/indian-express-tamil/media/media_files/qtsIpJe8Rphkf3ApAoiu.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் இலங்கை பயணம்: தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, 3 நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்களுக்கு கை குலுக்கியும், குழந்தையை தூக்கி கொஞ்சியும் மோடி நலம் விசாரித்தார்.
-
Apr 05, 2025 22:22 IST
பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில், ரயில்வே அமைச்சர் ஆய்வு
பாம்பன் ரயில் தூக்கு பாலம் நாளை பிரதமர் நரேந்திர மோடி திறக்கவுள்ள நிலையில் இன்று ரயில்வே அமைச்சர், தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சரஷ் எல். முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
-
Apr 05, 2025 20:41 IST
மின்னொளியில் ஜொலிக்கும் பாம்பன் பாலம்
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2.05 கி.மீ நீளமுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். திறப்புக்கு தயாரான பாம்பன் பாலம், மின்னொளியில் ஜொலித்து வருகிறது.
-
Apr 05, 2025 20:40 IST
திருச்செந்தூருக்கு புதிய பேருந்து
திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் தொடங்கி வைத்தார். தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 8 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும்.
-
Apr 05, 2025 20:22 IST
ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன்: பிரதமர் மோடி
தமிழகம் வரும் பிரதமர் மோடி நாளை புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். நாளை புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது, ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன் ரூ.8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 05, 2025 20:19 IST
தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை
கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில்,முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 05, 2025 19:29 IST
ஃபெப்சி அமைப்பை தயாரிப்பாளர் சங்கம் நிர்வகிக்க முயற்சி: ஆர்.கே.செல்வமணி
என்னை நீக்கி விட்டு ஃபெப்சி அமைப்பை தயாரிப்பாளர் சங்கம் நிர்வகிக்க முயற்சி நடக்கிறது. எங்கள் அமைப்பை அழிக்க நினைப்பவர்களுடன் இணைந்து பயணிக்க மாட்டோம். என்னை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு சரியானதை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பயணிக்க கூடாது என நிர்பந்திக்கிறார்கள் என ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
-
Apr 05, 2025 18:29 IST
2034-ம் ஆண்டு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: நிர்மலா சீதாராமன்
2034-ம் ஆண்டு தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவர திட்மிடப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தினால், ரூ12000 கோடி செலவு மிச்சமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.5 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
Apr 05, 2025 17:50 IST
மாவோயிஸ்டுகளுக்கு அமித்ஷா வலியுறுத்தல்
ஆயுதங்களை கீழே போட்டு, வன்முறையை கைவிடுங்கள் என்று மாவாயிஸ்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். சண்டிகரில் பழங்குடியினர் சார்பாக நடத்தப்பட்ட விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, மாவோயிஸ்டுகளை சகோதரர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
-
Apr 05, 2025 16:47 IST
கச்சத்தீவு குறித்த கேள்விக்கு பதிலளிக்காத வெளியுறவு செயலர்
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் கச்சத்தீவு குறித்து பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதில அளிக்கவில்லை.
-
Apr 05, 2025 16:18 IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் ரூ. 12 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும், இந்த நடைமுறையை ஆதரிக்கவில்லை என்றாலும், கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
-
Apr 05, 2025 15:45 IST
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தி.மு.க-வினர் பரப்புரை
சென்னை, மாதவரம் பகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தி.மு.க-வினர் பரப்புரை மேற்கொண்டனர். குறிப்பாக, 100 அடி சுவற்றில் "வேண்டாம் வேண்டாம்.. தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம். தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும்.." என்ற வாசகங்களை அவர்கள் எழுதினர்.
-
Apr 05, 2025 15:30 IST
சென்னை – அகமதாபாத் விமானத்தில் கோளாறு
சென்னையில் இருந்து அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் இயந்திர கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 173 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு இரண்டரை மணி நேரம் தாமதமாக அகமதாபாத் புறப்பட்டுச் சென்றது.
-
Apr 05, 2025 15:26 IST
உற்பத்தி மட்டுமின்றி பிற துறைகளிலும் வளர்ச்சி - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
உற்பத்தித் துறை மட்டுமின்றி சேவை உள்ளிட்ட பிற துறைகளிலும் தமிழ்நாடு அபார வளர்ச்சியை பெற்றுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் மோசமான நிர்வாகத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்து தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை எட்டியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
Apr 05, 2025 15:01 IST
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - ஞானசேகரன் மனுத்தாக்கல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அல்லிகுளம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜராகினார். அவரை விடுவிக்க கோரிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
Apr 05, 2025 14:42 IST
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் - கி.வீரமணி வரவேற்பு
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளது. 1952 சட்டமன்றத் தேர்தலில் மூக்கையா தேவர் போட்டியிட்ட போது அவரை ஆதரித்து பெரியார் உரையாற்றி உள்ளார். மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தது பாராட்டத்தக்கதாகும் கி.வீரமணி தெரிவித்துள்ளது.
-
Apr 05, 2025 14:36 IST
மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்
காவல் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. காவல் உதவி ஆணையர் இளங்கோவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முழு விசாரணை நடத்தப்படாமல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பித்தது மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் மனைவியை உதவி ஆணையராக இருந்த இளங்கோவன் மிரட்டியதாக வழக்கு தொடரப்பட்டது.
-
Apr 05, 2025 14:21 IST
2026 சட்டமன்ற தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளார்.
-
Apr 05, 2025 14:03 IST
இலங்கை உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
இலங்கையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷணா விருதை இலங்கை அதிபர் அநுர குமர திசநாயக வழங்கினார்.
-
Apr 05, 2025 13:53 IST
மனிதாபிமானத்துடன் மீனவர் பிரச்னையை அணுக வேண்டும் - இலங்கையில் மோடி பேச்சு
இலங்கை அரசை மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் வலியுறுத்தி உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இலங்கை அதிபரிடம் பேசினேன். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது.
-
Apr 05, 2025 13:30 IST
இலங்கை அதிபரை சந்தித்த பின் பிரதமர் மோடி உரை
“மீனவர்கள் வாழ்வாதார பிரச்னை குறித்து பேசினோம். மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் பிரச்னையை அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளோம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளோம்” இலங்கை அதிபர் அநுர திசாநாயக்க உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி உரை
-
Apr 05, 2025 13:27 IST
இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து
மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை தேவை என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல். மோடி - அநுர சந்திப்பிற்குப் பின்னர் இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து; பாதுகாப்பு, சுகாதாரம், மருந்து துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது; இந்தியா - இலங்கை - ஐக்கிய அரபு அமீரகம் இடையே முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது
-
Apr 05, 2025 13:25 IST
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
GSDP உயர்வுக்கு மிக முக்கிய காரணம் மற்ற மாநிலங்களை காட்டிலும் உற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டிலும் சரிசமமாக கவனம் செலுத்தியதால்தான் ஒன்றிய அரசு நிதியை தராவிட்டாலும் என் மாநிலத்தை |நான் பார்த்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான வளர்ச்சியை கொடுத்துள்ளார்.
-
Apr 05, 2025 13:02 IST
சைதை துரைசாமி மீது கே.பி.முனுசாமி கடும் தாக்கு
“சைதை துரைசாமி வேலை வெட்டி இல்லாதவர். அவருக்கு பல்வேறு கட்சிகளோடு உள்ள தொடர்புகளை வைத்துக்கொண்டு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை" அதிமுக ஒன்றிணைய வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனப் பேசிய சைதை துரைசாமி மீது அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
Apr 05, 2025 12:28 IST
கோகுலம் நிறுவனத்தில் சோதனை: ரூ. 1.5 கோடி பறிமுதல்
கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்துள்ளது அமலாக்கத்துறை. எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது; சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்; அந்நிய செலவாணி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது
-
Apr 05, 2025 12:20 IST
ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயம்
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயம் என்று உயர்நீதிமன்ற கிளை அறிவித்துள்ளது. குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதி கருத்து; பள்ளிக் கல்வித்துறை சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு: கல்வித் தகுதிகளை நிர்ணயம் செய்ய NCTE ஐ “கல்வி ஆணையமாக” அரசு நியமித்துள்ளது
-
Apr 05, 2025 11:59 IST
சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை
சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது தி.நகர், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்துவருகிறது.
-
Apr 05, 2025 11:50 IST
மண்டலங்களை உயர்த்தும் முடிவு - தற்காலிக நிறுத்தம்
சென்னை மாநகராட்சி மண்டலங்களை உயர்த்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மண்டலங்களை பிரிக்க கவுன்சிலர்கள், பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நிறுத்தம். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவிக் காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. 2027-ம் ஆண்டு தான் புதிய மண்டலங்களை உருவாக்க திட்டம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்த மாநகராட்சி முடிவு
-
Apr 05, 2025 11:28 IST
விதிமீறல் - 10 மாடி கட்டிடம் இடிப்பு
சென்னை தி.நகரில் விதிமீறி கட்டப்பட்ட 10 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த கட்டிடம் இடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 3 மாடி கட்டிடத்தில் அனுமதி பெற்றுவிட்டு 10 மாடி கட்டிய கட்டியதாக அந்த நிறுவனம் மீதி குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் 10 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணியில் சிஎம்டிஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
-
Apr 05, 2025 11:23 IST
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
Apr 05, 2025 11:22 IST
அம்பத்தூர் Vasanth & Co கடையில் தீ விபத்து
சென்னை அம்பத்தூரில் உள்ள Vasanth & Co கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Apr 05, 2025 11:09 IST
எம்புரான் படத்தின் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!
எம்புரான் படத்தின் இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. கோல்டு, ஜன கன மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளராக இருந்த நிலையில், கணக்கு விவரங்கள் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இருந்தபோது ரூ. 40 கோடி வருவாய் ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 05, 2025 10:45 IST
நீட் தேர்வு - பாமக நிறுவனர் ராமதாஸ் அட்வைஸ்
நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது. பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும். நீர் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும் மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
-
Apr 05, 2025 10:07 IST
கஞ்சா விற்ற மூவர் கைது
தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 100கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை என சலுகை முறையில் விற்றதாக புகார் எழுந்துள்ளது. தாம்பரத்தில் கஞ்சா விற்ற சதாம் உசேன், இம்ரான்கான், பிரவீன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 05, 2025 10:01 IST
இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்க உடன் சந்தித்தார். நேற்றிரவு இலங்கை சென்ற மோடிக்கு கொழும்புவில் தற்போது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
Apr 05, 2025 09:43 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 குறைந்து ரூ.66480க்கு விற்பனையாகிறது.
-
Apr 05, 2025 09:33 IST
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய உச்சம்
2024 -25 ஆண்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் (9.69%)தமிழ்நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளதாக ஒன்றிய அரசின் திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Apr 05, 2025 08:44 IST
மீன் பாடி வண்டிகளை குறிவைத்து திருடிவந்த நபர் கைது.
சென்னையில் முதியவர்களை குறிவைத்து மீன்பாடி வண்டிகளை திருடிவந்த ஹேக் அய்யூப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 11 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாடகைக்கு அழைத்துச் சென்று அவர்களை மிரட்டி பணம் மற்றும் வண்டியை பறித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக வாக்குமூலம் அளிக்கப்பட்டது.
-
Apr 05, 2025 08:35 IST
தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்
தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய புகார்களை சரிசெய்ய தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.
-
Apr 05, 2025 07:42 IST
"தேர்தல் வந்தால் காதல் வரும்" - சீமான்
தேர்தல் வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., போன்ற கட்சிகளுக்கு திடீரென கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும் என சீமான் விமர்சித்துள்ளார்.
-
Apr 05, 2025 07:40 IST
டிக்டாக் விற்பனை - காலக்கெடு நிர்ணயம்
டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை, மேலும் 75 நாட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நீடித்துள்ளார். தேவையான அனைத்து ஒப்புதல்களும் பெற்று கையெழுத்திட, அதிக வேலைகள் செய்ய வேண்டியுள்ளதாக டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
Apr 05, 2025 07:39 IST
மழை நிலவரம்
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 05, 2025 07:37 IST
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
நீரவரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. வெள்ளப்பருக்கு ஏற்பட்டதால் குற்றாலம் அருவியில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.