/indian-express-tamil/media/media_files/2025/04/07/ZUqJVJBHdV7dRPkY2rtD.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அணை நிலவரம்: கொடிவேரி அணைக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்து சீரானதால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 21:04 IST
தொகுதி மறுசீரமைப்பு: தமிழகம் தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கும் அபாயம் - துரைமுருகன் எச்சரிக்கை
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகம், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை இழக்கும் அபாயம் உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை செய்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ்நாட்டு மண்ணில் நின்று தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
Apr 06, 2025 20:14 IST
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேஸ்வரம் வந்த மோடி பதில் அளிக்கவில்லை - ஸ்டாலின் விமர்சனம்
கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி: “தொகுதி மறுசீரமைப்பு குறித்து விளக்கம் கேட்டும் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. விளக்கம் அளிக்காதவர்களுக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை” என்று கூறினார்.
-
Apr 06, 2025 20:11 IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம் - தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கேள்வி
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். சட்டக்கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று சட்டப்பேரவையில், சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பினார்.
-
Apr 06, 2025 19:32 IST
சென்னை பத்திரிகையாளர் மன்ற கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2.50 கோடி ஒதுக்கீடு
சென்னை பத்திரிகையாளர் மன்ற கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசு சார்பில் ரூ.2.50 கோடி ஒதுக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 06, 2025 19:16 IST
‘ராமேஸ்வரம் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி, அங்கு மேடையில் எனக்கு வேலை இல்லை’ - அண்ணாமலை
பிரதமர் நிகழ்ச்சியில் மேடையில் இல்லாதது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி: “ராமேஸ்வரம் நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சி, அங்கு மேடையில் எனக்கு வேலை இல்லை” என்று கூறினார்.
-
Apr 06, 2025 18:07 IST
எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை அ.தி.மு.க - முத்தரசன் கடும் தாக்கு
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் பேட்டி: “பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு அ.தி.மு.க பணிந்து செல்லும் நிலையில் உள்ளது; எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இல்லை” என்று கூறினார்.
-
Apr 06, 2025 17:37 IST
திருவாரூர் ஆழி தேரோட்டம்: நகர் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
திருவாரூர் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு நாளை (07.04.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
Apr 06, 2025 17:06 IST
சி.பி.எம் மாநாட்டில் பினராயி விஜயன், எம்.ஏ.பேபி உடன் பிரகாஷ்ராஜ், மாரி செல்வராஜ், ஞானவேல் சந்திப்பு
சி.பி.எம் மாநாட்டில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் புதிய அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியை நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் சந்தித்து பேசினர்
-
Apr 06, 2025 16:56 IST
சி.பி.எம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபிக்கு ஸ்டாலின் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு வாழ்த்துகள். மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றில் வலுவான உறவுகளை தி.மு.க எதிர்பார்க்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Apr 06, 2025 16:38 IST
தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 06, 2025 15:29 IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ பேபி தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் இந்த பொதுச்செயலாளர் தேர்வு நடந்துள்ளது
-
Apr 06, 2025 14:47 IST
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 06, 2025 14:19 IST
நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை – சீமான்
நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கவில்லை. சந்தித்து இருந்தால் இதற்காகத் தான் சந்தித்தேன் என தைரியமாக கூறுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
-
Apr 06, 2025 13:52 IST
அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 06, 2025 13:09 IST
உதகையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும் - ஸ்டாலின்
உதகையில் சுற்றுலா காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடி செலவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும் என நீலகிரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Apr 06, 2025 12:44 IST
நீட் விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா? – இ.பி.எஸ்-க்கு ஸ்டாலின் சவால்
நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பா.ஜ.க உடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்க முடியுமா? என நீலகிரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்
-
Apr 06, 2025 12:39 IST
ரூ.494 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் நீலகிரியில் ரூ.494 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.130 கோடி மதிப்பிலான 56 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
-
Apr 06, 2025 12:30 IST
நீலகிரி நிகழ்ச்சியால், பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை - ஸ்டாலின்
நீலகிரி நிகழ்ச்சியால், பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும். இந்தி திணிப்பு மற்றும் சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. வக்பு திருத்த சட்டத்தை தி.மு.க கடுமையாக எதிர்த்தது. வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா மூலம் வழக்கு தொடரப்படும் என ஊட்டியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்
-
Apr 06, 2025 11:50 IST
உரிய அனுமதியின்றி வைத்ததாக கூறி வி.சி.க பேனர் அகற்றம்
உரிய அனுமதியின்றி வைத்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை போலீசார் அகற்றினர். பேனரில் ’ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது
-
Apr 06, 2025 11:26 IST
கைம்பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்
மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுப நிகழ்ச்சிகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்க முடியாது என்றும் இதனை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 11:25 IST
வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்
நீலகிரியில் ரூ. 494 கோடி மதிப்பில் முடிவுற்ற 1,703 திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து ரூ.130 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
-
Apr 06, 2025 10:58 IST
அறநிலையத் துறை அல்ல அறமற்ற துறை - சீமான்
பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் ஊறி திளைத்து அறமற்ற துறையாக அறநிலையத்துறை விளங்குகிறது. அர்ச்சனை சீட்டு, குடமுழுக்கு, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் அறநிலையத்துறை ஊழல் செய்கிறது. கோயில்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 06, 2025 10:46 IST
1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் பகுதிகள் குறைப்பு
1 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப் பகுதிகளை குறைத்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்ப் பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 10:41 IST
உதகை: அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 700 படுக்கை வசதி, பழங்குடியினருக்கு தனி வார்டு, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்பட பல்வேறு வசதிகளோடு 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.353 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
-
Apr 06, 2025 10:36 IST
நிர்மலா சீதாராமனை சந்தித்த சீமான்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியுள்ளார்.
-
Apr 06, 2025 09:45 IST
நிர்மலா சீதாராமன் -செங்கோட்டையன் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு என தகவல் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பானது நேற்று இரவு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
Apr 06, 2025 09:45 IST
மாடு முட்டி முதியவர் காயம்
சாலையில் சென்ற முன்னாள் ராணுவ வீரரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
Apr 06, 2025 09:44 IST
உதகை மருத்துவக் கல்லூரி
நீலகிரியில் இன்று ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
-
Apr 06, 2025 09:01 IST
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை 11 பேர் கைது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Apr 06, 2025 09:01 IST
சாலையில் திடீரென தீப்பிடித்த கார்
சென்னை நந்தம்பாக்கம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் முன்பக்கத்திலிருந்து திடீரென புகை வந்ததால் காரில் இருந்தவர்கள் அலறியடித்து இறங்கின. நல்வாய்ப்பாக அருகிலிருந்தவர்கள் காரில் பற்றிய தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
-
Apr 06, 2025 08:58 IST
பாம்பன் பாலத்தில் சோதனை
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை கருவிகளுடன் பாம்பன் பாலத்தில் மத்திய வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 06, 2025 08:39 IST
ராம நவமி வாழ்த்துகள்: குடியரசுத் தலைவர்
தியாகம், அர்ப்பணிப்பு, நல்லிணக்கம், வீரம் உள்ளிட்ட உயர்ந்த கொள்கைகளை ராமர் வழங்கினார். வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். புனித பண்டிகையான ராம நவமியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.
-
Apr 06, 2025 08:36 IST
4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல்
ரூ.7750 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். வாலாஜாபேட்டை - ராணிப்பேட்டை, விழுப்புரம் - புதுச்சேரி உள்ளிட்ட 4 வழிச்சாலை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம், சோழபுரம் - தஞ்சை 4 வழிச்சாலை பணிகளுக்கு இன்று அடிக்கல நாட்டுகிறார்.
-
Apr 06, 2025 08:10 IST
பள்ளியில் பெண்ணுடன் தனியாக இருந்த நபர் கைது
திருச்சி மாவட்டம் வாளாடி அரசு பள்ளியில் இரவில் மதுபோதையில் பெண்ணுடன் இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நவீன்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 06, 2025 08:04 IST
சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதை
தேனியில் 50 வயது பெண்மணியின் நுரையீரல் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த சப்போட்டா விதையை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
-
Apr 06, 2025 07:38 IST
இன்று ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர்
பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் - ராமேஸ்வரம் தீவை இணைக்கும் விதமாக ரூ.535 கோடியில் செங்குத்து தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
-
Apr 06, 2025 07:34 IST
வாரச்சந்தையில் தீ விபத்து - 10 கடைகள் எரிந்து சேதம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இறைச்சி கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. 10க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்த நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
-
Apr 06, 2025 07:34 IST
வக்பு மசோதா - குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றிய வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி ஒப்புதல் அளித்துள்ளார். வக்பு மசோதாவிற்கு மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் ஆதரவாக எம்.பிக்கள் வாக்களித்ததால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
-
Apr 06, 2025 07:33 IST
அமெரிக்காவில் ஜாகுவார் நிறுத்தம்
அமெரிக்காவுக்கு கார்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் 25 விழுக்காடு வரி விதிப்பைத் தொடர்ந்து அறிவித்துள்ளது.
-
Apr 06, 2025 07:31 IST
ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு
ராமநாதசுவாமி கோயிலில் பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி தரிசனம்,பூஜௌ செய்ய உள்ளார். பிரதமர் வருகையை ஒட்டி இன்று ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.