Chennai News Highlights: பொன்முடி, செந்தில் பாலாஜி பதவி ராஜினாமா - மீண்டும் அமைச்சர் ஆகிறார் மனோ தங்கராஜ்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
senthil

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Apr 27, 2025 21:14 IST

    தி.மு.க பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது

    சிவகங்கை, சாமியார்பட்டியில் தி.மு.க பிரமுகர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரு(21), கருணாகரன்(20), பிரபாகரன்(19) ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Apr 27, 2025 20:40 IST

    அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடி விடுவிப்பு

    தமிழக அமைச்சரவைத் துறைகளை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜியின் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது; மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக நிர்வகிப்பார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.



  • Advertisment
  • Apr 27, 2025 20:32 IST

    தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!

    செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு; வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு பத்மநாபபுரம் எம்.எல். மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்.



  • Apr 27, 2025 20:29 IST

    மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்

    புதிய அமைச்சராக பதவியேற்க உள்ள மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.



  • Advertisment
    Advertisements
  • Apr 27, 2025 19:29 IST

    அண்ணா சொன்னதை நினைவில் வைத்து தைரியமாக மக்களை சந்தியுங்கள் - தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

    த.வெ.க தலைவர் விஜய் பேச்சு: “அண்ணா சொன்னதை நினைவில் வைத்து எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக  மக்களை சந்தியுங்கள்; மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ் என அண்ணா கூறினார். சிறுவாணி நீர்போல சுத்தமான ஆட்சி அமையும்; தெளிவான உண்மையான வெளிப்படையானது தமிழக வெற்றிக் கழகம்; வாக்குச்சாவடிக்கும் வரும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை; வெற்றியை அடைவதற்கு உங்களின் செயல்பாடுகள் முக்கியம்; நீங்கள்தான் முதுகெலும்பு” என்று கூறினார். 



  • Apr 27, 2025 18:26 IST

    தவெக சுத்தமான அரசாக இருக்கும்: விஜய்

    நேற்று பேசும்போது இந்த சந்திப்பு ஓட்டுக்காக நடப்பதல்ல என்று கூறினேன். சமரசம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை மக்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார். தவெக ஆட்சி, சுத்தமான அரசாக இருக்கும். ஊழல், மோசடி பேர்வழிகள் இருக்கமாட்டார்கள் என விஜய் கூறினார்.



  • Apr 27, 2025 18:15 IST

    தவெகவினருக்கு ஆனந்த் வலியுறுத்தல்

    மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது.  அதை மறுக்க முடியாது. யாருக்கும் பயப்பட வேண்டாம், நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்கு தான் மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்று  தவெகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.



  • Apr 27, 2025 16:48 IST

    ”எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட மாடல்”

    திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் அர்த்தம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் உலகத் தர சர்வதேச ஹாக்கி மையத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு பேசிய அவர், இதனை கூறினார். கோவையில் ரூ.9.67 கோடி செலவில் 6500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மையம் அமைகிறது. அதற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.



  • Apr 27, 2025 16:43 IST

    டெல்லி விமான நிலையத்தில் ரூ.1.91 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் வைத்திருந்த பையில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் இருந்த 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.இந்த நிலையில் ரூ. 1.91 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை கடத்தி வந்த பயணியை போலீசார் கைது செய்து செய்தனர்.



  • Apr 27, 2025 16:35 IST

    நாளை ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

    ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரை 9.1 கி.மீ தூரத்திற்கு 35-40 கி.மீ வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



  • Apr 27, 2025 16:32 IST

    மு.க.ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்பட வில்லை.

     



  • Apr 27, 2025 16:02 IST

    ”ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி அளிப்பதா?”

    தமிழ்நாட்டில் 4 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 27, 2025 15:43 IST

    எம் சாண்ட், பி சாண்ட் விலையை ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய முடிவு

    எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றுக்கு ஏற்றப்பட்ட விலையில் இருந்து ரூ.1000 குறைத்து விற்பனை செய்ய, அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயித்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது



  • Apr 27, 2025 15:35 IST

    சி.எஸ்.கே - பஞ்சாப் போட்டி டிக்கெட் விற்பனை மந்தம்

    சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 30ல் நடைபெறவுள்ள சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் 30 நிமிடத்தில் விற்று தீரும் நிலையில் 3 மணி நேரத்தை கடந்தும் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை



  • Apr 27, 2025 15:04 IST

    புற்றுநோயால் அவதி; உதவி கேட்கும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி

    நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்



  • Apr 27, 2025 14:37 IST

    விஜய் அ.தி.மு.க கூட்டணிக்கு வரலாம் – ராஜேந்திர பாலாஜி

    த.வெ.க தலைவர் விஜய் சிவகாசிக்கு வந்தால் நானும் ஒரு ஓரமாக நின்று பார்ப்பேன், விஜய்யின் பேச்சைக் கேட்பேன். தி.மு.க.,வை எதிர்க்கும் எந்த கட்சியும் அ.தி.மு.க கூட்டணியில் சேரலாம், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய் நடத்துவது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது, அது ஒரு பொதுக்கூட்டம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்



  • Apr 27, 2025 14:23 IST

    கொஞ்சம் கொஞ்சமாக அரசியலமைப்பை தகர்க்கிறது பா.ஜ.க - ப.சிதம்பரம்

    புல்டோசரில் தகர்த்தால் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால், உளி, சுத்தியல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலமைப்பை தகர்க்கிறது பா.ஜ.க என சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்



  • Apr 27, 2025 14:01 IST

    தி.மு.க கூட்டணி கட்சியினர் இடையே கசப்பான மனநிலை உள்ளது - ஜெயக்குமார்

    தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சியினர் இடையே கசப்பான மனநிலை இருப்பதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கூட்டணி தொடர்பான திருமாவளவனின் கருத்து தெளிவற்ற நிலையில் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.



  • Apr 27, 2025 13:25 IST

    சென்னையில் மனதின் குரல் நிகழ்ச்சி திரையிட அனுமதி மறுப்பு

    பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை சென்னையில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், துணை முதலமைச்சரின் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Apr 27, 2025 13:03 IST

    தமிழ்நாட்டில் லிச்சி பழம் சாகுபடி - மோடி பெருமிதம்

    பீகார் போன்ற மாநிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யப்படும் லிச்சி பழம், தமிழ்நாட்டிலும் சாகுபடி செய்யப்படுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். கொடைக்கானலில் விவசாயி ஒருவர் 7 ஆண்டுகளாக முயற்சித்து தற்போது, லிச்சி பழத்தை சாகுபடி செய்துள்ளார் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 27, 2025 12:29 IST

    பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் - மோடி 

    பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் விமர்சித்துள்ளார்.



  • Apr 27, 2025 12:03 IST

    பூந்தமல்லி - போரூர் இடையே நாளை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

    சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டமான பூந்தமல்லி மற்றும் கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், நாளை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. அதன்படி, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.



  • Apr 27, 2025 11:54 IST

    தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி

    தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய எரிசக்தி இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி அருகே 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Apr 27, 2025 11:45 IST

    பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் - கங்குலி

    பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும், ஐ.சி.சி தொடர்கள், ஆசிய கோப்பை என எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 27, 2025 10:29 IST

    தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம்

    விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் வரும் 30ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தருமபுரியில் நடக்க உள்ளது. 2026 தேர்தல் கூட்டணி குறித்தும், விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • Apr 27, 2025 10:29 IST

    விஜய் திறந்து வைத்த கதவையும் மூடினேன் - திருமாவளவன்

    துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தை கூறி தன்னை வீழ்த்த முடியாது. கூட்டணி தர்மத்துக்காக விஜய் திறந்து வைத்த கதவையும் மூடினேன் என திருமாவளவன் கூறினார்.



  • Apr 27, 2025 10:27 IST

    எந்த பாதிப்பு வந்தாலும் I Don’t Care - திருமாவளவன்

    பாமகவுடனும் சேரமாட்டோம் பாஜகவுடனும் சேரமாட்டோம் அந்த கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமோட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் ஐ டோண்ட் கேர் நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன் என புதுச்சேரி திருபுவனையில் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.



  • Apr 27, 2025 09:50 IST

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து

    சிந்து நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா? நாட்டின் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார். 



  • Apr 27, 2025 09:47 IST

    86 ஆயிரம் பேருக்கு பட்டா - அரசாணை

    தமிழ்நாடு முழுவதும்  ஆட்சேபகரமற்ற பகுதிகளில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா அரசாணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்ட முடிவுகளின்படி தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நில ஒதுக்கீட்டு வரம்புகளையும்  திருத்தம் செய்து அரசாணை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 



  • Apr 27, 2025 09:11 IST

    இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் புகார்

    இந்தியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. ஐநா விதிகளை மீறி பாகிஸ்தான் மீது இந்தியா மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக புகார் அளித்துள்ளது.



  • Apr 27, 2025 09:09 IST

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் - சிறப்பு கூட்டத்தை கூட்ட கபில் சிபல் வலியுறுத்தல்

    பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதித்து தேசத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மாநிலங்களவையில் எம்.பி.கபில்சிவில் வலியுறுத்தியுள்ளார்.



  • Apr 27, 2025 09:03 IST

    கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

    கோவை விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவில் மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் தவெக மாவட்ட செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Apr 27, 2025 09:01 IST

    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Apr 27, 2025 08:22 IST

    நீட் தேர்வு மோசடிகளை தடுக்க புதிய இணையதளம்

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய இணையதளத்தை தேசிய தேர்வு முகமை தொடங்கியது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம். ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.



  • Apr 27, 2025 08:19 IST

    மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து

    மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து. 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் இல்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளனர். 



  • Apr 27, 2025 08:18 IST

    சென்னையில் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

    சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானம், ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்தபோது விமானத்தின் டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது.  விமானி துரிதமாக செயல்பட்டதால் 156 பயணிகள் உட்பட 161 பேர் உயிர்தப்பினர். வெடித்த டயர் மாற்றப்பட்டு இரண்டரை மணிநேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டது. 



  • Apr 27, 2025 08:15 IST

    பாகிஸ்தானியர்களுக்கான கெடு இன்றுடன் நிறைவு

    மருத்துவ விசா தவிர, பிற விசாக்கள் மூலமாக இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தானிய பெண் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.



  • Apr 27, 2025 07:42 IST

    கள்ளழகர் திருவிழா முகூர்த்தக்கால்

    மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு திருப்பணி தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. 



  • Apr 27, 2025 07:40 IST

    2ஆம் நாளாக இன்று தவெக முகவர்கள் கூட்டம்

    கோவையில் 2 ஆம் நாளாக இன்று தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தவெக முகவர்கள் பங்கேற்க உள்ளனர். 2 ஆம் நாள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று மாலை விமானத்தில் விஜய் சென்னை திரும்புகிறார்.



  • Apr 27, 2025 07:34 IST

    WORK FROM FIELD-ற்கு விஜய் வந்தது மகிழ்ச்சி - தமிழிசை செளந்தரராஜன்

    தவெக தலைவர் விஜய் WORK FROM FIELD-ற்கு விஜய் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயை பார்க்க குழந்தைகள்  பலர் திரண்டு வருவதாகவும் குழந்தைகள் அணியை தவெக தவிர்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர்  தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.



  • Apr 27, 2025 07:32 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.



news updates Tamil News Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: