Chennai News Highlights: ஆளுநரால் பீகாரை கண்டித்துப் பேச முடியுமா? - அமைச்சர் கோவி செழியன்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரவி கோவி செழியன்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மீன்பிடி தடைக்காலம் அமல்: இந்த ஆண்டுக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள்.

  • Apr 14, 2025 21:28 IST

    அண்ணாமலை எங்கள் சொத்து; அமித்ஷா நாள் குறித்துவிட்டார் - நயினார் நாகேந்திரன்

    ஒரே நாடு வெள்ளிமலர் வெளியீட்டு விழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: “அண்ணாமலையை யாராலும் வெளியேற்ற முடியாது; அவர் எங்கள் சொத்து. அமித்ஷா நாள் குறித்துவிட்டார். வரக்கூடிய ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாக அமையும்.” என்று கூறினார்.



  • Apr 14, 2025 21:24 IST

    என்னுடைய இனிய நண்பர் விஜயகாந்த் குறிப்பிடத்தக்க மனிதர் - மோடி

    தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப்  போல  கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று.” என்று குறிப்பிட்டுள்ளார். 

    இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் குறிப்பிடத்தக்கவர்! அவரும் நானும் பல ஆண்டுகளாக மிகவும் நெருக்கமாகப் பழகி, ஒன்றாக வேலை செய்தோம். தலைமுறை தலைமுறையாக மக்கள் அவரை சமூகத்திற்கு அவர் செய்த நன்மைக்காக நினைவு கூர்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 14, 2025 21:05 IST

    எஸ்சி பட்டியலில் உட்பிரிவை உருவாக்கி அமல்படுத்தியது தெலங்கானா - ரேவந்த் ரெட்டி

    பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரில் மிகவும் பின்தங்கிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வதற்காக, இந்த குழுக்களுக்குள் மேலும் உட்பிரிவுகளை உருவாக்குவதை அனுமதித்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்த சில மாதங்களுக்குப் பிறகு தெலங்கான மாநிஅல் அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

    தெலங்கானா எஸ்சி பட்டியலில் உட்பிரிவை உருவாக்குவது குறித்து முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில், “எஸ்சி பட்டியலில் உட்பிரிவு என்ற புரட்சிகரமான முடிவை அமல்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் தெலங்கானா...” என்று பதிவிட்டுள்ளார்.



  • Apr 14, 2025 20:35 IST

    தென்னிந்திய அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு

    FEFSI யூனியன் உடன் சுமூக தீர்வு காணும் வரை சென்னையில் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்னிந்திய அவுட்டோர் யூனிட் ஒனர்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.

    நாளை முதல் சென்னையில் நடைபெறும் திரைப்படங்கள், சீரியல்கள், விளம்பரம் மற்றும் இணையத் தொடர் உள்ளிட்ட அனைத்துப் படப்பிடிப்புகளுக்கும் தென்னிந்திய அவுட்டோர் யூனிட் செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர்.

    சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் நடைபெறும் படப்பிடிப்பு வழக்கம்போல் நடைபெறும். அதுவும் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாக அங்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளனர் என்று சங்கத்தின் செயல் தலைவர் மார்க்கஸ் அறிவித்துள்ளார்.



  • Apr 14, 2025 20:28 IST

    தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் விருதுநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே போல, நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்னாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



  • Apr 14, 2025 19:03 IST

    போளூரில் மின் தடை தொடர்பாக புகார் அளித்தவருக்கு மிரட்டல்; மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

    திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மின்தடை தொடர்பாக புகார் அளித்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டும் தொனியில் பேசிய மின்வாரிய ஊழியர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் மின்வாரிய ஊழியர் முருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.



  • Apr 14, 2025 18:59 IST

    சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில்தான் தலித்துகள் தாக்கப்படுகிறர்கள் - ஆளுநர் ரவி விமர்சனம்

    ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு: “அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல; பாரத தாயின் மகன்; மிகவும் உயர்ந்த, ஆளுமை நிறைந்த மனிதர் அம்பேத்கர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர்; கடுமையான உழைப்பால் வளர்ந்தவர்.” என்று கூறினார். 

    சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள்; கள்ளக்குறிச்சியில் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய கள்ளச்சாராய மாஃபியாக்களால் பரிதாபமாக தலித் மக்கள் உயிரிழந்தனர். வேங்கைவயலில் மனிதக் கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது.” என்று கூறினார்.



  • Apr 14, 2025 18:53 IST

    ஏப். 20-ல் ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் - வைகோ அறிவிப்பு

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ: “ம.தி.மு.க நிர்வாகக் குழு கூட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற உள்ளது. சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தை தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன; கட்சி கட்டுப்பாட்டிற்கு எதிராகவே இத்தகைய கூட்டங்கள் நடத்துவது தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று அறிவித்துள்ளார்.



  • Apr 14, 2025 18:43 IST

    சென்னையில் காவலர் மீது தி.மு.க-வினர் தாக்குதல் - ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்? அண்ணாமலை கேள்வி 

    சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த காவலர் மீது மது போதையில் இருந்த தி.மு.க-வினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Apr 14, 2025 17:58 IST

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

    மேற்கு வங்கத்தில் வக்பு சட்ட மசோதாவிற்கு எதிராக நடந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தின் போது மூன்று பேர் உயிரிழந்த நிலையில், விரைவாக நிலைமை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • Apr 14, 2025 16:42 IST

    மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை - நயினார் நாகேந்திரன்

    அ.தி.மு.க-வை மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, "அமலாக்கத்துறை என்பது தனி அமைப்பு. தவறாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் வீட்டில் ஆய்வு நடத்தப்படும். அமலாக்கத்துறையை கொண்டு அ.தி.மு.க-வை மிரட்டி கூட்டணியில் சேர்த்ததாக கூறுவது தவறு" என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Apr 14, 2025 15:48 IST

    என் பயணம் என் கால்களை நம்பித்தான்: சீமான் கருத்து

    தற்காலிக தோல்விக்காக, நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை எங்கள் பயணம், எங்கள் கால்களை நம்பியே, அடுத்தவர் தோள்களை நம்பி பயணிக்கவில்லை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



  • Apr 14, 2025 15:43 IST

    "18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 18ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை  விட  அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,



  • Apr 14, 2025 15:41 IST

    15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது: டெல்லி அரசு திட்டம்

    டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை நிறுத்தும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் இதனை குறைக்க, இம்மாத இறுதியில் திட்டத்தை செயல்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



  • Apr 14, 2025 15:39 IST

     புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 14, 2025 15:38 IST

    கேப்டன் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்பார் மோடி: பிரேமலதா

    பிரதமர் மோடிக்கும் கேப்டன்- விஜயகாந்துக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டிய ஒன்று. கேப்டன் விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என பிரதமர் மோடி அன்போடு அழைப்பார். இருவருடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும், அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று என்று  எக்ஸ் தளத்தில் பிரேமலதா பதிவிட்டுள்ளார்.



  • Apr 14, 2025 14:48 IST

    ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது: நயினார் நாகேந்திரன்

    மீண்டும் அதிமுக பா.ஜ.க கூட்டணி இணைந்துள்ள நிலையில், தேர்தல் முடிந்த பிறகு, கூட்டணி ஆட்சி இருக்குமா என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது என கூறியுள்ளார். 



  • Apr 14, 2025 14:15 IST

    பாஜகவின் மிரட்டல்களுக்கு பயந்து இபிஎஸ் கூட்டணி: முத்தரசன் விமர்சனம்

    அதிமுக - பாஜக கூட்டணியை விமர்சனம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பாஜகவின் மிரட்டல்களுக்கு பயந்து இபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.



  • Apr 14, 2025 13:45 IST

    அனைவர் வீடுகளிலும் அம்பேத்கர் படம்: துரைமுருகன்

    அனைவரின் வீடுகளிலும் சாதி வித்தியாசமின்றி அம்பேத்கர் படத்தை வைக்க வேண்டும் அம்பேத்கர் என்ற மாமனிதர் ஒரு சாதிக்குரியவர் அல்ல; ஒரு சமூகத்திற்காக பாடுபட்டவரல்ல; ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டவர் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 



  • Apr 14, 2025 13:17 IST

    ``பாமகவின் கொள்கை ஆசான்..''

    அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி பெருங்குடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அன்புமணி ராமதாஸ்



  • Apr 14, 2025 13:12 IST

    அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போஸ்டர்கள்!

    சைவ, வைணவ சமயங்களை ஆபாசமாக விமர்சித்த பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கிட வேண்டும் என திருக்கோவிலூர் பாஜக சார்பில் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 



  • Apr 14, 2025 12:55 IST

    மதுபோதையில் சிகரெட் கேட்டு தகராறு

    சிகரெட் தராததால் வாகனங்களை தள்ளிவிட்ட தமிழ் இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கிய வடமாநிலத்தவர்கள். ரத்த காயங்களுடன் தப்பி ஓடிய தமிழ் இளைஞர்கள்



  • Apr 14, 2025 12:40 IST

    பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது - உதயநிதி ஸ்டாலின்

    “நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி ஒரு நூற்றாண்டாகவே நடந்து வருகிறது; சமூகநீதி இருக்கும் வரை நம்மை யாரும் பிரித்தாள முடியாது” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை, உரிமைகளை ஆளுநர்களால் பறிக்க முடியாது; நீட் தேர்வை ஒழிப்பதற்காகவே சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது அரசு என்று சமத்துவ நாள் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 



  • Apr 14, 2025 12:31 IST

    15 நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன்: செல்லூர் ராஜூ

    அதிமுக, பாஜக கூட்டணி குறித்து 15 நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன்; 15 நாட்கள் கழித்து நிச்சயமாக, உறுதியாக கருத்து கூறுவேன் தமிழ்ப் புத்தாண்டு அதிமுகவிற்கான ஆண்டு; நிச்சயமாக ஆட்சியில் அமரப் போகிறோம் என்று  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 



  • Apr 14, 2025 12:18 IST

    வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்: முதல்வர்

    தீண்டாமையை எதிர்த்து வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்; சமத்துவத்தை நோக்கி நாம் எல்லோரும் நகர வேண்டும். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு; திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Apr 14, 2025 11:39 IST

    ”பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது இல்லை”

    பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார்; இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. பதவிக்காக யார் வாசல் கதவையும் தட்டியது கிடையாது; பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என் குடும்பம்; உயிர் மூச்சு என்றால் அது அதிமுக தான் என்றார்.



  • Apr 14, 2025 11:21 IST

    அம்பேத்கர் சிலைக்கு ராமதாஸ் மலர்தூவி மரியாதை

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழாவையொட்டி தைலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாமக தலைவர் ராமதாஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

     



  • Apr 14, 2025 11:19 IST

    குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

    குஜராத் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடத்துவதற்கு தயாராக இருந்த ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் நடந்த சோதனையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது முறியடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 14, 2025 11:13 IST

    சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



  • Apr 14, 2025 10:36 IST

    ரூ.44.50 கோடி மதிப்பில் மாணவர் விடுதி திறப்பு

    சைதாப்பேட்டையில் ரூ.44.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 10 தளங்களுடன் நவீன வசதிகள் அடங்கிய இந்த விடுதியில் 484 மாணவர்கள் தங்கலாம்.



  • Apr 14, 2025 10:18 IST

    அம்பேத்கர் சிலைக்கு இ.பி.எஸ் மரியாதை

    அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



  • Apr 14, 2025 10:15 IST

    பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி புகார்

    அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சுக்கு எதிராக வழக்குப்பதிய தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

     



  • Apr 14, 2025 10:13 IST

    இன்று முதல் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசும்

    தமிழகத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்பதால் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Apr 14, 2025 10:11 IST

    அம்பேத்கர் படத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி துணை முதல்வர் உதயநிதி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



  • Apr 14, 2025 10:10 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.70,040-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



  • Apr 14, 2025 10:08 IST

    டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

    சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



  • Apr 14, 2025 09:41 IST

    முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம்

    தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 



  • Apr 14, 2025 09:39 IST

    மகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

     "தமிழ் புத்தாண்டு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்" என்றும்  அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Apr 14, 2025 09:13 IST

    அம்பேத்கர் ஜெயந்தி - அண்ணாமலை எக்ஸ் பதிவு

    "சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைக்கப் பாடுபட்ட அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுப்போம்" "போலி சமூக நீதி பேசி, பல ஆண்டு காலம் மக்களை ஏமாற்றி வரும் வேடதாரிகளை அம்பலப்படுத்துவோம்" என அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Apr 14, 2025 09:12 IST

    வியாபாரி மெஹுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் கைது

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்து 2018ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சி பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



  • Apr 14, 2025 09:11 IST

    உலகத் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து: கமல்

    உலக தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். உலகெங்கிலும் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு என கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • Apr 14, 2025 09:10 IST

    அம்பேத்கர் சிலைக்கு திரவுபதி முர்மு மரியாதை

    நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.



  • Apr 14, 2025 08:35 IST

    சமத்துவ நாள் கொண்டாட்டம்..

    அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.



  • Apr 14, 2025 08:33 IST

    அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

    அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.



  • Apr 14, 2025 08:32 IST

    மியான்மரின் மீண்டும் நிலநடுக்கம்!

    மியான்மரின் நள்ளிரவு 1.32 மணிக்கு மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2000 பேர் உயிரிந்த நிலையில் அவ்வப்போது தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.



  • Apr 14, 2025 08:31 IST

    மேட்டூர் அணை நீர்வரத்து

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 424 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையின் நீர் மட்டம் 107.53 அடியாகவும், நீர் இருப்பு 74.945 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 



  • Apr 14, 2025 08:30 IST

    அம்பேத்கரின் பெரும் புகழ் போற்றுவோம்: சீமான்

    புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் புகழ் போற்றுவோம். சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதை விட செத்தொழிவதேமேல் என போதித்தவர் அம்பேத்கர் என்று கூறி சீமான் புகழ்ந்துள்ளார். 



  • Apr 14, 2025 08:05 IST

    தமிழர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து..

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய உத்வேகம் பிறக்கட்டும் என தமிழக தலைவர்கள் வாழ்த்தியுள்ளனர்.



  • Apr 14, 2025 08:02 IST

    வானிலை மையல் - 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாமக்கல், கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Apr 14, 2025 08:01 IST

    சிறப்பு பேருந்துகளில் பயணம்

    தொடர் விடுமுறையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் ஏப்.11 முதல் இன்று (ஏப்.14) அதிகாலை 2 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். 



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: