/indian-express-tamil/media/media_files/QPtCr5lMaPu1XXbBhkVi.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாளை அமைச்சரவை கூட்டம்: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை (ஏப்ரல் 17ம் தேதி) தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6 மணியளவில் நடக்கும் இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
-
Apr 16, 2025 22:24 IST
‘பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடம் பரப்பக்கூடாது’; துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “கல்வி நிலையங்கள் அறிவுபூர்வமான கருத்துக்கள் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தை கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளையும், கட்டுக்கதைகளையும் மாணவர்களிடம் பரப்பக் கூடாது. கல்வியின் அடிப்படையே அறிவை செம்மைப்படுத்துவதற்காக தான். மாணவர்களிடம் சமத்துவத்தையும் சமூக சமநீதி கற்பிப்பது தான் தலையாகிய கடமை. பிரிவினையை தூண்டும் கருத்துக்களுக்கோ நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை . இதில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
-
Apr 16, 2025 21:47 IST
மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்
நெல்லையில் மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வசந்தம் நகர் அருகே 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் சின்னத்துரைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர கிழக்கு துணை ஆணையர், உதவி ஆணையர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
-
Apr 16, 2025 20:59 IST
த.வெ.க தலைவர் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் - அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர்
அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ராஸ்வி: “த.வெ.க தலைவர் விஜயுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம்; விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் இஸ்லாமியர்கள் அழைக்க வேண்டாம்; இஸ்லாமியர்களை திரைப்படங்களில் தீவிரவாதிபோல் சித்தரித்தவர் விஜய்” என்று கூறியுள்ளார்.
-
Apr 16, 2025 20:11 IST
டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். அ.தி.மு.க-வின் கருப்பு சிவப்பு வெள்ளை கொடி, பெயர், ஜெயலலிதாவின் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி டி.டி.வி தினகரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார்.
-
Apr 16, 2025 19:00 IST
பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும்; துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை செயல்படுத்தாவிட்டால் நம் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள். பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும்” என்று பேசினார்.
-
Apr 16, 2025 18:55 IST
உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடம்; கல்வி வளர்சியில் ஒளிவிளக்கு - துணைவேந்தர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக உள்ளது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளில் 30% உயர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
-
Apr 16, 2025 18:38 IST
மோசமான வானிலை - பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பிய 3 விமானங்கள்
மோசமான வானிலையால் பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் சென்னை வந்து தரையிறங்கின. பெங்களூரிவில் மாலையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து, மோசமான வானிலை நிலவியது. சென்னையில் இருந்து 142 பேருடன், பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. கோவாவில் இருந்து 150 பேருடன் சென்ற விமானம், அந்தமானில் இருந்து சென்ற விமானமும் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன.
-
Apr 16, 2025 18:14 IST
தடையை மீறி பிளாஸ்டிக் - வாகனங்கள் பறிமுதல்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் வாடைகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 16, 2025 17:57 IST
டாஸ்மாக் முறைகேடு - ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம்; ஐகோர்ட்டில் இ.டி வாதம்
"டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1,000 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது. ஒரு டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி குறித்து தெரிந்துகொள்ள வேண்டாமா?" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டுள்ளது.
அப்போது, "எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது அமலாக்கத்துறை நடவடிக்கையால் டாஸ்மாக் மற்றும் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது" என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. -
Apr 16, 2025 17:16 IST
தர்பூசணி பழத்தில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை – தமிழக அரசு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க முன்னாள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Apr 16, 2025 16:47 IST
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த மனு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, முஸ்லிமாக பிறந்த நபர் இஸ்லாத்தை 5 ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றிய ஆதாரத்தை மீண்டும் ஏன் காட்ட வேண்டும். வக்பு சட்ட திருத்தம் 20 கோடி மக்களின் உரிமையை பறிப்பதாகவுள்ளது என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்
-
Apr 16, 2025 16:24 IST
மிகவும் கவலையளிக்கிறது; மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு நடக்கும் வன்முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை தொடர்ந்து விசாரிக்கும், மேலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு நடந்த வன்முறையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கண்டனம் தெரிவித்தார், இது மிகவும் கவலையளிக்கிறது என்று தலைமை நீதிபதி கூறினார்.
-
Apr 16, 2025 16:08 IST
திரு.வி.க.வுக்கு 1 கோடியில் நினைவரங்கம்
தமிழ்த்தென்றல் திரு. வி.க. பிறந்த துண்டலம் கிராமத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கமும், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவி, அங்குள்ள நூலகமும் மேம்படுத்தப்படும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்
-
Apr 16, 2025 16:05 IST
இந்து அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை அனுமதிக்க தயாரா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
இந்து மத அறக்கட்டளைகளில் முஸ்லிம்களை உறுப்பினராக அனுமதிக்க தயாரா? என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
-
Apr 16, 2025 15:27 IST
காவல் நிலையத்தில் தி.மு.க எம்.எல்.ஏ புகார்
தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான பிரபாகர ராஜா, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், வடபழனியில் இருக்கும் முதியவருக்கு சொந்தமான இடத்தை, தன்னுடைய தூண்டுதலின் பேரில் இடித்ததாகக் கூறி பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வாறு வதந்தி பரப்பும் பால்ராஜ் என்பவரின் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.
-
Apr 16, 2025 15:12 IST
டெல்லி ஐகோர்ட் வக்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறினர் - சஞ்வீவ் கண்ணா
வக்பு சொத்து மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தொடர்பான கூற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். அதன்படி, "நாங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்த போது, உயர் நீதிமன்றமே வக்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 16, 2025 14:57 IST
வக்பு மசோதாவிற்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வாதத்தின் போது, முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் சேர்ப்பது, சட்டப்பிரிவு 26-ஐ நேரடியாக மீறும் செயல் என்று வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
-
Apr 16, 2025 14:46 IST
2026 தேர்தலில் பா.ஜ.க டெபாசிட்டை இழக்கும் - ஆர்.எஸ். பாரதி
மாநில உரிமை பறிப்புக்கு ஆதரவாக இருந்தால், 2026-ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க டெபாசிட்டை இழக்கும் என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க-வில் இருந்த நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Apr 16, 2025 14:10 IST
ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விருதுநகர் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
-
Apr 16, 2025 13:55 IST
சென்னையில் இன்று கனமழை நீடிக்கும்
சென்னையில் இடி மின்னலுடன் இன்று(ஏப்.16) கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை இன்று நீடிக்கும்; சென்னையில் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்; தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தகவல்
-
Apr 16, 2025 13:33 IST
“ஆளுங்கட்சி எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்”
சென்னை: வடபழனியில் குத்தகைக்கு எடுத்த நிலத்தை திமுக எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவின் ஆதரவாளர்கள் எனக்கூறி சிலர் மிரட்டுவதாக பால்துரை (73) என்பவர் புகார் நேற்று 30 பேர் ஆளுங்கட்சி எனக்கூறி ஜேசிபி-யுடன் வந்து இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் ஷட்டரை இடித்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக, பால்துரையின் மகன் வீடிேயோ
-
Apr 16, 2025 13:27 IST
கல்வி நிறுவனங்களில உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்
கல்வி நிறுவனங்களில உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்; நீக்காவிட்டால் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Apr 16, 2025 13:11 IST
மேடவாக்கத்தில் 12.75 சென்டி மீட்டர் மழை
சென்னையில் 7 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. பாரிஸ், நெற்குன்றம், ராஜா அண்ணாமலைபுரம், வளசரவாக்கம், சாலிகிராமத்தில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
-
Apr 16, 2025 13:08 IST
வெற்றியை தேசிய அளவில் கொண்டாட வேண்டும்: கமல்
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி மிகப்பெரியது; அதை கொண்டாடவே வந்தேன். முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்த பின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
-
Apr 16, 2025 12:55 IST
தமிழகத்திலும் கேரளாவிலும் அதிநவீன மின் சேகரிப்பு தயாரிப்புகள்
தமிழகத்திலும் கேரளாவிலும் வீடு மற்றும் வணிக மின் தேவைகளுக்கான அதிநவீன மின் சேகரிப்பு தயாரிப்புகளை கோவையில் அறிமுகப்படுத்தியது ப்யூர் நிறுவனம். மின்சாரத்தை சேகரித்து வைக்கக்கூடிய தயாரிப்புகளை உருவாக்கும் ஹைதராபாத் ப்யூர் நிறுவனம் - கோவையில் தடம் பதித்துள்ளது. அதன் புதிய ப்யூர் பவர் தயாரிப்புகளை கோவையில் அறிமுகம் செய்துள்ளது
-
Apr 16, 2025 12:34 IST
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பொதுநல மனு பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு. பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் மனு: மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது; மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது - மனு: அமைச்சர் பொன்முடி மீது புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.
-
Apr 16, 2025 12:28 IST
பலத்த காற்றால் கிழிந்த விளம்பரப் பதாகை
ஆவடியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், விளம்பரப் பதாகை. கிழிந்து மின் கம்பிகள் மீது விழுந்துள்ளது; இதையடுத்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
-
Apr 16, 2025 12:27 IST
முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு. மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு
-
Apr 16, 2025 12:09 IST
குரலற்றவர்களின் குரலாக உள்ளது அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
குரலற்றவர்களின் குரலாக திராவிட மாடல் அரசு உள்ளது; என்னுடைய ஒவ்வொரு கையெழுத்தும் மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்காகவே இருக்கும் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.667 கோடியில் இருந்து இரு மடங்காக உயர்ந்துள்ளது; அரசுப் பணித் தேர்வில் 4% இட ஒதுக்கீட்டின்மூலம் 493 பேர் அரசுப் பணியை பெற்றுள்ளனர் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Apr 16, 2025 11:32 IST
செய்தித்துறை மானியக்கோரிக்கை அறிவிப்புகள்
கோவையில் அமைக்கப்படும் செம்மொழிப்பூங்காவில் தமிழ்த்தாய் உருவச் சிலை நிறுவப்படும், டெல்லி ஜே.என்.யூ. பல்கலையில் பன்னோக்கு கலையரங்கம் அருகில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்படும், மதுரவாயல் பகுதியில் உள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியானது.
-
Apr 16, 2025 11:31 IST
சிவாஜி வீடு ஜப்தி வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு
நடிகர் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நடிகர் பிரபு தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அன்னை இல்லம் எனக்கு சொந்தமானது என்பதால் வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரபு மனு அளித்தார்.
-
Apr 16, 2025 11:09 IST
வக்பு மசோதா உச்ச நீதிமன்ற விசாரணை
இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வக்ஃப் (திருத்த) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்க உள்ளது.
-
Apr 16, 2025 11:08 IST
உச்ச நீதிமன்ற வக்பு சட்ட விசாரணை
வக்புகள் இஸ்லாத்தின் நடைமுறையின் ஒருங்கிணைந்த அம்சமாக இருப்பதால், அரசியலமைப்பின் கீழ் அரசியலமைப்பு பாதுகாப்புக்கு உரிமை உண்டு என்று மனுக்கள் வாதிடுகின்றன
-
Apr 16, 2025 11:07 IST
வக்பு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை
புதிய வக்பு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரணை நடத்தப்படுகிறது.
-
Apr 16, 2025 10:48 IST
'பாஜகவுடன் கூட்டணி மட்டுமே;கூட்டணி ஆட்சி கிடையாது'- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை. டெல்லி பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித்ஷா கூறினார் என்று இபிஎஸ் கூறினார்.
-
Apr 16, 2025 10:46 IST
சென்னை நகரில் மிதமான மழை
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, அசோக்நகர், நந்தனம், தேனாம்பேட்டை,.நகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
-
Apr 16, 2025 10:10 IST
மழை நிலவரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் பிற்பகல் 12 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Apr 16, 2025 10:08 IST
சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க வெளிநடப்பு
3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்ததால், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
Apr 16, 2025 10:07 IST
அதிமுக வெளிநடப்பு அவையின் உள்ளே தளவாய் சுந்தரம்
அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் அவையின் உள்ளே இருக்கிறார். பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்களை சீரமைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசி வருகிறார்.
-
Apr 16, 2025 09:36 IST
போயிங் ரக விமானங்களை வாங்க தடை விதித்தது சீனா
அமெரிக்காவிடம் இருந்து போயிங் ரக விமானங்களை வாங்க தடை விதித்தது சீனா. மேலும் விமான சாதனங்கள், இயந்திரங்களை வாங்க வேண்டாம் எனவும் தடாலடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Apr 16, 2025 09:29 IST
தமிழில் மட்டுமே இனி அரசாணை - தமிழக அரசு
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழ் மொழியில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
Apr 16, 2025 09:11 IST
சென்னை: மின்சாரம் தாக்கி +2 மாணவன் பலி
சென்னை பெரவள்ளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் உயிரிழந்துள்ளார். பொதுத்தேர்வு விடுமுறையில் உள்ள மாணவன் அஜய் பால் (17), நள்ளிரவில் கழிவறைக்குச் செல்ல ஸ்விட்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். மூச்சு பேச்சு இன்றி கிடைந்த அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 16, 2025 08:56 IST
தொடர் விடுமுறை: 2,400 சிறப்பு பேந்துகள் இயக்கம்
தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் முழுவதும் 2025 ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவதம் பேருந்து நிலையங்களில் இருந்து மாநிலம் முழுவதும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 2,400 சிறப்பு பேந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 16, 2025 08:54 IST
5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
Apr 16, 2025 08:25 IST
வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் மீது இன்று விசாரணை
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
-
Apr 16, 2025 08:18 IST
மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து
தாம்பரம்-விழுப்புரம், விழுப்புரம்-சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் விக்கிரவாண்டியில் இன்று பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. எழும்பூர்-புதுச்சேரி ரயில் விழுப்புரத்தில் பகுதியளவு ரத்து. புதுச்சேரி-திருப்பதி ரயில் முண்டியம்பாக்கத்தில் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Apr 16, 2025 08:16 IST
புழல் சிறையில் செல்போன், கஞ்சா பறிமுதல்
புழல் சிறையில் கண்காணிப்புக் கோபுரம் அருகே தூய்மை பணியின்போது புதரில் கிடந்த பொட்டலதில் இருந்து 1 செல்போன் மற்றும் 39 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் குறித்து சிறை அதிகாரிகள் புகாரின் பேரில் புழல் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 16, 2025 07:27 IST
டெல்லியை இன்று எதிர்கொள்கிறது ராஜஸ்தான்
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணிய எதிர்கொள்கிறது ராஜஸ்தான் அணி. இரு அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு டெல்லியில் தொடங்க உள்ளது.
-
Apr 16, 2025 07:24 IST
மாணவர்கள் மோதலைத் தடுக்க ஏப் 24-ல் முக்கிய அறிவிப்பு
பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப் பேரவையில் ஏப்.24-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
-
Apr 16, 2025 07:23 IST
மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணமா? - விளக்கம்
மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டம் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.