Chennai News highlights: சென்னை, வேப்பேரியில் இருக்கும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bomb threat

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 28, 2025 22:20 IST

    ரவுடி மீது துப்பாக்கிச் சூடு

    செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் வனப்பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி அசோக் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அசோக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Mar 28, 2025 21:00 IST

    காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை, வேப்பேரியில் இருக்கும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.



  • Advertisment
  • Mar 28, 2025 20:07 IST

    மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு

    தமிழ்நாட்டு மீனவர்களை மத்திய அரசு காக்கத் தவறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "நாள்தோறும் இலங்கை கடற்படை, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், தாக்கியும் வருகிறது. எனினும், இலங்கை அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என்று மக்களவையில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Mar 28, 2025 19:14 IST

    காவல்துறைக்கு எதிரான ஜெயக்குமாரின் புகார் - மீண்டும் விசாரிக்க உத்தரவு

    காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, ஜெயக்குமார் அளித்த புகாரை மீண்டும் விசாரிக்க மாநில மனித உரிமை ஆணைய தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Mar 28, 2025 18:47 IST

    அ.தி.மு.க – தி.மு.க இடையே தான் போட்டி - ஜெயக்குமார்

    அ.தி.மு.க – தி.மு.க இடையே தான் போட்டி இருக்கிறது என 2026 தேர்தலில் த.வெ.க – தி.மு.க இடையேதான் போட்டி என பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Mar 28, 2025 18:28 IST

    மக்களை குழப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி - ஸ்டாலின்

    மக்களை குழப்ப எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன என சட்டம் ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்



  • Mar 28, 2025 17:57 IST

    குணால் கம்ராவுக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்

    மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து நகைச்சுவை செய்த ஸ்டாண்ட் அப் காமெடியான் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது 



  • Mar 28, 2025 17:33 IST

    2026ல் தி.மு.க.,வை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் - அண்ணாமலை

    2026 தேர்தல் தமிழக மக்களின் நலனுக்கான தேர்தல். தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கென்று தனி கருத்துக்கள் எதுவும் இல்லை. 2026ல் தி.மு.க.,வை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்



  • Mar 28, 2025 17:30 IST

    விஜய் கட்சி தொடங்கி எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? அண்ணாமலை கேள்வி

    விஜய் கட்சி தொடங்கி எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல, களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல் என தமிழக பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார்



  • Mar 28, 2025 17:07 IST

    ரம்ஜான் பண்டிகை; புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

    வரும் திங்களன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்று கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது



  • Mar 28, 2025 16:44 IST

    அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம்: உதயநிதி ஸ்டாலின்

    ஸ்டேடியம் அமைக்க நிலம் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Mar 28, 2025 16:41 IST

    கடந்த 10 ஆண்டுகளில் 2,870 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது: மக்களவையில் அமைச்சர் தகவல்

    கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  454 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  104 மீனவரகள் தாக்குதலுக்கு உள்ளகியுள்ளனர்.  10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகள் இலங்கை கடற்படை விடுவித்துள்ளது என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளார்.



  • Mar 28, 2025 16:08 IST

    காற்றை தடுக்க முயன்றால் சூறாவளியாகும்: த.வெ.க விஜய்

    அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது, காற்றை தடுக்க முயன்றால், சூறாவளியாக மாறும். மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது என தவெக தலைவர் விஜய் குறியுள்ளார்.



  • Mar 28, 2025 16:07 IST

    மக்கள் தொகையை கட்டுபடுத்தியது நமக்கு பிரச்னை: சந்திரபாபு நாயுடு

    தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்த தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் தொகையை கட்டுபடுத்தியது நமக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார். 



  • Mar 28, 2025 16:06 IST

    20 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்கை காவலர் விருது

    தமிழகத்தில் 20 ஆயிரம் மாணவர்களுக்கு இளம் இயற்கை காவலர்கள் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு



  • Mar 28, 2025 16:05 IST

    ஆரணி அருகே ரூ.44.69 கோடியில் கைத்தறி பட்டு பூங்கா:தமிழக அரசு அறிவிப்பு

    ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் ரூ.44.69 கோடி செலவில் கைத்தறி பட்டு பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 



  • Mar 28, 2025 15:23 IST

    அடுத்தடுத்து நிலநடுக்கம் -பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம்

    மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ,பாங்காக்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது

    மியான்மரில் அடுத்தடுத்து 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்- கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம்



  • Mar 28, 2025 15:19 IST

    மியான்மர், தாய்லாந்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி 

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர், தாய்லாந்து மக்களுக்கு இக்கட்டான சூழலில் இந்தியா துணை நிற்கும். நிலநடுக்க நிவாரண பணிகளில் மியான்மர், தாய்லாந்துக்கு இந்தியா உதவ தயார். மியான்மர், தாய்லாந்துடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்பில் இருப்பதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

     



  • Mar 28, 2025 14:49 IST

    மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

    மியான்மரில் காலை 11.50 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது.



  • Mar 28, 2025 14:47 IST

    மா.சுப்பிரமணியன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து விசாரணையை தொடர சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



  • Mar 28, 2025 14:21 IST

     ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கும் மத்திய அரசு 

    2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்குகிறது. இது நிதியாண்டின் மொத்த சந்தைக் கடன் தொகையான ரூ.14.82 லட்சம் கோடியில் 54% ஆகும். கடன் பத்திரங்கள் மூலமும் ரூ.10,000 கோடி நிதி திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.



  • Mar 28, 2025 14:02 IST

    த.வெ.க பொதுக்குழுவில் விஜய் பேச்சு

    "2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி. தவெக ஆட்சியில் அதிகார பகிர்வு, பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும். புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும். மாநாடு 
     முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது"  என்று விஜய் கூறியுள்ளார். 



  • Mar 28, 2025 14:01 IST

    பெயரில் மட்டும் வீராப்பு கூடாது - விஜய் கடும் தாக்கு 

    பெயரில் மட்டும் வீராப்பு கூடாது  எனக் குறிப்பிட்டு முதல் முறையாக முதல்வர் ஸ்டாலினை நேரடியாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்தார். "என் மக்களை சந்திக்க தடை விதிக்க நீங்கள் யார்?, காற்றை தடுக்க முயன்றால், சூறாவளியாக மாறும்." என்றும் அவர் கூறினார்.  முதல் முறையாக பிரதமர் மோடியின் பெயரை சொல்லியும் த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். 

     



  • Mar 28, 2025 13:45 IST

    த.வெ.க முதல் பொதுக்குழு கூட்டம் - விஜய் எழுச்சியுரை 

    த.வெ.க முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்... வணக்கம்.. கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் வாழ் வேண்டும் என்பது நல்ல அரசியலா?.; இல்லை ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பது நல்ல அரசியலா?. மாநாட்டில் இருந்து தற்போது வரை இடையூறு வந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் தவெக முன்னேறி செல்லும். ரசிகர்கள், தொண்டர்களுக்கு தடை போட நீங்கள் யார்?.

    மாண்புமிகு மன்னராட்சி முதலமைச்சர் அவர்களே.... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் மட்டும் போதாதே முதலமைச்சர் அவர்களே.... மக்கள் விரோத ஆட்சியை, மன்னராட்சி போல செய்கிறார்கள். கேள்வி கேட்டால் கோபம் வருகிறது. விமர்சித்தால் மட்டும் கோபப்படுகிறார் முதலமைச்சர். உங்கள் ஆட்சிக்கு பெண்கள் முடிவு கட்ட போகிறார்கள்" என்று அவர் கூறினார். 

     



  • Mar 28, 2025 13:44 IST

    கேரளாவில் 10 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு 

    கேரள மாநிலம் மலப்புரத்தில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 10 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போதைக்காக பயன்படுத்திய ஊசிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினருக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 



  • Mar 28, 2025 13:33 IST

    உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்பு - ஆனந்த் பேச்சு 

    "த.வெ.க-வில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படுகிறது. உழைக்காதவர்கள் யாருக்கும் பதவிகள் வழங்கப்படுவதில்லை. நாங்கள் வீர வசனம் பேசி விட்டு கைத்தட்டல் வாங்கும் கூட்டம் அல்ல, உண்மையாக உழைக்கும் கூட்டம்" என்று த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்தார். 

     



  • Mar 28, 2025 13:31 IST

    எது அரசியல் - த.வெ.க தலைவர் விஜய் பேச்சு 

    "நாம் புதிய வரலாற்றை படைக்க தயாராக வேண்டும். ஒரே குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது அரசியலா? மாநாடு முதல் பொதுக்குழு கூட்டம் வரை ஏராளமான தடைகள். மக்கள் பிரச்சினைகளை மடை மாற்றி மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்தி வருகிறார்கள். நானும் அடி அடினு அடிக்கனுமா? யோசிக்கிறேன். மத்திய அரசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது. அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது" என்று த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்தார். 



  • Mar 28, 2025 13:22 IST

    100 நாள் வேலை திட்ட ஊதியம் அதிரடி உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு 

    தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியது மத்திய அரசு. நாளொன்றுக்கு 319 ரூபாயாக இருந்த ஊதியம், 336 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

     



  • Mar 28, 2025 12:58 IST

    யானைகள் மற்றும் காட்டு பன்றிகள் ஏற்படுத்தும் சேதத்தை ஆய்வு சிறப்புக் குழு!

    விவசாய பயிர்களுக்கு யானைகள் மற்றும் காட்டு பன்றிகள் ஏற்படுத்தும் சேதத்தை ஆய்வு செய்து, அதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது - தமிழ்நாடு அரசின் வனத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்



  • Mar 28, 2025 12:52 IST

    மோசமாக மத்திய அரசை எதிர்ப்பதுபோல திமுக நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா

    "ஹிட்லர், முசோலினி அரசியல்போல் மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது; கேள்வி கேட்க ஆளே இருக்கக்கூடாதென நினைக்கிறது திமுக; நாம் போராடினால் வழக்குப்பதிவு செய்வார்கள், மிரட்டுவார்கள்... அதற்கெல்லாம் அச்சப்படக் கூடாது அதிமுக-வினர் நேரடியாக பாஜக-வுடன் கூட்டணி வைத்தனர்; அதைவிட மோசமாக மத்திய அரசை எதிர்ப்பதுபோல திமுக நாடகமாடுகிறது” - ஆதவ் அர்ஜுனா



  • Mar 28, 2025 12:47 IST

    ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்குகிறது ஒன்றிய அரசு!

    2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்குகிறது ஒன்றிய அரசு. இது நிதியாண்டின் மொத்த சந்தைக் கடன் தொகையான ரூ.14.82 லட்சம் கோடியில் 54% ஆகும். கடன் பத்திரங்கள் மூலமும் ரூ,10,000 கோடி நிதி திரட்டவும் திட்டம்.



  • Mar 28, 2025 12:13 IST

    விஜய் இனி வெற்றித் தலைவர்: ஆதவ்

    தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்; குடும்ப ஆட்சியை எதிர்த்த ராமச்சந்திரன் பெயரில் உள்ள மண்டபத்தில் தவெக பொதுக்குழு. Work From Home அரசியல் இல்லை; உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல்; உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா



  • Mar 28, 2025 12:08 IST

    அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது: ஆதவ்

    “அண்ணாமலையை செட் செய்து திமுக வைத்துள்ளது; புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது எங்கள் கட்சியையும் தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிகாட்டுவோம்” - ஆதவ் அர்ஜுனா



  • Mar 28, 2025 12:00 IST

    புதிய அறிவிப்புகளை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி

    மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் ரூ.400 கோடி வரை விற்பனை செய்ய இலக்கு. 100 திறமையான இளங்கலை மாணவர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி. சென்னையிலும், மதுரையிலும் ரூ.55 கோடியில் 2025 ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும். 25,000 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்



  • Mar 28, 2025 11:55 IST

    "மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு"

    “மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரைவில் வாய்ப்பு" 3 ஆண்டுகள் மட்டும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2.65 லட்சம் பேருக்கு வேலை; 6,812 அறிவிப்புகளில், 96 % அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது: 3,803 பணிகள் முடிந்துள்ளன; எஞ்சிய பணிகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு



  • Mar 28, 2025 11:53 IST

    ஆபரேஷன் கஞ்சா திட்டம் என்ன ஆனது? - ஈபிஎஸ்

    “போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது”- உசிலம்பட்டி காவல்துறையைச் சேர்ந்த முத்துக்குமார்



  • Mar 28, 2025 11:39 IST

    “அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குகின்றனர்”

    "அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குகின்றனர்” “அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற ஒருசில நிகழ்வுகளை ஊதி பெரிதாக்குகின்றனர்; மக்கள் பாதுகாப்புக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயல்கின்றனர். அதற்கு பிரதான எதிர்க்கட்சியும் தூபம் போடுகிறது; அதிமுக ஆட்சியில் நடந்தது போல எந்தக் கலவரமும் இப்போது இல்லை” - பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்



  • Mar 28, 2025 11:21 IST

    எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

    “நான் எப்போதெல்லாம் பேரவையில் பதில் சொல்கிறோனோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பதில்லை”
    - உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்



  • Mar 28, 2025 11:12 IST

    யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    காவல்துறையினருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் கொலை தொடர்பாக பேச எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச எழுந்தார்; அதிமுகவினரை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு



  • Mar 28, 2025 11:10 IST

    அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

    சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள். இன்று ஒருநாள் சஸ்பெண்ட்..! அவையில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டபின் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு



  • Mar 28, 2025 10:53 IST

    10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    "பயமும் பதற்றமுமின்றி தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்"  என 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Mar 28, 2025 10:48 IST

    தவெக பொதுக்குழுவில் தீர்மானங்கள்?

    இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்றவை உட்பட 17 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூத் கமிட்டி மாநாடு, விஜயின் சுற்றுப்பயண தேதி குறித்தும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 28, 2025 09:51 IST

    மீனவர்கள் கைது குறித்து முதல்வர் கடிதம்..

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.



  • Mar 28, 2025 09:49 IST

    சிவாஜி வீடு ஜப்தி - உத்தரவை நீக்க மனு

    நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 28, 2025 09:48 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.66,720க்கு விற்பனையாகிறது.



  • Mar 28, 2025 09:48 IST

    இந்த கேள்வியை என்னிடம் கேட்கலாமா?: ஆனந்த்

    தமிழக வெற்றிக் கழகத்தில் நான் சாதாரண தொண்டன், யாரோ சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர். வருங்கால முதலமைச்சர் என போஸ்டர் ஒட்டப்பட்டது துொடர்பான கேள்விக்கு, இந்த கேள்வியை என்னிடம் கேட்கலாமா என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் பதில் அளித்துள்ளார்.



  • Mar 28, 2025 09:19 IST

    மக்களின் நலன் குறித்து முதலமைச்சர் சிந்திப்பாரா..?

    தமிழகம் முழுவதும் மதுவாலும், போதைப் பொருட்களாலும் குற்றச்செயல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு அவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கட்சியினரின் நலனை விட்டுவிட்டு மக்களின் நலன் குறித்து முதலமைச்சர் சிந்திப்பாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Mar 28, 2025 09:16 IST

    ஸ்நேகா -பிரசன்னா கிரிவலம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பிரசன்னா, சிநேகா தம்பதி கிரிவலம் சுற்றினர். அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.



  • Mar 28, 2025 08:44 IST

    காரைக்குடி மாநகராட்சியை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

    காரைக்குடி மாநகராட்சியை கண்டித்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டண நிலுவையை வசூலிப்பதில் தீவிரம். நிலுவைத் தொகையை செலுத்தாத கடைகளுக்கு முன் குப்பை தொட்டிகளை வைப்பதாக குற்றச்சாட்டு. பல மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைக்க பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்க விடுத்துள்ளனர். கடை அடைப்புக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



  • Mar 28, 2025 08:40 IST

    இஃப்தார் விருந்தில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப்!

    வெள்ளை மாளிகையில் நடந்த இஃப்தார் விருந்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: