/indian-express-tamil/media/media_files/2025/03/03/ioKZi23ezA1ZAZcO37Cj.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 20, 2025 23:14 IST
சிறைகளில் சாதி ரீதியான பாகுபாடு கூடாது: தமிழக அரசு உத்தரவு
சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது. சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் சாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது. சிறைகளில் சாதி ரீதியாக கைதிகளை வகைப்பாடு செய்யக்கூடாது என சிறை விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
May 20, 2025 23:12 IST
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை: இந்திய இணையதளங்களை ஹேக் செய்த 2 பேர் கைது
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய இணையதளங்களை ஹேக் செய்து முடக்கிய 2 பேரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. ஜசீம் ஷாநவாஸ் அன்சாரி என்பரையும் மற்றுமொரு மைனர் சிறுவனையும் குஜராத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
-
May 20, 2025 23:11 IST
ரேஸர் சென்னா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அஜித்
3 முறை ஃபார்முலா1 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பிரேசிலியன் 1 ஆயர்டன் சென்னா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அஜித்
-
May 20, 2025 21:13 IST
சென்னையில் மழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்
சென்னை புறநகரில் மழை - விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்த 10 விமானங்கள். மழை ஓய்ந்ததும் வானில் வட்டமடித்த விமானங்கள், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கம். மழையால் டெல்லி, சேலம், கொழும்பு, மும்பை, ஐதராபாத், சீரடி ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன
-
May 20, 2025 21:10 IST
பொற்கோவிலில் வான் பாதுகாப்பு துப்பாக்கி? இந்திய ராணுவம் விளக்கம்
பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வான் பாதுகாப்பு துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பஞ்சாப் பொற்கோயிலில் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள், வான் பாதுகாப்பு வளங்கள் எதும் பயன்படுத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது,
-
May 20, 2025 20:18 IST
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று, இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சந்தித்துப் பேசினர்
-
May 20, 2025 19:24 IST
‘கடவுள் அவ்வளவு எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்’ - மனம் உடைந்து பேசிய ம.பி ஐகோர்ட் நீதிபதி
மத்தியப் பிரதேச ஐகோர்ட் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் நீதிபதி துப்பலா வெங்கட ரமணா இன்று தனது பிரியாவிடை விழாவில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது, தன்னை "துன்புறுத்தும் நோக்கத்துடன்" வழங்கப்பட்டதாகவும், அவர் "சதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்" என்றும், இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அமைதியாக அவதிப்பட்டனர் என்றும் கூறினார்.
மேலும், தன்னைத் துன்புறுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன்’ இடமாற்றம் செய்தவர்களை ‘கடவுள் அவ்வளவு எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்’என்றும் மனம் உடைந்து பேசியுள்ளார்.
-
May 20, 2025 19:18 IST
சென்னை மீனம்பாக்கம் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையத்தில் ராணுவ வீரர் பலி
சென்னை மீனம்பாக்கம் துப்பாக்கிச் சூடு பயிற்சி மைதானத்தில் மயங்கி விழுந்த ராணுவ வீரர் உயிரிழந்தார். பயிற்சி மைதானத்தில் மயங்கி விழுந்த ராணுவ வீரர் உமாங்கர் (28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த உமாங்கர் 2 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
-
May 20, 2025 19:12 IST
“அ.தி.மு.க பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு அருகதை இல்லை” - அ.தி.மு.க ஐடி விங்
"தொழிலதிபராக இருந்து, "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அ.தி.மு.க பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை. இன்று த.வெ.க.-வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை!" என்று அ.தி.மு.க ஐடி விங் சாட்டியுள்ளது.
-
May 20, 2025 18:51 IST
திருப்பதியில் ட்ரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பாதுகாப்புக்காக ட்ரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் திருநாம பாடல்களை ரீமிக்ஸ் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
May 20, 2025 18:30 IST
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று, இஸ்ரோ தலைவர் நாராயணன், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சந்தித்துப் பேசினர்
-
May 20, 2025 18:19 IST
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம். விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடாது எனவும் ரன்யா ராவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
-
May 20, 2025 18:19 IST
உளவுத் துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலம் நீட்டிப்பு!
உளவுத்துறை தலைவர் தபன் குமாரின் பதவிக் காலத்தை ஓராண்டு நீட்டித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ல் உளவுத் துறை தலைவராக தபன் குமார் நியமிக்கப்பட்ட நிலையில் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
May 20, 2025 17:46 IST
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு, மண்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
-
May 20, 2025 17:21 IST
சென்னையில் மழை காரணமாக இன்று 16 விமானங்களின் வருகை/புறப்பாடு தாமதம்
சென்னையில் இன்று விமான போக்குவரத்து சாதக வானிலை இல்லாததால் 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. சென்னையில் இருந்து இலங்கை, மும்பை, டெல்லி,சீரடி உள்ளிட்ட இடங்களுக்கு புறப்படும் 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
-
May 20, 2025 17:18 IST
King EV MAX எலக்ட்ரிக் ஆட்டோ தமிழ்நாட்டில் அறிமுகம்!
ப்ளூடூத் வசதியுடன் கூடிய King EV MAX எலக்ட்ரிக் ஆட்டோவை தமிழ்நாட்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்தது. கடந்த ஜனவரியில் உபி, பீகார் பகுதிகளில் அறிமுகமாகின. இதன் விலை ரூ.2.95 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
May 20, 2025 17:06 IST
புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் திறப்பு
தமிழ்நாட்டில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை மே 22 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட், சூலூர்பேட்டை,சமல் பட்டி, சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்கள் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
May 20, 2025 17:04 IST
டெல்லி செல்லும் ஸ்டாலின்: இபிஎஸ் விமர்சனம்
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்ற ஸ்டாலின் இப்போது டெல்லிக்கு செல்கிறார். தமிழகத் தேவைக்கு போகாதவர் தன் குடும்பத் தேவை என்றதும் செல்கிறார். எல்லாம் அந்த தம்பி படுத்தும் பாடு. யார் அந்த தம்பி என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
May 20, 2025 16:34 IST
வக்பு சட்டம் - ஆதவ் வலியுறுத்தல்
அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் வழக்கு பலம் பெறும் கேரள அரசு எப்படி இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டதோ, அதேபோல் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்
-
May 20, 2025 15:57 IST
மழைநேரத்தில் சாலையில் கட்டுப்பட்டை இழந்த கார்
கோழிக்கோட்டில் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், மின் கம்பத்தில் மோதியுள்ளது. மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்ததில், காரை பின் தொடர்ந்து வந்த பைக்கும் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
-
May 20, 2025 15:16 IST
"சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை" - வானிலை மையம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சியிலும் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
May 20, 2025 15:07 IST
பாதிக்கப்பட்டோர் பணத்தை திரும்பப்பெறுவதை உறுதி செய்க
"தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு தார்மீக பொறுப்பு உள்ளது" FIR பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல; பாதிக்கப்பட்டவர்கள், பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதே TNPID சட்டத்தின் நோக்கம் என்று தேனியில் நடந்த நிதி நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
-
May 20, 2025 14:45 IST
மூன்றாவது நபரே காரணம் - ஆர்த்தி ரவி
"எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் மூன்றாவது நபரே காரணம். 'உங்கள் வாழ்வின் ஒளி' என அறியப்படும் அவர், நம் வாழ்வில் இருளைக் கொண்டு வந்துள்ளார் என் கணவருக்கு நிம்மதி கிடைக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் அந்த நிம்மதி, எல்லா கடினமான நேரத்திலும் துணை நின்ற ஒருவரைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் கிடைக்காது” என்று ஆர்த்தி ரவி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
May 20, 2025 14:44 IST
மின் கட்டண உயர்வு - முதல்வர் அறிவுரை
"தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை எனினும் ஆணை வழங்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்தும் போது வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
-
May 20, 2025 14:28 IST
டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மீண்டும் ED சம்மன்
டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் கௌரிசங்கருக்கு அமலாக்கத்துறை சம்மன். நாளை(மே.21) டாஸ்மாக் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
-
May 20, 2025 14:24 IST
மின் கட்டணம் உயர்வு இல்லை - அமைச்சர் சிவசங்கர் அறிக்கை
வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
-
May 20, 2025 13:56 IST
மழைநீர் வடிகால் பணி - முதல்வர் நேரில் ஆய்வு
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு. வால்டாக்ஸ் சாலை, புளியந்தோப்பு சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தார் முதல்வர்.
-
May 20, 2025 13:48 IST
தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது - கபில் சிபல் வாதம்
முந்தைய சட்டங்கள் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளை பறிக்காத வண்ணம் இருந்தது; ஆனால் புதிய வக்பு சட்டம் அதனை பறிக்கும் வகையில் உள்ளது; புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது. வக்பு சட்டதிருத்தத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் விவாதித்துள்ளார்.
-
May 20, 2025 13:25 IST
கேரளாவில் முன்கூட்டியே துவங்கும் பருவமழை - வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை துவங்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
May 20, 2025 12:37 IST
சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்தி தாசர் கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்! – ஸ்டாலின்
பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது
மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் திராவிடப் பேரொளி அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!
-
May 20, 2025 12:11 IST
நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் – உச்ச நீதிமன்றம்
முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
-
May 20, 2025 11:24 IST
குவஹாத்தில் பெய்து வரும் கனமழை
அசாம்: குவஹாத்தி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
(ருக்மிணி காவ்ன் மற்றும் டவுன்டவுன் பகுதியிலிருந்து காட்சிகள்)
#WATCH | Assam: Due to heavy rainfall in Guwahati district, several areas are facing waterlogging, leaving normal life affected.
— ANI (@ANI) May 20, 2025
(Visuals from Rukmini Gaon and the Downtown area) pic.twitter.com/o71TsNuS6L -
May 20, 2025 11:06 IST
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் ஸ்டாலின்
சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்க உள்ளிட்டவற்றை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார் மு.க.ஸ்டாலின்.
#Watch | சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்க உள்ளிட்டவற்றை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் ரூ.207.82 கோடி செலவில் புதிதாக… pic.twitter.com/7xAJpmZJOt
— Sun News (@sunnewstamil) May 20, 2025 -
May 20, 2025 10:37 IST
காஷ்மீரில் ராணுவம் இலவச மருத்துவ முகாம்
இந்திய-பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை ஆதரிக்கும் ஒரு மனிதாபிமான முயற்சியாக, ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரின் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவம் ஒரு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது.
#WATCH | In a humanitarian effort to support civilians affected by the Pakistani shelling during the Indo-Pak conflict, the Indian Army organised a free medical camp in the border areas of Jammu and Kashmir's Uri sector. pic.twitter.com/QHLkRscCQP
— ANI (@ANI) May 20, 2025 -
May 20, 2025 08:47 IST
பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிராபிக்
கிராணைட் ஏற்றிச்சென்ற லாரியின் சேஸ் உடைந்ததால் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் 5 கிமீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.
-
May 20, 2025 08:46 IST
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 8,000 கனஅடியாக உயர்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை வினாடிக்கு 5,000 கனஅடி நீர்வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 8000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
May 20, 2025 08:26 IST
தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை-வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
May 20, 2025 08:22 IST
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- எச்சரிக்கை
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
May 20, 2025 08:03 IST
கலை, அறிவியல் படிப்புக்கு 1.61 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதுவரையில் 1,61,324 மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தங்களது சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 27-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 20, 2025 07:30 IST
மதுரை: சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்பட 3 பேர் பலி
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் எதிர்பாராதவிதமாக இடிந்து விபத்துக்குள்ளானது. மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்ததில், மூதாட்டி, அவரது பேரன், அவர்களது பக்கத்து வீட்டுப் பெண் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
-
May 20, 2025 07:28 IST
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை (வரும் 21 ஆம் தேதி) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, நாளை மறுதினம் (22 ஆம் தேதி) வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
May 20, 2025 07:23 IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், மதுரவாயல், கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது இதமான சூழல் நிலவி வருகிறது.
-
May 20, 2025 07:21 IST
புதுப்பித்த ரயில்வே ஸ்டேஷன்களை 22-ந்தேதி திறக்கிறார் மோடி
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில்வே நிலையங்களை, பிரதமர் மோடி வீடியோ கான்ப்ரன்ஸ் வாயிலாக வரும் 22-ம் தேதி திறந்துவைக்கிறார். தெற்கு ரயில்வேயில், சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
-
May 20, 2025 07:15 IST
இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு-சுகாதாரத்துறை
சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கடந்த வாரத்தில், கேரளாவில் 69 பேரும், மகாராஷ்டிராவில் 44 பேரும், தமிழகத்தில் 34 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
-
May 20, 2025 07:05 IST
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடக்கிறது. தலைமை நீதிபதி கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
May 20, 2025 07:05 IST
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.