Chennai News Highlights: கேஸ் விலை உயர்வு; மத்திய அரசின் மற்றொரு பரிசு - ராகுல் காந்தி

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi xy

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பத்திரிகையாளர் மன்றத்திற்கு நிதி: சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் உதயநிதி அறிவித்துள்ளார்.

  • Apr 07, 2025 20:47 IST

    கேரளா ஆறுகளை தமிழகத்துடன் இணைக்க கோரிய மனு தள்ளுபடி

    கேரளாவின் பாண்டியாறு, புன்னம்புழா ஆறுகளை தமிழ்நாட்டின் பவானி ஆற்றுடன் இணைக்க உத்தரவிடக்கோரி கடந்த 2018ல் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு "இரு மாநில அரசுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அரசுதான் கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது" என மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு



  • Apr 07, 2025 20:46 IST

    26 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர்: 6 நாட்கள் மட்டுமே சென்ற அன்புமணி ராமதாஸ்

    நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், (31-Jan-2025 to 04-Apr-2025) தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களின் வருகைப்பதிவு 26 நாட்கள் அவை நடந்துள்ள நிலையில், அதிகபட்சமாக திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கிரிராஜன், அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆகியோர் அனைத்து நாட்களும் வருகை தந்துள்ளனர். குறைந்த பட்சமாக பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் 6 நாட்கள் மட்டும் வருகை தந்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 07, 2025 20:43 IST

    சமையல் எரிவாயு விலை உயர்வில் எவ்வித நியாயமும் இல்லை: டாக்டர் ராமதாஸ்

    சமையல் எரிவாயு விலை உயர்த்தியதற்காக, மத்திய அரசு கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்யப்பட்ட நிலையில், எரிவாயு விலை ரூ50 உயர்த்தி இருப்பது எவ்வித நியாயமும் இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Apr 07, 2025 19:36 IST

    பெண்கள் பாதுகாப்புக்காக, புகார் குழு அமைக்க அறிவுறுத்தல்

    "சென்னையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் `உள்ளக புகார் குழுக்கள்' அமைக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் `உள்ளக புகார் குழுக்கள்' அமைக்க வேண்டும். 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் 50% பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். http://tnswd.poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளக புகார் குழுவின் விவரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ள மாவட்ட ஆட்சியர், புகார் குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50,000 வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Apr 07, 2025 18:41 IST

    பொதுதுபோக்கு தளத்தில் தலைவனைத் தேடாதீர்கள்... போராட்டக் களத்தில் தேடுங்கள் - சீமான் பேச்சு

    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: “பொழுதுபோக்கு, கேளிக்கையில் நாட்டம் கொண்ட மக்களை புரட்சிக்குத் தயார் செய்வது கடினம்; கேளிக்கை வேறு, போராட்டம், புரட்சி வேறு. உங்களுக்கான தலைவரை பொதுதுபோக்கு தளத்தில் தலைவனைத் தேடாதீர்கள்... போராட்டக் களத்தில் தேடுங்கள். உன் மொழி உணராதவன் உன் இறைவனாக இருக்க முடியாது. உன் வலி உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது” என்று கூறினார்.



  • Apr 07, 2025 18:09 IST

    அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

    அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை ஏழு மணி முதல் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மாலையில் நிறைவடைந்தது.



  • Apr 07, 2025 17:57 IST

    தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான் - அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: “தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்? எனக் கேட்டால் சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான். சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு ஓ.பி.எஸ்., டி.டி.வி தினகரன் ஆகியோர் சாட்சி. நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் முதல்வர்  ஸ்டாலினை உலக அளவில் ஊடகங்கள் பாராட்டுகின்றன. பா.ஜ.க-வின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் பழனிசாமி. அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய முகாந்திரமற்ற சோதனையை வைத்து அபத்தமான அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Apr 07, 2025 17:41 IST

    டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து கூட்டணிக்குத் தயாராகி விட்டார்  இ.பி.எஸ் - அமைச்சர் ரகுபதி தாக்கு

    கடந்த 2 ஆண்டுகளாக ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது’ என்று சத்தியம் செய்து வந்த எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பா.ஜ.க கூட்டணிக்குத் தயாராகி விட்டார். எடப்பாடி பழனிசாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அ.தி.மு.க-வின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள்தான் என்று என்று அமைச்சர் ரகுபதி அறிக்கையில் கூறியுள்ளார்.



  • Apr 07, 2025 16:55 IST

    தயாரிப்பாளர் ராமநாதன் காலமானார்

    திரைப்பட தயாரிப்பாளர் ராமநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நடிகர் சத்தியராஜிடம் மேலாளராக பணியாற்றிய அவர், 'நடிகன்', 'வள்ளல்', 'திருமதி பழனிச்சாமி', 'பிரம்மா' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.



  • Apr 07, 2025 16:38 IST

    வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்வு

    வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 



  • Apr 07, 2025 16:19 IST

    வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள்

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை பட்டியலிடுவது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.



  • Apr 07, 2025 15:53 IST

    கலால் வரி உயர்வு

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ரூ. 2 கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.



  • Apr 07, 2025 15:46 IST

    பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

    தாம்பரத்தில், அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Apr 07, 2025 15:27 IST

    ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது - தமிழக அரசு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் மீது முகாந்திரங்கள் உள்ளதால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது என, போக்சோ நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.



  • Apr 07, 2025 15:21 IST

    ரூ. 4,992 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றம் - அமைச்சர் முத்துசாமி

    தி.மு.க ஆட்சி அமைத்த பின்னர் 4 ஆண்டுகளில் வீட்டு வசதி வாரியம் மூலமாக ரூ. 4,992 கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் வாங்கியவர்களுக்கு, 6166 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 07, 2025 14:42 IST

    எனக்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை - அண்ணாமலை

    அண்ணன் சீமானை, போர்க்களத்தில் நிற்கும் ஒரு தளபதியாகத்தான் பார்க்கிறேன்; கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டோடு தைரியமாக இருப்பவர் சீமான் எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை; நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன், அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார்” எஸ்.ஆர்.எம். பல்கலை. நிகழ்ச்சியில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோடு மேடையை பகிர்ந்துகொண்டபின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். 



  • Apr 07, 2025 14:37 IST

    மக்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள் - அண்ணாமலை

    "தேசிய கட்சிகள் தேசிய பிரச்னைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும்; மாநில கட்சிகள் மாநில பிரச்னைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும் அப்போதுதான் இந்திய அரசியலானது, ஆளுமை மிகுந்த மனிதர்களால், நல்லபடியாக மாறும்; இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும் தேசிய கட்சிகளும் எக்ஸ்ட்ரீம்க்கு செல்லும்போது, மக்கள் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 



  • Apr 07, 2025 14:17 IST

    பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு.

    சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார். தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை என ராம்குமார் தரப்பு கூறியிருந்தது.



  • Apr 07, 2025 14:03 IST

    “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்” - இயக்குநர் வசந்தபாலன்

    'தமிழ் சினிமாவுக்கு பா.ரஞ்சித் வரும்முன் தலித் - சாதி - அதிகாரம் பற்றிய பார்வை வேறாக இருந்தது; நாகராஜ் மஞ்சுளே, ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் வந்தபிறகு, மொத்தப் பார்வையும் மாறியது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு பகிரங்கமாக இங்கே மன்னிப்பு கேட்கிறேன்; சிறுபான்மையினர், தலித், மாற்றுப் பாலினத்தவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதில் ரஞ்சித் கொண்டுவந்த மாற்றம் மிக முக்கியமானது” - இயக்குநர் வசந்தபாலன்



  • Apr 07, 2025 13:44 IST

    அமைச்சர்கள் வழக்கு - நீதிபதி விலகல்

    அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விலகல்



  • Apr 07, 2025 13:41 IST

    பீகார் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு

    பீகாரின் வெகுசராய் பகுதியில் காங். சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு; பீகார் இளைஞர்களுக்கு, தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் எனக்கோரி பாதயாத்திரை ‘இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குக; புலம்பெயர்வதை தடுத்த நிறுத்துக' என்கிற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது



  • Apr 07, 2025 13:26 IST

    ஒரே மேடையில் அண்ணாமலை, சீமான் - தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு

    செங்கல்பட்டு: எஸ்.ஆர்.எம். பல்கலை.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணாமலை, சீமான் பங்கேற்பு தமிழ்ப் பேராயம் சார்பில் 'சொல் தமிழா சொல்’ நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். 



  • Apr 07, 2025 13:25 IST

    அன்னை இல்லம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    "நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை" பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு. 



  • Apr 07, 2025 13:16 IST

    பாஜகவின் கூட்டணி கட்சி அமலாக்கத்துறை - அமைச்சர் ரகுபதி

    "அதிமுக, பாஜகவின் கூட்டணி கட்சிதான் அமலாக்கத் துறை; பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்லி டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனைக்குப் பின் ஊழல், தொகை குறித்து எந்த விவரத்தையும் அமலாக்கத்துறை சொல்லவில்லை; அண்ணாமலை என்ன சொன்னாரோ அதையேதான் அமலாக்கத்துறையும் சொன்னது” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 



  • Apr 07, 2025 13:13 IST

    தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டிற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று (ஏப்.7) காலை 8.30 மணிக்கு உருவானது; தென்மேற்கு வங்கக் கடலில் நாளை (ஏப்.8) வரை வடமேற்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Apr 07, 2025 13:07 IST

    பேரவையில் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்ட 13 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்

    பேரவையில் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்ட 13 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அசோக் குமார், சம்பத் குமார், அம்மன் கே.அர்ஜுனன், பொன் ஜெயசீலன், இசக்கி சுப்பையா, செந்தில்குமார், ஜெயக்குமார் சஸ்பெண்ட்; எம்.எல்.ஏ.,க்கள் பாலசுப்பிரமணியம், நல்லதம்பி, மரகதம் குமாரவேல் சஸ்பெண்ட்



  • Apr 07, 2025 12:23 IST

    9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது: இபிஎஸ்

    9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள், மீனவர்கள், மக்கள் என அனைவரும் சொந்து நூலாய் போயிருக்கிறார்கள். இன்று மீனவர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். 4 ஆண்டுகாலம் மீனவர்கள் படும் துன்பம் இவருக்குத் தெரியாதா? 9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது, அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும்.” என்றார்.



  • Apr 07, 2025 12:21 IST

    "நொந்து நூடுஸ்லாகிப்போன அ.தி.மு.க தொண்டர்கள்தான் தியாகி"

    தமிழக சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 'அந்த தியாகி யார்?' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்துவந்த நிலையில், நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான் தியாகிகள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.



  • Apr 07, 2025 11:51 IST

    செங்கோட்டையன் மட்டும் சட்டப்பேரவையில் உரை

    அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் சட்டப்பேரவையில் உரையாற்றினார். பதாகைகள் காட்டி, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசி முடித்த பின்பு அவையை விட்டு வெளியேறினார்.



  • Apr 07, 2025 11:49 IST

    சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளி

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். எடப்பாடி பழனிசாமி பேசுவது அவைக்குறிப்பில் பதிவேற்ற முடியாது என சபாநாயகர் அப்பாவு கருத்து. வேறு எதைத்தான் பதிவு செய்வீர்கள்., எதையுமே பேச விடுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதால் அவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.



  • Apr 07, 2025 11:48 IST

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

    பேரவையில் டாஸ்மாக் தொடர்பாக பேச எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நீதி விசாரணையில் இருக்கும் பொருள் குறித்து பேசவோ, பெயரை குறிப்பிடவோ கூடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் எதையுமோ பேசவிடுவதில்லை எனக்கூறி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சட்டப்பேரவையில் ‘யார் அந்த தியாகி’ என்ற பதாகைகள் காட்டிய அதிமுக எம்.எல்.ஏக்கள் அவை நடவடிக்கையில் இன்று பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு.



  • Apr 07, 2025 11:00 IST

    "தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம்"

    தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மீனவர்களின் நலனுக்காக ரூ.576 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 15,300 மீனவர்களுக்கு மீன் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கான தொழில் பயிற்சி வழங்கப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த மன்னார் வளைகுடா பகுதியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.



  • Apr 07, 2025 10:52 IST

    இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பரஸ்பர கட்டண விதிப்பு காரணமாக ஆசிய இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி. இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 72122 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.  



  • Apr 07, 2025 10:45 IST

    வீட்டின் முன்பு திரண்டு வரும் ஆதரவாளர்கள்

    காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் திரண்டனர்.



  • Apr 07, 2025 10:12 IST

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன -அமைச்சர் பொன்முடி

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தின் பசுமை பரப்பை 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் 650 ஹெக்டேர் தரம் குன்றிய அலையாத்தி காடுகள் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.



  • Apr 07, 2025 09:49 IST

    அந்த தியாகி யார்? என அதிமுகவினர் பேட்ஜ்

    அந்த தியாகி யார்? என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். டாஸ்மாக்கில் ஊழல் என குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வருகை தந்துள்ளனர்.



  • Apr 07, 2025 09:44 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

    தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்து ஒரு பவுன் 66,280க்கு விற்பனையாகிறது.



  • Apr 07, 2025 09:14 IST

    அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ED சோதனை

    திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் கோவையில் அமைச்சரின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.



  • Apr 07, 2025 08:32 IST

    வீட்டிலேயே பிரசவம் - பெண் பரிதாப பலி

    கேரள மாநிலம் மலப்புரத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.பிறந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெண் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 07, 2025 08:32 IST

    தெருநாய் கடித்து 4வயது குழந்தை பலி

    ஆந்திர மாநிலம் குண்டூரில் தெருநாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் அழுதனர்.



  • Apr 07, 2025 08:31 IST

    சென்னை போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை

    ஏப்ரல் 11 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை தொடங்குகிறது. சென்னை -கொல்கத்தா அணிகநள் மோதும் போட்டி ஏப்ரல் 11இல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. 



  • Apr 07, 2025 08:24 IST

    கே.என்.நேருவின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை

    ஆழ்வார்பேட்டையில் உள்ள  அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 07, 2025 07:57 IST

    சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட்ட 95 நீதிபதிகள்

    நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 12% பேர் (95 நீதிபதிகள்) மட்டுமே தங்களது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்ப்பட்ட நிலையில் நீதித்துறை மீதான் நம்பகத்தன்மையை நிலைநாட்ட சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்திருந்தனர்.



  • Apr 07, 2025 07:53 IST

    "செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்"

    செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரம் வீணடிக்க விரும்பவில்லை அதிமுகவில் எந்த ஒரு உட்கட்சி பிரச்சனையும் இல்லை. செங்கோட்டையன் குறித்து விரைவில் ஈபிஎஸ் பேசுவார் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் பேட்டி அளித்துள்ளார்.



  • Apr 07, 2025 07:33 IST

    வேரோடு சாய்ந்த மரங்கள்

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் சுற்று வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன்மழையால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.



  • Apr 07, 2025 07:31 IST

    மழை நிலவரம்

     ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



  • Apr 07, 2025 07:30 IST

    சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்

    நெல்லையில் Good Bad Ugly திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட அஜித் கட் அவுட் சரிந்து விழுந்தது. ரசிகர்கள் பதறியடித்து ஓடிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியானது.



  • Apr 07, 2025 07:30 IST

    திருவாரூர் ஆழித்தேரோட்டம்

    திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.



  • Apr 07, 2025 07:29 IST

    காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று குடமுழுக்கு

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் 19 ஆண்டுகள் கழித்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தினர்.



  • Apr 07, 2025 07:28 IST

    சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

    சென்னை அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: