/indian-express-tamil/media/media_files/2025/03/28/yD0xLK1pJ48xnazW0v6r.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ101.23-க்கும், டீசல் விலை, ரூ92.81-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 27, 2025 22:36 IST
தாம்பரம் சானடோரியம் அருகே சரக்கு ரயில்களின் 3 பெட்டிகள் தடம் புரண்டது
தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சானடோரியம் அருகே தடம் புரண்டது. தடம் புரண்டதால் யாருக்கும் காயமோ, பாதிப்புகளோ இல்லை; புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகளில் பாதிப்பு இல்லை என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Mar 27, 2025 22:08 IST
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
"ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்; இந்த தார்மீக மற்றும் சட்டப்பூர்வ அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பதில் அளித்தார்.
-
Mar 27, 2025 21:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதி மீறல்: 4 கவுன்சிலர்கள் நீக்கம் - நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக, 4 கவுன்சிலர்களை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை 199-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை 5-வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் தாம்பரம் 40-வது கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி 11-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா ஆகியோ நீக்கப்பட்டுள்ளனர்.
-
Mar 27, 2025 20:34 IST
தாம்பரம் - ராமேஸ்வரம் புதிய ரயிலுக்கு அனுமதி
தமிழகத்தின் ரயில்வே துறை திட்டங்கள் சார்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். தாம்பரம் - ராமேஸ்வரம் இடையேயான புதிய ரயிலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
Mar 27, 2025 19:59 IST
கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு
20 ஆண்டுகளில் கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 30%-ல் இருந்து 93% ஆக உயர்ந்துள்ளது. 2004-ல் 153 எம்.பி.க்களீன் சொத்து மதிப்பு ரூ.1 கோடியாக மட்டுமே இருந்தது. இது மொத்த உறுப்பினர்களில் 29.8% மட்டுமே; இதுவே 2024-ல் கோடீஸ்வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 504 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த உறுப்பினர்களில் 92.8% ஆகும்.
-
Mar 27, 2025 19:21 IST
ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? - திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.ஜி. தியாகராஜன் கேள்வி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி.ஜி. தியாகராஜன்: “ஒருவரின் அழுகையையோ துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேனண்டம்? ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா? இனி வரும் காலங்களில் இறப்பு வீடுகளில் ஊடக அனுமதி கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
-
Mar 27, 2025 19:00 IST
வேங்கைவயல் விவகாரம்: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்
-
Mar 27, 2025 18:54 IST
முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.25ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
Mar 27, 2025 18:34 IST
செங்கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் - 6 பேர் மரணம்
எகிப்து அருகே செங்கடலில், 44 சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்
-
Mar 27, 2025 18:18 IST
ஆன்லைன் ரம்மி விளையாட்டு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
மாநில மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வரலாமே? ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒருவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே? மதுபானம் விற்பதற்கு கூட தமிழகத்தில் நேரக் கட்டுப்பாடு உண்டு என ஆன்லைன் ரம்மி விளையாட்டு விதிமுறைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
-
Mar 27, 2025 18:07 IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - விஜய் வாழ்த்து
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள் என த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
-
Mar 27, 2025 17:41 IST
டி.என்.பி.எஸ்.சி செயலாளர் பதிலளிக்க உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தங்களுக்கான உதவியாளரை தேர்வு எழுதும் நபரே தேர்வு செய்ய அனுமதி கோரி வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க சென்’னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
Mar 27, 2025 17:39 IST
மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் சென்னையில் ரயில் சேவை பாதிப்பு
சென்னை எண்ணூர் மார்க்கத்தில் அதிநவீன மின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிப்பு. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ரயில் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் அவதி. அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன
-
Mar 27, 2025 17:37 IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வு - விஜய் வாழ்த்து
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
-
Mar 27, 2025 16:30 IST
தீ விபத்து எதிரொலி: சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் ரயில் சேவை பாதிப்பு
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிக்னல் கட்டுப்பாட்டு அறையில் தீ பரவியதால் தகவல் அளிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை எழும்பூர் - கடற்கரை மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. தற்போது சிக்னல் கோளாறை சீரமைக்கும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்
-
Mar 27, 2025 16:23 IST
நாளை தமிழகம் வருகிறார் சந்திரபாபு நாயுடு
சென்னை ஐஐடியில் நடைபெறும் அகில இந்திய ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை தமிழகம் வருகிறார்.
-
Mar 27, 2025 15:58 IST
எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிபத்து
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எழும்பூர், வேப்பேரியில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
Mar 27, 2025 15:49 IST
இ.பி.எஸ் விலகி கொண்டால் மரியாதையாக இருக்கும் - ஓ.பி.எஸ் பேச்சு
"தமிழகத்தில் அதிமுக எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் இ.பி.எஸ் செயல்படுகிறார். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விலகிக்கொண்டால் மரியாதையாக இருக்கும்'' என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
Mar 27, 2025 15:30 IST
இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சு
படிப்படியாக இழுவை மடிகளையும், படகுகளையும் குறைத்து பாரம்பரிய முறைக்கு திரும்ப போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்தக்கட்டமாக இருநாட்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்கள். எந்தவொரு பிரச்சனையும் இன்றி சுமூகமான முறையில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
Mar 27, 2025 15:27 IST
'வீர தீர சூரன்' படத்தை வெளியிட அனுமதி
விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திரையிட நான்கு வாரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 27, 2025 14:57 IST
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தொடர் நகைப்பறிப்பு சம்பவத்தில், ஆந்திராவில் ரயிலில் வைத்து கைது செய்யப்பட்ட சல்மான், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
-
Mar 27, 2025 14:45 IST
"அதிமுகவில் நான் இணைவதாக சொல்லவில்லை"
அதிமுகவில் நான் இணைய வேண்டுமென்று கூறவில்லை; பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் சூழல் உருவாகும் என கூறுகிறேன்” சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
-
Mar 27, 2025 14:42 IST
ஆன்லைன் லோன் செயலியால் பெண் தற்கொலை
தாம்பரத்தில் லோன் செயலியில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் இருந்த பெண் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் தற்கொலை வரதராஜபுரத்தைச் சேர்ந்த நடராஜன் - புனிதா தம்பதி லோன் செயலியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்; கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு பிரச்னையா என போலீசார் விசாரணை
-
Mar 27, 2025 14:19 IST
"கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு" - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். ஏப்ரல் 21க்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லையெனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Mar 27, 2025 14:12 IST
மீனவர்கள் பிரச்னை - மாநிலங்களவையில் விவாதம்
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை மத்திய அரசு தடுக்க வேண்டுமென மாநிலங்களவையில் கோரிக்கை; மத்திய அரசு வைத்துள்ள நீண்ட கால திட்டம் என்ன என ஜி.கே.வாசன் எம்.பி. கேள்வி. ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது; இதற்கு மாநில அரசும், மீனவ சங்கங்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பாதிப்புகளை குறைக்க முடியும் - அமைச்சர் ஜெய்சங்கர்
-
Mar 27, 2025 13:59 IST
இரானி கொள்ளையன் ஜாபர் - புதிய தகவல்
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ஜாபர் மீது இந்தியா முழுவதும் 150 வழக்குகள் உள்ளன. மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் மிசாம் ஜாபர் மற்றும் மிசாமும் இணைந்தே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர்
-
Mar 27, 2025 13:57 IST
“அவராகவே விலகிக்கொள்ள வேண்டும்” - ஓபிஎஸ் காட்டம்
"ஒற்றைத்தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்; ஆனால் ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறவில்லை. பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலக வேண்டும். இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
Mar 27, 2025 13:43 IST
எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் நன்றி
"அமித்ஷாவிடம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்தியதற்கு ஈபிஎஸ்-க்கு நன்றி" - முதல்வர் ஸ்டாலின்
-
Mar 27, 2025 13:42 IST
வேலைவாய்ப்புகளை பெருக்கிய நான் முதல்வன்!
தமிழ்நாட்டில் நான் முதல்வன் திட்டம் மூலம் 2023-24ல் 103 வளாக நேர்காணல்கள் வாயிலாக 1,04,280 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்! மாநில அளவிலான வேலைவாய்ப்பு திட்டம் மூலம் இதுவரை 10,256 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 2,62,688 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். -சிறப்புத் திட்ட செயலாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
-
Mar 27, 2025 13:26 IST
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் 1,36,149 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன!
“சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதல் பணிகள் அலுவலர்கள் மேற்கொண்ட பணியால் இதுவரை 1,36,149 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன” -சிறப்புத் திட்ட செயலாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
-
Mar 27, 2025 13:24 IST
ஜூன் 2ல் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!
“இசைஞானி இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
-
Mar 27, 2025 13:20 IST
வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2- 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
-
Mar 27, 2025 13:13 IST
நடிகர் மனோஜ் மறைவு - மகாராஷ்டிரா ஆளுநர் இரங்கல்!
"மனோஜ் பாரதிராஜாவின் எதிர்பாராத மறைவு, மிகுந்த துயரமும் வேதனையும் அளிக்கிறது. தமிழ் திரையுலகில் நடிகராகவும் இயக்குநராகவும் அவரது பங்களிப்பு மறக்க முடியாதவை. அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியா இழப்பாகும். | இயக்குநர் பாரதிராஜாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்த்த அனுதாபங்களை உரித்தாக்குகிறேன்” . மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்
-
Mar 27, 2025 13:01 IST
தள்ளிப்போகிறது விக்ரமின் வீர தீர சூரன் படம்
விக்ரமின் வீர தீர சூரன் படத்தை வெளியிடுவதற்கான தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓ.டி.டி. உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், தயாரிப்பு நிறுவனம் மீது பி4யு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
-
Mar 27, 2025 12:19 IST
இந்தியில் வானிலை மைய அறிக்கை - சு.வெங்கடேசன் கண்டனம்
தமிழ்நாட்டுக்கான வானிலை மைய அறிக்கையை இந்தியிலும் வழங்க தொடங்கியுள்ளது ஒன்றிய அரசு என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மண்டல வானிலை மையம் தனது தினசரி வானிலை அறிக்கையை இனி இந்தியிலும் வெளியிடும். தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்புக்கு நிதி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தி திணிக்கிறது. பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணம் என்று கூறியுள்ளார்.
-
Mar 27, 2025 11:58 IST
முதலமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார். மத்திய அரசின் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது
-
Mar 27, 2025 11:55 IST
வீர தீர சூரன் பட வழக்கு -டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை
வீர தீர சூரன் பட வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ரூ.7 கோடி டெபாசிட் மற்றும் அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய டெல்லி ஐகோர்ட் ஆணை. விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது.
-
Mar 27, 2025 11:53 IST
வக்பு சட்டத்திருத்த மசோதா தனித்தீர்மானம் நிறைவேறியது
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த வக்பு சட்டத்திருத்த மசோதா தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த அதிமுகவிற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
-
Mar 27, 2025 11:42 IST
"ஓ.பி.எஸ் உடன் இணைவது சாத்தியமே இல்லை"
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைவது சாத்தியமே இல்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை தவிர மற்ற எந்த கட்சியும் அ.தி.மு.க.வுக்கு எதிரி இல்லை. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
-
Mar 27, 2025 11:39 IST
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு
தமிழகத்தில் தமிழ், ஆங்கல்த்தைத் தொடர்ந்து இந்தியிலும் வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இந்திய வானிலை மையம் சென்னை இணையதளத்தில் இந்தி அறிக்கை சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு, ஆங்கில மொழியிலும், கேரளாவில் ஆங்கிலத்திலும் முன்னறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
-
Mar 27, 2025 11:27 IST
வக்பு தீர்மானத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த கட்சிகள்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த வக்பு திருத்த மசோதா தனித் தீர்மானத்திற்கு புரட்சி பாரதம், த.வா.க, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
Mar 27, 2025 11:13 IST
சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் - அமைச்சர்
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
-
Mar 27, 2025 11:05 IST
மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிக்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினர், இலங்கைத் தமிழர்களை வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கீறது
-
Mar 27, 2025 10:25 IST
வினாத்தாள் கசிந்தால் நடவடிக்கை..
பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 8 வகுப்புகளுக்கு ஏப்ரல் மாதம் இறுதித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின்போது வினாத்தாள் கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 27, 2025 10:22 IST
சட்டப்பேரவை கேள்வி பதில் நேரம்
புதிய பூங்காக்கள் அமைக்கத் தேவையான நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், கிருஷ்ணகிரி தொகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, புதிய பூங்கா அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. புதிய பூங்காக்களை அமைக்கத் தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இடம் இருந்தால் புதிய பூங்கா அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
Mar 27, 2025 10:21 IST
"சென்னையில் இன்று வெயில் சதமடிக்கும்"
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று வெயில் சதமடிக்கும். வேலூரில் இன்று அல்லது நாளை அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகும் வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
-
Mar 27, 2025 09:37 IST
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.65,880க்கும், கிராம் ரூ.8,235க்கும் விற்பனையாகிறது.
-
Mar 27, 2025 09:13 IST
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
பட்ஜெட் அறிவிப்பின்படி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26ம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
-
Mar 27, 2025 09:13 IST
10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை!
வேலூர்,திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
Mar 27, 2025 09:10 IST
"யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை"
"யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை" மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.