/indian-express-tamil/media/media_files/2024/12/18/8yPF6oyunCQES4E0AoQv.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு: ஆளுநருக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் பெருமிதம். மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சியை நிலைநாட்டிட தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்றும் கூறியுள்ளார்.
-
Apr 09, 2025 21:42 IST
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை 4 மணி நேரம் விசாரணை
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில்,13 ஆண்டுகால பண பரிவர்த்தனைகள் குறித்து கேள்விகள் கேட்டதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்த வங்கி கணக்கை ஆய்வு செய்து, பரிமாற்றம் நடந்ததற்கான கேள்விகளை முன்வைத்து விசாரணை
-
Apr 09, 2025 21:40 IST
அதிமுக நிர்வாகிகள் அமித்ஷாவுடன் சந்திக்க உள்ளதாக தகவல்
சென்னை வரும் அமித்ஷாவை, அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே உள்ளனர்
நாளை இரவு சென்னை வருகை தரும் அமித்ஷா, நாளை மறுநாள் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன், தங்கமணி தவிர மற்ற அதிமுக முக்கிய நிர்வாகிகள் சென்னையிலேயே உள்ளனர்
-
Apr 09, 2025 21:38 IST
சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவம்: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து சம்பவத்தில், மும்பை போலீசார் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பாந்த்ரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கத்தி துண்டுகள் உட்பட தடயவியல் ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்
-
Apr 09, 2025 21:36 IST
நீட் அநீதியை ஒழிக்க தமிழ்நாடு போராடும்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கு, நீட் விலக்கே நமக்கான இலக்கு என மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், போராடி வருகிறோம். உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள நீர்ப்பின் ஒளியில் நீதிக்கான சட்டப்போராட்டத்தை தொடரவுள்ளோம். நீட் அநீதியை ஒழிக்க தமிழ்நாடு போராடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான #NEET விலக்கே நமக்கான இலக்கு என மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறோம்.
— M.K.Stalin (@mkstalin) April 9, 2025
தடைகள் பல கடந்து நாம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் கைப்பாவையான ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். நேற்று… pic.twitter.com/2sTSk8Hdaq -
Apr 09, 2025 20:34 IST
எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை மதிப்பீடு: அரசு தேர்வுகள் இயக்கம் அறிவுரை
தமிழ்வழி கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் விடைத்தாள்களையும், ஆங்கில வழி கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவுரை கூறியுள்ளது.
-
Apr 09, 2025 19:36 IST
அனைத்து கட்சி கூட்டம் ஒரு நாடகம்: த.வெ.க தலைவர் விஜய்
அனைத்துக்கட்சி கூட்டம், தனித்தீர்மானம் என ஏதாவது, ஒரு வகையில் மக்களை திசை திருப்பி ஏமாற்றுவது தான் தி.மு.க தலைமையின் தொன்றுதொட்டு வழக்கம், நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களுடன் கூட்டம் என்ற நாடகத்தை நடத்தியுள்ளனர் என்று த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 9, 2025
-
Apr 09, 2025 19:14 IST
நீட்தேர்வு முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு: உதயநிதி ஸ்டாலின் தகவல்
தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, “தேவைப்பட்டால் நீட்தேர்வு முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குத் தொடரப்படும்” என்று கூறியுள்ளார்.
-
Apr 09, 2025 19:12 IST
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி
புதுச்சேரி முழுவதும் அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி மாநிலம் முழுவதும் 265 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 80% அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. காரைக்காலில் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பணி நிரந்தரம் செய்யும் வரை தொடர் வேலை நிறுத்தம் என்றும், 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
-
Apr 09, 2025 18:54 IST
அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்பட முடியாது - டாஸ்மாக் வழக்கில் வாதம்
“அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதிக்காமல் தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்பட முடியாது” என்று அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த வழக்கில், டாஸ்மாக் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் 2வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. இ.டி சோதனையின் போது, வழக்கறிஞரை சந்திக்க கூட அனுமதிக்கவில்லை என்று டாஸ்மாக் தரப்பு வாதிட்டுள்ளது. சோதனையின் போது பெண் அதிகாரிகளை விசாரிக்க, இ.டி பெண் அதிகாரிகளை அழைத்து வரவில்லை என்று டாஸ்மாக் தரப்பு வாதிட்டுள்ளது. சோதனையின் போது, சில அதிகாரிகளை அமலாக்கத்துறை தூங்க விடாதது மனித உரிமை மீறல் என்று டாஸ்மாக் தரப்பு தெரிவித்தது.
-
Apr 09, 2025 18:39 IST
வடபழனி ஏ.வி.எம். மின் மயானத்தில் குமரி அனந்தன் உடல் தகனம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு, வடபழனி ஏ.வி.எம். மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
Apr 09, 2025 18:35 IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: உதயநிதி தீர்மானம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஜூலை 2023-ல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தீவிரமாக எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டது.
-
Apr 09, 2025 18:30 IST
குமரி அனந்தனின் உடலுக்கு அரசு மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
-
Apr 09, 2025 18:11 IST
அமித்ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப பொம்மலாட்டமாக ஆடும் அ.தி.மு.க - சண்முகம் கடும் தாக்கு
சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம்: “அமித்ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப ஆடும் பொம்மலாட்டமாக அதிமுக ஆகிவிட்டதைக் கண்டு அக்கட்சி தொண்டர்கள் கவலைப்படுவது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? தி.மு.க-வுடன் இணைந்துள்ள கட்சிகள் கரைந்துபோகும் என புலம்புகிறார். யாரும் தங்கள் அணியில் சேர வரவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடு அது. பா.ஜ.க-வின் பாசிச போக்குகளை எதிர்க்கும் தமிழக கட்சிகளின் ஒற்றுமை நாட்டுக்கே முன்மாதிரி” என்று கூறினார்.
-
Apr 09, 2025 17:54 IST
நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராக புதிய வழக்கு தொடரப்படும் - ஸ்டாலின் தீர்மானம்
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது. மற்றும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்ததற்கு எதிராக தேவையிருப்பின் புதிய வழக்கு தொடரப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்த வரைவுத் தீர்மானம் நிறைவேற்றினார்.
-
Apr 09, 2025 17:53 IST
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்த வசதி - தா.மோ. அன்பரசன்
மின்னணு வர்த்தக தளங்களில், கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை, பதிவேற்றம் செய்து அவர்களது உற்பத்திப்பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
-
Apr 09, 2025 17:41 IST
நீட் விலக்கு: அனைத்துக் கட்சி கூட்டம்; அ.தி.மு.க, பா.ஜ.க புறக்கணிப்பு
நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில், அதிமுக, பா.ஜ.க உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை; கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக, பா.ஜ.க ஏற்கெனவே அறிவித்திருந்தன.
-
Apr 09, 2025 17:35 IST
குமரி அனந்தனின் உடலுக்கு இறுதிச் சடங்கு
மறைந்த மூத்த அரசியல் தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றுவருகிறது.
-
Apr 09, 2025 17:22 IST
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம்: நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையாது - ஸ்டாலின்
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது
அக்குழு அளித்த பரிந்துரையை அடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினோம். ஆளுநர் தனது கடமையைச் செய்யாமல் நீண்ட காலம் கிடப்பில் போட்டு மசோதாவை திரும்ப அனுப்பினார்.
மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். பிரதமர், உள்துறை அமைச்சரிடம் இதற்கு ஒப்புதல் அளிக்க கோரினோம். நீண்ட போராட்டத்தின் விளைவாக ஆளுநர் அம்மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்தும் ஒப்புதல் கோரி பல முறை கடிதம் வாயிலாக, நேரில் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பேசி வலியுறுத்தப்பட்டது
ஆனால், இதனை ஏற்காமல் அம்மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்தது. இதனால், நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
Apr 09, 2025 16:17 IST
வைரலாகும் ஜிப்லி புகைப்படம்; காவல்துறை எச்சரிக்கை
இணையத்தில் வைரலாகும் ஜிப்லி புகைப்படங்கள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, "ஜிப்லி படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்கக் கூடிய சேனல்கள் மூலம் பெறும் போது, அவை சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 09, 2025 15:45 IST
ரூ. 1,000 கோடி முதலீட்டில் லேப்டாப் உற்பத்தி
தமிழ்நாட்டில் ரூ. 1,000 கோடி முதலீட்டில் லேப்டாப் உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 5000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கருதப்படுகிறது.
-
Apr 09, 2025 15:10 IST
ரூ. 365 கோடி மதிப்பீட்டில் தொழிற்பேட்டைகள் - தா.மோ. அன்பரசன் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 365 கோடிக்கு 621 ஏக்கரில் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை சட்டப்பேரவை அமர்வில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 09, 2025 14:41 IST
குமரி அனந்தன் உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு, அஞ்சலி செலுத்தி தமிழிசையை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
-
Apr 09, 2025 14:36 IST
சென்னை அண்ணா நகரில் நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சென்னை அண்ணாநகரில் 6வது நிழற்சாலையில், காரின் கதவை திறக்கும் போது, சைக்கிளில் வந்த நபர் கதவில் மோதி சாலையில் விழ, பின்னால் வந்த வேறு கார் தலையில் ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
-
Apr 09, 2025 14:15 IST
குமரி அனந்தன் மறைவு -பிரதமர் மோடி இரங்கல்
“தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிக்கு பெரும் முயற்சிகளை எடுத்தவர் குமரி அனந்தன்; சமூகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் தொண்டுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் குமரி அனந்தன் மறைவை அறிந்து வேதனையுற்றேன்; அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Apr 09, 2025 14:13 IST
உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகை
நாளை (ஏப்.10) இரவு 10.20 மணிக்கு சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. நாளை மறுநாள்(ஏப்.11) காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி முதல் பல்வேறு தரப்பினரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது; பாஜக மாநிலத் தலைவர் மாற்றம், கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கட்சியினருடன் ஆலோசிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 09, 2025 14:11 IST
குமரி அனந்தன் மறைவு - ராகுல் காந்தி இரங்கல்
தமிழ் மொழிக்காகவும், மக்களுக்காகவும், கலாசாரத்துக்காகவும் போராடிய காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவை அறிந்து வேதனையடைந்தேன் குமரி அனந்தனின் தொடர் முயற்சியே, நாடாளுமன்றத்தில் தமிழ் குரல்களை ஒலிக்க வைத்தது; காமராஜரின் பெருமைமிக்க சீடராக வாழ்ந்தவர் குமரி அனந்தன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
Apr 09, 2025 13:52 IST
செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்
தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர். அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜர்; அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஆஜர் ஆகியுள்ளார்.
-
Apr 09, 2025 13:46 IST
முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், ஒரகடத்தில் மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
-
Apr 09, 2025 13:29 IST
யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா
லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்துள்ளார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா மோகன் பாபு, விஷ்னு மஞ்சு, பிரபு தேவா என ‘கண்ணப்பா’ படக்குழு முழுவதுமாக யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளனர்; உ.பி.-யில் கண்ணப்பா படத்தை திரையிடுவது குறித்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 09, 2025 13:22 IST
15ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 15ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 09, 2025 13:11 IST
குமரி அனந்தன் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
-
Apr 09, 2025 12:38 IST
தரமணி சாலையில் போக்குவரத்து நெரிசல்
சென்னை, தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி. சுமார் 2 கி.மீ தூரத்திற்கு கடும்
வெயிலில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். -
Apr 09, 2025 12:37 IST
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? -ரஜினி விளக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ’ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
”பாட்ஷா திரைப்பட விழாவில் ஆர்.எம். வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டு வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியிருந்தேன். அமைச்சராக இருந்த அவரை வைத்துக் கொண்டு அதுபற்றி பேசியிருக்கக் கூடாது. ஆனால், அன்றைய சூழலில் தெளிவு இல்லாமல் பேசிவிட்டேன். இதனால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கிவிட்டார்.
இது தெரிந்தவுடன் என்னால் இப்படி நடந்துவிட்டதே என்று எண்ணி, தூங்கக்கூட முடியவில்லை. ஆனால், அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு என்னிடம் பேசினார். எனது மனதில் இது எப்போதும் இருந்தது.
ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடன் நான் பேசுவதாக ஆர்.எம்.வீ.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துவிட்டார். நீங்கள் சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார். இவர்தான் ரியல் கிங் மேக்கர்.” எனத் தெரிவித்தார்.
-
Apr 09, 2025 12:11 IST
14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி 3 பேர் படுகாயம்
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் ஷாம். இவர் காரை விட்டிற்கு முன் நிறுத்திவிட்டு தனது 14 வயது மகனிடம் சாவியை கொடுத்து கார் மீது கவர் போடுமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு குமரன் நகர் மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற ஆட்டோ மற்றும் நடந்து சென்ற முதியவர் உள்ளிட்ட இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி அவரது பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.
-
Apr 09, 2025 11:45 IST
நீட் எதிர்ப்பு சுயநல நாடகம் -அண்ணாமலை குற்றச்சாட்டு
கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Apr 09, 2025 11:12 IST
அனைத்துக் கட்சிக் கூட்டம் - பாஜக புறக்கணிப்பு
நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
Apr 09, 2025 11:10 IST
குமரி அனந்தன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக எம்.பி. கனிமொழி, விசிக தலைவர் திருமாவளன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது மகளான தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் கூறினர்.
-
Apr 09, 2025 10:57 IST
குமரி அனந்தன் மறைவுக்கு புதுச்சேரி அரசு இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
Apr 09, 2025 10:27 IST
ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.
-
Apr 09, 2025 10:01 IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் முருகன், டிடிவி தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
Apr 09, 2025 09:58 IST
குமரி அனந்தன் மறைவு - விஜய் இரங்கல்
நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றிய குமரி அனந்தன் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் என தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Apr 09, 2025 09:56 IST
தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 09, 2025 09:55 IST
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்..!
தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
-
Apr 09, 2025 09:55 IST
குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை!
மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 09, 2025 09:37 IST
வார இறுதி நாட்கள் - 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏப்.9, 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 10995 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக 1,680 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 09, 2025 09:35 IST
குமரி அனந்தன் மறைவு - வைரமுத்து இரங்கல்
இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிக்குள் ஒர் இலக்கியவாதி, இலக்கியவாதிக்குள் ஓர் அரசியல்வாதி, மறைந்த குமரி அனந்தனுக்கு வைரமுத்து இரங்கல்.
-
Apr 09, 2025 09:14 IST
ஓடும் ரயில் மீது ஏறி அட்டகாசம்
சென்னையில் ஆபத்தை உணராமல் ஓடும் ரயிலின் மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Apr 09, 2025 09:13 IST
பாஜகவில் இணைந்தார் கேதர் ஜாதவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில், கட்சியில் இணைந்த கேதர் ஜாதவ், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞர்களை சந்தித்து பாஜகவின் விளையாட்டுப் பிரிவை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 09, 2025 08:48 IST
குமரி அனந்தன் மறைவு ஸ்டாலின் இரங்கல்
தமிழின்பால் பெரும்பற்று கொண்டவர் இலக்கிய செல்வர் குமரி அனந்தன். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமையை நிலைநாட்டிய பெருமை குமரி அனந்தனையே சாரும்;காங்கிரஸ் பேரியக்கத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்ட குமரி அனந்தனின் மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
Apr 09, 2025 08:41 IST
தாம்பரம் மேம்பாலத்தின் மேல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி.
தாம்பரம் மேம்பாலத்தின் மேல் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தன. இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளத்தை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.