/indian-express-tamil/media/media_files/lJBxiE5wNRka9L91bh55.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 15, 2025 21:42 IST
பாலியல் வன்கொடுமைக்கு வழக்கு: அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண், ‘அவரே பிரச்னையை வரவழைத்துக்கொண்டார்’ எனக்கூறியதோடு, குற்றம்சாட்டப்பட்டவரை ஜாமினில் விடுவித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
Apr 15, 2025 21:08 IST
மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது -சென்னை மாநகராட்சி ஆணையர்!
மெரினா கடற்கரை செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
Apr 15, 2025 21:04 IST
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: நாளை சட்ட முன்வடிவம் தாக்கல் - ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட முன்வடிவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப்.16) தாக்கல் செய்கிறார்.
-
Apr 15, 2025 20:15 IST
“தடைக்கற்கள் உண்டென்றாலும், தகர்த்தெறிய திராவிட மாடலின் தடந்தோள்கள் உண்டு” - ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில உதவித்தொகை பெற்ற மாணவர்களின் நெகிழ்ச்சியை பகிர்ந்துகொனண் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தடைக்கற்கள் உண்டென்றாலும், தகர்த்தெறிய திராவிட மாடலின் தடந்தோள்கள் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 15, 2025 19:16 IST
தமிழகத்தில் எதுவும் சரியாக நடக்கவில்லை - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் எதுவும் சரியாக நடக்கவில்லை; பலரும் கஞ்சா பயன்படுத்துகின்றனர்; இதை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடத்துவதைக் கட்டுப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.
-
Apr 15, 2025 19:09 IST
சட்ட விரோத பண மோசடி வழக்கு - சோனியா, ராகுல் காந்தி மீது இ.டி குற்றப்பத்திரிகை தாக்கல்!
நேஷனல் ஹெரால்டு பணமோசடி விசாரணை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
-
Apr 15, 2025 18:28 IST
சாட்டை வலையொளிக்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை - சீமான்
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான சாட்டை துரைமுருகனுக்கு எதிராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த நிர்வாகிகள் அணி அணியாக வெளியேற நிலையில் சீமானுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தவர் சாட்டை துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Apr 15, 2025 17:49 IST
தமிழகத்தில் 1.57 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் மா.சு தகவல்
தமிழகத்தில் 1,57,908 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பதாகவும், கடந்த 6 மாதங்களில் 25,000 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
Apr 15, 2025 17:39 IST
டாஸ்மாக் வழக்கு - அமலாக்கத்துறைக்கு உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 15, 2025 17:25 IST
ஏப்ரல் 17-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்
ஏப்ரல் 17-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
-
Apr 15, 2025 17:01 IST
ஆவடி இரட்டை கொலை வழக்கு - குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
ஆவடி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2018-ல், ஆவடியைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மனைவி ஸ்ரீமதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக வீட்டில் பணியாற்றிய சுரேஷ்குமார், அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
-
Apr 15, 2025 16:33 IST
கள்ளக்குறிச்சி வழக்கில் 3 மாதங்களில் விசாரணை முடியும் – சி.பி.ஐ
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் 3 மாதங்களில் விசாரணை முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது
-
Apr 15, 2025 16:15 IST
மாநில உரிமைகள் குழு - மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
மாநில உரிமைகளைக் காத்திட அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Apr 15, 2025 15:50 IST
மாநில உரிமைகள் நாள் தொடர்பாக வி.சி.க கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை, மாநில உரிமைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் வி.சி.க எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான கோரிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்தார்.
-
Apr 15, 2025 15:38 IST
ஒரே நேரத்தில் 3 ஏர் இந்தியா விமானங்களில் இயந்திரக் கோளாறு
ஒரே நேரத்தில் மூன்று ஏர் இந்தியா விமானங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். டெல்லி, மும்பை செல்லும் விமானங்களிலும், சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி வரும் விமானத்திலும் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
-
Apr 15, 2025 15:34 IST
இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை பேச்சு - மோடிக்கு எதிர்க்கட்சிகள் பதிலடி
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர். முன்னதாக "வக்பு சொத்துகளை நேர்மையாக பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ தேவை இருக்காது" என்று மோடி கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டின் நலனுக்காக தனது சித்தாந்தத்தை பயன்படுத்தி இருந்தால், மோடி தனது சிறு வயதில் டீ விற்றிருக்க மாட்டார்" என்று ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஓவைசி விமர்சித்துள்ளார்.
-
Apr 15, 2025 15:16 IST
அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Apr 15, 2025 15:02 IST
ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள்
தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ் ராஜன் மற்றும் புதிய உறுப்பினர்கள், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
Apr 15, 2025 14:24 IST
ஆளுநரை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்
பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியை, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க இருக்கிறார். முன்னதாக, பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
Apr 15, 2025 14:01 IST
“சிறு சலசலப்பு இருந்தது... இப்போது சரியாகிவிட்டது” - பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி
"மாமல்லபுரத்தில் மே 11ம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வர்; இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமுகம் ஏற்படும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது; அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்" என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
-
Apr 15, 2025 13:37 IST
பைக் ஓட்டி விபத்து - கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன்
சென்னை சாலிகிராமத்தில் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு. விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Apr 15, 2025 13:34 IST
ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 15, 2025 13:16 IST
தேசிய தலைவராக நயினார் முயற்சி - தங்கம் தென்னரசு
பாஜக மாநில தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் தேசிய தலைவராக முயற்சிக்கிறார் நயினார் நாகேந்திரன். பன்மொழி புலவராகி பல மொழிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். பேரவையில் நயினார் நாகேந்திரன் மலையாளம், தெலுங்கில் பேசியது குறித்து தங்கம் தென்னரசு இவ்வாறு கூறியுள்ளார்.
-
Apr 15, 2025 13:14 IST
அஜித் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்
அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான சாரல செய்தியாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் கொடுத்துள்ளார். தனது பட பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார். "ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி' பாடல்கள் யன்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த நோடீஸ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Apr 15, 2025 12:44 IST
அதிமுக பேசவில்லை - முதல்வர் வருத்தம்
"பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மாநில சுயாட்சி தொடர்பான எனது அறிவிப்பின் மீது பேசவில்லை, அதிமுக கலந்து கொள்ளாமல் சென்றது வருத்தம் அளிக்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வார்களே இது தான் கொள்கையா?" என்று பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது கூறியுள்ளார்.
-
Apr 15, 2025 12:30 IST
நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து
பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-
Apr 15, 2025 12:28 IST
மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு
அதிமுக செயற்குழு கூட்டம் மே 2ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
-
Apr 15, 2025 12:12 IST
நீட் மூலம் பொதுக்கல்வி முறை சிதைப்பு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வி முறையை சிதைப்பதை நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம்.நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது; நீட் தேர்வால் பல மாணவர்களின் கனவுகள் சிதைந்து போயிருக்கின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Apr 15, 2025 11:30 IST
”மாநில உரிமைகள் மீட்டெடுக்க உயர்நிலைக் குழு”
மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, மாநில சுயாட்சி தொடர்பாக சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததாவது: ”மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யப்படும். இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளில் அளிக்கும். மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். மாநில உரிமைகளை மீட்டெடுப்பது குறித்த பரிந்துரைகளை இக்குழு வழங்கும்.
-
Apr 15, 2025 11:29 IST
சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே அ.திமு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
Apr 15, 2025 11:19 IST
”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் 2-ம் கட்டத்திட்டம் நிறைவேற்றப்படும்”
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தை நிறைவேற்ற அரசு ஆவண செய்யுமா என்று எம்.எல்.ஏ. ஜிகே மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
இந்த திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெயிக்கா நிறுவனம் இந்த திட்டத்திற்கு ஜூன் 25-ம் தேதிக்குள் ஒப்புதல் அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2-ம் கட்ட திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றார்.
-
Apr 15, 2025 11:10 IST
"அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்"
மாநில உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்படுகிறது, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என வலியுறுத்தி வருகிறது தமிழகம். அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது என்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
-
Apr 15, 2025 11:08 IST
இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி - ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் மீது மறைமுகமாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
-
Apr 15, 2025 11:04 IST
சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு
சென்னை மாதவரத்தில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஊற்றுப் போல் பொங்கி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழாயை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Apr 15, 2025 10:56 IST
மாநில சுயாட்சி தொடர்பாக ஸ்டாலின் அறிவிப்புகள் வெளியீடு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில பட்டியலில் உள்ளவற்றை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதனை உணர்ந்தே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது. மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
-
Apr 15, 2025 10:54 IST
நாள்தோறும் இந்தி திணிப்பு: சு.வெங்கடேசன்
என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம்.பி.களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தி திணிப்பு என சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 15, 2025 10:51 IST
மே 2-ஆம் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்
மே 2-ம் தேதி அ.தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
-
Apr 15, 2025 10:50 IST
சபாநாயகர் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சபாநாயகரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
Apr 15, 2025 10:20 IST
5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடியது
5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். கேள்வி நேரம் முடிந்ததும், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
-
Apr 15, 2025 10:16 IST
சென்னை: ரூ.16 கோடியில் 3 பாலங்கள் அமைக்க நடவடிக்கை
சென்னை ECR - OMR சாலைகளிடையே ரூ.16 கோடியில் 3 பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
-
Apr 15, 2025 10:10 IST
திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 15, 2025 10:06 IST
மேற்கு வங்கத்தில் மீண்டும் வெடித்த வன்முறை
மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியை போலீஸ் தடுத்ததால் இரு தரப்புக்கும் மோதல் வெடிப்பு. காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்ததாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டுள்ள நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள். இதே விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் மூர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது.
-
Apr 15, 2025 10:06 IST
தெலங்கானாவில் SC இடஒதுக்கீடு 3 பிரிவுகளாக பிரிப்பு
தெலங்கானாவில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 பிரிவுகளாக பிரிக்கும் சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியானது. மொத்தமுள்ள 15% இட ஒதுக்கீட்டை 3 குரூப்களாக பிரித்து முறையே 1%, 9%, 5% என வழங்க வழிவகை செய்யப்படுள்ளது. குரூப் I-ல் 15, II-ல் 18, III-ல் 26 சாதிகள் இடம்பெற்றுள்ளன. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அமலுக்கு வந்தது
-
Apr 15, 2025 10:04 IST
கர்நாடகாவில் போராட்டம் - எல்லையில் லாரிகள் நிறுத்தம்
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஈரோடு சத்தியமங்கலம் வழியாக கர்நாடகத்திற்கு இயக்கப்படும் தமிழக லாரிகள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
-
Apr 15, 2025 09:58 IST
பேசின் பிரிட்ஜ் பாலம் குறித்த கேள்வி - அமைச்சர் வேலு பதில்
சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை விரிவு படுத்தலாமா அல்லது வேறு பாலம் அமைக்கலாமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டு இந்தாண்டே நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர். எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.
-
Apr 15, 2025 09:38 IST
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் சாமிநாதன் மரியாதை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி, விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
-
Apr 15, 2025 09:37 IST
ரூ.70,000க்கு கீழ் சரிந்த தங்கம் விலை.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஒரு சவரன் ரூ.69,760க்கு விற்பனையாகிறது.
-
Apr 15, 2025 09:14 IST
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்னும் சற்று நேரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட உள்ளது. செய்தி மற்றும் விளம்பரம், தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிகை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் அமைச்சர் சாமிநாதன்.
-
Apr 15, 2025 08:59 IST
கர்நாடகா லாரி ஸ்டிரைக்
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு லாரிகள் கர்நாடகா வழியாக செல்ல வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
-
Apr 15, 2025 08:58 IST
ஆம்ஸ்ட்ராங் மனைவியின் கட்சிப் பதவி பறிப்பு
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி இனி கட்சிப் பணிகளில் ஈடுபட மாட்டார். பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார். தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என பகுஜன் சாமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.