Chennai News Highlights: சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கு...கைதான 5 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிப்பு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
savukku

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ101.03-க்கும், டீசல் விலை, ரூ92.61-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

நீர் நிலவரம்: சென்னையில் குடிநீர் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 75.21% ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் மொத்த கொள்ளளவான 11.75 டி.எம்.சி.யில் இன்று காலை நிலவரப்படி 8.84 டி.எம்.சி நீர் உள்ளது. 

  • Mar 27, 2025 05:33 IST

    டெல்லி செல்கிறார் அண்ணாமலை 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று திரும்பிய நிலையில், அண்ணாமலை இன்று டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்கள் டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய நிலையில், அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.



  • Mar 26, 2025 22:57 IST

    சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கு: கைதான 5 பேருக்கும் நீதிமன்றம் பிணை

    சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில், செல்வா, கல்யாண், விஜய், பாரதி, தேவி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.



  • Advertisment
    Advertisements
  • Mar 26, 2025 22:06 IST

    சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றி தாக்குதல்:  5 பேரை கைது செய்து சி.பி.சி.ஐ.டி விசாரணை

    சென்னையில் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 5 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 



  • Mar 26, 2025 21:25 IST

    நாடு முழுவதும் UPI சேவை 1 மணி நேரம் செயலிழப்பு - பயனர்கள் அவதி

    நாடு முழுவதும் கடந்த ஒரு மணிநேரமாக UPI சேவைகள் செயலிழந்ததால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். Gpay, Phonepay, Paytm ஆகிய செயலிகளில் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.



  • Mar 26, 2025 21:22 IST

    வக்ஃப் மசோதாவைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் - முன்மொழிகிறார் ஸ்டாலின்

    வக்ஃப் திருத்த மசோதாவைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட உள்ள நிலையில், வக்ஃப் மசோதாவைக் கைவிடக் கோரும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிகிறார்.



  • Mar 26, 2025 20:22 IST

    பொன் மாணிக்கவேல் வழக்கில் விசாரணையைத் தொடர சி.பி.ஐ-க்கு அனுமதி - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    முன்னாள் காவல் அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணையை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சி.பி.ஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Mar 26, 2025 19:40 IST

    தமிழ்நாட்டில் 3 இடங்களில் சதம் அடித்த வெயில்... மக்கள் அவதி

    தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 101.48 டிகிர் ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. கரூர் மற்றும் மதுரையில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட், ஈரோட்டில் 100.04 டிகிரி ஃபாரன்ஹீர் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், மக்கள் அவதிக்குள்ளானார்கள்.



  • Mar 26, 2025 18:40 IST

    தெலங்கானாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விபத்து

    தெலங்கானாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விபத்து ஏற்பட்டது. பத்ராச்சலம் நகரில் பழைய 2 மாடிக் கட்டடத்தின் மீது மேலும் 4 மாடிகளை கட்டிய போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 26, 2025 18:10 IST

    கோடை கால மின்சார தேவை

    கோடை காலத்தில் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான கூடுதல் மின்சார தேவைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 26, 2025 17:53 IST

    மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம்

    சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



  • Mar 26, 2025 17:37 IST

    என்கவுன்டர் நடந்த இடத்தில் நீதிபதி ஆய்வு

    சென்னை, தரமணி ரயில் நிலையம் அருகே என்கவுன்டர் நடந்த இடத்தில் சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில், 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைதான ஜாஃபர், மறைத்து வைத்திருந்த நகைகளை எடுக்கச் சென்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.



  • Mar 26, 2025 17:26 IST

    அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்

    கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் அளிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



  • Mar 26, 2025 16:42 IST

    ஆசிரியர் இடமாற்ற உத்தரவில் தலையிட முடியாது - ஐகோர்ட்

    போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியரின் இடமாற்ற உத்தரவில் தலையிட முடியாது. போக்சோ வழக்கில் சிக்கியதற்காக இடமாற்றம் செய்ததை எதிர்த்து ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Mar 26, 2025 16:11 IST

    கொத்தடிமைகளாக இருந்த 48 தொழிலாளர்கள் மீட்பு

    சென்னை பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த வட மாநில தொழிலாளர்கள் 48 பேர் குடும்பத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக ரூ.35 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அமர்த்தி வாரம் ரூ.200 சம்பளத்துக்கு பணி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது



  • Mar 26, 2025 15:51 IST

    மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 29-ல் தி.மு.க ஆர்ப்பாட்டம்

    100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் மார்ச் 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க அறிவித்துள்ளது



  • Mar 26, 2025 15:38 IST

    கூட்டணி குறித்து எந்த கட்சி நிலையாக இருந்தது? அமித்ஷாவை சந்தித்து சென்னை திரும்பிய பின் இ.பி.எஸ் பேட்டி

    தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கட்சியாவது நிலையாக இருந்தது உண்டா? கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றங்களை கொண்டிருக்கும் என அமித்ஷாவை சந்தித்து சென்னை திரும்பிய பின் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார் 



  • Mar 26, 2025 15:13 IST

    நேக்குப் போக்குடன் பதில் செல்கிறோம் - துரைமுருகன்

    பேரவையில் ஒரு விசயத்தை செய்வோம் என்று சொல்லிவிட்டால் அது உறுதியளிக்கப்பட்டது போல ஆகிவிடும். எனவேதான் நேக்குப் போக்குடன் பதில் செல்கிறோம் என அத்திக்கடவு அவிநாசி 2ம் கட்ட திட்டம் குறித்த அ.தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்



  • Mar 26, 2025 15:09 IST

    கலைஞர் கனவு இல்லம் திட்டம்; இதுவரை 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் ஐ.பெரியசாமி

    தமிழகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்



  • Mar 26, 2025 14:34 IST

    புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

    புதுச்சேரியில் தற்போது உள்ள புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.



  • Mar 26, 2025 14:27 IST

    ”தன்னிச்சையாக விலை உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை”

    "ஜல்லி, எம்-சாண்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ஜல்லி, எம்-சாண்ட் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



  • Mar 26, 2025 14:21 IST

    திருச்செந்தூர் திருப்பதியாக இணையாக மாறும் - சேகர்பாபு

    திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பின் திருப்பதிக்கு இணையாக மாறும் என்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2 கோயில்களில் இருந்த அன்னதான திட்டத்தை 17 கோயில்களுக்கு விரிவுபடுத்தி ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்களுக்கு இறைபசியை மட்டும் அல்லாமல் வயிற்றுப் பசியையும் திமுக அரசு போக்குகிறது என்றார்.



  • Mar 26, 2025 13:49 IST

    30-ம் தேதி வரை 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்

    வரும் 30-ம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 26, 2025 13:48 IST

    தொடர் செயின் பறிப்பு - குற்றவாளிகளின் புகைப்படம் வெளியீடு

    சென்னை தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர் உட்பட 3 பேரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று காலை ஒரு மணி நேரத்தில் 7க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர்.



  • Mar 26, 2025 13:20 IST

    "ரூ.65 லட்சம் செலவில் பாரதியார் வீடு புதுப்பிக்கப்படும்"

    எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் வீடு ரூ.65 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.



  • Mar 26, 2025 13:13 IST

    ஓ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கு - தடை நீட்டிப்பு

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மறு விசாரணைக்கு விதித்த இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை விசாரிக்கும் அமர்வு இந்த மேல்முறையீடு மனுவையும் விசாரிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, 2006-ல் ஓபிஎஸ்க்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்குப்பதிவு செய்தது



  • Mar 26, 2025 13:10 IST

    "எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நாளை  முதல் இயங்காது"

    எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நாளை  முதல் இயங்காது என்று தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார். "பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை எல்.பி.ஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், தென் மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.



  • Mar 26, 2025 12:44 IST

    பாரதிராஜாவுக்கு முதல்வர் ஆறுதல்

    நடிகர் மனோஜ் பாரதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், பாரதிராஜாவின் கரங்களைப் பற்றி ஆறுதல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி



  • Mar 26, 2025 12:33 IST

    நடிகர் மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி!

    முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி நடிகர் மனோஜ் பாரதி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



  • Mar 26, 2025 12:31 IST

    அமைச்சர்கள் Vs அதிமுக உறுப்பினர்கள்

    "கணக்கு கேட்டு ஆரம்பித்த கட்சி தான் அதிமுக, இப்போது தப்பு கணக்கு போடுகிறீர்கள்"
    - அமைச்சர் தங்கம் தென்னரசு

    கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும்

    எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று ஈபிஎஸ் போடும் கணக்கும் சரியாக இருக்கும்

    எங்களை எல்லாம் ஆளாக்கிய அம்மாவை என்றைக்கும் மறக்க மாட்டோம் - எஸ்.பி.வேலுமணி

    அண்ணாவையும் மறந்து விட்டீர்கள், உங்கள் தாயையும் மறந்து விட்டீர்கள்
    - அமைச்சர் ஐ.பெரியசாமி



  • Mar 26, 2025 11:59 IST

    குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்து - மாதிரி புகைப்படம் வெளியீடு

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 12 மீட்டரிலான குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்து - மாதிரி புகைப்படம் வெளியீடு. அசோக் லேலண்ட் நிறுவனம் 500 சுவிட்ச் EiV12 மின்சார பேருந்துகளை வழங்க ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டுள்ளது. 12 மீட்டர் சுவிட்ச் EiV12 மின்சார பேருந்துகளை 12 ஆண்டுகளுக்குப் பராமரித்து இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 மின்சார பேருந்துகளுக்கான டெண்டரை போக்குவரத்துத் துறை கோரிய நிலையில், பேருந்துகளின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு. 100 குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகள் மே மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது



  • Mar 26, 2025 11:51 IST

    உயர் நீதிமன்ற நீதிபதி மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

    மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற | அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு. “இந்த கருத்துகள் நீதிபதியின் திறன் குறைபாட்டை காட்டுகிறது. ஒரு நீதிபதிக்கு எதிராக, இப்படி சொல்வதற்கே வேதனையாக இருக்கிறது” என நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாஷிஹ் கருத்து இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு - உ.பி. மாநில அரசு பதிலளிக்கவும் உத்தரவு



  • Mar 26, 2025 11:50 IST

    சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள்.

    கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செயின்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மக்களின் கவனத்தைத் திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளை. இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது. சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதிலிருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம்" சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பு தகவல்கள்



  • Mar 26, 2025 11:35 IST

    “இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம்"

    “தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும், டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்; இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டையும் எடுத்துரைத்தோம். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விரிவாக கேட்டுக்கொண்டார்” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • Mar 26, 2025 11:30 IST

    அமித் ஷாவை சந்தித்தது ஏன்? - ஈபிஎஸ் விளக்கம்

    “தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து உள்துறை அமைச்சரிடம் பேசினேன்; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன்”
    தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது; கல்வி, 100 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவும் கோரிக்கை - சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி



  • Mar 26, 2025 11:21 IST

    "12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" - அமைச்சர் மூர்த்தி பதில்

    “தமிழ்நாட்டில், 2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது!" -சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கேள்விக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பதில்



  • Mar 26, 2025 11:06 IST

    குளிர்பதன கிடங்கில் பயங்கர தீ விபத்து

    தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்



  • Mar 26, 2025 10:56 IST

    சட்டப்பேரவையில் ஸ்டாலின் பேச்சு

    காவல், தீயணைப்பு நிலையம் வேண்டுமென பல உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதிதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 3 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறு அடிப்படையில் புதிய காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை காவல்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்கள் திருப்தி அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும்"  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 



  • Mar 26, 2025 10:47 IST

    கிராணைட் கற்கள் ஏற்றி வந்த லாரி விபத்து

    நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ராட்சத கிராணைட் கற்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்து, சாலையிலும், சாலையோர பள்ளத்திலும் கிராணைட் கற்கள் விழுந்தன லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கற்கள் விழுந்ததிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை



  • Mar 26, 2025 10:46 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு

    தங்கம்  விலை சவரனுக்கு  ரூ.80 உயர்ந்து ரூ.65,560 க்கு விற்பனையாகிறது.



  • Mar 26, 2025 10:45 IST

    மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

    மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Mar 26, 2025 09:46 IST

    கருப்பசாமி பாண்டியன் மறைவு - சட்டப்பேரவையில் இரங்கல்

    மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 26, 2025 09:43 IST

    விஜய் நேரில் அஞ்சலி

    மறைந்த பாரதிராஜா மகன் மனோ பாரதிராஜாவுக்கு தவெக தலைவர் விஜய் மாலையுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.



  • Mar 26, 2025 09:41 IST

    சட்டப்பேரவை கூட்டத்தொடர்

    டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச்சுவார்த்தை சட்டப்பேரவைக்கு இன்று வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதயகுமார், கே.பி. அன்பழகன், கடம்பூர் ராஜு ஆகியோர் பாஜக உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் கூற மறுத்தனர்.



  • Mar 26, 2025 09:06 IST

    ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். முன்னதாக 5-ந்தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.



  • Mar 26, 2025 08:34 IST

    ஒகேனக்கல் காவிரி ஆறு நீர்வரத்து

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகமும் அதிகரித்துள்ளது.



  • Mar 26, 2025 08:33 IST

    சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் 4ஆவது என்கவுன்ட்டர்

    சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் 4 அவது என்கவுண்டர் நடந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ள்னர். திருவேங்கடத்தை என்கவுன்ட்டர் செய்த திருவான்மியூர் ஆய்வாளர் முகமது புகாரியே, செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த் ஜாஃபர் குலாம் ஹுசைனை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.



  • Mar 26, 2025 07:56 IST

    மனோஜ் பாரதிராஜா மறைவு - கமல் இரங்கல்

    மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவிப்பதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.



  • Mar 26, 2025 07:55 IST

    வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் உயிரிழப்பு

    சென்னையில் தொடர் வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில நபர் என்கவுண்டரில் உயிரிழந்தார்.தரமணி பகுதியில் திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர்  செய்யப்பட்டுள்ளார்.



  • Mar 26, 2025 07:53 IST

    பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க பிரார்த்திக்கிறேன் - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

    பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Mar 26, 2025 07:50 IST

    முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

    நெல்லையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் காலமானார். அதிமுக அமைப்பு செயலாளராக இருந்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: