/indian-express-tamil/media/media_files/2025/05/18/TjbhBHPpwSL3s54fPE4e.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 18, 2025 21:48 IST
பட்டினப்பாக்கம் அரசு குடியிருப்பில் சுவர் இடிந்து விபத்து - ஒருவர் படுகாயம்
சென்னை, பட்டினப்பாக்கம் அரசு குடியிருப்பில் மூன்றாவது மாடியின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் சுவர் விழுந்ததில் ஒரு இளைஞர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
-
May 18, 2025 20:34 IST
த.வெ.க சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு
சென்னை, திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
-
May 18, 2025 20:31 IST
இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால், ஈழம் மலர்ந்திருக்கும் - வைகோ
இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால், ஈழம் மலர்ந்திருக்கும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். அப்போது, "இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால், ஈழம் மலர்ந்திருக்கும். இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஈழத்தமிழர்களின் கோரிக்கையை கேட்கவில்லை. ஈழத் தமிழர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார்" என்று அவர் கூறினார்.
-
May 18, 2025 19:49 IST
பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
தமிழக - ஆந்திர எல்லையான குப்பம் பகுதியில் 10 அடி பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நீரில் மூழ்கி 2 சிறுமிகள் மற்றும் 1 சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 18, 2025 19:11 IST
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் லியோ பதவியேற்பு
வாடிகன் சிட்டியில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் லியோ பதவியேற்றார். மேலும், பதவியேற்ற பின்னர் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன், காசா மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
-
May 18, 2025 18:07 IST
கார் பந்தயம்: நடிகர் அஜித்குமார் கார் டயர் வெடித்தது
ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம் மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்குமார் போர்ஷியா அணி சார்பில் பங்கேற்றார். இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று தொடங்கியது. இந்த நிலையில் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.
-
May 18, 2025 18:06 IST
அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (மே 18) அறிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று, சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், நாகை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 18, 2025 17:37 IST
தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை
தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
-
May 18, 2025 17:23 IST
விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா
விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்
-
May 18, 2025 17:08 IST
ஆபரேஷன் சிந்தூர் குறித்து புது வீடியோ வெளியிட்ட ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக இந்திய ராணுவம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்தியப் பிரிவு, ' ஆப்பரேஷன் சிந்தூர்' தொடர்பாக புது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.'திட்டமிடல், பயிற்சி, மற்றும் செயல்படுத்துதல், நீதி நிலைநாடப்பட்டது' என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியாகி உள்ளது.
-
May 18, 2025 16:15 IST
தமிழ்நாட்டு எம்.பி.க்கு தேசிய விருது அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது அறிவித்துள்ளது. ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன. தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர்.11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
May 18, 2025 15:14 IST
இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 18, 2025 15:13 IST
8 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்க முன் வர வேண்டும் எனவும் ஜனாதிபதியின் குறிப்பினை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என 8 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயமா உள்ளிட்ட 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி இருந்தார்.
-
May 18, 2025 13:50 IST
திருப்பதியில் குவிந்த தமிழ் திரை பிரபலங்கள்
திருப்பதியில் குவிந்த தமிழ் திரை பிரபலங்கள் - நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ராணி, நடிகர் வைபவ், நடிகர் ஆதி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.
-
May 18, 2025 13:10 IST
சார்மினார் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு
தெலங்கானா, ஐதராபாத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.மேலும் இச்சம்பவம் வேதனையளிப்பதாகவும் காயமானோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் உருக்கம்
-
May 18, 2025 13:07 IST
கூட்டணி இல்லை என விஜய் சொல்லட்டும்: தமிழிசை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என த.வெ.க சார்பாக விஜய்யிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. யார் யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்பது எனது கருத்து. கூட்டணிக்கு யாரிடம் பேசுவது, எப்படி பேசுவது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
-
May 18, 2025 12:04 IST
தெலங்கானா சார்மினார் தீ விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழப்பு 17ஆக அதிகரிப்பு. சார்மினார் பகுதியில் உள்ள கிருஷ்ணா பேர்ல்ஸ் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சார்மினார் செல்லும் சாலையை போலீசார் தற்காலிகமாக மூடி உள்ளனர்.
-
May 18, 2025 11:26 IST
புரூக்ளின் பாலத்தில் மோதிய மெக்சிகோ கப்பல்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 277 பேருடன் சென்ற கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
May 18, 2025 11:19 IST
சார்மினார் தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு
-
May 18, 2025 10:31 IST
கணக்கில் காட்டப்படாத ரூ.38 லட்சம் பறிமுதல்
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து வந்த பயணியிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
May 18, 2025 09:57 IST
மாம்மல்லபுரத்தை இலவசமாக சுற்றி பார்க்கலாம்
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று ஒருநாள் கட்டணமின்றி கண்டு ரசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
May 18, 2025 09:54 IST
கல்விக் கொள்கை பற்றிய தவறான கண்ணோட்டம் - தமிழிசை சௌந்தரராஜன்
புதிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திட்டத்தை பற்றி விஷம் கக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மதுரையில் தமிழ் ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைகிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
-
May 18, 2025 08:59 IST
விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில், புதிய 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்த 20 ரூபாய் நோட்டின் வடிவமைப்பு, தற்போதுள்ள மகாத்மா காந்தி படத்துடன் கூடிய நோட்டுடன் ஒத்ததாகவே இருக்கும். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுக்களும், செல்லத்தக்கவையாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
May 18, 2025 08:58 IST
தவெக குறித்த கேள்வி - சூரி பதில்
தவெக தலைவர் விஜய் அழைத்தால் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு, ``அண்ணன் சரியாக போய் கொண்டிருக்கிறார். ஆனால் எனக்கு நிறைய பட வேலைகள் இருக்கிறது’’ என நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.
-
May 18, 2025 08:39 IST
சென்னையில் இன்று குளிர்ச்சியான சூழல் நிலவும்
வளிமண்டல சுழற்சி தமிழ்நாட்டின் கடற்கரைக்கு அருகே வந்துள்ளதால், காற்றின் திசை மாறியுள்ளது. இன்று, மேலடுக்கு காற்று வட தமிழ்நாட்டின் ஆந்திரா மற்றும் கர்நாடக மாவட்டங்களுக்கு அருகில் குவிந்துள்ளது. வடகிழக்கு பருவமழையைப் போலவே மேகங்கள் கிழக்கிலிருந்து கடல் பக்கமிருந்து நகர வேண்டும்.
இது ஒரு அற்புதமான நாள். கடல் காற்றுகள் வீசுவதால், வறண்ட மேற்கு திசைக் காற்றுகள் இல்லாததால் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் கிழக்கு திசைக் காற்றுகளுடன், வறண்ட கிழக்கு திசைக் காற்றுகளை ஒப்பிடும்போது எப்போதும் அதிக ஈரப்பதம் இருக்கும். சென்னையில் வெப்பநிலை மீண்டும் இயல்பை விட குறைவாகவும் அதிக ஈரப்பதத்துடனும் இருக்கும்.
இன்று கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
-
May 18, 2025 08:17 IST
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
May 18, 2025 08:16 IST
இஸ்ரோவின் 101-வது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி சி61-ல் தொழில்நுட்ப கோளாறு EOS-09 செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் தோல்வி அடைந்தது. என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
May 18, 2025 08:15 IST
குமரியில் குவிந்த மக்கள்
கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியைக் காண குவிந்திருந்த மக்கள். கோடை விடுமுறை நிறைவடைய இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
-
May 18, 2025 07:35 IST
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
தேனி கும்பக்கரை அருவியில் காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மராமத்து பணிகளுக்காக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பணிகள் இன்று காலை 10 மணிக்குள் முடியும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
May 18, 2025 07:31 IST
101வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து EOS-09 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட். பூமியின் எந்தப் பகுதியையும் துல்லியமாக படம்பிடிக்கும் என்றும், தேச பாதுகாப்பு, புவி கண்காணிப்புக்கு உதவும் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
-
May 18, 2025 07:30 IST
வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழு - விவரம் வெளியீடு
பயங்கரவாதத்திற்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள் குழுக்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.