/indian-express-tamil/media/media_files/2025/02/03/hIxleIFjJJm2TOmqhM2V.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிலிண்டர் விலை உயர்வு: வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஒரு சிலிண்டர் விலை ரூ. 868 ரூபாயாக அதிகரித்துள்ளது.
-
Apr 09, 2025 00:23 IST
ஆளுனருக்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்தை தடுக்க ஆளுநர்களின் அரசியல் தலையீடுகளுக்கு எதிராக ஒரு வலுவான தீர்ப்பு வந்துள்ளது. இது கூட்டாட்சிக் கொள்கைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களை வரலாற்று ரீதியாக மீண்டும் உறுதிப்படுத்துவதாகும் என்று பதிவிட்டுள்ளார்.
-
Apr 08, 2025 21:24 IST
புதுச்சேரியில் இருந்து கேரளாவின் மாஹேவுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்
தமிழ் வருடப் பிறப்பு மற்றும் மலையாள விஷு பண்டிகையை ஒட்டி வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கேரளாவின் மாஹேவுக்கு சிறப்பு பேருந்து இயக்கம். புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் இந்த பேருந்தில் கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 08, 2025 21:21 IST
ப.சிதம்பரம் நலமுடன் உள்ளார்: கார்த்தி சிதம்பரம் தகவல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்ததாகவும், தற்போது நலமுடன் உள்ளதாகவும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
My father @PChidambaram_IN had an episode of presyncope due to extreme heat & dehydration in Ahmedabad & is under observation in Zydus Hospital. The doctors are reviewing his parameters which are currently normal. @ANI @PTI_News
— Karti P Chidambaram (@KartiPC) April 8, 2025 -
Apr 08, 2025 19:42 IST
வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு: மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன்முறை பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. -
Apr 08, 2025 18:49 IST
ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் சம்மட்டி அடி; த.வெ.க வரவேற்பு
ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது; வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தவெக வரவேற்கிறது என்று த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
Apr 08, 2025 18:47 IST
ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
“அதிகார அத்துமீறல் குற்றம் புரிந்துள்ள, அரசியலமைப்பு கடமை பொறுப்புகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்திய ஆர்.என்.ரவியை தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை கேட்டுக் கொள்கிறோம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
Apr 08, 2025 18:41 IST
அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பா.ஜ.க செயல்பாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சவுக்கடி - செல்வப்பெருந்தகை
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது.” என்று இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.
-
Apr 08, 2025 18:19 IST
வன்கொடுமை வழக்கு: விடுவிக்கக்கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி - போக்சோ நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சாட்சி விசாரணைஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
Apr 08, 2025 18:09 IST
நீட் விவகாரம் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்; அ.தி.மு.க பங்கேற்காது - இ.பி.எஸ்
நீட் விவகாரம் தொடர்பாக நாளை (ஏப்.09) நடக்க உள்ள அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க பங்கேற்காது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
Apr 08, 2025 17:47 IST
ஆளுநரின் செயல்கள் அரசியல் சாசனப்படித் தவறு... இப்பொழுதாவது உணர்ந்தால் மகிழ்ச்சி - ப. சிதம்பரம்
“தமிழ்நாடு ஆளுநரின் செயல் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஆளுநரின் செயல்கள் அரசியல் சாசனப்படித் தவறு என்று ஆளுநரும் மத்திய அரசும் இப்பொழுதாவது உணர்ந்தால் மகிழ்ச்சி” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
-
Apr 08, 2025 17:44 IST
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக - பிரேமலதா
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Apr 08, 2025 17:42 IST
பா.ஜ.க-வில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் பா.ஜ.க-வில் இணைந்தார்.
-
Apr 08, 2025 16:50 IST
கே.என். நேருவின் சகோதரரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்
அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை, விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். நேற்று, கே.என். நேருவிற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
Apr 08, 2025 16:22 IST
ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - திருமாவளவன்
ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஆளுநர் ஆர். என். ரவி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 08, 2025 16:00 IST
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,500
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.
-
Apr 08, 2025 15:21 IST
மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு
டாஸ்மாக் அலுவலக சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமே முடிவு எடுக்கட்டும் என்று கூறிய நிலையில், தனது மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.
-
Apr 08, 2025 14:51 IST
நவீன மயமாக்கப்படும் அமுதம் அங்காடிகள்
"மக்கள் வேண்டுகோளை ஏற்று பகுதி நேர ரேசன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது அமுதம் அங்காடிகள் படிப்படியாக நவீன மயமாக்கப்படும்" என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
-
Apr 08, 2025 14:46 IST
"3,500 பேருக்கு வேலை வாய்ப்பு"
நுகர்வோர் வாணிபக் கழகத்தில் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
-
Apr 08, 2025 14:44 IST
"இது ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி"
“தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்” இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என்று ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு குறித்து திமுக நாடாளுமன்றத் தலைவர் கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Apr 08, 2025 14:25 IST
"ஜனநாயகம், கூட்டாட்சியை நிலைநிறுத்தியது உச்சநீதிமன்ற தீர்ப்பு"
“தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்" இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் நிலைநிறுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Apr 08, 2025 14:10 IST
பாலியல் புகார் - கல்லூரி துணைமுதல்வர் கைது
வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை என புகார். தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 08, 2025 13:53 IST
மூதாட்டி பாலியல் வன்கொடுமை - கைதிக்கு மாவுக்கட்டு
சென்னை: 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியிருந்த நாகராஜனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்; சைதாப்பேட்டை நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மாவுக்கட்டு போடப்பட்டுள்ள நாகராஜன், அதீத மது போதையால் குற்றச்செயல் செய்ததாக விசாரணையின்போது வாக்குமூலம் கொடுத்திருந்தார்
-
Apr 08, 2025 13:52 IST
ஏப்.14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் ஏப்.14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு மற்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 08, 2025 13:50 IST
"கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே”
"கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறுமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம் சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால், இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது; அதோடு ஒப்பிடுகையில் இந்த கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே. இருப்பினும் விலையை குறைக்க வலியுறுத்துவோம்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
-
Apr 08, 2025 13:40 IST
ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை - செந்தில் பாலாஜி
உச்சநீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளை மீறவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் ஜாமினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் | பாலாஜி பிரமாணப் பத்திரம் தாக்கல்; எந்த சாட்சிகளையும் INFLUENCE செய்யவில்லை; ஜாமினை திரும்பப் பெறக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். -
Apr 08, 2025 13:12 IST
டாஸ்மாக் வழக்கு - அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம். வழக்கு விசாரணைக்கு வந்தபோதே உச்ச நீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் நாங்கள் பட்டியலிட்டிருக்க மாட்டோம்; மாநில அரசின் உரிமைக்காகவே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் - அரசு வழக்கறிஞர்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாவிட்டால் வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
Apr 08, 2025 13:10 IST
வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் விடுவிப்பு
பல்கலை.,சட்டத்திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தநிலையில் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழங்களின் வேந்தர் பொறுப்பிலுருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி விடுவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சென்னையில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பேட்டியளித்துள்ளார்.
-
Apr 08, 2025 13:09 IST
“மசோதாவுக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல் தர தீர்ப்பு”- தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன்
"மீண்டும் அனுப்பும் மசோதாக்களின் மீது ஒரு மாதத்தில் ஒப்புதல் தர தீர்ப்பு; குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்புவது தொடர்பாக ஆளுநருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இனிவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலம் தாழ்த்தக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டு, நிலுவையிலுள்ள 10 மசோதாக்களும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒப்புதல்" என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.
-
Apr 08, 2025 12:44 IST
ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? -சிவசங்கர்
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ஆண்களுக்கும் (இலவச பேருந்து பயணம்) விடியல் பயணம் அளிக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார். அரசின் நிதிநிலை சீராகும்போது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.
-
Apr 08, 2025 12:38 IST
"குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது"
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 08, 2025 12:32 IST
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு - விஜய் கண்டனம்
தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா? என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் தன்னுடைய தளப் பதிவில், ”மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், மத்திய அரசின் இந்த விலையேற்றம், மக்களை மேலும் வாட்டி வதைப்பதாகவே அமைந்துள்ளது. மத்திய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள். மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!
— TVK Vijay (@TVKVijayHQ) April 8, 2025
ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின் அன்றாட வாழ்வே போராட்டமாக இருக்கின்ற சூழலில், ஒன்றிய அரசின் இந்த… -
Apr 08, 2025 12:29 IST
ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்? - இ.பி.எஸ்.
'பேரவைத் தலைவர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். அவையின் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுகவுக்குதான் முதலில் பேச வாய்ப்பு தர வேண்டும். ஆனால் திமுக கூட்டணி கட்சியினருக்கு எல்லாம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, கூட்டணிக் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது நேரலை செய்கிறார்கள். அதிமுக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசும்போது நேரலை செய்வதில்லை. நேற்று விஜயபாஸ்கர் பேசும்போது நேரலை செய்யவில்லை. நாங்கள் மக்கள் பிரச்னையைத்தான் பேரவையில் பேசுகிறோம். ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது? அவைத் தலைவர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 08, 2025 12:29 IST
பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க-வினர்
சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் இன்று பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
Apr 08, 2025 12:01 IST
பல்கலைக்கழகங்களின் வேந்தரானார் முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு பல்கலை. சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுவார்.
-
Apr 08, 2025 11:39 IST
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
-
Apr 08, 2025 11:11 IST
"10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்”
10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை. பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்திவைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Apr 08, 2025 10:57 IST
ஆளுநர் 3 முடிவுகளை எடுக்க முடியும் - உச்சநீதிமன்றம்
சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால், அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம் அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் தான் நிறுத்தி வைக்கும் மசோதா செல்லாது என கூறும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
-
Apr 08, 2025 10:56 IST
ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி
குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
Apr 08, 2025 10:46 IST
“ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல” - உச்சநீதிமன்றம்
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல என உச்சநீதிமன்றம் கருத்து.
-
Apr 08, 2025 10:21 IST
சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில்
மழை வெள்ளம் பேரிடராக அறிவிக்கப்பட்டதுபோல் தற்போது வெப்ப அலையும் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான வழிகாட்டுதல்கள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் என கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் கூறியுள்ளார்.
-
Apr 08, 2025 10:21 IST
ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் இடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
-
Apr 08, 2025 10:14 IST
4 இடங்களில் தொடரும் அமலாக்கத்துறை சோதனை
சென்னையில் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு தொடர்புடைய ஜி.எஸ்.என்.ஆர் ரைஸ் இண்டஸ்ட்ரியஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 2 ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. ஆர்.ஏ. புரத்தில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 வீடுகளில் அடையாறில் டிவிஎச் நிர்வாகி ரமேஷ் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 08, 2025 10:07 IST
பவன் கல்யாணின் இளைய மகன் படுகாயம்
சிங்கப்பூரில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் பள்ளி தீ விபத்து படுகாயம் அடைந்த நிலையில் கை,கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தார்.
-
Apr 08, 2025 09:57 IST
சென்னையில் தங்கம் விலை ரூ.480 சரிவு
தங்கம் விலை ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.65,800க்கு விற்பனையாகிறது.
-
Apr 08, 2025 09:34 IST
சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் நேற்று (ஏப்.7) 3,000 புள்ளிகள் சரிவடைந்த நிலையில், இன்று (ஏப்.8) 1,100 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
-
Apr 08, 2025 09:23 IST
கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் வருகை தந்தனர். சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.
-
Apr 08, 2025 09:00 IST
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து விசிக சார்பில் இன்று (ஏப்.8) கண்டன ஆர்ப்பாட்டம்
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்டு விசிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விசிகலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார்.
-
Apr 08, 2025 08:57 IST
கோயில் இடித்து அகற்றம்
விழுப்புரத்தில் 45 ஆண்டுகளாக உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயில் நகராட்சி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் முன்னிலையில் இன்று அகற்றப்பட்டது. வீட்டிற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளதாக சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Apr 08, 2025 08:54 IST
செல்போன் திருட்டு மேலும் மூவர் கைது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களின் செல்போன்களை திருடிய வழக்கில், மேலும் 3 பேரை வேலூர் போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் இன்று சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 08, 2025 08:38 IST
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் செல்வோரிடம் வழிப் பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் வருவதைப் பார்த்த பிரவீன் ராஜ், மனோஜ்குமார் தப்பிச் செல்வதற்காக மதில்சுவர் மீது ஏறி குதித்தபோது இருவருக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.