Chennai News Updates: கச்சத்தீவு, நீட் விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது -நயினார் நகேந்திரன்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayiinar nagendran

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Apr 13, 2025 21:14 IST

    ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 16-ல் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

    உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 16-இல் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • Apr 13, 2025 21:09 IST

    ‘சமத்துவ உணர்வுடன் தேசத்தை கட்டியெழுப்புவோம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: “அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்று சமூக நல்லிணக்கம், சமத்துவ உணர்வுடன் தேசத்தை கட்டியெழுப்புவோம்; தனக்கென தனித்துவ அடையாளத்தை உருவாக்கி உலகம் முழுவதும் மரியாதையை பெற்றவர் அம்பேத்கர். பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் மரியாதையை பெற்றவர் அம்பேத்கர். பல்வேறு துறைகளில் அம்பேத்கரின் பங்களிப்பு தேசத்தைக் கட்டியெழுப்ப தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்று கூறியுள்ளார்.



  • Advertisment
  • Apr 13, 2025 20:15 IST

    தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் பெரம்பலூர், திருச்சி,  கோவை, விருதுநகர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Apr 13, 2025 19:34 IST

    ‘கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என ஆசை காட்டி தி.மு.க. அணியை உடைக்க முயன்றனர்’ - திருமாவளவன் 

    கூடுதலாக தொகுதி தருகிறோம்; ஆட்சியில் பங்கு தருகிறோம்; தி.மு.க அணியை விட்டு வெளியே வாருங்கள் என ஆசைக் காட்டினார்கள்; அசைக்க முடியவில்லை  என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 13, 2025 19:28 IST

    தமிழ் புத்தாண்டு: தமிழ் கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டம் - ஆளுநர் வாழ்த்து

    “உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு வளமான தமிழ் கலாசாரம், பாரம்பரியம், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல், ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்” என்று ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Apr 13, 2025 16:52 IST

    தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன் மரணம்

    தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கலைப்புலி ஜி சேகரன் 'யார்?', 'ஜமீன் கோட்டை' போன்ற படங்களை தயாரித்துள்ளார், மேலும் சில படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.



  • Apr 13, 2025 16:49 IST

    என்னுடைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை - ராமதாஸ்

    தன்னுடைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதில் உறுதியாக உள்ளதாக தன்னை பார்க்க வந்தவர்களிடம் ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ம.க.,வின் தலைவராக நானே செயல்படுவேன் என முன்னதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்



  • Apr 13, 2025 16:22 IST

    தமிழகத்திலும் பல கட்சிகள் காணாமல் போகும் - சீமான்

    மகாராஷ்டிராவில் சிவசேனா என்ற கட்சி எப்படி காணாமல் போனதோ, தமிழகத்திலும் பல கட்சிகள் காணாமல் போகும். நம் மீதுள்ள வெறுப்பில் சீமானுக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என நினைத்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்



  • Apr 13, 2025 15:49 IST

    வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

    தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,



  • Apr 13, 2025 15:48 IST

    நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

    சென்னை மதுரவாயிலில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏ மக்களுக்கு தர்பூசணி,  இளநீர் வழங்கினார்.



  • Apr 13, 2025 15:45 IST

    பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 5 பேர் பலி

    ஆந்திரா, அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட  தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு



  • Apr 13, 2025 15:17 IST

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: பிரியாணி பரிமாறிய மேயர் பிரியா

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர் பிரியா.1,000 பேருக்கு பிரியாணி பரிமாறினார்.



  • Apr 13, 2025 14:45 IST

    அன்புமணியுடன் முகுந்தன் பரசுராமன் சந்திப்பு

    சென்னையில் அன்புமணியை சந்தித்து முகுந்தன் பரசுராமன் சமாதானம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்த காரணத்தால் தான் முதலில் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது



  • Apr 13, 2025 14:43 IST

    தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Apr 13, 2025 14:18 IST

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

    இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Apr 13, 2025 13:51 IST

    நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை

    சென்னையில் பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.அக்கரையில் உள்ள அன்புமணி இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 



  • Apr 13, 2025 13:36 IST

    பொருந்தாக் கூட்டணியா? - நயினார் நாகேந்திரன் பதில்

    நம்மைப் பார்த்து பொருந்தாக் கூட்டணி என்கிறார்கள் சில திமுக ஏஜெண்ட்டுகள்; இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான் இந்த கூட்டணிதான் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது; இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 



  • Apr 13, 2025 13:06 IST

    செல்வப்பெருந்தகை பிறந்தநாளையொட்டி போஸ்டர் ஒட்டிய காங். நிர்வாகி விளக்கம் தர உத்தரவு

    செல்வப்பெருந்தகை பிறந்தநாளையொட்டி போஸ்டர் ஒட்டிய காங். நிர்வாகி விளக்கம் தர உத்தரவு.  உங்கள் அநாகரிகமான செயல் கட்சியின் கட்டுப்பாடு, கண்ணியத்தை மீறியுள்ளது என்று கூறியுள்ளார். காங். மாநில செயலாளர் ஏவிஎம் ஷெரீப் 15 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக விளக்கம் தர செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். 



  • Apr 13, 2025 12:32 IST

    சித்திரையை மகிழ்வோடு கொண்டாடுவோம் - வைகோ

    உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். மலரும் சித்திரை மாதத்தை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



  • Apr 13, 2025 12:28 IST

    காங். போஸ்டர் - செல்வப்பெருந்தகை கண்டனம்

    "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என காங். தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. காங். மாநில செயலாளர் ஷெரீப்-க்கு, செல்வப்பெருந்தகை கடும் கண்டனம். "ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு உள்ள போஸ்டர்" என்று தெரிவித்துள்ளார். 



  • Apr 13, 2025 11:37 IST

    ராமதாஸ் - சைதை துரைசாமி இடையே சந்திப்பு

    தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் சைதை துரைசாமி இடையே சந்திப்பு நடைபெற்றது. இதில், பா.ம.க-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Apr 13, 2025 11:08 IST

    கூட்டணியை விமர்சித்தால் ஆர்ப்பாட்டம் - ஆர்.பி. உதயகுமார் 

    அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியை விமர்சித்தால் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Apr 13, 2025 10:27 IST

    அண்ணாமலை டெல்லி பயணம்

    பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று டெல்லிக்கு செல்கிறார். தற்போது, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் டெல்லிக்கு செல்கிறார்.



  • Apr 13, 2025 10:15 IST

    நயினார் நாகேந்திரனுக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து

    தமிழ்நாடு பா.ஜ.க-வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.



  • Apr 13, 2025 09:30 IST

    காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

    15ம் தேதி மீன்பிடித்தடைக்காலம் தொடங்கும் நிலையில் மீன்கள் விலை அதிகரித்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1000, சங்கரா ரூ.600, வவ்வால் கிலோ ரூ.650க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Apr 13, 2025 09:11 IST

    தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் - தமிழிசை

    குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும், தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும். மோடி என்ற நரேந்திரனின் கனவை இந்த நாகேந்திரன் நிறைவு படுத்துவார். தாமரை மலர நயினார் நாகேந்திரன் அடித்தளம் அமைப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Apr 13, 2025 09:07 IST

    மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

    கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Apr 13, 2025 09:06 IST

    ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் - கி.வீரமணி

    மாணவர்களை ஜெய் ராம் சொல்ல வைத்த ஆளுநர் ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மாணவர்களிடம் மதவெறியைத் தூண்டுவதை உயர்கல்வித்துறை அனுமதிக்கவே கூடாது. மாணவர்களும் பொதுமக்களும் ஆளுநருக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும் என வீரமணி தெரிவித்துள்ளார். 



  • Apr 13, 2025 08:12 IST

    இந்தியா வரவுள்ள அமெரிக்க துணை அதிபர்

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் பாதுகாப்புத்துறை ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோர் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 21 முதல் 25-ம் தேதிக்குள் இந்தியா வரும் இருவரும், வர்த்தகம் மற்றும் இருநாட்டு உறவு குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.



  • Apr 13, 2025 08:09 IST

    குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு- சீராய்வு மனு?

    ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பித்தற்கு எதிராக சீராய்வு மனு? அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கில் குடியரசுத் தலைவருக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிக்கும் போது அவரின் வாதத்தை கேட்கவில்லை. குடியரசுத் தலைவர் பிரதிவாதியாக இல்லாத வழக்கில் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு உச்சநீதிமன்றம் விதித்திருந்தது.



  • Apr 13, 2025 07:28 IST

    அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    "பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்" என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ராமதாஸ் வழிகாட்டுதலுடன் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.



  • Apr 13, 2025 07:27 IST

    மின்னணு உகரணங்களுக்கு பரஸ்பர வரி விலக்கு - அமெரிக்கா அதிரடி!

    ஸ்மார்ட்போன், கணினி, செமி கண்டக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு உபகரணங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பில் இருந்து முழு விலக்கு அமெரிக்கா அளித்துள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பால் சீனாவில் இருந்து உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன. குறிப்பான ஆசியாவில் உள்ள சிப் தயாரிப்பாளர்களான தைவான், தென்கொரிய செமி கண்டண்டர் நிறுவனங்கள் மகிழ்ச்சி. இதனால் ஆப்பிள் ஐபோன்கள் விலை ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது. ஐபோன்களைத் தயாரித்தல், ஒன்றிணைத்தல் பணி 90% சீனாவில்தான் நடைபெறுகிறது.



  • Apr 13, 2025 07:22 IST

    குருத்தோலை ஞாயிறு

    கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் குருத்தோலை ஞாயிறு வழிபாடு இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பேராலயத்தில் ஏராளமானோர் திரண்டு வழிபட்டன்னர். 



  • Apr 13, 2025 07:19 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • Apr 13, 2025 07:18 IST

    திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க!

    மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே '94987 94987' என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: