Chennai News Highlights: சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்த மோடிக்கு நன்றி தெரிவித்து பா.ம.க தீர்மானம்

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK resolution

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சித்திரை முழுநிலவு மாநாடு: மாமல்லபுரம் அருகே பாமக சார்பில் இன்று சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இசிஆர் சாலையில் பயணத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • May 11, 2025 20:00 IST

    மோடிக்கு நன்றி தெரிவித்து பா.ம.க தீர்மானம்

    பா.ம.க சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தவிர மேலும் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.



  • May 11, 2025 17:08 IST

    காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது

    காரைக்காலில் மருமகளுக்கு குழந்தை இல்லாததால் ரூ.50,000 கொடுத்து குழந்தை வாங்கிய மாமியார், பச்சிளம் பெண் குழந்தையை திருநள்ளாறு தம்பதிக்கு விற்ற தமிழக பெண்,  அரசு மருத்துவமனை ஊழியர், நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர். பெற்ற குழந்தையை விற்ற தாய் உட்பட மேலும் இருவருக்கு போலீசார் வலைவீச்சு



  • Advertisment
    Advertisements
  • May 11, 2025 17:07 IST

    பலத்த காற்று - பிரம்மாண்ட பெயர் பலகை விழுந்து விபத்து

    ஆவடி அருகே திருமுல்லைவாயலில் பலத்த காற்றால்  உடற்பயிற்சி கூடத்தின் பிரமாண்ட பெயர் பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த நிலையில், விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை



  • May 11, 2025 17:06 IST

    FIITJEE பயிற்சி மையத்தில் போலீசார் சோதனை

    பயிற்சி மையம் மோசடியில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, IIT மற்றும் JEE தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தும் FIITJEE பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், கடிதங்கள், 100 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது



  • May 11, 2025 15:59 IST

    மாலை 6 மணி வரை 21 மாவட்டங்களில் மழை – வானிலை மையம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 11, 2025 15:50 IST

    சித்திரை முழுநிலவு மாநாடு – ராமதாஸ் வருகை

    இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் சித்திரை முழுநிலவு மாநாட்டு திடலுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வருகை தந்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்



  • May 11, 2025 15:46 IST

    சென்னை புறநகரில் மழை

    சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது



  • May 11, 2025 15:09 IST

    பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் ’டியூட்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

    கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘DUDE’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. சாய் அபயங்கர் இசையில் உருவாகும் இப்படம், தீபாவளிக்கு வெளியாகிறது.



  • May 11, 2025 15:06 IST

    வளசரவாக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து - இருவர் மரணம்

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவர் நடராஜன் மற்றும் மனைவி தங்கம் உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கிய ஸ்ரீராம் என்பவர் மீட்க்கப்பட்ட நிலையில், பெற்றோர் மரணமடைந்தனர்



  • May 11, 2025 14:18 IST

    பங்களா வீட்டில் பயங்கர தீ விபத்து

    சென்னை வளசரவாக்கம் சாவித்திரி நகரில் உள்ள பங்களா வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கி உள்ள குடும்பத்தினரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்



  • May 11, 2025 13:38 IST

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம்



  • May 11, 2025 12:58 IST

    “தாய்மையின் மகத்துவத்தை போற்றுவோம்” – அன்னையர் தினத்தையொட்டி இபிஎஸ் வாழ்த்து!



  • May 11, 2025 12:14 IST

    கவிஞர் வைரமுத்துவின் தாயார் காலமானார்

    கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் (92) வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி மரியாதை



  • May 11, 2025 10:49 IST

    ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து

    அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • May 11, 2025 10:21 IST

    இரு இளைஞர்கள் வெட்டிக்கொலை

    சென்னையை அடுத்த மறைமலை நகரில் நேற்றிரவு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். விமல் (22), ஜெகன் (23) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளதாக தகவல் தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.



  • May 11, 2025 10:20 IST

    ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி மரணம்

    உடல் நலக்குறைவால் மறைந்த நடிகர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணிக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் அஞ்சலி செலுத்தினர்.



  • May 11, 2025 10:05 IST

    பிரேம்குமாருக்கு மஹிந்திரா தார் கார் பரிசு

    நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 96, மெய்யழகன் பட இயக்குநர் பிரேம்குமாருக்கு மஹிந்திரா தார் காரை பரிசளித்தனர்.



  • May 11, 2025 09:00 IST

    `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகம்

    மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு பணிகள் தீவிரம், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியில், மூன்றடுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ள போலீசார் பக்தர்களின் பாதுகாப்புக்காக `வைகை வீரன்' புகார் செயலி அறிமுகப்படுத்தியுள்ளனர்.



  • May 11, 2025 08:59 IST

    உலக அழகி போட்டி தொடக்கம்

    72 ஆவது உலக அழகிப் போட்டி ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. நோக்கத்துடன் கூடிய அழகு என்ற கருப்பொருளுடன் நடைபெறும் போட்டியில் அழகிகள் ஒய்யார நடைபோட்டனர். 110க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றார்.



  • May 11, 2025 08:32 IST

    விழுப்புரம் மாவட்டத்தில் 36 மதுக்கடைகளை மூட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தர

    விழுப்புரம் மாவட்டத்தில் 36 மதுக்கடைகளை மூட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். பாமக மாநாடு இன்று மாலை நடக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு - திருவிடந்தையில் பாமக சித்திரை மாநாடு இன்று மாலை நடக்கிறது.



  • May 11, 2025 08:05 IST

    என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தீ

    கடலூர் என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. பல மணி நேரமாக பற்றி எரிந்துவரும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் முயற்சித்து வருகின்றனர். 3 மணி நேரத்திற்கு மேலாக தீ பற்றி எரிந்துவரும் நிலையில் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்க முயற்சி நடைபெறுகிறது.  



  • May 11, 2025 07:27 IST

    மதுரை மாநகருக்குள் கள்ளழகர்!

    சித்திரை திருவிழாவையொட்டி தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ் அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் மதுரை வந்தார். மதுரை மக்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி வைத்து கள்ளழகரை வரவேற்றனர். கள்ளழகர் போல வேடமிட்ட பக்தர்கள் அழகர் மீது நீரை பீய்ச்சியடித்து உற்சாகமடைந்தனர்.  



  • May 11, 2025 07:24 IST

    சித்திரை முழுநிலவு மாநாடு

    மாமல்லபுரம் அருகே பாமக சார்பில் இன்று சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு நடைபெற உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இசிஆர் சாலையில் பயணத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



news updates Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: