Chennai News Highlights: மாணவி தனியாக அமரவைக்கப்பட்ட விவகாரம்; பகுத்தறிவின்றி நடத்துவதா? - கனிமொழி கண்டனம்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கனிமொழி விமரசனம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

குட் பேட் அக்லி ரிலீஸ்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். அஜித்தின் முந்தைய படங்களில் பிரபலமான பஞ்ச் வசனங்கள், சமூக வலைத்தளங்களில் பிரபலமான அதிரடி வசனங்கள் என பல விஷயங்கள் இருப்பதால் குட் பேட் அக்லி மீது கொஞ்சம் கூடுதலாகவே எதிர்பார்ப்பு உள்ளது.

  • Apr 10, 2025 21:40 IST

    இந்தியா வந்த மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ஹுசைன்: திகார் சிறையில் அடைப்பு

    மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ஹுசைன் ராணா, இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இப்போது அவர் இந்தியாவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்படும் விசாரணையில், 2008-ம் ஆண்டு, 166 உயிர்களைக் கொன்ற கொடூரமான செயலின் பின்னணியில் பாகிஸ்தான் பங்கு குறித்து வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் திகார் சிறைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

     



  • Apr 10, 2025 18:44 IST

    எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஊழல் புகார் - ஆர்.எஸ்.பாரதி

    தி.மு.க.,வின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஊழல் புகார் தெரிவிப்பதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்



  • Advertisment
    Advertisements
  • Apr 10, 2025 18:42 IST

    நீட் தேர்வு விவகாரத்தில் 19-ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம் – இ.பி.எஸ் அறிக்கை

    நீட் தேர்வு விவகாரத்தில் 19ஆம் தேதி அ.தி.மு.க.,வினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்த உள்ளனர் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • Apr 10, 2025 18:23 IST

    ராமதாஸ் உடன் திலகபாமா நேரில் சந்தித்து பேச்சு

    பா.ம.க தலைவர் ராமதாஸ் அன்புமணியை பதவியிலிருந்து நீக்கிய முடிவு குறித்து விமர்சித்திருந்த நிலையில் அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா, தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை நேரில் சந்தித்து பேசி வருகிறார்



  • Apr 10, 2025 18:20 IST

    சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி

    சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். சீசனில் இருந்து விலகியுள்ளார். இதனால் தோனியே எஞ்சிய போட்டிகளில் அணியை வழிநடத்துவார் என தலைமை பயிற்சியாளர் ப்ளெமிங்க் அறிவித்துள்ளார்



  • Apr 10, 2025 18:09 IST

    அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு தங்க நெக்லஸ் காணிக்கை

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரக்கல் பதிக்கப்பட்ட தங்க நெக்லஸை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்தார்



  • Apr 10, 2025 17:56 IST

    பா.ஜ.க மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – அண்ணாமலை

    பா.ஜ.க மாநில தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், போட்டியில் நான் இல்லை. எனவே நாளை நான் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதில்லை என தற்போதைய தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



  • Apr 10, 2025 17:51 IST

    இணையத்தில் வெளியான அஜித்தின் 'குட் பேட் அக்லி'

    அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம், இன்று காலை திரைக்கு வந்த நிலையில் மாலைக்குள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சில இணைய தளங்களில் HD பிரிண்ட் வெளியாகி உள்ளதால் அஜித் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்



  • Apr 10, 2025 17:13 IST

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிப்பு

    இந்தியாவின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பாரதிய பாஷா விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும்.



  • Apr 10, 2025 17:00 IST

    பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் தமிழக பா.ஜ.க அறிவிப்பு

    தமிழக பா.ஜ.க தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (11.04.2025) முதல் தொடங்குகிறது; நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Apr 10, 2025 16:33 IST

    மக்கள் மரியாதை செலுத்த சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தை காலை 7:30 மணி முதல்  திறக்க ஐகோர்ட் உத்தரவு

    அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் மரியாதை செலுத்த சென்னையில் அம்பேத்கர் மணி மண்டபத்தை காலை 7:30 மணி முதல்  திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பேத்கர் பிறந்தநாலை அமைதியாகக் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Apr 10, 2025 16:15 IST

    ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு

    சென்னை மையிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். குருமூர்த்தியை அமைச்சர் அமித்ஷா நாளை சந்திப்பார் என கூறப்படும் நிலையில் அண்ணாமலையுடன் ஆலோசனை.



  • Apr 10, 2025 15:40 IST

    சென்னை வெதர் ரிப்போர்ட் 

     

    சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.



  • Apr 10, 2025 15:29 IST

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    "இன்று முதல் 12ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று மற்றும் நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இன்று இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்." என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Apr 10, 2025 15:23 IST

    அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10,000 வசூல்: யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி -அமைச்சர் மா. சு 

    அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10,000 வசூல் செய்வதாக ஆடியோ வெளியானது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், யாராக இருந்தாலும் இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 



  • Apr 10, 2025 15:07 IST

    கிரிண்டர் செயலியை தடை செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் பரிந்துரை

    கிரிண்டர் செயலியை தடை செய்ய கோரி தமிழக அரசுக்கு, சென்னை காவல் ஆணையர் அருண் பரிந்துரை செய்துள்ளார். கிரிண்டர் செயலி வழியாக  போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், ஆண்களுக்கான தன்பாலின ஈர்ப்பாளர்கள் செயலி 'கிரிண்டர்' இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

    கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தல் வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அருண் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான 10 வழக்கில், 5 வழக்குகளில் கிரிண்டர் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Apr 10, 2025 14:22 IST

    அமித்ஷா வருகைக்கான காரணம் - 'நாளை தெரியும்': அண்ணாமலை பேச்சு 

    "அமித்ஷா வருகைக்கான காரணம் நாளை தெரியும். மாநில தலைவர் தேர்தலுக்கும், அமித்ஷா வருகைக்கும் தொடர்பில்லை" என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 



  • Apr 10, 2025 13:45 IST

    அன்புமணியை நீக்கிய முடிவு தவறு - திலகபாமா

    பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது; இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே; ஆனால் இந்த முடிவு தவறு - பாமக பொருளாளர் திலகபாமா. பாமக தலைவர் பதவியை தானே எடுத்துக் கொள்வதாகவும், தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளதற்கு திலகபாமா எதிர்ப்பு



  • Apr 10, 2025 13:06 IST

    அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

    “பாஜகவினர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றதும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவும் நீட்டுக்கு எதிரான கூட்டத்தை புறக்கணித்து, தங்கள் எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளனர். ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை தெளிவாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு தொடக்கம். நீட் தேர்வு குறித்த வழக்கிலும் இது தொடரும்” என்று முதலமைச்சர் கூறியுள்ளார். 



  • Apr 10, 2025 12:50 IST

    "இந்த முடிவு தவறு... அன்புதானே எல்லாம்" - பாமக பொருளாளர் திலகபாமா

    "பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு; அன்புதானே எல்லாம்” என்று பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டது குறித்து அக்கட்சி பொருளாளர் திலகபாமா தனது கருத்தை தெரிவித்துள்ளார். 



  • Apr 10, 2025 12:49 IST

    கிரிண்டர் ஆப்-யை தடை செய்ய காவல்துறை கடிதம்

    கிரிண்டர் ஆப்பை தடை செய்ய மாநகர காவல் ஆணையர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கிரிண்டர் ஆப் மூலம் தொடர்ச்சியாக போதைப் பொருள் விற்பனை என்று தகவல் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் வழக்கில் கைதாகும் 10 நபர்களில் 5 நபர்கள் கிரிண்டர் ஆப் மூலம் அறிமுகமாகி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.



  • Apr 10, 2025 12:30 IST

    பிக்பாஸ் புழக் நடிகர் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன்

    ஓய்வுபெற்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன், அவரது உறவினர் லோகேஷுக்கு அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்தனர்



  • Apr 10, 2025 12:16 IST

    வீரபாண்டி ஆறுமுகம் மீதான வழக்கில் புதிய உத்தரவு

    மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து - வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த சேலம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஆணை வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.80 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு; வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவிகள், மகள், மகன், மருமகள்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். 



  • Apr 10, 2025 12:13 IST

    லொள்ளு சபா நடிகர் ஆண்டனி காலமானார்

    லொள்ளு சபா நகைச்சுவை நிகழ்ச்சியின் நடிகர் ஆண்டனி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.  நடிகர் சந்தானத்துடன் பல எபிசோடுகளில் ஒன்றாக நடித்தவர் இவர். கடந்த  சில ஆண்டுகளாக நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது மறைவு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



  • Apr 10, 2025 12:07 IST

    கைகளால் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் மரணம்

    செங்கல்பட்டு: கீழவளம் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மணிகண்டன் (29) என்ற இளைஞர் மரணம்; ஏரியில் நீர் குறைவாக இருந்த நிலையில், கடந்த 8ம் தேதி கைகளால் மீன்பிடித்துள்ளார் மணிகண்டன் அப்போது கையில் சிக்கிய ஒரு மீனை வாயில் வைத்தபடி, மற்றொரு மீனை கையில் பிடிக்க முற்பட்ட போது, வாயில் இருந்த மீன் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி மரணம்



  • Apr 10, 2025 11:47 IST

    ” ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது தி.மு.க”

    திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால் தான் திமுக தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Apr 10, 2025 10:57 IST

    பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்

    பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக தலைவராக அன்புமணி செயல்பட்டு வரும் நிலையில், தலைவர் பதவியை எடுத்துக் கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி இனி செயல்தலைவராக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளார்.



  • Apr 10, 2025 10:48 IST

    ”வட தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்”

    “வட தமிழ்நாட்டில் ஏப். 11,12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும். ராயலசீமா, உள் கர்நாடக பகுதிகளில் இருந்து வெப்ப அலை தமிழ்நாடு நோக்கி வர வாய்ப்பு” என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு செய்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்ங்களில் இரு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும்; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்; சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.



  • Apr 10, 2025 10:15 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு

    சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு, ஒரு சவரன் தங்கம் ரூ.68,480க்கும், ஒரு கிராம் ரூ.8,560க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்த நிலையில், இன்று ரூ.1200 உயர்ந்து ரூ.68,480க்கு விற்பனையாகிறது.



  • Apr 10, 2025 10:13 IST

    மகாவீரர் ஜெயந்தி - பிரதமர் மோடி ட்வீட்

    மகாவீரரின் சிந்தனைகளை நிறைவேற்ற மத்திய அரசு எப்போதும் பணியாற்றும் என்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Apr 10, 2025 10:12 IST

    அஜித்தின் ‘குட் பேட் அக்லி' வெளியானது

    அஜித் நடித்துள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6-ல் விடாமுயற்சி வெளியானது. 2 மாத இடைவெளியில் அஜித்திற்கு மேலும் ஒரு படம் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • Apr 10, 2025 09:52 IST

    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Apr 10, 2025 09:31 IST

    குட் பேட் அக்லி படம் பார்க்க வந்த ரசிகர்கள்

    குட் பேட் அக்லி படம் பார்க்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அர்ஜூன் தாஸ், தனது மகளுடன் ஷாலினி சென்னை ரோஹினி திரையரங்கிற்கு வருகை தந்தனர். 



  • Apr 10, 2025 09:28 IST

    கிப்லி பயன்பாடு - சைபர் கிரைம் எச்சரிக்கை!

    கிப்லிக்காக புகைப்படம் பதிவேற்றப்பட்டதால் அதை நீக்க எந்த உத்தரவாதமான வழியும் இல்லை. இதனால் பயன்பாட்டாளர்கள் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. பதிவேற்றப்படும் புகைப்படங்கள், டீப் ஃபேக்குகளில் பயன்படுத்தப்படும் அபாயம் நேரிட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே கவனத்துடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ சண்நேகம் இருந்தாலோ  1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கலாம்.



  • Apr 10, 2025 08:49 IST

    மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை

    புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேரை காதலிப்பதாக கூறி கடற்கரைக்கு அழைத்து சென்ற பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவிகள் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் மேலும் 12 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியானது. 



  • Apr 10, 2025 08:46 IST

    இன்று சென்னை வரும் அமித்ஷா

    சென்னைக்கு இன்று மாலை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக மூத்த நிர்வாகிகள், நாளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இ.பி.எஸ் அறிவுறுத்தலின்படி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே தங்கியுள்ளனர். இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு புறப்பட்டார்.



  • Apr 10, 2025 08:45 IST

    AK ஒரு ரெட் டிராகன்

    சென்னை ரோகினி திரையரங்கம் முன்பு திரண்டுள்ள அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர்.



  • Apr 10, 2025 08:28 IST

    நள்ளிரவில் நிறைவடைந்த 74 மணி நேர ED ரெய்டு

    அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை 74 மணி நேரம் நீடித்த நிலையில் நேற்று நள்ளிரவில் நிறைவடந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 



  • Apr 10, 2025 08:06 IST

    ஜான் ஜெபராஜ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

    போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் மத போதகர் ஜான் ஜெபராஜ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 தனிப்படையினர் முகாமிட்டு ஜான் ஜெபராஜை தேடி வரும் நிலையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 



  • Apr 10, 2025 08:03 IST

    அமித்ஷா சென்னை வருகை - அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்? தமிழக அரசியலில் பரபரப்பு

    தமிழகத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) இரவு சென்னை வருகிறார். அதன்பிறகு நாளை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 



  • Apr 10, 2025 07:32 IST

    மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

    ஜனநாயக நிறுவனங்களை கைப்பற்றி நாட்டின் செல்வத்தை அதானி அம்பானிக்கு தாரை வார்ப்பதே பாஜகவின் நோக்கம் என்று கூறப்படுகிறது. வக்ஃபு மசோதா அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.



  • Apr 10, 2025 07:28 IST

    பழைய கார்களுக்கு எகிறும் மவுசு

    2024-25 நிதியாண்டில் பெங்களூரு மற்றும் டெல்லியில் பழைய கார்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதாக தனியார் ஆன்லைன் கார் விற்பனை இணையதளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 



  • Apr 10, 2025 07:25 IST

    மழை நிலவரம்

    நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று (ஏப்.10) கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Apr 10, 2025 07:25 IST

    90 நாட்களுக்கு பதிலுக்கு பதில் வரி நிறுத்தி வைப்பு

    இந்தியா உட்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீதான ‘பதிலுக்கு பதில்' வரியை 90 நாட்களுக்கு டிரம்ப் நிறுத்தி வைத்தார். சீனாவுக்கு மட்டும் 125 சதவீதமாக வரி அதிகரித்துள்ளது.



  • Apr 10, 2025 07:22 IST

    பெங்களூரு - டெல்லி இன்று மோதல்!

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ்ஸ் பெங்களூரு- டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • Apr 10, 2025 07:20 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Apr 10, 2025 07:20 IST

    குட் பேட் அக்லி ரிலீஸ்

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகிறது. நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். அஜித்தின் முந்தைய படங்களில் பிரபலமான பஞ்ச் வசனங்கள், சமூக வலைத்தளங்களில் பிரபலமான அதிரடி வசனங்கள் என பல விஷயங்கள் இருப்பதால் குட் பேட் அக்லி மீது கொஞ்சம் கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருக்கிறது.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: