பதவிக்காக அல்லாமல், மக்களுக்கு தொண்டாற்றவே அரசியலுக்கு வந்தேன்" என்றும், "என்னை நம்பாமல் கெட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள், நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை" என்று கூறியுள்ளார். 



  • Mar 21, 2025 19:08 IST

    கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் - பவன் கட்சி பங்கேற்பு

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாளை சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில்  பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது 



  • Mar 21, 2025 18:43 IST

    கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு 

    கட்டணமில்லா பயண அட்டைகளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். 

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் முதற்கட்டமாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



  • Mar 21, 2025 18:23 IST

    கர்நாடக சட்டசபையில் கடும் அமளி - பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் சஸ்பெண்ட் 

    கர்நாடக மாநில பொதுப்பணி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் ஒப்புதலுக்காக அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.

    அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைப்பதாக கூறி, சபாநாயகர் இருக்கை முன் கூடி, காகிதங்களை கிழித்து தூக்கி எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து, கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் 6 மாத காலத்திற்கு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



  • Mar 21, 2025 18:12 IST

    இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இ.பி.எஸ் பங்கேற்பு

    சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கில் அ.தி.மு.க சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.



  • Mar 21, 2025 17:56 IST

    மொழியின் பெயரால் தி.மு.க நாட்டை துண்டாடுகிறது - அமித் ஷா

    மொழியின் பெயரால் தி.மு.க நாட்டை துண்டாடுகிறது. மொழியின் பெயரால் தி.மு.க நாடு முழுவதும் விஷத்தை பரப்புகிறது என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்



  • Mar 21, 2025 17:34 IST

    சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்

    சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை(மார்ச்.22) வெள்ளிக்கிழமை அட்டவணை அடிப்படையில் இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது



  • Mar 21, 2025 17:19 IST

    மத்திய அரசு நிதி – சென்னை மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

    சென்னை மாநகராட்சி பட்ஜெட், நிதி பற்றாக்குறை பட்ஜெட்டாக உள்ளது என பா.ஜ.க உறுப்பினர் உமா ஆனந்த் கூறிய நிலையில், சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு சொல்கிறது. 6% சொத்து வரி உயர்த்தி ஆவணங்களை சமர்பித்து இருந்தாலும் தற்போது வரை மத்திய அரசு நிதியை வழங்கவில்லை என்றும் மேயர் பிரியா தெரிவித்தார்



  • Mar 21, 2025 17:16 IST

    திருவாலங்காடு அருகே இளைஞர் சரமாரயாக வெட்டி கொலை

    திருவாலங்காடு அருகே இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே சிலர் இளைஞர் லோகேஷ் மீது இருவர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது 



  • Mar 21, 2025 17:02 IST

    அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து  - ஐகோர்ட் உத்தரவு

    அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2021-ல் முதுகுளத்தூரில் தேர்தல் விதிகளை மீறி கொடிக் கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரசாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல, சிவகங்கையில் தேர்தல் விதிகளை மீறி 15 வாகனங்களில் பிரசாரம் செய்ய வந்ததாகவும்,  பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல, திருச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ்க்கு எதிரான கொரோனா விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.



  • Mar 21, 2025 16:40 IST

    தமிழ்நாட்டில் இந்த இடங்களில் ஐ.பி.எல் போட்டி திரையிடப்படும் 

    வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் 'Fan Park' பட்டியலை வெளியிட்டு அறிவித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை நகரங்களில், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டும் திரையிடப்படும்.

    screen



  • Mar 21, 2025 16:25 IST

    ஆன்லைன் விளையாட்டு - 6 ஆண்டுகளில் 47 பேர் தற்கொலை - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

    தமிழகத்தில் 2019 முதல் 2024 வரை 6 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுக்களால் 47 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தவே ஆணையம் அமைக்கப்பட்டது, தடை செய்வதற்காக அல்ல. இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தி தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்த வழக்குகளை மார்ச் 27-க்கு தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • Mar 21, 2025 16:17 IST

    சத்ரபதி சிவாஜியாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை; தங்கம் தென்னரசு பேச்சுக்கு உறுப்பினர்கள் வரவேற்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு: “அலெக்ஸாண்டரின் வெற்றிப்பாதையில் தமிழ்நாடு ஒருபோதும் இருந்ததில்லை. மௌரிய பேரரசர் சந்திரகுப்த மௌரியரால் தமிழ்நாட்டின் எல்லையைக்கூட தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. புத்தர்களின் காலம் சமுத்திர குப்தனின் காலடி இந்த தமிழ் மண்ணில் கடைசிவரை பதியவில்லை. கனிஷ்கர் ஆட்சி எல்லை என்பது விந்தியத்திற்கே தெற்கே தாண்டியதில்லை. அக்பர் பாதுஷாவின் ராஜ்ஜியம் தமிழ்நாட்டை எட்டமுடியவில்லை. Emperor of Universe ஆலம்கீர் என்று தங்களை அழைத்துக்கொண்ட ஔரங்கசீப்பால்கூட தமிழ்நாட்டை வெல்லமுடியவில்லை. ஔரங்கசீப்பால் மலை எலி என அழைக்கப்பட்ட மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியவில்லை” என்று பெருமிதமாகப் பேசினார். இதற்கு உறுப்பினர்கள் மேசையைடத தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.



  • Mar 21, 2025 16:03 IST

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் பற்றாக்குறை... பா.ஜ.க கவுன்சிலர் குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதில்

    சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாநகராட்சி பட்ஜெட் பற்றாக்குறையாக உள்ளது என்று பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சிக்கு தர வேண்டிய ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. 6% சொத்துவரியை உயர்த்தினால்தான் நிதி தருவோம் என்கிறது மத்திய அரச” என்று பதிலளித்தார்.



  • Mar 21, 2025 15:35 IST

    மெரினா மீனவ மக்கள் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு - மயிலாப்பூர் எம்.எல்.ஏ கோரிக்கை

    சென்னை மெரினா மீனவ மக்கள் மற்றும் இதர சமூகத்தினர் வாழும் பகுதியில் கடற்கரை ஓரமுள்ள மிகவும் பின்தங்கிய 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு கட்டும் பணியை துரிதமாக தொடங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. மயிலை வேலு கோரிக்கை விடுத்தார்.



  • Mar 21, 2025 15:02 IST

    எஸ்.வி சேகர் சரணடைவதற்கு 4 வாரம் விலக்கு அளித்த உச்சநீதிமன்றம்

    பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், நடிகர் எஸ்.வி சேகர் சரணடைவதற்கு 4 வாரம் இடைக்கால விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொது வாழ்க்கையில் இருப்பவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்றும் ஒரு தகவலை பகிர்வதற்கு முன்பாக அதனை சரி பார்க்க வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



  • Mar 21, 2025 14:29 IST

    அஸ்வின் பெயரை சாலைக்கு வைக்க கோரிக்கை

    சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவிற்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை சூட்ட வேண்டும் என சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.



  • Mar 21, 2025 13:38 IST

    எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - இ.பி.எஸ்

    இன்று தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, "பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள், எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அ.தி.மு.க-வை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. அ.தி.மு.க எப்போதும் தன்மானத்தை இழக்காது" என அவர் கூறினார்.



  • Mar 21, 2025 13:18 IST

    தி.மு.க-வை கண்டித்து நாளை பா.ஜ.க போராட்டம்

    தி.மு.க அரசைக் கண்டித்து நாளை, பா.ஜ.க போராட்டம் நடத்த இருக்கிறது. அதன்படி, வீட்டிற்கு முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற தொகுதி மறுசீரமைப்பு நாடகம் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



  • Mar 21, 2025 13:14 IST

    விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும் - தங்கம் தென்னரசு 

    விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதன்படி, "இந்தியாவில் சாதி பாகுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தை, தமிழ்நாடு முற்றிலும் நிராகரிக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 21, 2025 12:57 IST

    "கூட்டல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்"

    கூட்டல் கணக்கில் தங்கமணி ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்; தங்கமணி கூட்டல் கணக்கில் ஏமாறமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த கணக்கிலும் ஏமாற மாட்டோம்; எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது; சாமானிய தலைவர் இயக்கத்தை வலிமையோடு நடத்தி வருகிறார் - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பதில்



  • Mar 21, 2025 12:55 IST

    ‘பூனைக்குட்டி வெளியே வருகிறது' - அவையில் சிரிப்பலை!

    அதிமுக-வை பாஜக இயக்குவதாக மறைமுகமாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவிக்க, பாஜக
    சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சிரித்தார் உடனே அதை சுட்டிக்காட்டி, ‘பூனைக்குட்டி வெளியே வருகிறது' என கலகலப்புடன் தங்கம் தென்னரசு தெரிவித்தார்; இதைக்கேட்ட முதல்வர், துணை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் என அனைவரும் சிரித்தனர்



  • Mar 21, 2025 12:53 IST

    அதிமுக உறுப்பினர் தங்கமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்!

    “அதிமுகவுக்கான கூட்டல், கழித்தல் கணக்குகளை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்பவர்கள் போடுகிறார்கள் என தங்கம் தென்னரசு பேசி இருந்தார். மடிக்கணினி கணக்கு போல இல்லாமல் மடியில் உள்ள கணத்தை தங்கமணி கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். தங்கமணி கூட்டல், கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்து!” நாங்கள் எந்த கூட்டல், கழித்தல் கணக்கிலும் ஏமாற மாட்டோம் என தங்கமணி கூறியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்



  • Mar 21, 2025 12:31 IST

    25 நாட்களில் முழு நேர அரசியலில் விஜய்

    25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய் படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டம் என தகவல்



  • Mar 21, 2025 12:30 IST

    ஆன்லைன் சூதாட்டம் - விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு. டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி பொதுநல மனு முடித்து வைப்பு. பொதுநல மனுவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களால் எளிதில் அடிமையாவதாகவும். விளம்பரங்களில் நடித்துள்ள சன்னி லியோன், காஜல் அகர்வால்,  தமன்னா உள்ளிட்டோரை எதிர் மனுதார்களாக சேர்த்திருந்தது குறிப்பிடதக்கது



  • Mar 21, 2025 12:27 IST

    "ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற அளவில், மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்"

    "மடிக்கணினி திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற அளவில் மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி



  • Mar 21, 2025 12:12 IST

    பேரவைக்கு வேல்முருகன் இன்று வரவில்லை

    சபாநாயகருடன் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவாக தலைவர் வேல்முருகன் இன்று (மார்ச் 21) பேரவைக்கு வரவில்லை. சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வேல்முருகன்; வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சரும் நேற்று பரிந்துரை செய்திருந்தார்



  • Mar 21, 2025 12:11 IST

    15 லட்சம் பயனாளிகள் நீக்கம்

    “தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போலவே மகாராஷ்டிராவிலும் ஒரு திட்டம் கொண்டுவந்தது பாஜக அரசு. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு 15 லட்சம் பயனாளிகளை திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டது” -தங்கம் தென்னரசு, நிதியமைச்சர்



  • Mar 21, 2025 11:57 IST

    கலைஞர் கைவினை திட்டத்திற்கு 7,297 பேர் விண்ணப்பம்

    “மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு பதிலான கலைஞர் கைவினை திட்டத்திற்கு 7,297 பேர் விண்ணப்பம்” மத்திய அரசின் விஸ்வ கர்மா திட்டம் முழுமையாக நிராகரிக்கப்படும்; கலைஞர் கைவினை திட்டம் ரூ. 138 கோடி செலவில் விரைவில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு 



  • Mar 21, 2025 11:28 IST

    ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

    "ரயில்வே திட்டங்களுக்காக ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியை, உத்தரப் பிரதேசத்துக்கு ஒரே ஆண்டில் வழங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது" - அமைச்சர் தங்கம் தென்னரசு



  • Mar 21, 2025 11:20 IST

    சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

    சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழ்நாடு அரசு செயல்படத் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் ஒன்றிய அரசு நிதி வழங்கியது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார். 



  • Mar 21, 2025 11:19 IST

    சீமான் மீதான வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை  எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழக டிஜிபிக்கு புகார் அளித்ததன் அடிப்படையில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு. 



  • Mar 21, 2025 11:10 IST

    "புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்"

    "கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 18.9 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதுவரை 1.67 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன” -அமைச்சர் சக்கரபாணி



  • Mar 21, 2025 10:45 IST

    அமைச்சர்களுக்கு அப்பாவு வேண்டுகோள்

    கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Mar 21, 2025 10:44 IST

    கேள்வி நேரம் சரியாக 1 மணி நேரத்தில் முடிக்கப்படும்

    இன்றுமுதல் கேள்வி நேரம் சரியாக 1 மணி நேரத்தில் முடிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அப்பாவு அறிவித்துள்ளார்.



  • Mar 21, 2025 10:07 IST

    ரேஷன்கடைக்கு சொந்த கட்டடம்?

    வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.



  • Mar 21, 2025 10:06 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு!

    தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160 க்கு விற்பனையாகிறது.



  • Mar 21, 2025 09:31 IST

    “இந்திய கூட்டாட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்!" - முதல்வர் ஸ்டாலின்


    2026யில் தொகுதி மறுவரையறை நிச்சயமாக நடந்தே ஆக வேண்டும்.அப்போடு மக்கள் தொகை அடிப்படையில் நடந்தால் எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். 



  • Mar 21, 2025 09:24 IST

    தொகுதி மறுசீரமைப்பு குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தண்டனை வழங்கக் கூடாது. இது மாநிலங்களை அவமதிக்கும் செயல்" என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 21, 2025 08:53 IST

    கல்வித்துறையை மூடிய டிரம்ப்

    அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் கல்வித்துறையை மூடுவதற்கான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.



  • Mar 21, 2025 08:52 IST

    திமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்?

    தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகம் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி-சர்ட்டுகளை அணிந்து, அவை மரபுகளை மீறுவதாக புகார் எழுந்துள்ளது.முக எம்பிக்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்வது குறித்து இன்று காலை முடிவு எடுக்கப்படும் என மாநிலங்களவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Mar 21, 2025 08:26 IST

    "4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்"

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால், உடல் அசவுகரியங்கள் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Tamilnadu News Latest news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: