Chennai News Updates Highlights: ‘ஒருமுறைகூட மக்களைச் சந்திக்காதவர் எங்களை எதிரி என்கிறார்’ - விஜய்யை சாடிய அமைச்சர் கே.என்.நேரு

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KN Nehru

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Mar 30, 2025 21:49 IST

    திரைப்படத்தில் வசனம் பேசுவதுபோல் புரிதல் இல்லாமல் அரசியலில் விஜய் பேச முடியாது - முத்தரசன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: “திரைப்படத்தில் வசனம் பேசுவதுபோல் புரிதல் இல்லாமல் அரசியலில் விஜய் பேச முடியாது.” என்று விமர்சித்தார்.



  • Mar 30, 2025 20:27 IST

    ‘ஒருமுறைகூட மக்களைச் சந்திக்காதவர் எங்களை எதிரி என்கிறார்’ - விஜய்யை சாடிய அமைச்சர் கே.என்.நேரு

    அமைச்சர் கே.என்.நேரு: “ஒருமுறைகூட பொதுமக்களைச் சந்திக்காத விஜய், அரங்கில் கூட்டம் நடத்திக்கொண்டு எங்களைப் பார்த்து எதிரி என்கிறார். 2026-ல் ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வராக வருவார் என உரக்கக் கூறுகிறோம்” என்று கூறினார்.



  • Advertisment
  • Mar 30, 2025 20:02 IST

    "மார்ச் 31 ரமலான் பண்டிகை..!" - தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு

    இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.



  • Mar 30, 2025 18:40 IST

    "ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசின் நிலை என்ன?"

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கப் போகிறதா? அல்லது தற்கொலைகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? என்று அவர் வினவியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 30, 2025 18:39 IST

    நடிகர் கார்த்தியின் சர்தார்-2 புரோமோ வெளியீடு

    பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார்- 2 படத்தின் அறிமுக புரோமோ வெளியானது. நாளை இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது . முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், மாளவிகா மோகனன் நடிக்கின்றனர்.



  • Mar 30, 2025 18:36 IST

    சொத்து வரி- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

    சென்னை மாநகராட்சியில் நடப்பு ஆண்டுக்கான சொத்துவரி செலுத்துவதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளைக்குள் வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.



  • Mar 30, 2025 18:34 IST

    ரம்ஜான் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

    அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க ரம்ஜான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், முதல்-அமைச்சர் என்ற பொறுப்பிலும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



  • Mar 30, 2025 16:59 IST

    சென்னையில் மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழந்த துயரம்

    சென்னை அண்ணா நகரில் மின்பெட்டியில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, தொட்டபோது மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர் பத்மநாபன் (70) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குளியலறையில் இருந்து ஹீட்டர் வேலை செய்யவில்லை என்பதால், ஈரத் துணியோடு மின் பெட்டியைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைகின்றனர்.



  • Mar 30, 2025 16:52 IST

    மது போதையில் விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர் கைது

    சென்னை அண்ணா சாலையில் மதுபோதையில் சாலை தடுப்புச் சுவரில் காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, மீண்டும் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது 2-ம் நிலை காவலர் மீது மோதிய மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை(21) போலீசார் கைது செய்து கார் பறிமுதல் செய்தனர். எலும்பு முறிவு ஏற்பட்ட கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • Mar 30, 2025 16:41 IST

    தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் இ.பி.எஸ்.?

    வரும் 6-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அமித்ஷாவை எடப்பாடி சந்தித்த நிலையில், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமித்ஷா பகிரங்கமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



  • Mar 30, 2025 16:00 IST

    திரைமறைவில் சந்திக்க வேண்டிய அவசியமில்லை - அண்ணாமலை

    திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பா.ஜ.க.,விற்கு இல்லை. டெல்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பா.ஜ.க கட்டுப்படுத்தாது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Mar 30, 2025 15:55 IST

    ரயில் விபத்து - உதவி எண்கள் அறிவிப்பு

    ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கேட்டறிந்தார். ரயில் விபத்து தொடர்பாக அசாம் மாநில அரசின் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது



  • Mar 30, 2025 15:15 IST

    கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை - அண்ணாமலை

    அ.தி.மு.க.,வுடன் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது, அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Mar 30, 2025 14:48 IST

    ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

    ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே, கமக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், உடைமைகளுடன் பயணிகள் தவித்து வருகின்றனர் 



  • Mar 30, 2025 14:45 IST

    96 படத்தின் 2ம் பாகம்; இயக்குனர் பிரேம் குமார் முக்கிய அறிவிப்பு

    96 படத்தின் 2ஆம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் பிரேம் குமார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்



  • Mar 30, 2025 14:17 IST

    ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் 3ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Mar 30, 2025 13:50 IST

    1 - 5 ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு

    கோடை வெயில் காரணமாக, 1 - 5ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிக்குள் இந்த தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 30, 2025 13:12 IST

    'எம்புரான்' படத்திற்கு மிரட்டல் - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

    'எம்புரான்' திரைப்படத்திற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மிரட்டல் விடுத்துள்ளது, கலை படைப்பு மற்றும் கலைஞர்களை அழிப்பதற்கான முயற்சி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். மேலும், இது ஜனநாயக உரிமையை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 30, 2025 12:26 IST

    விஜய்யின் கருத்துக்கு சீமான் வரவேற்பு

    தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற விஜய்யின் கருத்தை தான் வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார். எனினும், கூட்டணி வைத்தால் தான் எதிரியை தேர்தலில் வெல்ல முடியும் என்ற சட்டம் இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Mar 30, 2025 11:46 IST

    7 நகராட்சிகளை உருவாக்கி அரசிதழ் வெளியீடு

    தமிழ்நாட்டில் 7 புதிய நகராட்சிகளை உருவாக்கி அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.



  • Mar 30, 2025 11:43 IST

    ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு: ஸ்டாலின் கண்டனம்

    ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, "ஒவ்வொருவரையும் வங்கி கணக்கு தொடங்க மத்திய அரசு வலியுறுத்தியது. வங்கி கணக்கு தொடங்கிய பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



  • Mar 30, 2025 11:04 IST

    எடப்பாடி பழனிசாமி யுகாதி வாழ்த்து

    எடப்பாடி பழனிசாமி யுகாதி வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Mar 30, 2025 11:04 IST

    தீக்ஷா பூமியில் பிரதமர் வழிபாடு

    அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீஷா பூமியில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். புத்தமத துறவிகள் பிரதமர் மோடியை வரவேற்று ஆசி வழங்கிய நிலையில் சிறப்பு வழிபாடு செய்தார்.



  • Mar 30, 2025 10:06 IST

    இபிஎஸ்க்கு திருமாவளவன் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக முதலில் அதிமுக வைதான் பலவீனப்படுத்தும், தப்பி தவறிகூட பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிசாமி கதை முடிந்துவிடும் என திருமாவளவன் எச்சரித்துள்ளார்.



  • Mar 30, 2025 09:56 IST

    செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க இபிஎஸ் மறுத்து வரும் நிலையில் செங்கோட்டையன் மூலம் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளது. 



  • Mar 30, 2025 09:15 IST

    ஃபோன் ஆர்டர் செய்தவருக்கு வந்த சோப்!

    கர்நாடகா தும்கூரு மாவட்டத்தில் அமேசானில் ரூ.32,000 க்கு ஆன்ட்ராய்டு ஃபோன் ஆர்டர் செய்த ஜெயசீலனுக்கு பாத்திரம் தேய்க்கும் சோப்புக் கட்டிகளும், ப்ரஷ்ஷும் வந்து சேர்ந்தது. இதுகுறித்து தும்கூரு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜெயசீலன் முறையிட்டுள்ளார்.



  • Mar 30, 2025 09:02 IST

    பகலில் சுட்டெரிக்கும் வெயில், அதிகாலையில் கொட்டும் பனி!

    பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இடையே அதிகாலையில் கடும் பனிபொழிவு நிலவியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவுவதால் மார்கழி மாதம் போல் காட்சியளித்தது.



  • Mar 30, 2025 08:24 IST

    பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் சலுகை

    பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் 1% பதிவுக்கட்டணம் குறைப்பு என்ற பட்ஜெட் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இதன்படி, ரூ 10 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு இச்சலுகை அளிக்கப்பட உள்ளது.



  • Mar 30, 2025 08:22 IST

    ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பங்கேற்பு

    நாக்பூர் ஸ்மிருதி மந்திரில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். மாதவ் நேத்ராலயா கண் நிறுவனம், ஆராய்ச்சி மைய புதிய கட்டடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். 250 படுக்கை 14 வெளிநோயாளி பிரிவு, 14 நவீன ஆபரேஷன் தியேட்டர்களுடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சோலார் டிஃபென்ஸ், ஏரோஸ்பேஸில் கட்டப்பட்ட விமான ஓடுதளத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.



  • Mar 30, 2025 07:46 IST

    கூட்டணிக்காக அதிமுக துடிக்கவில்லை - செல்லூர் ராஜு

    யாருடைய கூட்டணிக்காகவும் அதிமுக துடிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக கூறியுள்ளார். யாரும் போய் விடாதீர்கள் என சூட்கேஸ் கொடுக்கவில்லை எனவும் திமுக கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார்.



  • Mar 30, 2025 07:44 IST

    சென்னையில் இன்று வெயில் அதிகரிக்க வாய்ப்பு

    தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் சதம் அடித்த வெயில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 30, 2025 07:43 IST

    டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

    தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் புதிய ஒப்பந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது.



  • Mar 30, 2025 07:34 IST

    ஏரிகளின் நீர் நிலவரம்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்றைய நிலவரப்படி 73.67% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 8.66 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.



  • Mar 30, 2025 07:33 IST

    மியான்மரில் பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஐ கடந்தது. நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 2300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 3 வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



news updates Tamil News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: